என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் திரைப்படம் ‘ஜெயிலர்’.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    நடிகர் ரஜினி தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் மற்றும் வசந்த் ரவி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர்.


    ஜெயிலர்

    சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு 50 சதவீதம் முடிவடைந்ததையடுத்து படத்தை அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.


    ஜெயிலர் படப்பிடிப்பு தளம்

    அதன்படி, 'ஜெயிலர்' படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. ரஜினிகாந்த் இடம்பெறும் இந்த வீடியோவை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர். இதற்கு முன்பு சிவராஜ்குமார் புகைப்படத்தை படக்குழு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.



    • அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள படம் 'கனெக்ட்'.
    • இந்த படம் திரில்லர் வகை திரைப்படமாக உருவாகியுள்ளது.

    இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நடிகை நயன்தாரா 'கனெக்ட்' திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் சத்யராஜ், அனுபம் கெர், வினய் ராய் மற்றும் ஹனியா நஃபிஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஹாரர் திரில்லர் வகை திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படத்தை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தங்களுக்குச் சொந்தமான ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளனர்.


    கனெக்ட்

    இந்த படத்திற்கு மணிகண்டன் கிருஷ்ணமாச்சாரி ஒளிப்பதிவு செய்துள்ளார். 'கனெக்ட்' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் கடந்த ஆண்டு நயன்தாரா பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது. இதையடுத்து இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. திகிலூட்டும் வகையில் உருவாகியுள்ள இந்த டீசர் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    'கனெக்ட்' திரைப்படம் வருகிற டிசம்பர் 22-ஆம் தேதி  திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.



    • இயக்குனர் ஏ.சற்குணம் இயக்கத்தில் அதர்வா நடித்துள்ள படம் 'பட்டத்து அரசன்'.
    • இப்படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி வைரலானது.

    2010-ஆம் ஆண்டு வெளியான 'பானா காத்தாடி' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் அதர்வா. தொடர்ந்து இவர் நடித்த 'பரதேசி', 'இமைக்கா நொடிகள்' போன்ற படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றார். சமீபத்தில் அதர்வா நடிப்பில் வெளியான 'குறுதி ஆட்டம்', 'டிரிக்கர்' போன்ற படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றது.


    பட்டத்து அரசன்

    இவர் தற்போது 'களவாணி', 'வாகை சூடவா' போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் ஏ.சற்குணம் இயக்கத்தில் 'பட்டத்து அரசன்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஜ்கிரண் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். லைக்கா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.


    பட்டத்து அரசன்

    இப்படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. அதிரடி, ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்த இந்த டிரைலர் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.



    • மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கலகத் தலைவன்’.
    • ‘கலகத் தலைவன்’ இன்று திரையரங்குகளில் வெளியானது.

    தடம், மீகாமன் போன்ற படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்திருக்கும் படம் 'கலகத் தலைவன்'. இப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்திருக்கிறார். மேலும், பிக்பாஸ் ஆரவ், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது.


    நிதி அகர்வால்

    இப்படத்தில் நடித்த நிதி அகர்வால் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது, "மகிழ் சார் நல்ல டேக்கிற்கு ஓகே சொல்ல மாட்டார். சூப்பர் டேக்கிற்கு மட்டும் தான் ஓகே சொல்லுவார். அவர் எப்பவுமே கட் சொல்ல மாட்டார். ஏதாவது புதிதாக வரும் அதற்காக கீப்ஸ் ரோலிங் சொல்லிக் கொண்டே இருப்பார். சில சீன்ஸ் கஷ்டமாக தான் இருந்தது. நான் நடித்தது மருத்துவர் கதாபாத்திரம். ஸ்கிரிப்டில் கதாபாத்திரம் கிராஃப் மிகவும் அழகாக இருந்தது" என்று பேசினார்.

    • பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் இன்றுடன் 40 நாட்களை நெருங்கியுள்ளது.
    • பல டாஸ்குகள், சண்டைகள் என நிகழ்ச்சி விறுவிறுப்பாக செல்கிறது.

    பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் நபராக சாந்தி எலிமினேட் செய்யப்பட்டார். மேலும் ஜி.பி. முத்து தாமாக முன் வந்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். பின்னர் அசல், ஷெரினா, மகேஷ்வரி உள்ளிட்டோர் எலிமினேட் செய்யப்பட்டனர். இதில் தற்போது 16 நபர்கள் வீட்டினுள் இருக்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி இன்றுடன் 40-வது நாட்களை நெருங்கியுள்ளது.


    பிக்பாஸ் சீசன் 6 

    இந்நிலையில், இன்று வெளியான மூன்றாவது புரோமோவில் இது டாஸ்க் தான் மாஸ்டர் இதுக்குலாம் பீல் பண்ணாதீங்க மாஸ்டர் என்று ராபர்ட் மாஸ்டருக்கு அசீம் ஆறுதல் கூறுகிறார். தொடர்ந்து ரக்‌ஷிதா, மாஸ்டர் நான் சொல்றத கொஞ்சம் கேளுங்க என்று கூறுகிறார். அதற்கு ராபர்ட் மாஸ்டர் நான் உன்ன நம்புனேன், இவன நம்புனேன் யாரும் என் கிட்ட பேச வேண்டும் என்று சொல்கிறார். இதனால் ரக்‌ஷிதா கோபத்தில் செல்கிறார். இதனுடன் இன்றைய புரோமோ முடிவடைகிறது.

    இந்த புரோமோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.



    • விழாக்காலங்களில் தெலுங்குத் திரைப்படங்களுக்கு மட்டுமே ஆந்திராவில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.
    • ஆந்திர மாநிலத்தயாரிப்பாளர்கள் சங்கத்தின் இந்நடவடிக்கை தேவையற்ற ஒன்றாகும் என்று சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    தமிழ்த்திரைப்படங்களின் வெளியீட்டுக்கெதிரான முடிவைத் தெலுங்குத் தயாரிப்பாளர் சங்கம் திரும்பப்பெறாவிட்டால், தமிழகத்தில் தெலுங்குத் திரைப்படங்களை வெளியிட விடமாட்டோம் என்று சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த அறிக்கையில், "விழாக்காலங்களில் நேரடித் தெலுங்குத் திரைப்படங்களுக்கு மட்டுமே ஆந்திராவில் முன்னுரிமை அளிக்கப்படும் எனும் தெலுங்குத் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அறிவிப்பு அதிர்ச்சியளிக்கிறது. எண்ணற்ற தெலுங்குத்திரைப்படங்கள் தமிழகத்தில் எவ்விதத் தடையுமின்றி வெளியாகிக் கொண்டிருக்கிற நிலையில், தமிழ்த்திரைப்படங்கள் வெளியாவதற்குக் கெடுபிடி விதித்திருக்கும் தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முடிவு மிகத்தவறான முன்னுதாரணமாகும்.


    சீமான்

    தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் திடீர் முடிவால், தமிழ்த்திரையுலகில் முன்னணி நடிகராகத் திகழும் அன்புத்தம்பி விஜய் அவர்களது வாரிசு திரைப்படத்தின் வெளியீட்டுக்கானத் திரையரங்க ஒதுக்கீட்டில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. நேரடித்தெலுங்குத் திரைப்படங்களோ, மொழிமாற்றம் செய்யப்பட்ட தெலுங்குத் திரைப்படங்களோ எதுவாகினும் தமிழகத்தில் எவ்விதப் பாரபட்சப்போக்குக்கும், கட்டுப்பாடுகளுக்கும் உட்படுத்தப்படாது. தமிழ்த்திரைப்படங்களுக்கு இணையாகத் திரையரங்குகளைப் பெற்று வரும் நிலையில், ஆந்திர மாநிலத்தயாரிப்பாளர்கள் சங்கத்தின் இந்நடவடிக்கை தேவையற்ற ஒன்றாகும்.


