அதர்வா படத்தின் முதல் பாடலை வெளியிட்ட படக்குழு

தமிழ் திரையுலகில் இளம் நடிகராக வலம் வரும் அதர்வா, இயக்குனர் சற்குணம் இயக்கிவரும் படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்திற்கு பட்டத்து அரசன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
அதர்வா
அதர்வா
Published on

2010-ஆம் ஆண்டு வெளியான 'பானா காத்தாடி' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் அதர்வா. தொடர்ந்து இவர் நடித்த 'பரதேசி', 'இமைக்கா நொடிகள்' போன்ற படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றார். சமீபத்தில் அதர்வா நடிப்பில் வெளியான 'குறுதி ஆட்டம்', 'டிரிக்கர்' போன்ற படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றது.

பட்டத்து அரசன்
பட்டத்து அரசன்

பட்டத்து அரசன்

இவர் தற்போது 'களவாணி', 'வாகை சூடவா' போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் ஏ.சற்குணம் இயக்கத்தில் 'பட்டத்து அரசன்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஜ்கிரண் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். லைக்கா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சில தினங்களுக்கு முன்பு வெளியாகு நல்ல வரவேற்பை பெற்றது.

பட்டத்து அரசன்
பட்டத்து அரசன்

பட்டத்து அரசன்

இந்நிலையில் பட்டத்து அரசன் படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. யாரோ யாரோ இவ என்ற வரிகளில் வெளியாகிருக்கும் இந்த பாடலை யாசின் நிசர் குரலில் எம்.அமுதன் வரிகளில் உருவாகியுள்ளது. இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்படம் வருகிற நவம்பர் 25ம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com