என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2020-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘பாபா’.
    • இப்படம் புதிய கோணத்தில் மறு படத்தொகுப்பு செய்யப்பட்டுள்ளது.

    கடந்த 2002- ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் 'பாபா'. இந்தப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதியதுடன் ரஜினிகாந்தே படத்தை தயாரித்தும் இருந்தார். அண்ணாமலை, வீரா, பாட்ஷா படங்களின் தொடர் வெற்றிக்கு பிறகு ரஜினிகாந்த் நடிப்பில் நான்காவது முறையாக 'பாபா' படத்தை இயக்கினார் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா.


    பாபா

    மனிஷா கொய்ராலா கதாநாயகியாக நடித்த இந்த படத்தில் கவுண்டமணி, டெல்லி கணேஷ், சுஜாதா, எம்.என்.நம்பியார் ஆஷிஷ் வித்யார்த்தி, சாயாஜி ஷிண்டே, சங்கவி, கருணாஸ், ரியாஸ் கான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.


    பாபா

    'பாபா'வை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த படத்தில் ரஜினி அடிக்கடி பயன்படுத்தும் 'பாபா' முத்திரை தற்போது வரை அவருக்கான ஒரு தனி அடையாளமாகவே கருதப்படுகிறது. இந்த நிலையில் தற்போது 'பாபா' திரைப்படம் மீண்டும் புதுப்பொலிவுடன் புதிய திரையிடலுக்கு தயாராகி உள்ளது.


    பாபா

    இதற்காக முற்றிலும் புதிய கோணத்தில் இந்தபடம் மறு படத்தொகுப்பு செய்யப்பட்டுள்ளது. விரைவில் 'பாபா' படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • பிரபல திரைப்பட வசனகர்த்தா ஆரூர்தாஸ் வயது மூப்பு காரணமாக காலமானார்.
    • சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர் உள்ளிட்ட பல்வேறு நடிகர்களின் படத்திற்கு வசனம் எழுதியுள்ளார்.

    தமிழ் திரையுலகில் பிரபலமான வசனகர்த்தவாக அறியப்பட்ட ஆரூர்தாஸ் சென்னையில் மரணமடைந்தார் (வயது 91). வயது மூப்பு காரணமாக நேற்று நள்ளிரவு அவரது உயிர் பிரிந்திருக்கிறது. அவரது உடல் தி.நகரில் அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. இவருக்கு பேபி என்ற மனைவியும், ரவிசந்திரன், தாராதேவி, ஆஷாதேவி ஆகிய மகன், மகள்களும் இருக்கிறார்கள்.

    1955-ம் ஆண்டு நாட்டிய தாரா என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர். பிறகு வசனகர்த்தா தஞ்சை ராமையாதாஸிடம் உதவியாளராக சேர்ந்து திரைப்படங்களுக்கு பணியாற்றி வந்தார். திருவாரூர் ஜேசுதாஸ் என்ற இவரது பெயரை தஞ்சை ராமையாதாஸ் ஆரூர் தாஸ் என்று மாற்றி வைத்தார். இதன் பிறகு வசனகர்த்தா ஏ.எல்.நாராயணனிடம் உதவியாளராக சவுபாக்யவதி என்ற படத்தில் சேர்ந்தார்.

    பிசியாக பணியாற்றிக் கொண்டிருந்த நாராயணன், தான் வசனம் எழுத வேண்டிய ஒரு காட்சியை ஆரூர் தாஸிடம் கொடுத்து எழுதச்சொல்ல, அவருக்குப் பிடித்துப்போனது. பிறகு தேவரின் வாழ வைத்த தெய்வம் படத்தின் மூலம் தனியாக வசனம் எழுதத்தொடங்கினார். ஜெமினி கணேசனும், சாவித்ரியும் பாசமலர் பட வாய்ப்பை தாசுக்குப் பெற்றுத்தர திரையுலகில் ஆரூர் தாஸின் சகாப்தம் ஆரம்பித்தது.

