என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • விஜய் வாரிசு படத்திலும், அஜித் துணிவு படத்தில் நடித்து வருகின்றனர்.
    • இந்த இரண்டு படங்களும் பொங்கல் பண்டிகையில் வெளியாகவுள்ளது.

    விஜய் நடித்துள்ள வாரிசு, அஜித்குமார் நடித்துள்ள துணிவு ஆகிய 2 படங்களும் பொங்கல் பண்டிகையில் வெளியாகும் என்று அறிவித்து உள்ளனர். தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளை இந்த 2 படங்களும் சரிபாதியாக பிரித்துக்கொள்ள உள்ளன.

    வாரிசு - துணிவு

    வாரிசு - துணிவு

     

    வாரிசு படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி வருகிறது. இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்குகிறார். தெலுங்கு பட அதிபர் தில்ராஜு தயாரிக்கிறார். தெலுங்கில் விஜய் படங்களுக்கு வரவேற்பு உள்ளதால் இந்த படத்தை ஆந்திரா, தெலுங்கானாவில் அதிக திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

    துணிவு - வாரிசு

    துணிவு - வாரிசு

     

    இதுபோல் துணிவு படத்தையும் தெலுங்கில் மொழிமாற்றம் செய்து ஆந்திரா, தெலுங்கானாவில் கணிசமான தியேட்டர்களில் வெளியிட முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் ஐதராபாத்தில் நடந்த தெலுங்கு தயாரிப்பாளர் சங்க கூட்டத்தில் பொங்கல் பண்டிகையில் நேரடி தெலுங்கு படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளித்து அதிக தியேட்டர்களை ஒதுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

     

    வாரிசு - துணிவு

    வாரிசு - துணிவு

    பொங்கலுக்கு சிரஞ்சீவி நடித்த வால்டர் வீரய்யா, பாலகிருஷ்ணா நடித்துள்ள வீர நரசிம்ம ரெட்டி, அகில் நடித்துள்ள ஏஜெண்ட் ஆகிய படங்கள் திரைக்கு வருகின்றன. இந்த 3 படங்களுக்கு மட்டுமே அதிக தியேட்டர்களை ஒதுக்கும்படி தியேட்டர் அதிபர்களை அறிவுறுத்தி உள்ளது. இதனால் விஜய்யின் வாரிசு, துணிவு படங்களுக்கு கூடுதல் தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

    • முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு, கொடைக்கானல், கந்தகோட்டை, துரோகி, காப்பான் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகை பூர்ணா.
    • கடந்த 2020-ல் பூர்ணா திருமண மோசடி கும்பலிடம் சிக்கிய சம்பவம் பரபரப்பானது.

    தமிழில் முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு, கொடைக்கானல், கந்தகோட்டை, துரோகி, காப்பான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பூர்ணா மலையாளம், தெலுங்கிலும் அதிக படங்களில் நடித்திருக்கிறார். சில தினங்களுக்கு முன்பு துபாய் தொழில் அதிபருடன் பூர்ணாவுக்கு திருமணம் நடந்தது.

     

    பூர்ணா

    பூர்ணா

    கடந்த 2020-ல் பூர்ணா திருமண மோசடி கும்பலிடம் சிக்கியது பரபரப்பானது. அப்போது பூர்ணாவை ஒருவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு துபாயில் நகைக்கடை வைத்து இருப்பதாகவும், பூர்ணாவை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் தெரிவித்தார். பின்னர் சிலர் பூர்ணாவை பெண் கேட்டு அவரது வீட்டுக்கும் சென்றனர். அதன்பிறகு பூர்ணாவிடம் பணம் கேட்டும், தங்க கடத்தலில் ஈடுபடும்படியும் மிரட்டினர்.

    பூர்ணா

    பூர்ணா

     

    இதுகுறித்து பூர்ணாவின் தாய் போலீசில் புகார் அளித்திருந்தார். போலீசார் விசாரணை நடத்தி ரபீக், முகமது செரீப், ரமேஷ், அஷ்ரப், ரகீம், அபுபக்கர் உள்பட 10 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு எர்ணாகுளம் முதன்மை செசன்ஸ் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஹனி வர்கீஸ் 10 குற்றவாளிகளையும் டிசம்பர் 12-ந் தேதி கோர்ட்டில் ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.

    • இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ‘ப்ரின்ஸ்’ படத்தில் நடித்திருந்தார்.
    • இப்படம் கடந்த அக்டோபர் 21-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

    இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த 'ப்ரின்ஸ்' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என 2 மொழிகளில் உருவாகியது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியா ரியாபோஷப்கா நடித்திருந்தார். மேலும் இப்படத்தில் சத்யராஜ், பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் கடந்த அக்டோபர் 21-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.

     

    ப்ரின்ஸ்

    ப்ரின்ஸ்

    இந்நிலையில் ப்ரின்ஸ் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இப்படம் வருகிற நவம்பர் 25ம் தேதி டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெரும் எதிர்பார்ப்பில் உருவான இப்படம் ஓடிடியில் மீண்டும் வெளியாவதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

    • இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் என்.சி.22.
    • இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது இயக்கி வரும் புதிய படம் என்சி22. இப்படத்தில் நாக சைதன்யா கதாநாயகனாக நடிக்கிறார். தற்காலிகமாக 'என்சி22' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் பேனரின் சார்பா ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரிக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். இப்படத்தின் வில்லனாக அரவிந்த் சாமி நடிக்கிறார். இப்படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இருவரும் இணைந்து இசையமைக்கின்றனர்.

     

    என்சி22 

    என்சி22 

    மேலும், இதில் சரத்குமார், வென்னேலா கிஷோர், பிரேம்ஜி, சம்பத் ராஜ், பிரியாமணி மற்றும் பிரேமி விஷ்வநாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

     

    அரவிந்த் சாமி 

    அரவிந்த் சாமி 

    இந்நிலையில் என்சி22 படம் குறித்து புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி கதையின் மிக முக்கியமான ஆக்‌ஷன் காட்சிகளுக்காக ஹைதராபாத்தில் பிரம்மாண்டமாக செட் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த ஆக்‌ஷன் காட்சிகளுக்கான படப்பிடிப்பில் அரவிந்த் சுவாமி இணைந்துள்ளதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது. மேலும் கீர்த்தி ஷெட்டி, சரத்குமார் மற்றும் சம்பத் ராஜ் ஆகியோரும் இந்த ஷெட்யூலில் பங்கேற்று உள்ளனர். 

    • நெஞ்சமுண்டு நேர்மையுண்டு படத்தை இயக்கி பிரபலமான கார்த்திக் வேணுகோபாலன் இயக்கும் புதிய படத்தில் ஹிப் ஹாப் ஆதி நடிக்கவுள்ளார்.
    • இப்படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார்.

    இசையமைப்பாளர், ராப் பாடகர், நடிகர், இயக்குனர் என பன்முகத்தன்மை கொண்டவர் ஹிப்ஹாப் ஆதி. இவர் ஆம்பள, தனி ஒருவன், அரண்மனை-2, கதகளி, கத்தி சண்டை, இமைக்கா நொடிகள், கோமாளி, ஆக்‌ஷன் உள்பட பல படங்களுக்கு இசைமைத்துள்ளார். இதனிடையே மீசையை முறுக்கு என்ற படத்தை இயக்கி, கதாநாயகனாகவும் அறிமுகமானார். தொடர்ந்து நட்பே துணை, நான் சிரித்தால், அன்பறிவு ஆகிய படங்களிலும் கதாநாயகனாக நடித்தார்.

     

    கார்த்திக் வேணுகோபாலன்

    கார்த்திக் வேணுகோபாலன்

    இந்நிலையில் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு படத்தை இயக்கி பிரபலமான கார்த்திக் வேணுகோபாலன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை எல்.கே.ஜி, கோமாளி, மூக்குத்தி அம்மன், வெந்து தணிந்தது காடு உள்ளிட்ட படங்களை தயாரித்த வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார்.

     

    இப்படத்திற்கு மஹேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்ய, பிரசன்னா படத்தொகுப்பை மேற்கொள்கிறார். இப்படத்தின் அறிவிப்பு வீடியோவைப் படக்குழு வெளியிட்டுள்ளது. அனிமேஷன் வடிவில் உருவாகியுள்ள இந்த அறிவிப்பு வீடியோ பள்ளிக்கதையை அடிப்படையாக கொண்டு உருவாகுவது போன்று இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பெயரிடப்படாத இந்த படத்தில் நடிக்கும் பிற நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • சுராஜ் இயக்கத்தில் வடிவேலு கதையின் நாயகனாக நடித்துள்ள படம் நாய் சேகர் ரிட்டன்ஸ்.
    • 'நாய் சேகர் ரிட்டன்ஸ்' படத்தில் இடம்பெற்றுள்ள முதல் பாடல் வெளியாகி உள்ளது.

    இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் நடிகர் வடிவேலு கதையின் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'நாய் சேகர் ரிட்டன்ஸ்'. இந்த படத்தில் 'குக் வித் கோமாளி' புகழ் சிவாங்கி, ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ், விக்னேஷ்காந்த், லொள்ளு சபா சேஷு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். லைகா புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஸ்கரன் தயாரிக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

     

    நாய் சேகர் ரிட்டன்ஸ்

    நாய் சேகர் ரிட்டன்ஸ்

    இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் 'நாய் சேகர் ரிட்டன்ஸ்' திரைப்படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. 'அப்பத்தா' என்ற வரிகளில் தொடங்கும் இந்த பாடலை வடிவேலு பாடியுள்ளார். இந்த பாடலுக்கு பிரபுதேவா நடனம் அமைத்துள்ளார். தற்போது இந்த பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் தந்தையும் பழம்பெரும் நடிகருமான கிருஷ்ணாவுக்கு நேற்று மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
    • மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கிருஷ்ணா இன்று உயிர்ழந்தார்.

    தெலுங்கு சினிமாவின் பழம்பெரும் நடிகரும், நடிகர் மகேஷ் பாபுவின் தந்தையுமான கிருஷ்ணா, மாரடைப்பு காரணமாக காலமானர். நடிகர் கிருஷ்ணா நேற்று திடீரென வீட்டில் மயங்கி விழுந்து சுயநினைவை இழந்துள்ளார். இதையடுத்து, பதறிப்போன அவரது குடும்பத்தினர் ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவரை அனுமதித்தனர்.

     

    அங்கு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது. மருத்துவமனையில் அவருக்கு 20 நிமிடங்கள் சிபிஆர் சிகிச்சை அளிக்கப்பட்டதை அடுத்து அவருக்கு சுயநினைவு திரும்பியது. பின்னர் தீவிர சிகிச்சை பிரிவில் ஆபத்தான நிலையில் உள்ளார் என மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. அத்துடன் செயற்கை சுவாச கருவிகள் மூலம் அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. 

     

     

    இந்நிலையில் அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார். நடிகர் கிருஷ்ணா, திரை வாழ்கையில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வந்த கிருஷ்ணா, கடைசியாக 2016ஆம் ஆண்டு வெளியான ஸ்ரீ ஸ்ரீ படத்தில் நடித்திருந்தார்.

    நடிகர் கிருஷ்ணாவின் மனைவியும், மகேஷ் பாபுவின் தாயுமான கட்டமனேனி இந்திரா தேவி சமீபத்தில் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நடிகர் கார்த்தி நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘சர்தார்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
    • கார்த்தி தற்போது இயக்குனர் ராஜு முருகனுடன் இணைந்துள்ளார்.

    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரான கார்த்தி இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடித்த 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ரூ.450 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்துள்ளது. தொடர்ந்து இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான 'சர்தார்' திரைப்படம் ரூ.100 கோடியை கடந்துள்ளதாக கூறப்படுகிறது.

     

    ஜப்பான் படக்குழு

    ஜப்பான் படக்குழு

    இதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'கைதி -2' திரைப்படத்தில் கார்த்தி நடிக்கவுள்ளார். இந்நிலையில், இவர் 'குக்கூ', 'ஜோக்கர்' போன்ற படங்களை இயக்கிய ராஜுமுருகன் இயக்கத்தில் 'ஜப்பான்' படத்தில் நடிக்கவுள்ளார். இதில் கதாநாயகியாக 'துப்பறிவாளன்', 'நம்மவீட்டு பிள்ளை' போன்ற படங்களில் நடித்த அனு இமானுவேல் நடிக்கிறார்.

     

    பூஜையுடன் தொடங்கிய ஜப்பான் 

    பூஜையுடன் தொடங்கிய ஜப்பான் 

    'ஜப்பான்' திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலானது.

