search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Doctor Saravanan"

    • டாக்டர் சரவணனின் மகன் டாக்டர் எஸ். அம்ரித்குமார் - டாக்டர் எம்.டி.சாதூர்யாவின் திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி மதுரையில் நடைபெற்றது.
    • இவர்களது திருமணத்தில் அரசியல் பிரமுகர்கள், திரைப்பிரபலங்கள் என பலர் கலந்து கொண்டனர்.

    நடிகர், தயாரிப்பாளர் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. டாக்டர் சரவணனின் மகன் டாக்டர் எஸ். அம்ரித்குமார் - டாக்டர் எம்.டி.சாதூர்யாவின் திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி மதுரை வேலம்மாள் மெடிக்கல் வளாகத்தில் நடைபெற்றது.


    டாக்டர் சரவணன் இல்லத்திருமண விழா

    இந்த நிகழ்ச்சியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், அமைச்சர் ராஜகண்ணப்பன், முன்னாள் அமைச்சர் ஆர்.வி.உதயகுமார், நாஞ்சில் சம்பத் போன்ற அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.


    டாக்டர் சரவணன் இல்லத் திருமண விழா

    மேலும், திரைப்பிரபலங்களான சூரி, விதார்த், இயக்குனர் பேரரசு, சோனியா அகர்வால், யாஷிகா ஆனந்த், சஞ்சனா சிங், ரேகா, சீதா, வனிதா விஜயகுமார், நளினி, அறந்தாங்கி நிஷா,ஷகிலா, கவிஞர் சினேகன், இமான் அண்ணாச்சி, அங்காடிதெரு மகேஷ். பிளாக் பாண்டி, ரோபோ சங்கர், சோனா, கூல் சுரேஷ், சிங்கம்புலி, ரமேஷ் கண்ணா, பருத்திவீரன் சரவணன், கஞ்சா கருப்பு, காதல் சுகுமார் என பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

    • மதுரை மாவட்ட பாரதிய ஜனதா தலைவராக டாக்டர் சரவணன் பொறுப்பேற்றார். இவர் கட்சிப் பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.
    • இதற்கிடையில் அவர் மீண்டும் தி.மு.க.வில் இணையப் போவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.

    மதுரை:

    மதுரை மாநகர் மாவட்ட பாரதிய ஜனதா தலைவராக டாக்டர் சரவணன் உள்ளார். இவர் கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது திருப்பரங்குன்றத்தில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார். அதன் பிறகு கட்சியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தி.மு.க.வில் இருந்து விலகி பாரதிய ஜனதாவில் இணைந்தார்.

    இதையடுத்து மதுரை மாவட்ட பாரதிய ஜனதா தலைவராக டாக்டர் சரவணன் பொறுப்பேற்றார். இவர் கட்சிப் பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.

    இதற்கிடையில் அவர் மீண்டும் தி.மு.க.வில் இணையப் போவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இதனால் மதுரை மாவட்ட பாரதிய ஜனதாவினர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இது தொடர்பாக டாக்டர் சரவணன் மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், நான் பா.ஜ.க. கட்சியில் மதுரை மாவட்ட தலைவராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன். தமிழகத்தில் எங்களது மாநில தலைவர் அண்ணாமலை தலைமையிலும், மதுரை மாவட்டத்தில் எனது தலைமையிலும் பாரதிய ஜனதா கட்சி அபார வளர்ச்சி பெற்று வருகிறது.

    இந்த நிலையில் ஆளுங்கட்சியில் நான் சேர போவதாக யாரோ வதந்தி பரப்பி வருகின்றனர். நான் தி.மு.க.வில் சேர போவதாக வெளியான தகவல் முற்றிலும் தவறானது. நான் தி.மு.க. உள்ளிட்ட எந்த கட்சியிலும் சேர மாட்டேன்.

    பாரதிய ஜனதாவிலேயே எனது பணி தொடரும்.

    இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

    ×