    திரையுலகில் ஜாம்பவான்களாக திகழ்ந்த எம்.ஜி.ஆர். சிவாஜி ஆகியோரின் படங்களுக்கு ஒரே நேரத்தில் வசனம் எழுதி அவர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தார். அதோடு பாசமலர் படத்தில் இவர் எழுதிய ஆனந்தா என் கண்ணையே உன்னிடம் ஒப்படைக்கிறேன் அதில் ஆனந்தக் கண்ணீரைத்தன் பார்க்க வேண்டும் என்ற வசனம் இன்றளவுக்கும் பட்டி தொட்டியெல்லாம் பிரபலமான வசனமாக இருந்து வருகிறது.

     

    நேரில் சென்று அஞ்சலி செலுத்திய முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்

    நேரில் சென்று அஞ்சலி செலுத்திய முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்

    இந்த வசனத்தை எழுதி மக்கள் மனதில் இடம் பிடித்தவர் ஆரூர் தாஸ். சிவாஜி கணேசனின் படங்களுக்கு பெரும்பாலும் ஆரூதாஸ் வசனம் எழுதியிருக்கிறார். எம்;ஜி.ஆர். நடித்த வேட்டைக்காரன், அன்பே வா, தாய் சொல்லை தட்டாதே, தாயைக் காத்த தனையன், தொழிலாளி, தனிப்பிறவி, ஆசைமுகம், நீதிக்கு தலைவணங்கு என்று பல்வேறு படங்களில் எழுதி அசாத்திய சாதனை புரிந்தார்.

    திரையுலகில் 850க்கும் மேற்பட்ட படங்களுக்கு பணியாற்றியிருக்கும் இவர் பெண் என்றால் பெண் என்ற ஒரு படத்தை மட்டும் இயக்கியிருக்கிறார். இவர் 100-க்கும் அதிகமான மொழிமாற்று படங்களுக்கு வசனம் எழுதியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக வடிவேலு நடித்த தெனாலிராமன் படத்திற்கு எழுதியிருந்தார். இவருக்கு தமிழக அரசு கலைமாமணி விருது கொடுத்து கவுரவித்திருக்கிறது. சத்யபாமா பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியிருக்கிறது. தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு திரையுலகிலும் தன்னுடைய முத்திரையை பதித்து என்.டி.ஆர். போன்ற கதாநாயகர்களின் மனதில் இடம்பிடித்தார்.

    அவரது உடலுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று மாலை வைத்து இறுதி மரியாதை செய்தார். அவரைத் தொடர்ந்து திரையுலகைச் சேர்ந்த பலரும் ஆரூர் தாஸ் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள். இன்று மாலை மந்தைவெளி கல்லறை செயிண்ட் மேரீஸ் தோட்டத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

    மேலும் ஆரூர்தாஸ் உடலுக்கு கவிஞர் வைரமுத்து, கவிஞர் முத்துலிங்கம், கே.பாக்யராஜ், சிவகுமார், இயக்குனர் எழில், மனோபாலா, ஆ.ராசா, அமைச்சர் ஏ.வ. வேலு, பூச்சி முருகன், உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் அஞ்சலி செலுத்தினார்கள். இவரது மறைவுக்கு ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    • விஜய் நேற்று ரசிகர்களை பனையூரில் உள்ள அலுவலகத்தில் சந்தித்தார்.
    • அந்த நிகழ்வில் என் ‘கட்-அவுட்’க்கு பாலாபிஷேகம் செய்வதற்கு பதில் ஏழைகளுக்கு பால், முட்டை வாங்கி கொடுங்கள் என்று அறிவுறுத்தியுள்ளார்.

    நடிகர் விஜய் நடிப்பில் வாரிசு படம் பொங்கலன்று வெளியாக இருக்கும் நிலையில் விஜய் ரசிகர்களை நேற்று சந்தித்து பேசியிருப்பது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சந்திப்புக்கு நேரம் கேட்டு பல வருடங்களாக ரசிகர்கள் காத்திருந்தனர். 5 ஆண்டுகளுக்கு பிறகு இந்த சந்திப்பு நடந்திருப்பது ரசிகர்களுக்கு உத்வேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

    காலை முதலே விஜய்யின் நீலாங்கரை வீட்டின் முன்பாக ரசிகர்கள் குவியத் தொடங்கினார்கள். மதியம் 2 மணிக்கு ரசிகர்களை சந்திக்க விஜய் திட்டமிட்டிருந்தார். பனையூர் அலுவலகத்திற்கு ரசிகர்கள் கூட்டம் வரத்தொடங்கியிருந்தது. குறிப்பாக சேலம், நாமக்கல், புதுக்கோட்டை, ஈரோடு மாவட்ட ரசிகர்களை மட்டுமே சந்திக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் செய்தி பரவி பல்வேறு பகுதிகளிலிருந்தும் ரசிகர்கள் குவிந்து விட்டனர். இதனால் கூட்டம் கட்டு கடங்காமல் போனது.

