என் மலர்
சினிமா செய்திகள்
- இந்திய திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஷாருக்கான்.
- ஷார்ஜா புத்தக கண்காட்சியில் ஷாருக்கானுக்கு ஐகான் விருது வழங்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஷார்ஜாவில் சர்வதேச புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சியில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் கலந்து கொண்டார். அங்கு அவருக்கு சினிமா மற்றும் கலச்சார துறையில் சாதித்ததற்காக உலகளாவிய ஐகான் விருது வழங்கப்பட்டது. காட்சி ஊடகத்தின் வழியே எழுத்து, படைப்பாற்றல் துறையில் சாதித்தமைக்காக இந்த விருது வழங்கப்பட்டது.

இந்த விருதைப் பெற்றுக் கொண்ட ஷாருக்கான் பேசிய தாவது, கதைகள், சொற்கள் அவை சேர்ந்ததுதான் சினிமா. நாங்கள் காட்சிகள் மூலமாகவும், நடனத்தின் மூலமாகவும் மனிதநேயத்தை வளர்க்க நினைக்கிறோம். புத்தகங்கள் நம் வாழ்க்கையின் அங்கங்கள். நாம் எந்த நாட்டில் வாழ்ந்தாலும், எந்த நிறத்தில் இருந்தாலும், எந்த மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் அன்பு, அமைதி, கருணை இதில் தான் நாம் சிறந்து விளங்குகிறோம் என்று பேசினார்.
சமீபகாலமாக ஷாருக்கானுக்கு மத்திய கிழக்கு, அமெரிக்கா நாடுகளில் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது என்று பிரபல நிறுவனம் நடத்திய கருத்து கணிப்பில் தெரிய வந்தது குறிப்பிடத்தக்கது.
- சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகியிருந்த தேவராலன் ஆட்டம் என்ற பாடலை யோகி சேகர் பாடியிருந்தார்.
- இவர் தற்பொது சினிமா மலர் நேயர்களுக்காக பிரத்யேகமாக பேட்டி அளித்தார்.
தமிழ் திரையுலகில் முன்னணி பாடகராக வலம் வரும் யோகி சேகர், சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகியிருந்த தேவராலன் ஆட்டம் என்ற பாடலை பாடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருந்தார்.

இந்நிலையில் இவர் சினிமா மலர் நேயர்களுக்காக பிரத்யேகமாக பேட்டி அளித்திருந்தார். இதில் இவர் பாடிய பாடல்கள், இவரின் ஆரம்பக்கட்ட சினிமா பயணங்கள் போன்ற பல விஷயங்களை பகிர்ந்துக் கொண்டார். சினிமா பாடல்களில் இவரின் பின்னணி குரலில் ஒளிந்திருக்கும் பாடல்கள், விஜய் ஆண்டனி இசையில் வெளியான நான் படத்தில் இடம்பெற்ற மக்காயலா பாடலில் ஒரு சிறிய பின்னணி குரலில் கொடுத்திருந்தார். மேலும் 96 படத்தில் காதலே காதலே, தி லெஜண்ட் படத்தில் மொசலு மொசலு, பீஸ்ட் படத்தில் திரை தீப்பிடிக்கும், கர்ணன் படத்தில் கண்டா வரச்சொல்லுங்க, கேஜிஎஃப் படத்தில் தீரா திரா போன்ற பாடல்களில் இவர் பின்னணி பாடல் பாடியுள்ளார். பரியேறும் பெருமாள் படத்தில் பொட்டக் காட்டில் பூ வாசம் பாடலை இவர் பாடியிருந்தார்.
- வினோத் குமார் இயக்கத்தில் விஷால் நடித்திருக்கும் படம் லத்தி.
- இப்படத்தின் இரண்டாவது பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
'வீரமே வாகை சூடும்' படத்திற்கு பிறகு நடிகர் விஷால் நடித்திருக்கும் திரைப்படம் 'லத்தி'. இதனை அறிமுக இயக்குனர் வினோத் குமார் இயக்கியிருக்கிறார். இதில் விஷாலுக்கு ஜோடியாக சுனைனா நடித்திருக்கிறார். 'ராணா புரொடக்ஷன்' சார்பாக ரமணா மற்றும் நந்தா இப்படத்தை தயாரிக்கின்றனர்.

