என் மலர்

  சினிமா செய்திகள்

  மகனுடன் நடிகர் மாதவன்
  X
  மகனுடன் நடிகர் மாதவன்

  ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகும் மகன்- துபாய்க்கு குடிபெயர்ந்த மாதவன்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தன் மகன் ஒரு நடிகராவதில் தனக்கும், தன் மனைவிக்கும் விருப்பமில்லை என நடிகர் மாதவன் தெரிவித்துள்ளார்.
  துபாய்

  நடிகர் மாதவன், தன் மகன் ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகுவதற்காக  துபாயில் குடியேறியுள்ளார். 

  நடிகர் மாதவனின் மகன் வேதாந்த், நீச்சல் வீரராக உள்ளார். அவர் சமீபத்தில் பெங்களூருவில் நடைபெற்ற தேசிய ஜூனியர் நீச்சல் போட்டியில் பங்கேற்று 7 பதக்கங்களை வென்றார். இதை தொடர்ந்து அவர் 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியிலும் பங்கேற்கவுள்ளார். இந்நிலையில், அவர் நீச்சல் பயிற்சி பெறுவதற்காக மாதவன், தன் மனைவி சரிதாவுடன் சென்று துபாயில் குடிபெயர்ந்துள்ளார். இது குறித்து நடிகர் மாதவன் கூறியதாவது:-

  வேதாந்த், 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகி வருகிறார். அவர் பயிற்சி பெறுவதற்கு பெரிய நீச்சல் குளங்கள் தேவை. ஆனால் மும்பையில் உள்ள நீச்சல் குளங்கள் அனைத்தும் கொரோனா காரணமாக மூடப்பட்டுள்ளன. அதனால் அவர் பயிற்சி பெறுவதற்கு ஏதுவாக நானும், என் மனைவியும் துபாயில் குடியேறியுள்ளோம். எங்கள் மகன், உலகம் முழுவதும் நடைபெறும் பல நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வென்று எங்களுக்கு பெருமை சேர்த்துள்ளார். அவரை ஒரு நடிகராக்குவதில் எனக்கும், என் மனைவிக்கும் விருப்பமில்லை.

  இவ்வாறு மாதவன் கூறினார்.

  Next Story
  ×