     

    ரசிகர்களை சந்தித்த விஜய்

    ரசிகர்களை சந்தித்த விஜய்

    மக்கள் இயக்கத்தின் அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். வந்திருந்த அனைவருக்கும் பிரியாணி ஏற்பாடு செய்யப்பட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது. பிரியாணியின் சுவை பற்றி ஒரு ரசிகர் இணையத்தில் பதிவிட்டு பாராட்டு தெரிவிக்க, அதைத் தொடர்ந்து இணையத்தில் பனையூர் பிரியாணி என்ற ஹேஷ்டேக்குகள் பரவ ஆரம்பித்தது.

    முதலில் மாவட்ட அளவிலான பொறுப்பாளர்களை சந்தித்துப் பேசிய விஜய் அவர்களிடம் மக்கள் இயக்கத்தின் செயல்பாடு குறித்து கேட்டறிந்தார். எதிர்வரும் நாட்களிலும், வாரிசு திரைப்படம் வெளியாகும்போது என்னமாதிரியான நகர்வுகளை முன்னெடுக்க வேண்டும். ரசிகர்கள் சம்பாதிக்கக்கூடிய பணத்தில் ஒரு பங்கை மட்டுமே செலவிடுங்கள், தேவையில்லாமல் செலவு செய்ய வேண்டாம், நற்பணிகளை மேற்கொள்ளும் போது ஏழை எளிய மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்க வேண்டும், ஏழை எளிய குடும்பங்களுக்கு தொடர்ந்து உதவிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

     

    ரசிகர்களை சந்தித்த விஜய்

    ரசிகர்களை சந்தித்த விஜய்

    இதன் பின்னர் பேசிய விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தமிழகத்தில் 15 மற்றும் 16 இடங்களில் தான் விஜய் மக்கள் இயக்கம் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரத்தம் கொடை கொடுக்கக் கூடிய இயக்கம் மக்கள் இயக்கம் தான் என்று அவர்களுக்கு விளக்கப்பட்டிருக்கிறது.

    பிற்பகலில் ரசிகர்களை சந்தித்த விஜய் அவர்களிடம், முதலில் உங்கள் குடும்பத்தை கவனித்துக் கொள்ளுங்கள். அதுதான் முக்கியம். அதன் பிறகு இயக்க பணிகளில் கவனம் செலுத்துங்கள். குறிப்பாக என்னுடைய கட்அவுட்களுக்கு பாலா பிஷேகம் செய்யக்கூடாது. அதற்கு பதிலாக ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை அன்றும் ஏழைகளுக்கு பால், முட்டை சத்தான உணவு கொடுத்து அவர்களுக்கு உதவுங்கள். மக்கள் நலப்பணிகளை தொய்வில்லாமல் தொடர்ந்து செய்து வர வேண்டும் என்பதை விளக்கியிருக்கிறார் விஜய்.

     

    ரசிகர்களை சந்தித்த விஜய்

    ரசிகர்களை சந்தித்த விஜய்

    விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கவுன்சிலர்களும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர். அடுத்த நாட்களில் பிற மாவட்ட ரசிகர்களையும் சந்திக்க விஜய் திட்டமிட்டிருக்கிறார். இதனால் வரும் நாட்களில் விஜய் ரசிகர்களின் பயணம் சென்னையை நோக்கியே அமைந்திருக்கும் என்கிறார்கள்.

    இந்த விழாவின் முடிவில் பொதுசெயலாலர் புஸ்ஸி ஆனந்த் பேசும்போது, மக்கள் நலப்பணிகளில் ஈடுபடாமல் வெறுமனே விஜய்யை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொள்பவர்களுக்கு மக்கள் இயக்கத்தில் இடமில்லை. மக்கள் பணிகளில் ஈடுபடுபவர்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று பேசியது குறிப்பிடத்தக்கது. இந்த அதிரடி நடவடிக்கை விஜய் மக்கள் இயக்கத்தை திரையுலகிலிருந்து அடுத்த கட்டமாக அரசியலை நோக்கி நகர்த்தும் என்கிறார்கள்.

    • பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் படங்களில் இயக்கியவர் மாரி செல்வராஜ்.
    • இவர் இயக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

    2018ம் ஆண்டு வெளியான பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். அதன்பின்னர் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் படத்தை இயக்கி தனக்கான இடத்தை பிடித்தார். தற்போது உதயநிதி, கீர்த்தி சுரேஷ், பகத் பாசில், வடிவேலு, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் மாமன்னன் படம் உருவாகி வருகிறது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். 'மாமன்னன்' படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

     

    வாழை

    வாழை

    இந்நிலையில் மாரி செல்வராஜ் இயக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இப்படத்திற்கு வாழை என்று பெயரிடப்பட்டுள்ளது. இதன் படப்பிடிப்ப்பு தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கொங்கராய குறிச்சியில் இன்று தொடங்கியது. அதனை உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். இதில் நடிகர் கலையரசன் கதாநாயகனாக நடிக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளார். இப்படத்தின் பிற அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தென் இந்தியா படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகை ஜோதிகா.
    • 21 ஆண்டுகளுக்கு பிறகு ஜோதிகா மீண்டும் ஒரு இந்தி படத்தில் நடிக்க ஒப்பந்தமாக இருக்கிறார்.

    தென் இந்தியா படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகை ஜோதிகா. இவர் இந்தியில் 1998-ம் ஆண்டு வெளியான 'டோலி சஜா கே ரக்கீனா' என்ற படத்தில் மூலம் அறிமுகமானார். அதன்பின் தமிழ் படங்களில் கவனம் செலுத்திய ஜோதிகா, 2001-ல் 'லிட்டில் ஜான்' என்ற இந்தி படத்தில் மீண்டும் நடித்து இருந்தார். அதன் பிறகு இந்தியில் அவர் படங்கள் எதுவும் நடிக்கவில்லை.

     

    ஜோதிகா

    ஜோதிகா

    தற்போது 21 ஆண்டுகளுக்கு பிறகு ஜோதிகா மீண்டும் ஒரு இந்தி படத்தில் நடிக்க ஒப்பந்தமாக இருக்கிறார். இது ஸ்ரீகாந்த் பொல்லா என்ற தொழில் அதிபரின் வாழ்க்கை வரலாறு படம். இதில் தொழில் அதிபர் கதாபாத்திரத்தில் ராஜ்குமார் ராவ் நடிக்க, துஷார் இத்ராணி இயக்குகிறார்.


    ஜோதிகா

    ஜோதிகா


     


    இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க ஜோதிகாவை படக்குழுவினர் அணுக அவரும் சம்மதம் தெரிவித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. நீண்ட இடைவெளிக்கு ஜோதிகா மீண்டும் இந்தி படத்தில் நடிக்கயிருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஜோதிகா தற்போது மலையாளத்தில் தயாராகும் காதல் படத்தில் மம்முட்டியுடன் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

    • விஜய் சேதுபதி தற்போது பொன்ராம் இயக்கத்தில் டிஎஸ்பி படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கவந்து வருகிறது.

    விஜய் சேதுபதி நடிக்கும் 46-வது திரைப்படத்தை இயக்குனர் பொன்ராம் இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இப்படத்திற்கு 'டிஎஸ்பி' என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அனு கீர்த்திவாஸ் நடித்துள்ளார்.

     

    டிஎஸ்பி

    டிஎஸ்பி

    மேலும் பிரபாகர், புகழ், இளவரசு, ஞானசம்மந்தன், தீபா, சிங்கம்புலி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் டி.இமான் இசையமைக்க, வெங்கடேஷ், தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது.

     

    டிஎஸ்பி

    டிஎஸ்பி

    இந்நிலையில்' டிஎஸ்பி' திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ள்து. அதன்படி இப்படம் வருகிற டிசம்பர் 2ம் தேதி வெளியாகவுள்ளதாக புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • 1986ஆம் ஆண்டு மனசுக்கேத்த மன்னாரு படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார் தேவா.
    • இவர் தற்போது சமூக வலைத்தளத்தில் இணைந்திருப்பதாக அறிவித்துள்ளார்.

