என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • கர்நாடகத்தை சார்ந்த பிரபல தொழிலதிபர் விஜய் சங்கேஸ்வரின் வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவாகியிருக்கும் படம் 'விஜயானந்த்'.
    • இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா கர்நாடக மாநில முதல்வர் பசவராஜ் பொம்மையா முன்னிலையில் பிரமாண்டமாக நடைபெற்றது.

    'ட்ரங்க்' எனும் ஹாரர் திரில்லர் படத்தை இயக்கிய இயக்குனர் ரிஷிகா சர்மா இயக்கத்தில் தற்போது தயாராகி இருக்கும் படம் 'விஜயானந்த்'. கர்நாடகத்தை சார்ந்த பிரபல தொழிலதிபர் விஜய் சங்கேஸ்வரின் வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவாகியிருக்கும் இப்படத்தில் 'ட்ரங்க்' படப் புகழ் நடிகர் நிஹால் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இவருடன் ஆனந்த் நாக், பாரத் பொப்பன்னா, ஸ்ரீ பிரகலாத், நடிகை வினயா பிரசாத், பிரகாஷ் பெலவாடி, வி.ரவிச்சந்திரன், அனீஷ் குருவில்லா, ரமேஷ் பட், தயாள் பத்மநாபன், ஷைனி ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    விஜயானந்த் படக்குழு

    விஜயானந்த் படக்குழு

     

    கீர்த்தன் பூஜாரி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கோபி சுந்தர் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் தமிழ் பதிப்பு வசனத்தையும், பாடல்களையும் பாடலாசிரியர் மதுரகவி எழுதியிருக்கிறார். சுயசரிதை படைப்பாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை வி.ஆர்.எல்.பிலிம் புரொடக்ஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் டாக்டர் ஆனந்த் சங்கேஸ்வர் தயாரித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து, இறுதி கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.

     

    விஜயானந்த் படக்குழு

    விஜயானந்த் படக்குழு

     

    இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா படக்குழுவினருடன் கர்நாடக மாநில முதல்வர் பசவராஜ் பொம்மையா முன்னிலையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் பேசிய நடிகர் நிஹால், ஒரு தலைமுறைக்கு நம்பிக்கை தரும் மிகப்பெரும் சாதனையாளராக நான் நடிப்பது பெருமை. நாம் எல்லாம் சாதாரண மனிதர்கள் லீவு நாளில் ஓய்வெடுப்போம் ஆனால் இவர் எத்தனையோ ஆண்டுகள் ஓய்வில்லாமல் உழைத்திருக்கிறார்.அவரது சாதனைகள் வாழ்வில் வெற்றிபெற விரும்பும் அனைவருக்கும் பாடம். இதனை திரைப்படமாக எடுப்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். இப்படத்திற்காக அனைவரும் கடுமையாக உழைத்துள்ளனர். அனைத்து மொழிகளிலும் இப்படத்தை கொண்டாடுவார்கள் என நம்புகிறேன் என்றார்.

    இப்படம் வருகிற டிசம்பர் 09ம் தேதி தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி என‌ இந்தியாவின் பல மொழிகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.



    • விஜய் நடித்து வரும் ‘வாரிசு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
    • இப்படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

    வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 'வாரிசு' திரைப்படம் பொங்கல் தினத்தன்று வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது.

    வாரிசு

    வாரிசு

     

    இந்நிலையில் இப்படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி வாரிசு படத்தின் தமிழக திரையரங்க வெளியீட்டு உரிமையை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான கோப்ரா படத்தை தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • விஜய் நடித்து வரும் ‘வாரிசு’ திரைப்படம் அடுத்த வருடம் வெளியாகவுள்ளது.
    • இப்படம் ஆந்திராவில் வெளியாவதில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

     

