என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • பிக்பாஸ் நிகழ்ச்சி இன்றுடன் 41-வது நாட்களை நெருங்கியுள்ளது.
    • இந்த நிகழ்ச்சியில் தற்போது 16 நபர்கள் வீட்டினுள் இருக்கின்றனர்.

    பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் நபராக சாந்தி எலிமினேட் செய்யப்பட்டார். மேலும் ஜி.பி. முத்து தாமாக முன் வந்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். பின்னர் அசல், ஷெரினா, மகேஷ்வரி உள்ளிட்டோர் எலிமினேட் செய்யப்பட்டனர். இதில் தற்போது 16 நபர்கள் வீட்டினுள் இருக்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி இன்றுடன் 41-வது நாட்களை நெருங்கியுள்ளது.


    பிக்பாஸ் சீசன் 6

    இந்நிலையில், இன்று வெளியான முதல் புரோமோவில் நடிகர் கமல்ஹாசன்  உப்பு நாட்டையும் மாத்தியிருக்கு வீட்டையும் மாத்தியிருக்கு. பதவிக்கு இருக்கும் ஆசை அதற்கான பொறுப்பை செய்ய வேண்டும் என்பதில் இல்லை. நான் என்ன பேசுவேன் என்பதை யூகிக்க தெரிந்தவர்களுக்கு தாம் என்ன பேசுகிறோம் என்பதை யோசிக்காமல் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதை அவர்களிடம் தான் பேசனும் என்கிறார். இதனுடன் இந்த புரோமோ முடிவடைகிறது. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.



    • தெலுங்கு திரையுலகின் முன்னணி தயாரிப்பாளராக இருப்பவர் பன்னி வாசு.
    • தன்னை ஏமாற்றிவிட்டதாக கூறி துணை நடிகை சுனிதா போயா நிர்வாணமாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

    தெலுங்கு திரையுலகில் பிரபல தயாரிப்பாளர்களில் ஒருவரான பன்னி வாசு, கீதா ஆர்ட்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். தற்போது தயாரிப்பாளர் பன்னி வாசு மீது துணை நடிகை சுனிதா போயா, தன்னை ஏமாற்றிய பன்னி வாசு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி அவரது தயாரிப்பு நிறுவனம் அமைந்துள்ள ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் திடீரென தனது ஆடைகளை களைந்து நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டார்.

    பன்னி வாசு - சுனிதா போயா

    பன்னி வாசு - சுனிதா போயா

     

    இந்த தகவல் அறிந்ததும் விரைந்து வந்த போலீசார் அங்கிருந்து அவரை அழைத்து சென்றனர். சுனிதா போயாவை உடைகளை உடுத்த வைத்த பெண் போலீசார், தயாரிப்பாளர் பன்னி வாசு ஐதராபாத் வருகை தந்ததும் அவரிடம் இது குறித்து பேசி நடவடிக்கை எடுப்பதாக கூறி அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.

    இதற்குமுன்பு கடந்த மே மாதம் இதே அலுவலகம் முன்பாக அரை நிர்வாண போராட்டத்தில் சுனிதா ஈடுபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அப்போது புகார் அளித்திருந்தும் பன்னி வாசு மீது போலீசார் இதுவரையும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என்று கூறி மீண்டும் சுனிதா போயா இந்த போராட்டத்தை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. 

    • வெப்பம், ஓகே கண்மணி, காஞ்சனா 2, 24, மெர்சல் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் நித்யா மேனன்.
    • தற்போது நித்யா மேனன் வெளியிட்டிருக்கும் புகைப்படம் ரசிகர்களை குழப்பியுள்ளது.

    நானி நடித்த 'வெப்பம்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் நித்யா மேனன். அதன்பின்னர் 'ஓகே கண்மணி', 'காஞ்சனா 2', '24', 'மெர்சல்' போன்ற படங்களில் நடித்து அனைவரையும் கவர்ந்தார். சமீபத்தில் இவர் தனுஷுடன் இணைந்து நடித்து வெளியான 'திருச்சிற்றம்பலம்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக இவர் நடித்த தேன் மொழி கதாப்பாத்திரன் பலரின் கவனத்தை ஈர்த்திருந்தது. தற்போது 'தி அயன் லேடி' என்ற படத்தில் நித்யா மேனன் நடித்து வருகிறார்.

    நேற்று நித்யா மேனன் சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அந்த புகைப்படத்தில் நித்யா மேனன் கர்ப்பமாக இருப்பது போன்று இடம் பெற்றுள்ளது. இந்த புகைப்படம் குறித்து ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

     

    நித்யா மேனன்

    நித்யா மேனன்

    இந்நிலையில் நித்யா மேனன், தற்போது பெயரிடப்படாத படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாகவும், அதில் அவர் கர்ப்பமாக இருப்பது போன்ற கதாபாத்திரம் என்றும் கூறப்படுகிறது. அந்த கதாப்பாத்திரத்தின் புகைப்படத்தையே அவர் பகிர்ந்துள்ளார் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    • பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவர் பிரியங்கா சோப்ரா.
    • இவருக்கு மல்டிமேரி என்ற பெண் குழந்தை உள்ளது.