    "1986ஆம் ஆண்டு மனசுக்கேத்த மன்னாரு படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார் தேவா. இவர் கடந்த இருபது வருடங்களாக இசைத் துறையில் பணியாற்றி முன்னணி இசையமைப்பாளராக வலம் வருகிறார். தேவா பல கானா பாடல்களை எழுதியும், அந்தப் பாடலைத் தானே பாடியும் உள்ளார். இவருடைய கானா பாடல்கள் பெரும்பாலும் சென்னைத் தமிழில் இருக்கும். இவர் மேற்கத்திய இசைக் கருவிகளை கையாளும் திறன் படைத்த மாஸ்டர் தன்ராஜிடம் மேற்கத்திய இசையைப் பயின்றவர்.

     

    தேவா

    தேவா

    காத்தடிக்குது காத்தடிக்குது... காசிமேடு காத்தடிக்குது... திருப்பதி ஏழுமலை வெங்கடேசா... கவலைப்படாதே சகோதாரா... உள்ளிட்டப் பல பாடல்களை இன்றும் பட்டித்தொட்டியெல்லாம் அவ்வப்போது கேட்க முடிகிறது. சமீபத்தில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான தெறி படத்தில் இவர் பாடிய 'ஜித்து ஜில்லாடி' பாடல் மிகவும் பிரபலமானது. இவர் கடைசியாக 2021இல் சில்லு வண்டுகள் படத்திற்கு இசையமைத்திருந்தார்.

     

    தேவா

    தேவா

    இந்நிலையில் இசையமைப்பாளர் தேவா சமூக வலைத்தளத்தில் இணைந்துள்ளதாக அறிவித்துள்ளார். அதில், வணக்கம்! இறுதியாக உங்கள் அனைவரையும் இணைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அனைத்து அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. நாளை நடக்கும் தேவா தேவா நிகழ்ச்சியில் உங்கள் அனைவரையும் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன் என்றார். தேவாவின் பிறந்தநாளான நேற்று அவர் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளதால் பலரும் உற்சாகத்தில் உள்ளனர்.

    • சர்வதேச இந்திய திரைப்பட திருவிழா கோவாவில் நேற்று தொடங்கியது.
    • சிறந்த இந்திய திரைப்பட ஆளுமை விருதுக்கு நடிகர் சிரஞ்சீவி தேர்வு செய்யப்பட்டார்.

    பனாஜி:

    53-வது சர்வதேச இந்திய திரைப்பட திருவிழா கோவாவில் நேற்று தொடங்கியது. இதில் உலகின் சிறந்த திரைப்படங்கள் திரையிடப்படும்.

    இதன் தொடக்க விழாவில் இந்தி திரையுலகைச் சேர்ந்த நடிகர்கள் அஜய் தேவ்கன், வருண் தவான், கார்த்திக் ஆர்யன், மனோஜ் பாஜ்பாய், பாடலாசிரியர் பிரசூன் ஜோஷி மற்றும் நடிகை சாரா அலிகான் உள்ளிட்டோர் தொடக்க விழாவில் கலந்து கொண்டனர்.

    இதில் பேசிய மத்திய மந்திரி அனுராக் தாக்குர், பெண்களிடம் இருந்து 40 சதவீத பணிகள் வெளிவருகின்றன என தெரிவித்தார்.

    உலகம் முழுவதிலும் இருந்து பட இயக்குனர்கள் வருகை தந்து தங்களது திரைப்படங்களை வெளியிடும் ஒரு பெரிய திரைப்பட திருவிழாவை நாம் நடத்துகிறோம் என்பது பெருமைக்கு உரிய விஷயம் என நடிகர் மனோஜ் பாஜ்பாய் கூறியுள்ளார்.

    இந்நிலையில், நடப்பு ஆண்டின் சிறந்த இந்திய திரைப்பட ஆளுமை விருதுக்கு பிரபல நடிகர் சிரஞ்சீவி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை மந்திரி அனுராக் தாக்குர் தெரிவித்தார்.