    விஜய் - வாரிசு

    விஜய் - வாரிசு

    இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தீபாவளி தினத்தன்று 'வாரிசு' திரைப்படத்தின் போஸ்டரை வெளியிட்டு, சங்கராந்திக்கு திரைப்படம் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. இதனிடையே ஐதராபாத்தில் நடந்த தெலுங்கு தயாரிப்பாளர் சங்க கூட்டத்தில் பொங்கல் பண்டிகையில் நேரடி தெலுங்கு படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளித்து அதிக தியேட்டர்களை ஒதுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த முடிவால் பண்டிகை நாட்களில் தமிழ் படங்கள் ஆந்திராவில் வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

     

    விஜய்

    விஜய்

     

    இந்நிலையில் விஜய்யின் வாரிசு படம் வெளியாவதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளதால் இதுகுறித்து இயக்குனரும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமான் சென்னை திருவொற்றியூரில் பேட்டியளித்தார். அதில், "ஆந்திராவில் 'வாரிசு' வெளியாகாவிட்டால் விஜய்க்காக களத்தில் இறங்கி போராடுவேன்" என்று பேசினார்.

    • தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் ரசிகர்களை இன்று சந்திக்கிறார்.
    • பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க தலைமை அலுவலகத்திற்கு விஜய் வருகை தந்தார்.

    நடிகர் விஜய் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் வாரிசு. இந்தப் படத்தை வம்சி இயக்க தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரித்திருக்கிறார். பொங்கலுக்கு வெளியாக இருக்கும் இந்தப்படம் ஆந்திராவிலும் வெளியாக இருக்கிறது. இதற்காக விளம்பரங்கள் செய்யப்பட்டு, வியாபாரம் நடந்து கொண்டிருந்த நிலையில், திடீரென்று ஆந்திராவில் படம் பொங்கலன்று வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

     

    ரசிகர்களுடன் விஜய்
    ரசிகர்களுடன் விஜய்

    இந்நிலையில் விஜய் தனது ரசிகர்களையும் ரசிகர் மன்ற நிர்வாகிகளையும் பனையூரில் சந்தித்துப் பேசுகிறார். கடந்த 5 ஆண்டுகளாக விஜய் ரசிகர்களை சந்திப்பது கொரோனா பரவலால் தள்ளிப்போய் கொண்டிருந்தது. வாரிசு படத்துக்காக தொடர்ந்து படப்பிடிப்பு இருந்த நிலையில் மன்ற நிர்வாகிகள் மத்தியில் சந்திப்பு கோரிக்கை எழுந்த வண்ணம் இருந்தது. படப்பிடிப்பு முடிந்ததும் சந்திக்கலாம் என்று விஜய் தரப்பில் தகவல் சொல்லப்பட்டது.

     

    ரசிகர்களுடன் விஜய்

    ரசிகர்களுடன் விஜய்

    இந்த நிலையில்தான் ரசிகர்களை இன்று சந்திப்பதாக விஜய் தரப்பிலிருந்து தகவல் கொடுக்கப்பட்டிருக்கிறது. இன்று காலை முதலே விஜய்க்கு சொந்தமான பனையூர் அலுவலக வளாகத்தில் ரசிகர் மன்ற நிர்வாகிகள், ரசிகர்கள் குவியத்தொடங்கினர். அனைவருக்கும் அடையாள அட்டை கட்டாயமாக இருக்க வேண்டும் என்கிற உத்தரவும் பிறப்பிக்கப்பட்டிருந்தது. தனியார் பாதுகாப்பு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர்.

     

    ரசிகர்களுடன் விஜய்

    ரசிகர்களுடன் விஜய்

    இந்நிலையில் ரசிகர்களை சந்திக்க விஜய் பனையூர் அலுவலகம் வந்தார். அவரை ரசிகர்கள் கரகோஷம் எழுப்பி வரவேற்றனர். இந்த நிகழ்வில் விஜய் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளவுள்ளதாகவும், மன்ற நிர்வாகிகள் சிலரோடு முக்கிய ஆலோசனையிலும் ஈடுபட இருப்பதாகவும் தெரிகிறது. இது வாரிசு பட வெளியீட்டின் போது ரசிகர்கள் எப்படி யெல்லாம் நடந்து கொள்ள வேண்டும் என்கிற வழிகாட்டுதல்களாகவும் இருக்கும் என்கிறார்கள்.

