என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • மகிழ் திருமேனி தற்போது இயக்கியுள்ள படம் ‘கலகத் தலைவன்’.
    • இந்த திரைப்படம் 18-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    தடம், மீகாமன் போன்ற படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்திருக்கும் படம் 'கலகத் தலைவன்'. இப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்திருக்கிறார். மேலும், பிக்பாஸ் ஆரவ், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் வருகிற நவம்பர் 18-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    நிதி அகர்வால்

    இப்படத்தில் நடித்த நிதி அகர்வால் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது, "உதயநிதி சாரிடம் இருந்து நான் நிறைய கற்றுக் கொண்டேன். அவருக்கு பல பிரச்சினைகள் இருக்கும் பொறுப்பு இருக்கும் ஆனால் அதை அவர் படப்பிடிப்பு தளத்தில் ஒரு நாள் கூட காட்டியதில்லை" என்று கூறினார்.

    • ரஜினி தற்போது நடித்து வரும் திரைப்படம் ‘ஜெயிலர்’.
    • இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    நடிகர் ரஜினி தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் மற்றும் வசந்த் ரவி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர்.


    ஜெயிலர்

    சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'ஜெயிலர்' படப்பிடிப்பு தளத்தில் நடிகர் சிவராஜ்குமார் இருக்கும் புகைப்படத்தை படக்குழு வெளியிட்டுள்ளது.


    ஜெயிலர் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் சிவராஜ்குமார்

    இந்த புகைப்படத்தை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.



    • வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ‘வாத்தி’.
    • இந்த படம் வருகிற டிசம்பர் 2-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'வாத்தி'. பிரபல தயாரிப்பாளர் நாக வம்சி தயாரித்து வரும் இப்படம், நேரடியாக தெலுங்கிலும் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு தெலுங்கில் 'சார்' என்றும், தமிழில் 'வாத்தி' என்றும் தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது.


    வாத்தி

    சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் முதல் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 'வாத்தி' திரைப்படம் வருகிற டிசம்பர் 2-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இப்படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது.


    வாத்தி போஸ்டர்

    அதன்படி, இப்படம் 2023-ஆம் ஆண்டு பிப்ரவரி 17-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.



    • நயன்தாரா-விக்னேஷ் தம்பதியினர் வாடகைத் தாய் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றுக் கொண்டனர்.
    • இது தொடர்பான விசாரணையில் இவர்கள் மீது விதிமீறல் இல்லை என அறிவிக்கப்பட்டது.

    நயன்தாரா-விக்னேஷ் சிவன் கடந்த ஜூன் 9-ம் தேதி சென்னையில் திருமணம் செய்துகொண்டனர். திருமணமாகி நான்கு மாதங்களே ஆன நிலையில் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளதாக அறிவித்தனர். திருமணமான நான்கே மாதத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது பல கேள்விகளை எழுப்பியது. அதன்பின்னர் வாடகைத் தாய் மூலம் அவர்கள் குழந்தை பெற்றுக் கொண்டது தெரியவந்தது.


    நயன்தாரா - விக்னேஷ் சிவன் இரட்டை குழந்தை

    இது தொடர்பான விசாரணையில் இருவரும் விதிகளை மீறவில்லை என அரசு அறிவித்தது. தற்போது நயன்தாரா குழுந்தைகளை பார்ப்பதை முழுநேர வேலையாக செய்து வருகிறார். இந்நிலையில், நடிகை ராதிகா சரத்குமார், நயன்தாரா-விக்னேஷ் தம்பதியினரை சந்தித்துள்ளார்.


    விக்னேஷ் சிவன் - ராதிகா- நயன்தாரா

    இது தொடர்பான புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள ராதிகா சரத்குமார், அழகான பெண் நயன்தாரா மற்றும் ஜாலியான விக்னேஷ் சிவனை சந்தித்து தேநீர் அருந்தியதாகவும் அவர்களது குழந்தைகளை பார்த்ததாகவும் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை ரசிகர்கள் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.



    • இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘லவ் டுடே’.
    • இந்த படத்தை தெலுங்கில் வெளியிடவுள்ளதாக பிரதீப் ரங்கநாதன் அறிவித்திருந்தார்.

    ஜெயம் ரவி நடிப்பில் 2019-ஆம் ஆண்டு வெளியான கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். சில தினங்களுக்கு முன்பு இவர் இயக்கி நடித்த 'லவ் டுடே' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதனுடன் இணைந்து சத்யராஜ், ராதிகா, யோகி பாபு, ரவீனா மற்றும் ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.


