என் மலர்
நீங்கள் தேடியது "hip hop aadhi"
- ஜோ படத்தின் மூலம் அறிமுக இயக்குனர் ஹரிஹரன் ராம் பலரது கவனத்தை ஈர்த்தார்.
- விரைவில் இப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2023 ஆம் ஆண்டு அறிமுக இயக்குனரான ஹரிஹரன் ராம் இயக்கத்தில் ரியோ ராஜ் மற்றும் மாளவிகா மனோஜ் இணைந்து நடித்து ஜோ திரைப்படம் வெளியாகி மக்களிடையே விமர்சனம் ரீதியாகவும் வசூல் ரீதியாகும் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த படத்தின் மூலம் அறிமுக இயக்குனர் ஹரிஹரன் ராம் பலரது கவனத்தை ஈர்த்தார்.
இந்நிலையில், ஹிப் ஹாப் ஆதியின் அடுத்த படத்தை ஹரிஹரன் ராம் இயக்கவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹிப் ஹாப் ஆதி இயக்கி நடித்த மீசைய முறுக்கு திரைப்படத்தில் உதவி இயக்குனராக ஹரிஹரன் ராம் பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- நெஞ்சமுண்டு நேர்மையுண்டு படத்தை இயக்கி பிரபலமான கார்த்திக் வேணுகோபாலன் இயக்கும் புதிய படத்தில் ஹிப் ஹாப் ஆதி நடிக்கவுள்ளார்.
- இப்படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார்.
இசையமைப்பாளர், ராப் பாடகர், நடிகர், இயக்குனர் என பன்முகத்தன்மை கொண்டவர் ஹிப்ஹாப் ஆதி. இவர் ஆம்பள, தனி ஒருவன், அரண்மனை-2, கதகளி, கத்தி சண்டை, இமைக்கா நொடிகள், கோமாளி, ஆக்ஷன் உள்பட பல படங்களுக்கு இசைமைத்துள்ளார். இதனிடையே மீசையை முறுக்கு என்ற படத்தை இயக்கி, கதாநாயகனாகவும் அறிமுகமானார். தொடர்ந்து நட்பே துணை, நான் சிரித்தால், அன்பறிவு ஆகிய படங்களிலும் கதாநாயகனாக நடித்தார்.

கார்த்திக் வேணுகோபாலன்
இந்நிலையில் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு படத்தை இயக்கி பிரபலமான கார்த்திக் வேணுகோபாலன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை எல்.கே.ஜி, கோமாளி, மூக்குத்தி அம்மன், வெந்து தணிந்தது காடு உள்ளிட்ட படங்களை தயாரித்த வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார்.

இப்படத்திற்கு மஹேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்ய, பிரசன்னா படத்தொகுப்பை மேற்கொள்கிறார். இப்படத்தின் அறிவிப்பு வீடியோவைப் படக்குழு வெளியிட்டுள்ளது. அனிமேஷன் வடிவில் உருவாகியுள்ள இந்த அறிவிப்பு வீடியோ பள்ளிக்கதையை அடிப்படையாக கொண்டு உருவாகுவது போன்று இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பெயரிடப்படாத இந்த படத்தில் நடிக்கும் பிற நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






