என் மலர்
சினிமா செய்திகள்
- அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நயன்தாரா 'கனெக்ட்' படத்தில் நடித்துள்ளார்.
- 'கனெக்ட்' படத்தின் டீசர் நயன்தாரா பிறந்தநாளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நடிகை நயன்தாரா 'கனெக்ட்' திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் சத்யராஜ், அனுபம் கெர், வினய் ராய் மற்றும் ஹனியா நஃபிஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஹாரர் திரில்லர் வகை திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படத்தை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தங்களுக்குச் சொந்தமான ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளனர். இந்த படத்திற்கு மணிகண்டன் கிருஷ்ணமாச்சாரி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

கனெக்ட்
'கனெக்ட்' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் கடந்த ஆண்டு நயன்தாரா பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது. இந்நிலையில் இந்த படத்தின் டீசர் வெளியாகும் தேதியை புதிய போஸ்டர் ஒன்றை பகிர்ந்து படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இந்த படத்தின் டீசர் நயன்தாராவின் 38-வது பிறந்தநாளை முன்னிட்டு வருகிற நவம்பர் 18-ந்தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
2015-ம் ஆண்டு நயன்தாரா நடிப்பில் வெளியான 'மாயா' திரைப்படத்தை அஸ்வின் சரவணன் இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
This Friday comes with a few surprises and scares. #CONNECT Teaser from November 18th. Stay CONNECTed!✨@VigneshShivn #Nayanthara @AnupamPKher #Sathyaraj #VinayRai @haniyanafisa @Ashwin_saravana @mk10kchary @prithvi_krimson @ARichardkevin @Kavitha_Stylist @kabilanchelliah pic.twitter.com/CKvYbBY1Ks
— Rowdy Pictures (@Rowdy_Pictures) November 15, 2022
- இயக்குனர் பொன்ராம் இயக்கிவரும் 'டிஎஸ்பி' படத்தில் விஜய் சேதுபதி கதையின் நாயகனாக நடித்து வருகிறார்.
- இப்படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
விஜய்சேதுபதி நடிக்கும் 46-வது திரைப்படத்தை இயக்குனர் பொன்ராம் இயக்குகிறார். 'டிஎஸ்பி' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் விஜய்சேதுபதி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இந்த படத்திற்கு விஜய்சேதுபதிக்கு ஜோடியாக அனு கீர்த்திவாஸ் நடித்துள்ளார். மேலும் பிரபாகர், புகழ், இளவரசு, ஞானசம்மந்தன், தீபா, சிங்கம்புலி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி கனவன் ஈர்த்தது.

டிஎஸ்பி
இந்நிலையில் இந்த படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. 'நல்லா இரும்மா' என்ற இந்த பாடலை விஜய் முத்துபாண்டி எழுதியுள்ளார். உதித் நாராயணன், செந்தில் கணேஷ், மாளவிகா சுந்தர் ஆகியோர் பாடியுள்ளனர். இந்த பாடலை இசையமைப்பாளர் அனிருத் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டார். இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
- விஜய் நடித்து வரும் ‘வாரிசு’ திரைப்படம் அடுத்த வருடம் வெளியாகவுள்ளது.
- இந்த படத்தின் முதல் பாடலான ‘ரஞ்சிதமே’ சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.
வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

வாரிசு - ரஞ்சிதமே
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தீபாவளி தினத்தன்று 'வாரிசு' திரைப்படத்தின் போஸ்டரை வெளியிட்டு, சங்கராந்திக்கு திரைப்படம் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. இப்படத்தின் முதல் பாடலான 'ரஞ்சிதமே' பாடலை கடந்த 5-ம் தேதி படக்குழு வெளியிட்டது. விஜய் மற்றும் எம்.எம்.மானசி குரலில், விவேக் வரிகளில் வெளியான 'ரஞ்சிதமே' பாடல் துள்ளல் இசையோடு ரசிகர்களை கவர்ந்து ஹிட் ஆனது.