     

    ஜப்பான் பட போஸ்டர்
    ஜப்பான் பட போஸ்டர்

    இந்நிலையில் ஜப்பான் படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டரில் கார்த்தி கையில் சரக்கு பாட்டிலுடன் சோபாவில் படுத்திருப்பது போன்றும் மறுபுறம் கையில் தங்கத்தால் ஆன உலக உருண்டை துப்பாகிகளை கார்த்தி வைத்திருப்பது போன்றும் இடம்பெற்றுள்ளது. பெரும் எதிர்பார்ப்பில் வெளியாகியுள்ள இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • நடிகை மீரா மிதுன், தாழ்த்தப்பட்டோர் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக கூறி அவர் மீது புகார் அளிக்கப்பட்டது.
    • மீரா மிதுன் தலைமறைவான விவகாரத்தில் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்ப மத்திய குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    பிரபல நடிகை மீரா மிதுன், தாழ்த்தப்பட்டோர் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக கூறி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அளித்த புகாரின் பேரில் அவர் மீதும், அவரது நண்பர் சாம் அபிஷேக் மீதும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். அதன்பின்பு அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

     

    மீரா மிதுன்

    மீரா மிதுன்

    இதன் விசாரணைக்கு மீரா மிதுன் ஆஜராகாததால் அவருக்கு எதிராக பிடிவாரண்டு பிறப்பித்து கோர்ட்டு உத்தரவு பிறப்பித்திருந்தது. இதையடுத்து மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது மீராமிதுன் ஆஜராகவில்லை. இந்த வழக்கு அக்டோபர் 19-ந் தேதி விசாரணைக்கு வந்தபோது, நடிகை மீராமிதுன் தொடர்ந்து மாயமாக உள்ளதாக்வும் அவரது குடும்பத்தினரை தொடர்ந்து கண்காணித்து வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இந்த வழக்கை நவம்பர் 16-ஆம் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

    இந்நிலையில் நடிகை மீரா மிதுன் தலைமறைவான விவகாரத்தில் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்ப மத்திய குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    • தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் தந்தையும் பழம்பெரும் நடிகருமான கிருஷ்ணாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
    • கிருஷ்ணா தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார்.

    தெலுங்கு திரையுலகின் பழம்பெரும் நடிகரும், நடிகர் மகேஷ் பாபுவின் தந்தையுமான கிருஷ்ணாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டு ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையின் அறிவிப்பின்படி அவருக்கு 20 நிமிடங்கள் சிபிஆர் செய்த பின்னர் அவர் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    79 வயதாகும் நடிகர் கிருஷ்ணா, திரை வாழ்கையில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வந்த கிருஷ்ணா, கடைசியாக 2016ஆம் ஆண்டு வெளியான ஸ்ரீ ஸ்ரீ படத்தில் நடித்திருந்தார். இவருக்கு ரசிகர்கள் பலரும் விரைவில் குணமடைய வாழ்த்துக்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

    நடிகர் கிருஷ்ணாவின் மனைவியும், மகேஷ் பாபுவின் தாயுமான கட்டமனேனி இந்திரா தேவி சமீபத்தில் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சுராஜ் இயக்கத்தில் வடிவேலு நடித்துள்ள படம் 'நாய் சேகர் ரிட்டன்ஸ்'.
    • இப்படத்தில் இடம்பெறும் அப்பத்தா எனும் பாடல் குறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

    இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் 'நாய் சேகர் ரிட்டன்ஸ்'. இதில் வடிவேலு கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் 'குக் வித் கோமாளி' புகழ் சிவாங்கி, 'டாக்டர்' பட புகழ் நடிகர் ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ், விக்னேஷ்காந்த், லொள்ளு சபா சேஷு உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    நாய் சேகர் ரிட்டன்ஸ்

    நாய் சேகர் ரிட்டன்ஸ்

     

    இந்நிலையில் இப்படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி இப்படத்தில் இடம்பெறும் அப்பத்தா எனும் பாடல் இன்று (நவம்பர் 14-ந் தேதி) மாலை 7 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    வடிவேலு பாடியுள்ள இப்பாடலுக்கு பிரபுதேவா நடனம் அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • கதிர் மற்றும் ஆனந்தி இணைந்து நடித்துள்ள திரைப்படம் 'யூகி'.
    • 'யூகி' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

    அறிமுக இயக்குனர் ஜாக் ஹாரிஸ் இயக்கத்தில் கதிர் மற்றும் ஆனந்தி நடித்துள்ள திரைப்படம் 'யூகி'. மேலும் இந்த படத்தில் நடராஜன் சுப்பிரமணியம், நரேன், பவித்ரா லட்சுமி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். திரில்லர் வகை திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படத்திற்கு புஷ்பராஜ் சந்தோஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரஞ்சின் ராஜ் இசையமைத்துள்ளார்.

     

    யூகி

    யூகி

    தமிழ்-மலையாளம் உள்ளிட்ட இருமொழிகளில் இந்த திரைப்படம் வெளியாக உள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் 'யூகி' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த டிரைலர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    யூகி திரைப்படம் வருகிற 18-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 



    ×