லத்தி
'லத்தி' திரைப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி வைரலானது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு பெற்றது. இதனிடையே இப்படத்தின் முதல் லிரிக் பாடலான 'தோட்டா லோடாக வெயிட்டிங்' வெளியானது. இந்நிலையில் லத்தி படத்தின் 2வது பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடலை கார்த்திக் நேத்தா எழுத, பாடகர்கள் ரஞ்சித் கோவிந்த் மற்றும் சுவேதா மோகன் பாடியுள்ளனர். ஊஞ்சல் மனம் ஆடிடும் நேரம் என்ற வரிகளில் உருவாகியுள்ள இந்த பாடல் அனைவரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
- இசையமைப்பாளர் நடிகர் என பண்முகத்தன்மை கொண்டவர் விஜய் ஆண்டனி.
- சங்கரதாஸ் சுவாமிகள் 100வது நினைவு நாளில் நடிகர் விஜய் ஆண்டனி கலந்துக் கொண்டார்.
2005-ம் ஆண்டு சுக்ரன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இசையமைப்பாளராக அறிமுகமானவர் விஜய் ஆண்டனி. அதன்பின்னர் டிஷ்யூம், காதலில் விழுந்தேன், நினைத்தாலே இனிக்கும், வேட்டைக்காரன், யுவன் யுவதி, வேலாயுதம் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து பிரபலமடைந்தார்.

விஜய் ஆண்டனி
இவர் தற்போது நடிகராகவும் வலம் வருகிறார். 2012-ம் ஆண்டு வெளியான நான் படத்தின் மூலம் கதாநாயகனாகவும் அறிமுகமானார். இதனை தொடர்ந்து சலீம், பிச்சைக்காரன், சைத்தான், காளி, திமிரு புடிச்சவன் உள்ளிட்ட பல படங்களிலும் நடித்து அனைவரையும் கவர்ந்தார். தற்போது இவர் கைவசம் கொலை, மழை பிடிக்காத மனிதன், வள்ளி மயில், ரத்தம் உள்ளிட்ட படங்கள் உள்ளன.

குத்தாட்டம் போட்ட விஜய் ஆண்டனி
இந்நிலையில் சங்கரதாஸ் சுவாமிகளின் 100வது ஆண்டு நினைவு நாளையொட்டி புதுச்சேரியில் நாடகக்கலைஞர்கள் சார்பில் நடைபெற்ற ஊர்வலத்தில் விஜய் ஆண்டனி கலந்துகொண்டு நடிரோட்டில் நடனமாடி உற்சாகப்படுத்தினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
- கார் மேல் அமர்ந்து சாகசம் செய்வது போன்று நடிகர் பவன் கல்யாண் காரில் சென்ற வீடியோ வைரலானது.
- இதையடுத்து ஆந்திரா, தாடேபள்ளி காவல் நிலையத்தில் பவன் கல்யாண் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆந்திரா மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் சாலை விரிவாக்கப் பணிக்காக அங்குள்ள கிராமத்தில் மக்கள் அதிகம் வசித்த பகுதிகள் இடித்து தள்ளப்பட்டன. இதனால் பெரும்பாலான கிராம வாசிகள் தங்களின் வீடுகளை இழந்தனர். இதையறிந்த ஆந்திரா முன்னணி நடிகரும், ஜனசேனா என்ற கட்சியை நடத்தி வருபவருமான பவன் கல்யாண், வீடுகளை இழந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற இப்டாம் என்ற கிராமத்திற்கு கடந்த சில நாட்களுக்கு முன் காரில் சென்றார்.

காரின் மேல் அமர்ந்து சென்ற பவன் கல்யாண்
அப்போது தனது ரசிகர்கள் புடைசூழ முக்கிய சாலை வழியாக காரின் மேற்கூரையில் சினிமா பாணியில் அமர்ந்து சென்றார். இதன் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. உடன் வந்தவர்கள் பாதுகாப்பற்ற முறையில் தொங்கிக் கொண்டே நின்று சென்றனர். மேலும் இரு சக்கர வாகனத்தில் வந்த ரசிகர்கள் ஹெல்மெட் அணியாம் சென்றனர்.