    பாலிவுட் திரைப்பட உலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான பிரியங்கா சோப்ரா, தமிழில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான தமிழன் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இவர் கடந்த 2018- ஆம் ஆண்டு பாடகர் நிக் ஜோனாசை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு மல்டி மேரி என்ற பெண் குழந்தை உள்ளது.


    பிரியங்கா சோப்ரா

    அமெரிக்காவில் வசித்து வரும் பிரியங்கா, சமீபத்தில் இந்தியா வந்துள்ளார். அப்போது அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது, " நடிகர், நடிகைகள் செய்வதெல்லாம் யாரோ ஒருவரின் வசனங்களைப் பேசுவதும் பிறர் குரலில் உதடுகளை அசைப்பதும்தான். அவர்கள் ஆடும் நடனம் கூட பிறர் ஆடிகாட்டுவது தான். சினிமாவில் அவர்களின் வேலை மிகக் குறைவு. எதுவும் செய்யாத அவர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம். சிறந்த இயக்குனர்களுடன் பணியாற்றும்போதுதான் சிறந்த நடிப்பைக் கற்றுக்கொள்ள முடியும். நான் அப்படித்தான் கற்றுக்கொண்டேன்" என்று கூறினார்.

    • நிக்கி கல்ராணியும், நடிகர் ஆதியும் காதலித்து சமீபத்தில் திருமணம் செய்துக் கொண்டனர்.
    • தற்போது தான் கர்ப்பமாக இருப்பதாக வெளியான செய்திகள் குறித்து பதிவிட்டுள்ளார்.

    தமிழில் டார்லிங் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நிக்கி கல்ராணி. தொடர்ந்து யாகாவா ராயினும் நாகாக்க, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், நெருப்புடா, கலகலப்பு-2, சார்லி சாப்ளின் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். நிக்கி கல்ராணியும், மிருகம், ஈரம், அரவாண் உள்ளிட்ட பல படங்களில் நடித்த ஆதியும் காதலித்து சமீபத்தில் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துக் கொண்டனர்.

    ஆதி -  நிக்கி கல்ராணி

    ஆதி - நிக்கி கல்ராணி

     

    தற்போது நிக்கி கல்ராணி கர்ப்பமாக உள்ளதாக இணையத்தில் தகவல் பரவி வந்த நிலையில், இதுகுறித்து அவர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், இந்த பெரிய செய்தியை நானே அறிவேன். இப்போது என் சார்பாக ஒரு சிலர் வைரலான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர், தயவுசெய்து குழந்தை பிறக்கும் தேதியையும் எனக்குத் தெரிவிக்கவும். நான் கர்ப்பமாக இல்லை. எதிர்காலத்தில் இந்த அற்புதமான செய்தியை வெளியிடும் முதல் நபராக நான் இருப்பேன். தயவுசெய்து வதந்திகளுக்கு யாரும் நம்ப வேண்டாம் என்று நிக்கி கல்ராணி பதிவிட்டுள்ளார்.

    • அஜித் நடிக்கும் 'துணிவு' திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.
    • இப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது.

    எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் 'துணிவு'. இப்படத்தின் முதல் மற்றும் இரண்டாம் தோற்ற போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்த படம் வங்கி கொள்ளையை மையமாக வைத்து தயாராவதாக ஏற்கனவே கூறப்பட்ட நிலையில், உண்மை கதையில் அஜித் நடித்து வருவதாக தகவல் வெளியானது.


    அஜித் - சமுத்திரகனி

    இதில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


    துணிவு போஸ்டர்

    இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'துணிவு' திரைப்படத்தின் வெளிநாட்டு வெளியீட்டு உரிமையை லைகா நிறுவனம் பெற்றுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.



    • நயன்தாரா நேற்று தனது 38-வது பிறந்தநாளை கொண்டாடினார்.
    • நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிக்கும் 81-வது படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    நயன்தாரா நேற்று தனது 38-வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் நயன்தாராவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்நிலையில் நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிப்பில் உருவாகும் 81-வது படத்தின் அறிவிப்பு வெளியானது.

     

    அதன்படி சிவகார்த்திகேயன் நடித்த எதிர்நீச்சல், காக்கி சட்டை, தனுஷ் நடித்த கொடி, மற்றும் பட்டாஸ் ஆகிய படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கும் இந்த படத்தில் நயன்தாரா முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார். நயன்தாராவின் 81-வது படமாக உருவாகவுள்ள இந்த படத்தை விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் திரைப்படம் 'அச்சம் என்பது இல்லையே'.
    • இந்த படத்தில் எமி ஜாக்சன் கதாநாயகியாக நடிக்கிறார்.