    ஏறக்குறைய 4 தசாப்தங்களாக நடிகர், நடன கலைஞர் மற்றும் தயாரிப்பாளர் என 150 படங்களில் பணியாற்றி நடிப்புத் துறையில் நடிகர் சிரஞ்சீவி புகழ் பெற்றுள்ளார் என மத்திய மந்திரி தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

    • பிரபல திரைப்பட வசனகர்த்தா ஆரூர்தாஸ் வயது மூப்பு காரணமாக காலமானார்.
    • சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர் உள்ளிட்ட பல்வேறு நடிகர்களின் படத்திற்கு வசனம் எழுதியுள்ளார்.

    சென்னை:

    தமிழ்த் திரையுலகின் பிரபல வசனகர்த்தா ஆரூர்தாஸ் வயது மூப்பு காரணமாக தி. நகரில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று காலமானார். அவருக்கு வயது 91.

    திருவாருர் மாவட்டத்தில் பிறந்த ஆரூர்தாஸ் முன்னணி நடிகர்கள், நடிகைகள் நடித்த 1000 திரைப்படங்களுக்கு வசனம் எழுதிய எழுத்தாளர். கடந்த ஜூன் மாதம் அவருக்கு கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதை தமிழக அரசு வழங்கி சிறப்பித்தது.

    இந்நிலையில், சினிமா வசனகர்த்தா ஆரூர்தாஸ் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியுள்ளதாவது:

    திருவாரூர் மண்ணில் பிறந்து ஆயிரம் திரைப்படங்களுக்குக் கதை, திரைக்கதை, வசனம் எழுதி திரையுலகில் தனி முத்திரை பதித்த முதுபெரும் வசனகர்த்தா ஆரூர் தாஸ் அவர்கள் முதுமை காரணமாக மறைவெய்தினார் என்பதை அறிந்து மிகுந்த துயரமுற்றேன். அவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    தனது சொந்த ஊரான திருவாரூருடன் இயற்பெயரான ஏசுதாஸின் பிற்பாதியை இணைத்து ஆரூர்தாஸ் எனப் பெயர் வைத்துக் கொண்டு தான் பிறந்த மண்ணைப் பெருமைப்படுத்தியவர் ஆரூர்தாஸ் அவர்கள். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஆகியோரது பெரும்பாலான படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதிய இவர், பாமரமக்கள் மனதிலும் "பாசமலர்" திரைப்பட வசனங்கள் மூலம் நீங்கா இடம்பெற்றிருப்பவர்.

    அவரது கலைச்சேவையைப் பாராட்டி முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் கலைமாமணி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டவர்.

    தமிழ்த் திரையுலகில் சிறந்து விளங்கிய வாழ்நாள் சாதனையாளருக்கு முத்தமிழறிஞர் கலைஞர் பெயரிலான கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதினை இந்த ஆண்டு ஜூன் 3-ம் நாள் கலைஞர் அவர்களின் பிறந்தநாளில் ஆரூர்தாஸ் அவர்களின் இல்லத்துக்கே சென்று வழங்கி மகிழ்ந்தேன்.

    தன் வசனங்களின் மூலம் திரையுலகை ஆண்ட அவர் தற்போது நம்மிடம் இல்லை என்றாலும் அவர் ஆற்றிய கலைப்பணிகள் என்றென்றும் தமிழ் திரையுலகிலும்- படங்களை பார்த்து ரசித்த நெஞ்சங்களிலும் நிலைத்து நிற்கும். கதை வசனகர்த்தா ஆரூர் தாஸ் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், கலை உலகினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

    • மகிழ்திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘கலகத் தலைவன்’.
    • இப்படம் நேற்று முன்தினம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    தடம், மீகாமன் போன்ற படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்திருக்கும் படம் 'கலகத் தலைவன்'. இப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்திருக்கிறார். மேலும், பிக்பாஸ் ஆரவ், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் நேற்று முன்தினம் திரையரங்குகளில் வெளியானது.

     

    கலகத் தலைவன்

    கலகத் தலைவன்

     

    இப்படம் ரசிகர்களின் பேராதரவை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. கலகத் தலைவன் படத்தை பார்த்த ரசிக்ரகள் பலரும் படத்தின் கதைகளத்தையும், திரைக்கதையும் மற்றும் உதயநிதி, நிதி அகர்வால், ஆரவ் உள்ளிட்ட பலரின் நடிப்பையும் பாராட்டி சமூக வலைத்தளத்தில் பாராட்டி வருகின்றனர்.