    தெலுங்கிலும் படம் ரிலீஸ் ஆக வேண்டிய சூழலில் தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் விதிமுறைபடி நேரடி தெலுங்கு படங்களுக்குத் தான் விழா நாட்களில் அதிக முன்னுரிமை தர வேண்டும் என்ற அறிவிப்பு வெளியானதால் படத்தை வெளியிடுவதில் வாரிசுக்கு சிக்கல் எழுதிருந்திருக்கிறது. இந்த நேரத்தில் ரசிகர்களின் செயல்பாடுகள் எப்படியிருக்க வேண்டும் என்பது குறித்த வழிகாட்டுதல் நெறிமுறைகளும் இந்த கூட்டத்தில் ரசிகர்களுக்கு அறிவுறுத்தப்படும் என்று கூறப்படுகிறது.

    • ‘எம்.எஸ்.தோனி: தி அண்டோல்ட் ஸ்டோரி’ படம் மூலம் திஷா பதானி இந்தியில் தடம் பதித்தார்.
    • பிரபுதேவா இயக்கத்தில் வெளியான ராதே படத்தில் சல்மான்கானுக்கு ஜோடியாக நடித்து இருந்தார்.

    பிரபல இளம் இந்தி நடிகை திஷா பதானி. இவர் 2015-ல் வருண் தேஜா ஜோடியாக லோபர் என்ற தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமானார். இந்திய கிரிக்கெட் வீரர் தோனி வாழ்க்கையை மையமாக வைத்து வெளியான 'எம்.எஸ்.தோனி: தி அண்டோல்ட் ஸ்டோரி' படம் மூலம் இந்தியில் தடம் பதித்தார்.

     

    திஷா பதானி

    திஷா பதானி

    இதனை தொடர்ந்து அவர் நடித்த குங்பூ யோகா படம் வசூல் சாதனை நிகழ்த்தியது. கடந்த 2021-ஆம் ஆண்டு பிரபுதேவா இயக்கத்தில் வெளியான ராதே படத்தில் சல்மான்கானுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இவரின் கைவசம் தற்போது ஏக் வில்லன் ரிட்டன்ஸ், யோதா, கேடினா, புராஜெக்ட் கே ஆகிய படங்கள் உள்ளன.

     

    திஷா பதானி

    திஷா பதானி

    நடிகை திஷா பதானி அவ்வப்போது சமூக வலைத்தளத்தில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில், அவர் பதிவிட்டிருக்கும் புதிய கவர்ச்சி காட்டும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இவரின் கவர்ச்சி புகைப்படத்திற்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வைரலாக்கி வருகின்றனர்.

    • தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் ரசிகர்களை சந்திக்கிறார்.
    • பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க தலைமை அலுவலகத்தில் ரசிகர்கள் குவிந்து வருகின்றனர்.

    தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய், ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்வதை வழக்கமாக வைத்திருந்தார். கடந்த 5 ஆண்டுகளாக, புகைப்படம் எடுப்பதை நிறுத்தி வைத்திருந்தார். எனினும், அண்மையில், விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த மாவட்ட நிர்வாகிகள், ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்ளுடன் அவர் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

     

    ரசிகர்களுடன் விஜய்
    ரசிகர்களுடன் விஜய்

    இந்நிலையில் 5 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்கிறார். பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க தலைமை அலுவலகத்தில் நாமக்கல், சேலம், புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர்களை சந்தித்து விஜய் புகைப்படம் எடுத்துக்கொள்கிறார்.

    ரசிகர்களுடன் விஜய்

    ரசிகர்களுடன் விஜய்

     

    அடுத்தடுத்த வாரங்களில், பிற மாவட்ட ரசிகர்களுடனும் நடிகர் விஜய் புகைப்படம் எடுத்துக்கொள்ள உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளவுள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். மேலும் விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் ரசிகர்கள் விஜய்யை காண குவிந்து வருகின்றனர்.