    லவ் டுடே

    யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை ஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்தது. இப்படம் கடந்த நவம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்தை தெலுங்கு மொழியில் வெளியிடவுள்ளதாக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் அறிவித்திருந்தார்.


    லவ் டுடே

    இந்நிலையில், 'லவ் டுடே' படத்தின் தெலுங்கு டிரைலர் வெளியாகியுள்ளது. இதனை நடிகர் விஜய் தேவரகொண்டா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த டிரைலர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.



    • உதயநிதி ஸ்டாலின் தற்போது நடித்துள்ள படம் 'கலகத் தலைவன்'.
    • இந்த திரைப்படம் வருகிற நவம்பர் 18-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    தடம், மீகாமன் போன்ற படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்திருக்கும் படம் 'கலகத் தலைவன்'. இப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்திருக்கிறார். மேலும், பிக்பாஸ் ஆரவ், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் வருகிற நவம்பர் 18-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    கலகத் தலைவன்

    இப்படத்தில் நடித்த உதயநிதி மற்றும் நிதி அகர்வால் இருவரும் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது, "நெஞ்சுக்கு நீதி பண்ணி விட்டு அதன் பின்னர் தான் 'கலகத் தலைவன்' படத்திற்கு வந்தேன். படத்தில் இரண்டு கதாபாத்திரங்கள். அதில், எட்டு வருடங்களுக்கு முன்பு திருவும் மகிழும் சந்தித்திருப்பார்கள்.


    கலகத் தலைவன்

    அதன்பிறகு எட்டு வருடத்திற்கு பின்னர் சந்திப்பார்கள். அதனால் தோற்றத்தில் சிறிது மாற்றம் தேவைப்பட்டது. அதனால் இந்த இடைவேளை தேவைப்பட்டது. நான் இயக்குனர்களை தேடிச் செல்கிறேன். சில கதைகள் நம்மளை தேடி வரும். நான் இப்போது வித்தியாசமான இயக்குனர்கள், வித்தியாசமான கதைக்களம் அதை தேடிக்கொண்டிருக்கிறேன்" என்று கூறினார்.

    • தமிழ் திரையுலகில் இளம் நடிகராக வலம் வரும் அதர்வா, இயக்குனர் சற்குணம் இயக்கிவரும் படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படத்திற்கு பட்டத்து அரசன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

    2010-ஆம் ஆண்டு வெளியான 'பானா காத்தாடி' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் அதர்வா. தொடர்ந்து இவர் நடித்த 'பரதேசி', 'இமைக்கா நொடிகள்' போன்ற படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றார். சமீபத்தில் அதர்வா நடிப்பில் வெளியான 'குறுதி ஆட்டம்', 'டிரிக்கர்' போன்ற படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றது.

     

    பட்டத்து அரசன்

    பட்டத்து அரசன்

    இவர் தற்போது 'களவாணி', 'வாகை சூடவா' போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் ஏ.சற்குணம் இயக்கத்தில் 'பட்டத்து அரசன்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஜ்கிரண் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். லைக்கா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சில தினங்களுக்கு முன்பு வெளியாகு நல்ல வரவேற்பை பெற்றது.

     

    பட்டத்து அரசன்

    பட்டத்து அரசன்

    இந்நிலையில் பட்டத்து அரசன் படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. யாரோ யாரோ இவ என்ற வரிகளில் வெளியாகிருக்கும் இந்த பாடலை யாசின் நிசர் குரலில் எம்.அமுதன் வரிகளில் உருவாகியுள்ளது. இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்படம் வருகிற நவம்பர் 25ம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • நடிகர் எஸ்.ஜே. சூர்யா பல படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
    • இவர் தற்போது ‘வதந்தி’ வெப் தொடரில் நடித்துள்ளார்.

    அஜித் நடித்த வாலி, விஜய்யின் குஷி ஆகிய வெற்றி படங்களை இயக்கி பிரபலமான எஸ்.ஜே.சூர்யா, பின்னர் கதாநாயகனாக நடிக்க தொடங்கினார். தற்போது அவருக்கு பல படங்களில் வில்லன் வேடங்கள் குவிகின்றன. சமீபத்தில் வெளியான மாநாடு, டான் படங்களில் நடித்த எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. மேலும் இவர் கைவசம் தற்போது 'பொம்மை', 'மார்க் ஆண்டனி' மற்றும் 'ஆர்சி 15' படங்கள் உள்ளது.


    எஸ்.ஜே. சூர்யா

    தொடர்ந்து இவர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் 'வதந்தி' எனும் புதிய வெப் தொடரில் நடித்துள்ளார். புஷ்கர் - காயத்ரி தயாரித்துள்ள இந்த வெப் தொடர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் உருவாகியுள்ளது. இந்நிலையில், இதன் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.


