'கலகத் தலைவன்' படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்

மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கலகத் தலைவன்’.இப்படம் இன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.
கழகத் தலைவன் படம் பார்த்த ஸ்டாலின்
கழகத் தலைவன் படம் பார்த்த ஸ்டாலின்
Published on

தடம், மீகாமன் போன்ற படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்திருக்கும் படம் 'கலகத் தலைவன்'. இப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்திருக்கிறார். மேலும், பிக்பாஸ் ஆரவ், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

கழகத் தலைவன் படம் பார்த்த முதல்வர் ஸ்டாலின்

இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 'கலகத் தலைவன்' திரைப்படத்தை படக்குழுவினருடன் இணைந்து தனியார் திரையரங்கில் பார்த்துள்ளார். மேலும், 'கலகத் தலைவன்' படத்தின் கதாநாயகன் உதயநிதி ஸ்டாலின், இயக்குனர் மகிழ் திருமேனி மற்றும் படக்குழுவினருக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்தார். இது தொடர்பான புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

X

Maalai Malar
www.maalaimalar.com