வாரிசு - ரஞ்சிதமே
இந்நிலையில் ரஞ்சிதமே பாடல் 50 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளதாக படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
- பிக்பாஸ் 6-வது சீசன் 38 நாட்களை கடந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
- இன்று வெளியான புரோமோவால் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் நபராக சாந்தி எலிமினேட் செய்யப்பட்டார். மேலும் ஜி.பி. முத்து தாமாக முன் வந்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். பின்னர் அசல், ஷெரினா, மகேஷ்வரி உள்ளிட்டோர் எலிமினேட் செய்யப்பட்டனர். இதில் தற்போது 16 நபர்கள் வீட்டினுள் இருக்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி இன்றுடன் 38-வது நாட்களை நெருங்கியுள்ளது.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் புரோமோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் வீட்டில் அரண்மனை டாஸ்க் நடத்தப்பட்டு வருகிறது. இதில் ராஜகுருவாக இருக்கும் விக்ரமனை பார்த்து, உங்க சாப்பாட்டில் எச்சை காரி துப்பி கொடுப்பேன் சாப்பிடுவீங்களா? என்று படைத்தளபதியாக இருக்கும் அசீம் கேட்கிறார். அனாவசியமாக பேசிய அசீமை கண்டித்து விக்ரமன், ஏய் இப்படியெல்லாம் பேசாதீங்க என கோபத்தில் ஒருமையில் எச்சரிக்கிறார். இருவரும் மாறி மாறி சண்டையிட்டுக் கொள்வதை உடன் இருக்கும் சக போட்டியாளர்கள் சமாதானப்படுத்த முயல்கின்றனர். இதனுடன் இன்றைய புரோமோ முடிவடைகிறது.
இதற்குமுன்பு விக்ரமன் மற்றும் ஆயிஷாவை ஒருமையில் பேசி அசீம் சர்ச்சையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.
- இயக்குனர் சத்ய சிவா இயக்கத்தில் சசிகுமார் தற்போது நான் மிருகமாய் மாற என்ற படத்தில் நடித்துள்ளார்.
- இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
சுப்ரமணியபுரம், நாடோடிகள், குட்டி புலி, தாரை தப்பட்டை உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமடைந்த சசிகுமார் தற்போது நான் மிருகமாய் மாற என்ற படத்தில் நடித்துள்ளார். இதனை கழுகு படத்தை இயக்கிய சத்ய சிவா இயக்கியுள்ளார். செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் தயாரித்திருக்கும் இப்படம் வருகிற நவம்பர் 18ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

சசிகுமார்
இந்நிலையில் இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் சசிகுமார், சத்யசிவா, ஜிப்ரான் உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டனர். அதில் சசிகுமார் பேசியதாவது, நான் படம் நடித்து ஒரு வருடம் ஆகிவிட்டது. காமன் மேன் என்று இந்த திரைப்படத்திற்கு முதலில் பெயர் வைக்கப்பட்டது. பின்னர் அந்த தலைப்பு மாற்றப்பட்டு நான் மிருகமாய் மாற என்று பெயர் சூட்டப்பட்டது. இந்தப் படத்தில் வன்முறை காட்சிகள் அதிகமாக இருக்கும். எனினும் குழந்தை, மனைவி என்று கதையில் ஒரு சராசரி மனிதனின் உணர்ச்சிகள் சரியாக பயன்படுத்தப்பட்டிருக்கும். ஜிப்ரானின் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம் அளித்துள்ளது என்று தான் கூற வேண்டும்.