    வதந்தி ஃபர்ஸ்ட் லுக்

    அதன்படி, 'வதந்தி' வெப் தொடர் வருகிற டிசம்பர் 2-ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள நடிகர் எஸ்.ஜே.சூர்யா, "இது என்னை பற்றிய வதந்தி அல்ல" என பதிவிட்டுள்ளார். இந்த போஸ்டர் தற்போது ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.



    • பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் 'லவ் டுடே' திரைப்படம் சமீபத்தில் வெளியானது.
    • இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன், அதன்பின்னர் லவ் டுடே என்ற படத்தை இயக்கி நடித்து அனைவரின் கவனத்தை ஈர்த்தார். சத்யராஜ், ராதிகா, யோகி பாபு, ரவீனா மற்றும் ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படம் கடந்த நவம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    இந்நிலையில் பிரதீப் ரங்கநாதன் கடந்த வருடங்களில் படங்கள் மீது பல விமர்சனங்களை முன்வைத்து அவருடைய சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இதனை ரசிகர்கள் பலரும் தற்போது இணையத்தில் பகிர்ந்து பிரதீப்பின் பதிவுகளுக்கு கேள்வி எழுப்பி வருகின்றனர்.

     

    லவ் டுடே

    லவ் டுடே

    அதன்பின்னர் இதுகுறித்து பிரதீப் விளக்கம் அளித்து பதிவிட்டார். அதில், என் பெயரில் பரவி வரும் பல பதிவுகளை போட்டோஷாப் செய்து வெளியிட்டுள்ளனர். ஒரு வார்த்தை யை மாற்றினால் கூட பல விஷயங்கள் மாறும் என்பதால் என் முகநூல் கணக்கை நீக்கிவிட்டேன். எனக்கு எந்தக் கோபமும் இல்லை மாறாக என்னை எவ்வளவு ஆதரிக்கிறார்கள் என்பதை காட்டியதற்கு நன்றி. அதேநேரம் சில பதிவுகள் உண்மையானவை. ஆனால் கசப்பான வார்த்தைகள் கொண்ட பதிவுகள் போலியானவை. வயதுக்கு ஏற்ப நாம் அனைவரும் வளர்ந்து ஒவ்வொன்றையும் கற்றுக் கொள்கிறோம். என் தவறுகளை சரிசெய்ய முயற்சித்தேன். இன்னும் ஒவ்வொரு நாளும் முயற்சிக்கிறேன் என்று பதிவிட்டிருந்தார்.

     

    லவ் டுடே

    லவ் டுடே

    இந்நிலையில் பிரதீப் 2014ம் ஆண்டு அவருடைய குறும்படத்தை பகிர்ந்து இது என்னுடய குறும்படம் இதை நீங்கள் பகிர்ந்து எங்களுக்கு ஆதரவு தாருங்கள் என்று பிரேம்ஜியை குறிப்பிட்டு பதிவிட்டிருந்தார். இவரின் இந்த பழைய பதிவை பகிர்ந்து இசையமைப்பாளரும் நடிகருமான பிரேம்ஜி அமரன், சார் உங்களுடைய அடுத்த படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு பலரையும் கவர்ந்து இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • டாக்டர் சரவணனின் மகன் டாக்டர் எஸ். அம்ரித்குமார் - டாக்டர் எம்.டி.சாதூர்யாவின் திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி மதுரையில் நடைபெற்றது.
    • இவர்களது திருமணத்தில் அரசியல் பிரமுகர்கள், திரைப்பிரபலங்கள் என பலர் கலந்து கொண்டனர்.

    நடிகர், தயாரிப்பாளர் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. டாக்டர் சரவணனின் மகன் டாக்டர் எஸ். அம்ரித்குமார் - டாக்டர் எம்.டி.சாதூர்யாவின் திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி மதுரை வேலம்மாள் மெடிக்கல் வளாகத்தில் நடைபெற்றது.


    டாக்டர் சரவணன் இல்லத்திருமண விழா

    இந்த நிகழ்ச்சியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், அமைச்சர் ராஜகண்ணப்பன், முன்னாள் அமைச்சர் ஆர்.வி.உதயகுமார், நாஞ்சில் சம்பத் போன்ற அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.