    • கர்நாடகத்தை சார்ந்த பிரபல தொழிலதிபர் விஜய் சங்கேஸ்வரின் வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவாகியிருக்கும் படம் 'விஜயானந்த்'.
    • இப்படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

    'ட்ரங்க்' எனும் ஹாரர் திரில்லர் படத்தை இயக்கிய இயக்குனர் ரிஷிகா சர்மா இயக்கத்தில் தற்போது தயாராகி இருக்கும் படம் 'விஜயானந்த்'. கர்நாடகத்தை சார்ந்த பிரபல தொழிலதிபர் விஜய் சங்கேஸ்வரின் வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவாகியிருக்கும் இப்படத்தில் 'ட்ரங்க்' படப் புகழ் நடிகர் நிஹால் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இவருடன் ஆனந்த் நாக், பாரத் பொப்பன்னா, ஸ்ரீ பிரகலாத், நடிகை வினயா பிரசாத், பிரகாஷ் பெலவாடி, வி.ரவிச்சந்திரன், அனீஷ் குருவில்லா, ரமேஷ் பட், தயாள் பத்மநாபன், ஷைனி ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

     

    விஜயானந்த்

    விஜயானந்த்

    கீர்த்தன் பூஜாரி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கோபி சுந்தர் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் தமிழ் பதிப்பு வசனத்தையும், பாடல்களையும் பாடலாசிரியர் மதுரகவி எழுதியிருக்கிறார். சுயசரிதை படைப்பாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை வி.ஆர்.எல்.பிலிம் புரொடக்ஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் டாக்டர் ஆனந்த் சங்கேஸ்வர் தயாரித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து, இறுதி கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.

     

    விஜயானந்த் 

    விஜயானந்த் 

    இந்நிலையில் இப்படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த டிரைலரில் சாதிக்காம செத்துப்போய்ட்டா அது சாவுக்கே அவமானம் போன்ற வசனங்கள் இடம்பெற்று பலரையும் கவர்ந்து வருகிறது. இப்படம் வருகிற டிசம்பர் 09ம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.



    • பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை தபஸ்ஸும்.
    • 78 வயதாகும் நடிகை தபஸ்ஸும் நேற்று மாரடைப்பு காரணமாக காலமானார்.

    1947ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக திரைத்துறையில் அறிமுகமான நடிகை தபஸ்ஸும், 1990வரை 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். மும்பையைச் சேர்ந்த இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டு கவனம் ஈர்த்தார்.

     

    தபஸ்ஸும்

    தபஸ்ஸும்

    இந்நிலையில் 78 வயதாகும் மூத்த நடிகை தபஸ்ஸும் நேற்று மாரடைப்பு காரணமாக காலமானார். இவரது மறைவு திரையுலகினரிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் திரைப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். நடிகை தபஸ்ஸம்மின் இரங்கல் கூட்டம் வருகிற நவம்பர் 21ஆம் தேதி மாலை 4.30 மணி முதல் மும்பையின் சான்டாக்ரூஸ் பகுதியில் நடைபெறவுள்ளதாக அவரது தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இவர் தொலைக்காட்சியில் இந்தியாவின் முதல் டாக் ஷோவை தொகுத்து வழங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • கவர்ச்சி படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகை ஷகீலா.
    • இவர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொள்ள தடைவிதிக்கப்பட்டுள்ளது.

    மலையாள திரையுலகில் கவர்ச்சி படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ஷகீலா. மலையாள திரையுலகில் 1990-ம் ஆண்டுகளில் இவர் நடித்து வெளியான படங்கள், அப்போதைய முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இணையாக ஓடி வசூலை அள்ளி குவித்தது. தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழி படங்களிலும் கவர்ச்சியாக நடித்து கலக்கியதால் இவரது படத்திற்கு செல்ல இளைஞர்கள் கூட்டம் அலைமோதியது.