நான் மிருகமாய் மாற
பாடலே இல்லாத திரைப்படத்தில் முதன்முறையாக பணியாற்றியுள்ளேன். படத்தில் நடனம் இல்லை என்பது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. எப்பொழுதும் ஒரு கிராமத்து கதாநாயகனாக வயலில் வேட்டியுடன் சுற்றித்திரிந்த எனக்கு ஒலிப் பொறியாளர் கதாபாத்திரம் மிகவும் வித்தியாசமாக இருந்தது. இந்த கதாபாத்திரத்திற்காக ஒலிப்பொறியாளர்கள் லட்சுமி நாராயணன் மற்றும் உதயகுமார் அவர்களை கூர்ந்து கவனித்தேன். படத்தில் அனைத்துமே புதியதாக இருக்கும். இதற்காக அனைவரும் கடினமாக உழைத்து உள்ளோம். படக்குழுவினர் அனைவரும் தங்களது முக்கியத்துவத்தை உணர்ந்து சிறப்பாக பங்களித்து பணியாற்றியுள்ளனர். "படம் இப்படி இருக்கு, அப்படி இருக்கு என்று சொல்லல, நீங்க பார்த்துட்டு சொல்லுங்க, படம் எப்படி இருக்குன்னு" என்றார்.
- உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கலகத் தலைவன்.
- இந்த திரைப்படம் வருகிற நவம்பர் 18-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
தடம், மீகாமன் போன்ற படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்திருக்கும் படம் 'கலகத் தலைவன்'. இப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்திருக்கிறார். மேலும், பிக்பாஸ் ஆரவ், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் வருகிற நவம்பர் 18-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

உதயநிதி ஸ்டாலின்
இப்படத்தில் நடித்த உதயநிதி மற்றும் நிதி அகர்வால் இருவரும் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது, மகிழ் சார் ஒரே காட்சியை மூன்று நாட்கள் எடுப்பார். ரொம்ப பொறுமையா எடுப்பாரு, எடுக்குற எல்லாம் காட்சிகளையும் ரசிச்சு ரசிச்சு எடுப்பார். அதனால் தான் படத்திற்கு இந்த அளவிற்கு நேரம் எடுத்துக்குது. எங்களுக்கு இயக்குனர் நடிச்சு காட்டினார். இந்த படத்துல நிதி அகர்வால் மைத்திலி என்ற மருத்துவர் கதாப்பாத்திரம் நடிச்சிருக்காங்க. ரொம்ப முக்கியமான கதாப்பாத்திரம் அது. இந்த படத்துடைய காட்சி ஒன்று எடுத்துக் கொண்டிருக்கும் பொழுது தேர்தல் தேதி அறிவிச்சாங்க அப்போதான் அருண்ராஜா காமராஜ் நெஞ்சுக்கு நீதி படத்தின் கதையை சொல்லியிருந்தார். ரெண்டு பேரு கிட்டயும் 40 நாட்கள் வரமாட்டேன் தேர்தல் பிரச்சாரத்துக்கு போறேன்னு டாடா சொல்லிட்டு கிளம்பிட்டேன் என்றார்.
- பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் 'லவ் டுடே' திரைப்படம் சமீபத்தில் வெளியானது.
- இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன் தற்போது இயக்கி நடித்த படம் 'லவ் டுடே'. இப்படத்தை ஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்தது. பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்த இப்படத்தில் சத்யராஜ், ராதிகா, யோகி பாபு, ரவீனா மற்றும் ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

லவ் டுடே
யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்த இந்த படம் கடந்த நவம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தில் இடம்பெற்ற என்னை விட்டு பாடல் பலரின் கவனத்தை ஈர்த்து ஹிட் அடித்தது. இந்த பாடலை பாடகர் சித் ஸ்ரீராம் பாடியிருந்தார்.

பிரதீப் ரங்கநாதன் - யுவன் ஷங்கர் ராஜா
இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்ற என்னை விட்டு பாடலை யுவன் ஷங்கர் ராஜா குரலில் இயக்குனர் பிரதீப் வெளியிட்டிருக்கிறார். அதில், நான் உங்களுக்கு உறுதியளித்தபடி, லவ் டுடே படத்தின் என்னை விட்டு பாடல் யுவன் குரலில் இதோ. எனக்கு மிகவும் பிடித்த ஒன்று என்று பதிவிட்டுள்ளார். இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
- இயக்குனர் ஹேமந்த் இயக்கத்தில் சசிகுமார் நடித்துள்ள படம் 'காரி'.
- இப்படத்தின் டிரைலர் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி உள்ளது.
இயக்குனர் ஹேமந்த் இயக்கத்தில் சசிகுமார் கதாநாயகனாக நடித்துள்ள படம் 'காரி'. இப்படத்தில் பார்வதி அருண், பாலாஜி சக்திவேல், ஆடுகளம் நரேன், அம்மு அபிராமி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பாக லக்ஷ்மன் குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் இரண்டு பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