    சீமான்

    'கலைக்கு மொழி இல்லை' என்றுகூறி, தமிழ்த்திரையுலகிலும், திரையரங்க ஒதுக்கீட்டிலும் மற்ற மொழியினருக்கும், அவர்களது திரைப்படங்களுக்கும் பெருவாய்ப்பு வழங்கி, 'தென்னிந்திய நடிகர் சங்கம்' எனப் பெயரைத் தாங்கி நிற்கும் தமிழ்த்திரையுலக்கு இந்நிகழ்வு ஒரு பாடமாகும். திரைப்படைப்புகளுக்கும், படப்பிடிப்புகளுக்கும் மற்ற மொழியினரையும், மற்ற மாநில திரைத்துறையையும் பயன்படுத்தி கொண்டு, திரையரங்க ஒதுக்கீட்டில் காட்டப்படும் சமத்துவமற்ற இத்தகைய அணுகுமுறை நலம் பயக்கக் கூடியதல்ல!


    சீமான்

    தென்னிந்திய நடிகர்களுள் முதன்மையானவராகத் திகழும் தம்பி விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் திரைப்படத்திற்கே இந்நிலையென்றால், மற்ற படங்களின் நிலை என்னவாகும்? எனும் கேள்விதான் எழுகிறது. இச்சிக்கல், விஜய் எனும் ஒரு நடிகரின் திரைப்பட வெளியீட்டுக்கு எழுந்திருக்கும் சிக்கலல்ல; தமிழ்த்திரைப்படங்களின் வெளியீட்டுக்கெதிராகவே ஆந்திராவில் தொடுக்கப்பட்டிருக்கும் மறைமுக நெருக்கடியாகும்.


    சீமான் அறிக்கை

    இதனை ஒருபோதும் ஏற்கவோ, அனுமதிக்கவோ முடியாது. ஆகவே, தமிழ்த்திரைப்படங்களின் வெளியீட்டுக்கெதிரான தெலுங்குத்திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் இம்முடிவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன். அதனைச் செய்யத் தவறும்பட்சத்தில், தெலுங்குத்திரைப்படங்களைத் தமிழகத்தில் வெளியிட அனுமதிக்க மாட்டோமென வன்மையாக எச்சரிக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



    • நயன்தாரா - விக்னேஷ் சிவன் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
    • இவர்களுக்கு சமீபத்தில் வாடகைதாய் மூலம் இரட்டை குழந்தைகள் பிறந்தது.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை கடந்த ஜூன் 9-ம் தேதி சென்னையில் திருமணம் செய்துகொண்டனர். திருமணமாகி நான்கு மாதங்களே ஆன நிலையில் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளதாக அறிவித்தனர்.


    நயன்தாரா - விக்னேஷ் சிவன்

    திருமணமான நான்கே மாதத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது பல கேள்விகளை எழுப்பியது. அதன்பின்னர் வாடகைத் தாய் மூலம் அவர்கள் குழந்தை பெற்றுக் கொண்டது தெரியவந்தது. தற்போது நயன்தாரா குழுந்தைகளை பார்ப்பதை முழுநேர வேலையாக செய்து வருகிறார்.


    நயன்தாரா - விக்னேஷ் சிவன்

    இவர் இன்று தனது 38-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது மனைவி நயன்தாராவிற்கு வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "இது உன்னுடனான எனது 9-வது பிறந்தநாள் நயன். உன்னை எப்போதும் சக்திவாய்ந்த பெண்ணாகவே பார்த்துள்னே். இதுவரையில் உன்னை வெவ்வேறு வடிவமாக பார்த்துள்ளேன்.


    நயன்தாரா - விக்னேஷ் சிவன்

    வாழ்க்கை மற்றும் அனைத்திலும் நீ காட்டும் நேர்மையால் எப்போதும் நான் ஈர்க்கப்பட்டுள்ளேன். ஆனால் இன்று, தாயாக உன்னை பார்க்கும்போது.. இதுவே உனது மகிழ்ச்சியான மற்றும் முழுமையான உருவாக்கம். நீ இப்போது முழுமையாகிவிட்டாய். நீ மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதை பார்க்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார். 





