அவர் நல்ல டேக்கிற்கு ஓகே சொல்ல மாட்டார் - நடிகை நிதி அகர்வால்

மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கலகத் தலைவன்’.‘கலகத் தலைவன்’ இன்று திரையரங்குகளில் வெளியானது.
நிதி அகர்வால்
நிதி அகர்வால்
Published on

தடம், மீகாமன் போன்ற படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்திருக்கும் படம் 'கலகத் தலைவன்'. இப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்திருக்கிறார். மேலும், பிக்பாஸ் ஆரவ், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது.

நிதி அகர்வால்

இப்படத்தில் நடித்த நிதி அகர்வால் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது, "மகிழ் சார் நல்ல டேக்கிற்கு ஓகே சொல்ல மாட்டார். சூப்பர் டேக்கிற்கு மட்டும் தான் ஓகே சொல்லுவார். அவர் எப்பவுமே கட் சொல்ல மாட்டார். ஏதாவது புதிதாக வரும் அதற்காக கீப்ஸ் ரோலிங் சொல்லிக் கொண்டே இருப்பார். சில சீன்ஸ் கஷ்டமாக தான் இருந்தது. நான் நடித்தது மருத்துவர் கதாபாத்திரம். ஸ்கிரிப்டில் கதாபாத்திரம் கிராஃப் மிகவும் அழகாக இருந்தது" என்று பேசினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com