ஏ.எல்.விஜய் படத்தின் புதிய அப்டேட்

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் திரைப்படம் 'அச்சம் என்பது இல்லையே'.இந்த படத்தில் எமி ஜாக்சன் கதாநாயகியாக நடிக்கிறார்.
ஏ.எல்.விஜய்
ஏ.எல்.விஜய்
Published on

அஜித் நடிப்பில் கடந்த 2007-ம் ஆண்டு வெளியான 'கிரீடம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு இயக்குனராக அறிமுகமாவனர் ஏ.எல்.விஜய். அதன்பின்னர் மதராசப்பட்டினம், தெய்வ திருமகள், தாண்டவம் உள்ளிட்ட பல படங்களை இயக்கி அனைவரையும் கவர்ந்தார். தற்போது இவர் அருண் விஜய் நடிக்கும் 'அச்சம் என்பது இல்லையே' என்ற படத்தை இயக்கி வருகிறார்.

அச்சம் என்பது இல்லையே போஸ்டர்

இப்படத்தின் கதாநாயகியாக எமி ஜாக்சன் நடிக்க ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். இந்நிலையில், அருண் விஜய்யின் பிறந்த நாளான இன்று படக்குழு இப்படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது. குழந்தையுடன் அருண் விஜய் இருக்கும் இந்த போஸ்டர் சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com