    • பொன்னியின் செல்வன் -1 திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
    • இந்த திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.500 கோடியை வசூலித்துள்ளது.

    மறைந்த எழுத்தாளர் கல்கி எழுதி புகழ்பெற்ற வரலாற்றுப் புனைவு நாவலான பொன்னியின் செல்வனை பல ஆண்டுகால முயற்சிக்கு பின் மணிரத்னம் படமாக எடுத்தார். இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம்ரவி, ஜெயராம் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்தனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார்.


    பொன்னியின் செல்வன் -1

    இரண்டு பாகங்களாக உருவான பொன்னியின் செல்வனின் முதல் பாகம் சமீபத்தில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், ரூ.450 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்தது. இந்நிலையில், இப்படம் வெளியாகி ௫௦ நாட்களை கடந்துள்ளது.


    பொன்னியின் செல்வன் - 1

    இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த போஸ்டரை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள நடிகர் விக்ரம், "இது கனவு இல்லை என்று யாராவது என்னிடம் கூறுங்கள்" என்று நெகிழ்ச்சியாக குறிப்பிட்டுள்ளார். இவரின் பதிவிற்கு ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.



    • முன்னணி கதாநாயகர்களுடன் நடித்து பிரபலமடைந்தவர் தமன்னா.
    • இவர் தொழிலதிபரை திருமணம் செய்யவுள்ளதாக தகவல் பரவி வருகிறது.

    தமிழில் விஜய், அஜித், சூர்யா, விஷால், தனுஷ் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுடன் நடித்துள்ள தமன்னா தெலுங்கு, இந்தியிலும் அதிக படங்களில் நடித்திருக்கிறார். இவர் நடிப்பில் வெளியான பாகுபலி திருப்புமுனை படமாக அமைந்தது. இந்த நிலையில் தமன்னாவுக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது.


    தமன்னா

    இதற்கு முன்பு திருமண முடிவை பெற்றோரிடம் விட்டு விட்டேன். அவர்கள் பார்க்கும் மாப்பிள்ளையை மணப்பேன் என்று தமன்னா கூறியிருந்தார். தற்போது பெற்றோர் மாப்பிள்ளையை பார்த்து முடிவு செய்து இருப்பதாகவும், மணமகன் மும்பையை சேர்ந்த பெரிய தொழில் அதிபர் என்றும், அவரை மணக்க தமன்னாவும் சம்மதித்துவிட்டார் என்றும் கூறப்பட்டது. இதற்கு தமன்னா மறுப்பு தெரிவிக்காமல் இருந்ததால் தகவல் உண்மையாக இருக்கலாம் என்று ரசிகர்கள் பதிவிட்டு வந்தனர்.


    தமன்னா பதிவு

    இந்த நிலையில் இதற்கு பதிலளிக்கும் விதமாக தமன்னா தனது சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், தனது தொழில் அதிபர் கணவரை அறிமுகப்படுத்துவதாக குறிப்பிட்டு அவரே ஆண் வேடத்தில் இருப்பது போன்று தோன்றுகிறார். மேலும், #திருமண வதந்திகள் #எனது வாழ்க்கை பற்றி கதை எழுதும் ஒவ்வொருவருக்கும் என்று ஆங்கிலத்தில் ஹேஷ்டேக்கையும் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு வைரலாகி வருகிறது.

    • இயக்குனர் செல்லா அய்யாவு இயக்கத்தில் உருவாகிவுள்ள திரைப்படம் 'கட்டா குஸ்தி'.
    • இந்த திரைப்படம் டிசம்பர் 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இயக்குனர் செல்லா அய்யாவு இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால் நடித்துள்ள திரைப்படம் 'கட்டா குஸ்தி'. இந்த படத்தில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி கதாநாயகியாக நடிக்கிறார். இந்த திரைப்படம் தமிழ்-தெலுங்கு என இருமொழிகளில் வெளியாக உள்ளது.