காரி
இந்நிலையில் காரி படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறித்துள்ளது. அதன்படி இப்படம் வருகிற நவம்பர் 25ம் தேதி வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.
- நடிகர் யோகி பாபு ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
- அவருக்கு கோவில் நிர்வாகிகள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் பகுதியில் உலகிலேயே மிக உயரமான 146 அடி உயரம் கொண்ட முத்துமலை முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் விசேஷ பூஜைகள் தினமும் நடைபெற்று வருகிறது.

மீண்டும் கோவிலில் சாமி தரிசனம் செய்த யோகி பாபு
இந்த நிலையில் திரைப்பட நடிகர் யோகி பாபு மற்றும் நகைச்சுவை நடிகர் கணேஷ் ஆகியோர் சாமி தரிசனம் செய்தனர். மேலும் அவர்கள் 146 அடி உயர சாமிக்கு மலர் அர்ச்சனை, அபிஷேகம் செய்து வழிபட்டனர். முன்னதாக கோவில் நிர்வாகிகள் சார்பில் நடிகர் யோகி பாபுவுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
- வம்சி இயக்கத்தில் விஜய் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார்.
- அடுத்தடுத்து இப்படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் இணையத்தில் கசிந்து வருகிறது.
விஜய் நடிக்கும் வாரிசு படப்பிடிப்பு புகைப்படங்கள் அடுத்தடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியாகி படக்குழுவினருக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி வருகின்றன. ஏற்கனவே கிழக்கு கடற்கரை சாலையில் நடந்த படப்பிடிப்பை சிலர் திருட்டுத்தனமாக படம்பிடித்து வலைத்தளத்தில் பரவ விட்டனர். பின்னர் பைக்கில் வரும் வில்லனை விஜய் கீழே தள்ளிவிட்டு சண்டையிடும் புகைப்படம் வெளியானது. தொடர்ந்து விஜய் கோட் சூட் அணிந்து தொழிலாளர்களுடன் பேசுவது போன்ற புகைப்படமும் பாடல் காட்சி படமாக்கப்பட்டபோது எடுத்த வீடியோவும் வலைதளங்களில் கசிந்து வைரல் ஆனது.

வாரிசு
இந்நிலையில் 'வாரிசு' படத்தின் இன்னொரு படப்பிடிப்பு வீடியோவும் தற்போது கசிந்துள்ளது. அந்த வீடியோவில் விஜய் ஸ்டைலாக நடந்து வரும் காட்சிகளும் ஒரு சுரங்கத்தின் அருகில் ஹெலிகாப்டர் ஒன்று இருக்கும் காட்சியும் உள்ளன. இந்த வீடியோ வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இது படக்குழுவினருக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. காட்சிகளை திருட்டுத்தனமாக படம்பிடித்து வெளியிட்டது யார் என்று விசாரணை நடக்கிறது.
- பாலிவுட் திரையுலனின் முன்னணி நடிகராக வலம் வரும் அமீர்கான், 35 ஆண்டுகாலமாக நடித்து வருகிறார்.
- இவர் நடிக்கவிருந்த சாம்பியன்ஸ் திரைப்படத்தில் வேறு நடிகரை தேர்வு முடிவு செய்துள்ளார்.
பாலிவுட் திரையுலனின் முன்னணி நடிகராக வலம் வரும் அமீர்கான், 35 ஆண்டுகாலமாக பாலிவுட் சினிமாவில் பல வெற்றி படங்களில் நடித்து தனக்கென முத்திரையை பதித்திருக்கிறார். அமீர் கான் நடிப்பில் சமீபத்தில் வெளியான லால் சிங் சத்தா திரைப்படத்தை புறக்கணிக்க வேண்டும் என்று சமூக ஊடகங்களில் கருத்து நிலவிய நிலையில், வசூல் ரீதியாக கடும் இழப்பை சந்தித்தது. இதனால், அடுத்ததாக அமீர் கான் நடிக்கவிருந்த 'சாம்பியன்ஸ்' படத்தில் அவர் நடிக்கமாட்டார் என்று தகவல்கள் பரவி வந்தன.