     

    கலகத் தலைவன்

    கலகத் தலைவன்

    இந்நிலையில் கலகத் தலைவன் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் தடம் பதித்து வருகிறது. இதுகுறித்து தயாரிப்பு நிறுவனம் பதிவிட்டிருப்பது, பாக்ஸ் ஆபிஸில் கலகத் தலைவன் மீது காதல் தொடர்கிறது என்று குறிப்பிட்டுள்ளது. 

    • கர்நாடகத்தை சார்ந்த பிரபல தொழிலதிபர் விஜய் சங்கேஸ்வரின் வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவாகியிருக்கும் படம் 'விஜயானந்த்'.
    • இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா கர்நாடக மாநில முதல்வர் பசவராஜ் பொம்மையா முன்னிலையில் பிரமாண்டமாக நடைபெற்றது.

    'ட்ரங்க்' எனும் ஹாரர் திரில்லர் படத்தை இயக்கிய இயக்குனர் ரிஷிகா சர்மா இயக்கத்தில் தற்போது தயாராகி இருக்கும் படம் 'விஜயானந்த்'. கர்நாடகத்தை சார்ந்த பிரபல தொழிலதிபர் விஜய் சங்கேஸ்வரின் வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவாகியிருக்கும் இப்படத்தில் 'ட்ரங்க்' படப் புகழ் நடிகர் நிஹால் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இவருடன் ஆனந்த் நாக், பாரத் பொப்பன்னா, ஸ்ரீ பிரகலாத், நடிகை வினயா பிரசாத், பிரகாஷ் பெலவாடி, வி.ரவிச்சந்திரன், அனீஷ் குருவில்லா, ரமேஷ் பட், தயாள் பத்மநாபன், ஷைனி ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    விஜயானந்த் படக்குழு

    விஜயானந்த் படக்குழு

     

    கீர்த்தன் பூஜாரி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கோபி சுந்தர் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் தமிழ் பதிப்பு வசனத்தையும், பாடல்களையும் பாடலாசிரியர் மதுரகவி எழுதியிருக்கிறார். சுயசரிதை படைப்பாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை வி.ஆர்.எல்.பிலிம் புரொடக்ஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் டாக்டர் ஆனந்த் சங்கேஸ்வர் தயாரித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து, இறுதி கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.

     

    விஜயானந்த் படக்குழு

    விஜயானந்த் படக்குழு

     

    இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா படக்குழுவினருடன் கர்நாடக மாநில முதல்வர் பசவராஜ் பொம்மையா முன்னிலையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் பேசிய நடிகர் நிஹால், ஒரு தலைமுறைக்கு நம்பிக்கை தரும் மிகப்பெரும் சாதனையாளராக நான் நடிப்பது பெருமை. நாம் எல்லாம் சாதாரண மனிதர்கள் லீவு நாளில் ஓய்வெடுப்போம் ஆனால் இவர் எத்தனையோ ஆண்டுகள் ஓய்வில்லாமல் உழைத்திருக்கிறார்.அவரது சாதனைகள் வாழ்வில் வெற்றிபெற விரும்பும் அனைவருக்கும் பாடம். இதனை திரைப்படமாக எடுப்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். இப்படத்திற்காக அனைவரும் கடுமையாக உழைத்துள்ளனர். அனைத்து மொழிகளிலும் இப்படத்தை கொண்டாடுவார்கள் என நம்புகிறேன் என்றார்.

    இப்படம் வருகிற டிசம்பர் 09ம் தேதி தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி என‌ இந்தியாவின் பல மொழிகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.



    • விஜய் நடித்து வரும் ‘வாரிசு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
    • இப்படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

    வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 'வாரிசு' திரைப்படம் பொங்கல் தினத்தன்று வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது.

    வாரிசு

    வாரிசு

     

    இந்நிலையில் இப்படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி வாரிசு படத்தின் தமிழக திரையரங்க வெளியீட்டு உரிமையை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான கோப்ரா படத்தை தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    ×