    டாக்டர் சரவணன் இல்லத் திருமண விழா

    மேலும், திரைப்பிரபலங்களான சூரி, விதார்த், இயக்குனர் பேரரசு, சோனியா அகர்வால், யாஷிகா ஆனந்த், சஞ்சனா சிங், ரேகா, சீதா, வனிதா விஜயகுமார், நளினி, அறந்தாங்கி நிஷா,ஷகிலா, கவிஞர் சினேகன், இமான் அண்ணாச்சி, அங்காடிதெரு மகேஷ். பிளாக் பாண்டி, ரோபோ சங்கர், சோனா, கூல் சுரேஷ், சிங்கம்புலி, ரமேஷ் கண்ணா, பருத்திவீரன் சரவணன், கஞ்சா கருப்பு, காதல் சுகுமார் என பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

    • விஜய், அஜித், சூர்யா, விஷால், தனுஷ் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுடன் நடித்துள்ளவர் தமன்னா.
    • தமன்னாவுக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் பரவி வருகிறது.

    தமிழில் விஜய், அஜித், சூர்யா, விஷால், தனுஷ் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுடன் நடித்துள்ள தமன்னா தெலுங்கு, இந்தியிலும் அதிக படங்களில் நடித்திருக்கிறார். இவர் நடிப்பில் வெளியான பாகுபலி திருப்புமுனை படமாக அமைந்தது. இந்த நிலையில் தமன்னாவுக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது. ஏற்கனவே இதுபோல் திருமண கிசுகிசு வந்தபோது தமன்னா உடனடியாக மறுத்தார். திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இப்போதைக்கு இல்லை என்று கூறினார். ஆனால் தற்போது திருமண ஏற்பாடுகள் நடப்பதாக வலைத்தளத்தில் மீண்டும் பரவி வரும் தகவலுக்கு தமன்னா மறுப்பு எதுவும் சொல்லவில்லை.

    தமன்னா

    தமன்னா

     

    திருமண முடிவை பெற்றோரிடம் விட்டு விட்டேன். அவர்கள் பார்க்கும் மாப்பிள்ளையை மணப்பேன் என்று முன்பு கூறியிருந்தார். தற்போது பெற்றோர்தான் மாப்பிள்ளையை பார்த்து முடிவு செய்து இருப்பதாகவும், மணமகன் மும்பையை சேர்ந்த பெரிய தொழில் அதிபர் என்றும், அவரை மணக்க தமன்னாவும் சம்மதித்துவிட்டார் என்றும் கூறப்படுகிறது. 

    • தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து பிரபலமடைந்தவர் பிரகாஷ் ராஜ்.
    • இவர் தற்போது அளித்துள்ள பேட்டியில் அவர் தீவிர அரசியல் விமர்சனம் செய்வது குறித்து பேசியுள்ளார்.

    தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் வில்லனாகவும் குணசித்திர வேடங்களிலும் நடித்து பிரபலமான பிரகாஷ்ராஜ், சமீப காலமாக அரசியல் பற்றி துணிச்சலாக பேசி வருகிறார். குறிப்பாக பா.ஜனதா கட்சியை கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்த நிலையில் பிரகாஷ்ராஜ் அளித்துள்ள பேட்டியில், ''சமீப காலமாக நான் அரசியலில் தீவிரம் காட்டி வருகிறேன். இதனால் ஒரு காலத்தில் என்னோடு இணைந்து நடித்தவர்கள் இப்போது சேர்ந்து நடிக்க ஆர்வம் காட்டுவதில்லை. நான் அரசியல் பேசுவதால் என்னுடன் நடிக்க பயப்படுகிறார்கள்.

     

    பிரகாஷ் ராஜ்

    பிரகாஷ் ராஜ்

    என்னோடு நடித்தால் அவர்களை ஏற்றுக்கொள்ள மாட்டோர்களோ என்ற அச்சம் அவர்களுக்கு உள்ளது. அந்த பயத்தோடு என்னை விட்டு அவர்கள் விலகுகிறார்கள். இது என் சினிமாவில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதற்காக நான் வருந்தவில்லை. அப்படிப்பட்டவர்களை இழக்க நான் தயாராகவே இருக்கிறேன். எப்படிப்பட்ட விளைவுகளையும் சந்திக்க தயாராக இருக்கிறேன். இப்போதுதான் நான் மேலும் சுதந்திரமாக இருப்பதாக நினைக்கிறேன். எனது குரலை ஒலிக்கச் செய்யாவிட்டால் ஒரு நடிகனாக மட்டுமே இறந்து விடுவேன். நிறைய நடிகர்கள் மவுனமாக இருக்கிறார்கள். அவர்களை குறை கூற விரும்பவில்லை. ஒரு வேளை அவர்கள் பேசினால் அதனால் வரும் விளைவுகளை அவர்களால் தாங்க முடியாது" என்றார்.

    ×