    அஜித் நடிப்பில் கடந்த 2007-ம் ஆண்டு வெளியான 'கிரீடம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு இயக்குனராக அறிமுகமாவனர் ஏ.எல்.விஜய். அதன்பின்னர் மதராசப்பட்டினம், தெய்வ திருமகள், தாண்டவம் உள்ளிட்ட பல படங்களை இயக்கி அனைவரையும் கவர்ந்தார். தற்போது இவர் அருண் விஜய் நடிக்கும் 'அச்சம் என்பது இல்லையே' என்ற படத்தை இயக்கி வருகிறார்.


    அச்சம் என்பது இல்லையே போஸ்டர்

    இப்படத்தின் கதாநாயகியாக எமி ஜாக்சன் நடிக்க ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். இந்நிலையில், அருண் விஜய்யின் பிறந்த நாளான இன்று படக்குழு இப்படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது. குழந்தையுடன் அருண் விஜய் இருக்கும் இந்த போஸ்டர் சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.


    • விஜய் சேதுபதி நடித்த 'மாமனிதன்' திரைப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.
    • இப்படம் பல திரைப்பட விழாக்களில் விருதுகளை குவித்தது.

    இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி, குரு சோமசுந்தரம் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் அண்மையில் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'மாமனிதன்'. இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா முதல் முறையாக கூட்டணி அமைத்து இசையமைத்திருந்தனர். யுவன்ஷங்கர் ராஜா தனது ஒய்.எஸ்.ஆர் நிறுவனம் மூலம் இப்படத்தை தயாரித்திருக்கிறார்.


    மாமனிதன்

    இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், இப்படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகளை குவித்துள்ளது. இந்நிலையில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் 'மாமனிதன்' திரைப்படத்தை இயக்குனர் சீனுராமசாமியுடன் இணைந்து பார்த்துள்ளார்.


    மாமனிதன் திரைப்படம் பார்த்த எல். முருகன்

    இது குறித்து அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், "மனிதத்தை வெளிப்படுத்தும் அற்புதமான திரைப்படம் மாமனிதன்..! இப்படத்துக்கு சர்வதேச விருதுகள் மற்றும் மக்கள் அளித்த வெற்றி என உரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது. மேலும் இது போன்ற படைப்புகளை உருவாக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்" என்று பதிவிட்டுள்ளார்.



    • விஷால் தற்போது நடித்துள்ள திரைப்படம் ‘லத்தி’.
    • இப்படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

    'வீரமே வாகை சூடும்' படத்திற்கு பிறகு நடிகர் விஷால் நடித்திருக்கும் திரைப்படம் 'லத்தி'. இதனை அறிமுக இயக்குனர் வினோத் குமார் இயக்கியிருக்கிறார். இதில் விஷாலுக்கு ஜோடியாக சுனைனா நடித்திருக்கிறார். 'ராணா புரொடக்ஷன்' சார்பாக ரமணா மற்றும் நந்தா இப்படத்தை தயாரிக்கின்றனர்.


    லத்தி

    'லத்தி' திரைப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி வைரலானது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு பெற்றது. இதனிடையே இப்படத்தின் இரண்டாவது பாடல் 'ஊஞ்சல் மனம் ஆடுமே' வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.


    லத்தி போஸ்டர்

    அதன்படி, 'லத்தி' திரைப்படம் வருகிற டிசம்பர் 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.


    • தமிழ் சினிமாவில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் இளங்கோ குமரவேல்.
    • இவர் பொன்னியின் செல்வன் படத்தின் திரைக்கதை குழுவிலும் இவர் இடம் பெற்றிருந்தார்.

    தமிழ் சினிமாவில் 'அபியும் நானும்', 'சர்வம் தாளமயம்', 'ஜெய் பீம்', 'காற்றின் மொழி', 'விக்ரம்', உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் இளங்கோ குமரவேல். சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற 'பொன்னியின் செல்வன்' படத்தின் திரைக்கதை குழுவிலும் இவர் இடம் பெற்றிருந்தார்.


    இளங்கோ குமரவேல்

    இவர் சென்னையில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்நிலையில், ராஜா அண்ணாமலைபுரம் பகுதியில் நடிகர் இளங்கோ குமரவேல் நடந்து சென்று கொண்டிருந்த போது மர்ம நபர்கள் இவரது செல்போனை பறித்து சென்றுள்ளனர். இது தொடர்பாக பட்டினப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் திரைப்படம் ‘ஜெயிலர்’.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    நடிகர் ரஜினி தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் மற்றும் வசந்த் ரவி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர்.


    ஜெயிலர்

    சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு 50 சதவீதம் முடிவடைந்ததையடுத்து படத்தை அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.


    ஜெயிலர் படப்பிடிப்பு தளம்

    அதன்படி, 'ஜெயிலர்' படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. ரஜினிகாந்த் இடம்பெறும் இந்த வீடியோவை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர். இதற்கு முன்பு சிவராஜ்குமார் புகைப்படத்தை படக்குழு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.



    ×