    கட்டா குஸ்தி

    'கட்டா குஸ்தி' படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஒரு மாதத்திற்கு முன்பே முடிவடைந்த நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. 'கட்டா குஸ்தி' திரைப்படத்தின் முதல் மற்றும் இரண்டாம் தோற்ற போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது.


    கட்டா குஸ்தி போஸ்டர்

    இந்நிலையில், இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'கட்டா குஸ்தி' திரைப்படத்தின் தமிழ்நாட்டு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

    'கட்டா குஸ்தி' திரைப்படம் வரும் டிசம்பர் 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.



    • மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கலகத் தலைவன்’.
    • இப்படம் இன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

    தடம், மீகாமன் போன்ற படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்திருக்கும் படம் 'கலகத் தலைவன்'. இப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்திருக்கிறார். மேலும், பிக்பாஸ் ஆரவ், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.


    கழகத் தலைவன் படம் பார்த்த முதல்வர் ஸ்டாலின்

    இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 'கலகத் தலைவன்' திரைப்படத்தை படக்குழுவினருடன் இணைந்து தனியார் திரையரங்கில் பார்த்துள்ளார். மேலும், 'கலகத் தலைவன்' படத்தின் கதாநாயகன் உதயநிதி ஸ்டாலின், இயக்குனர் மகிழ் திருமேனி மற்றும் படக்குழுவினருக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்தார். இது தொடர்பான புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

    • டான்ஸை வைத்து உருவாகியுள்ள வெப் தொடர் 'ஃபைவ் சிக்ஸ் செவன் எய்ட்'.
    • இந்த வெப் தொடர் நவம்பர் 18-ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

    விஜய், பிரசன்னா ஜே.கே, மிருதுளா ஸ்ரீதரன் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் 'ஃபைவ் சிக்ஸ் செவன் எய்ட்'. நடனத்தைப் பின்னணி கதைக்களமாகக் கொண்டு உருவாகிவுள்ள இந்த வெப் தொடரில் தித்யா சாகர் பாண்டே, சின்னி பிரகாஷ், விவேக் ஜோக்தாண்டே ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் நாகேந்திர பிரசாத் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.


    ஃபைவ் சிக்ஸ் செவன் எய்ட்

    'ஃபைவ் சிக்ஸ் செவன் எய்ட்' வெப் தொடர் நவம்பர் 18-ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள நிலையில் இதன் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாடலாசிரியர் மதன் கார்க்கி பேசியதாவது, " டான்ஸை வைத்து ஓடிடியில் எதுவுமே இல்லை, ஏனென்றால் டான்ஸை வைத்து உருவாக்குவது மிக கடினம் அதிலும் குழந்தைகளை வைத்து உருவாக்குவது அதை விடக் கடினம். ஆனால் விஜய் அதில் கைதேர்ந்தவராக இருக்கிறார். ஒரு பெண் குழந்தை தன்னுடைய உலகம் என்ன எனத் தேடி, வெளியே வந்து ஜெயிப்பதை பேசும், இந்த படைப்பு வெற்றி பெற வாழ்த்துக்கள்" என்று பேசினார்.

    மேலும், நடிகர் ஜீவா பேசியதாவது, "ஃபைவ் சிக்ஸ் செவன் எய்ட் டான்ஸ் ஸ்டெப் . இதைப் புரிந்து கொள்ளவே எனக்கு ரொம்ப காலம் ஆனது. இந்த தொடரில் நிறையப் புதுமுகங்களை அறிமுகப்படுத்தியுள்ளார்கள். பார்க்க மிகப் புதுமையாக இருக்கிறது. விஜய் சார் மற்றும் குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள். இத்தொடர் பார்க்க நானும் ஆவலாக உள்ளேன்" என்று கூறினார்.

    ×