அமீர்கான்
இந்நிலையில், சாம்பியன்ஸ் படம் குறித்து அறிவிப்பை வெளியிட்டு அமீர் கான் பேசியதாவது, "சாம்பியன்ஸ் படத்தின் கதை அற்புதமான, அழகான கதை. லால் சிங் படத்திற்கு பிறகு இந்த படத்தில் நான் நடிக்க இருந்தேன். ஆனால், தற்போது நான் ஓய்வெடுக்க விரும்புகிறேன். சாம்பியன்ஸ் சிறந்த படம் என்பதால் சோனி நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கவுள்ளேன். சாம்பியன்ஸ் படத்தில் நடிக்க வேறு நடிகரை தேர்வு செய்யவுள்ளேன்.

அமீர்கான்
நான் எனது அம்மா, குழந்தைகள் மற்றும் குடும்பத்துடன் நேரம் செலவிட விரும்புகிறேன். இதற்காக படத்தில் நடிப்பதிலிருந்து தற்காலிகமாக விலகி இருக்க முடிவு செய்துள்ளேன். நடிப்பில் மட்டுமே கடந்த 35 ஆண்டுகளாக கவனம் செலுத்தினேன். என்னுடன் நெருக்கமாக இருப்பவர்களுக்கு இது நியாயமாகாது என்று கருதுகிறேன். அவர்களுடன் நேரம் ஒதுக்க இதுவே சரியான தருணமாக இருக்கும் என்று நம்புகிறேன். அடுத்த ஆண்டிலிருந்து ஒன்றரை ஆண்டுகள் நடிப்பதிலிருந்து ஓய்வெடுக்க முடிவு செய்துள்ளேன். எனது உறவுகளுடன் சந்தோஷமாக நேரத்தை செலவழிக்கும் காலகட்டத்தில் நான் உள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.
- உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கலகத் தலைவன்.
- இந்த திரைப்படம் வருகிற நவம்பர் 18-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
தடம், மீகாமன் போன்ற படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்திருக்கும் படம் 'கலகத் தலைவன்'. இப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்திருக்கிறார். மேலும், பிக்பாஸ் ஆரவ், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் வருகிற நவம்பர் 18-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

நிதி அகர்வால்
இப்படத்தில் நடித்த கதாநாயகி நிதி அகர்வால் சினிமா மலர் நேயர்களுக்காக பிரத்யேகமாக பேட்டி அளித்தார். கலகத் தலைவன் படத்தில் இணைந்தது குறித்தும் உதயநிதியுடன் நடித்தது குறித்தும் படத்தில் பணியாற்றிய பல அனுபவங்களை பகிர்ந்துக் கொண்டார். அதில், ஒரு நாள் மகிழ் சாரிடமிருந்து அழைப்பு வந்தது. அவரை சந்திப்பதற்காக சென்றேன் முதலில் முகத்தை கழுவி வர சென்னார். ஏனென்றால் இந்த படத்தில் என்னுடைய கதாப்பாத்திரத்தில் மேக்கப் இல்லாமல் நடிக்க வேண்டும். இந்த படத்திற்காக வெறும் லுக் டெஸ்ட் மட்டுமே நடைபெற்றது. தமிழ் படங்களில் நடித்த பிறகு தான் கொஞ்சம் கொஞ்சம் தமிழை கற்றுக் கொண்டேன். படத்தின் முதல் ஷாட் எடுக்கும் பொழுதே நடிகர்களை மிகவும் அரவணைப்புடன் உதயநிதி நடத்துவார் என்பதை புரிந்துக் கொண்டேன் என்றார்.