    ஒருகட்டத்தில் முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகும் போது ஷகீலா நடித்த படங்கள் திரைக்கு வர திரையுலகம் மறைமுக தடை விதித்தது. அதன்பின்பு நடிகை ஷகீலாவுக்கு பட வாய்ப்புகள் குறைய அவர் சினிமாவில் இருந்து சிறிது விலகியிருந்தார். பின்னர் ஒரு சில தமிழ் படங்களில் காமெடி வேடத்தில் நடித்தார். தொடர்ந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று ரியாலிட்டி ஷோக்களில் தலைகாட்டி வந்தார். இதன் மூலம் நடிகை ஷகீலாவுக்கு மீண்டும் வரவேற்பு கிடைக்க அவரை மலையாள திரையுலகம் சினிமா நிகழ்ச்சிகளில் பங்கேற்க அழைப்பு விடுத்தது.

     

    ஷகீலா

    ஷகீலா

    அந்த வகையில் ஒமர் லூலுவின் நல்ல சமயம் என்ற மலையாள படத்தின் அறிமுக விழாவில் பங்கேற்க நடிகை ஷகீலாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, அவரும் விழாவில் பங்கேற்க ஒப்புக்கொண்டார். கோழிக்கோட்டிற்கு நடிகை ஷகீலா வருவதாக கடந்த சில நாட்களாக நகர் முழுவதும் அறிவிப்பு செய்யப்பட்டது. இதையடுத்து அந்த விழாவில் பங்கேற்கவும், நடிகை ஷகீலாவை காணவும் ஏராளமான ரசிகர்கள் வர இருப்பதாக தகவல் வெளியானது.

    இந்நிலையில் கோழிக்கோட்டில் சினிமா அறிமுக விழா நடக்க இருந்த வணிக வளாகம் விழாவில் நடிகை ஷகீலா பங்கேற்க கூடாது என்று தடை விதித்தது. நடிகை ஷகீலா இல்லாமல் விழாவை நடத்தி கொள்ளுங்கள் என்று படக்குழுவினரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் ஷகீலா இல்லாமல் விழா நடைபெறாது என படக்குழு முடிவெடுத்து அந்த நிகழ்ச்சியை ரத்து செய்து விட்டதாக படக்குழுவினர் வீடியோ ஒன்றை வெளியிட்டனர்.

     

    ஷகீலா

    ஷகீலா

    அதில் ஒமர் லூலு பேசியதாவது, நடிகை ஷகீலா இல்லாமல் நிகழ்ச்சியை நடத்த வணிக வளாக நிர்வாகிகள் தெரிவித்தனர். அவர் இல்லாமல் நிகழ்ச்சியை நடத்த வேண்டாம் என நாங்கள் முடிவு செய்தோம். எனவே சினிமா அறிமுக விழாவையே ரத்து செய்துவிட்டோம் என்றார்.

    நடிகை ஷகீலா கூறியதாவது, சினிமா துறையில் இதுபோன்ற அவமானங்களை பலமுறை சந்தித்து உள்ளேன். இது ஒன்றும் எனக்கு புதிதல்ல. இம்முறை கோழிக்கோடு நிகழ்ச்சியில் பங்கேற்க செல்வதை எண்ணி மகிழ்ச்சியாக இருந்தேன். எனது ரசிகர்களும் என்னை பார்க்க ஆர்வமாக இருந்தனர். நிகழ்ச்சிக்கு என்னை வரக்கூடாது என்று கூறியது வருத்தமளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார். 

    • மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கலகத் தலைவன்’.
    • ‘கலகத் தலைவன்’ நேற்று திரையரங்குகளில் வெளியானது.

    தடம், மீகாமன் போன்ற படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்திருக்கும் படம் 'கலகத் தலைவன்'. இப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்திருக்கிறார். மேலும், பிக்பாஸ் ஆரவ், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது.

     

    கலகத் தலைவன்

    கலகத் தலைவன்

    இந்நிலையில் இப்படம் ரசிகர்களின் பேராதரவை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. கலகத் தலைவன் படத்தை பார்த்த ரசிக்ரகள் பலரும் படத்தின் கதைகளத்தையும், திரைக்கதையும் மற்றும் உதயநிதி, நிதி அகர்வால், ஆரவ் உள்ளிட்ட பலரின் நடிப்பையும் பாராட்டி சமூக வலைத்தளத்தில் பாராட்டி வருகின்றனர். 

    • பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் பிரதமருமான மறைந்த வாஜ்பாயின் வாழ்க்கையை படமாக்க திட்டமிட்டுள்ளனர்.
    • இப்படத்தில் வாஜ்பாய் கதாப்பாத்திரத்தில் பங்கஜ் திரிபாதி நடிக்கவுள்ளார்.

    பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் பிரதமருமான மறைந்த வாஜ்பாயின் வாழ்க்கையை படமாக்க திட்டமிட்டுள்ளனர். இப்படத்தை தேசிய விருது பெற்ற இயக்குனர் ரவி ஜாதவ் இயக்க, உத்கர்ஷ் நைதானி கதை எழுதுகிறார். இப்படத்தில் பிரபல இந்தி நடிகர் பங்கஜ் திரிபாதி வாஜ்பாய் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை பானுஷாலி ஸ்டுடியோஸ் மற்றும் லெஜண்ட் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது.

    பங்கஜ் திரிபாதி

    பங்கஜ் திரிபாதி

     

    இந்தப் படம் குறித்து நடிகர் பங்கஜ் திரிபாதி கூறியதாவது, "இப்படிப்பட்ட மனிதாபிமான அரசியல்வாதியை திரையில் காட்டவுள்ளது எனக்கு பெருமை. அவர் ஒரு அரசியல்வாதி மட்டுமல்ல, அவர் ஒரு சிறந்த எழுத்தாளர் மற்றும் புகழ்பெற்ற கவிஞர். அவருடைய கதாபாத்திரத்தில் நடிப்பது என்னைப் போன்ற ஒரு நடிகருக்குக் கிடைத்த பாக்கியம்" என்று கூறியுள்ளார்.

    இப்படம் அடுத்த ஆண்டு வாஜ்பாயின் பிறந்தநாளான டிசம்பர் 25 ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் உள்ளிட்ட படங்களை இயக்கி மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.
    • தற்போது லோகேஷ் கோவை மாநகர காவல்துறை மற்றும் ரோட்டரி டெக்ஸ்சிட்டி இணைந்து நடத்திய ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

    2017-ம் ஆண்டு வெளியான மாநகரம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். அதன்பின்னர் கைதி, மாஸ்டர் படங்களை இயக்கி தனக்கான இடத்தை ரசிகர்கள் மத்தியில் பிடித்தார். இதனை தொடர்ந்து கமல் நடிப்பில் சமீபத்தில் வெளியான விக்ரம் படத்தை இயக்கி அனைவரையும் கவர்ந்தார். இப்படம் நல்ல வசூல் சாதனை படத்தது. தற்போது விஜய்யை வைத்து 'தளபதி 67' படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். மீண்டும் இந்தக் கூட்டணி இணைய உள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

    இதனிடையே லோகேஷ் கனகராஜ் திரைத்துறை சம்மந்தப்பட்ட நிகழ்ச்சிகளுக்கும், கல்லூரி நிகழ்ச்சிகளிலும் விருந்தினராக பங்கேற்று வருகிறார். அந்த வகையில் கோவை மாநகர காவல்துறை மற்றும் ரோட்டரி டெக்ஸ்சிட்டி இணைந்து நடத்திய ஒரு நிகழ்ச்சியில் லோகேஷ் கலந்து கொண்டுள்ளார். அதில் மாணவர்களுடன் உரையாடி அவர்களது கேள்விகளுக்கு பதிலளித்தார்.

     

    தீனா - அஜித்

    தீனா - அஜித்

    அப்போது மாணவர் ஒருவர், "கமல வச்சு படம் பண்ணிட்டீங்க... ரஜினிக்கு தளபதி மாறி படம் பண்ணுவேன்னு சொன்னீங்க. அஜித்துக்கு எந்த மாதிரியான படம் பண்ணுவீங்க?" என கேள்வி எழுப்பினார். அதற்கு லோகேஷ் கனகராஜ், "தீனா படம் போல்" எனப் பதிலளித்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி

    வருகிறது. 

    ×