பவன் கல்யாண்
இது தொடர்பாக காவல் நிலையத்தில் அளித்த புகாரில், பொதுமக்களுக்கு அச்சத்தையும், இடையூறை ஏற்படுத்தும் வகையில் வாகனத்தை ஓட்டி சென்றதாக கார் டிரைவர் மீதும், காரில் மேல் அமர்ந்து சென்ற நடிகர் பவன் கல்யாண் மீதும் பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து எப்.ஐ.ஆர். எனப்படும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர்.
பவன்கல்யாண் தனது தொண்டர்களுடன் காரில் அஜாக்ரதையாக சென்றதில் தான் இருசக்கர வாகனத்தில் இருந்து விழுந்துவிட்டதாக சிவக்குமார் என்பவர் புகார் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- 1980களில் திரையுலகில் தடம் பதித்த நடிகர்கள் மற்றும் நடிகைகள் ஒவ்வொரு ஆண்டும் சந்தித்து தங்கள் நட்பை கொண்டாடி வருகின்றனர்.
- கொரோனாவுக்கு பிறகு இந்நிகழ்ச்சி முதல் முறையாக மும்பையில் நடைபெற்றது.
1980களில் திரையுலகில் தடம் பதித்த நடிகர்கள் மற்றும் நடிகைகள் ஒவ்வொரு ஆண்டும் சந்தித்து தங்கள் நட்பை கொண்டாடி வருகின்றனர். '80ஸ் ரீயூனியன்' என்று அழைக்கப்படும் இந்த நிகழ்வின் 10-வது ஆண்டு கொண்டாட்டத்தை 2019-ல் சிரஞ்சீவி தனது ஹைதராபாத் இல்லத்தில் பிரமாண்டமாக ஏற்பாடு செய்திருந்தார். அனைவரின் நெஞ்சங்களிலும் நீங்காத நினைவாக அந்த நிகழ்ச்சி இடம்பெற்றது.
அடுத்த வருட நிகழ்ச்சிக்கு அனைவரும் காத்திருந்த நிலையில் கொரோனா பெருந்தொற்றின் பரவல் காரணமாக 2020 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் '80ஸ் ரீயூனியன்' நடைபெறவில்லை. இந்நிலையில், மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு இந்த ஆண்டு மும்பையில் அனைவரும் சந்தித்தனர்.

80ஸ் ரீயூனியன்
இதில் பிரபல பாலிவுட் நட்சத்திரங்களான பூனம் தில்லான் மற்றும் ஜாக்கி ஷெராஃப் ஆகியோர் நான்கு தென் மாநிலங்களைச் சேர்ந்த நடிகர்களுக்கு விருந்தளித்து உபசரித்தனர். பாலிவுட்டை சேர்ந்த தங்கள் நண்பர்கள் சிலரையும் சனிக்கிழமை (நவம்பர் 12) மாலை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தனர்.
ஒவ்வொரு ஆண்டும் சில குறிப்பிட்ட வண்ணங்களுக்கு முக்கியத்துவம் அளித்து இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு பெண்களுக்கு வெள்ளி மற்றும் ஆரஞ்சு நிறங்களும் ஆண்களுக்கு சாம்பல் மற்றும் ஆரஞ்சு நிறங்களும் அறிவிக்கப்பட்டன.
நிகழ்ச்சி ஏற்பாட்டளர்களான பூனம் தில்லான் மற்றும் ஜாக்கி ஷெராஃப் மேற்கண்ட வண்ணங்களில் அரங்கை தயார் செய்து தங்கள் விருந்தினர்களை வரவேற்றனர். தேர்ந்தெடுக்கப்பட்ட மகாராஷ்டிர மற்றும் உள்ளூர் உணவுகளுக்கு இந்நிகழ்ச்சியில் முக்கிய இடம் இருந்தது.

80ஸ் ரீயூனியன்
விடியற்காலை வரை நடைபெற்ற நிகழ்ச்சியில், தென்னிந்திய நடிகர்கள் இணைந்து கலைப்படைப்பு ஒன்றிலும் பங்கேற்றனர். விளையாட்டு மற்றும் வினாடி வினா உள்ளிட்டவைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நட்பு, தோழமை, வேடிக்கை நிறைந்த மாலைப் பொழுதாக இந்த ரீயூனியன் அமைந்திருந்தது.
இந்நிகழ்ச்சியில் ராஜ்குமார், சரத்குமார், சிரஞ்சீவி, பாக்யராஜ், வெங்கடேஷ், அர்ஜுன், ஜாக்கி ஷெராஃப், அனில் கபூர், சன்னி தியோல், சஞ்சய் தத், நரேஷ், பானுச்சந்தர், சுஹாசினி, குஷ்பூ, ரம்யா கிருஷ்ணன், லிஸ்ஸி, பூர்ணிமா, ராதா, அம்பிகா, சரிதா, சுமலதா, ஷோபனா, ரேவதி, மேனகா, பூனம் தில்லான், நதியா, பத்மினி கே, வித்யா பாலன், டினா அம்பானி, மீனாட்சி சேஷாத்திரி, உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்துக் கொண்டனர்.
இதில் நடிகர் மாதவன் கலந்து கொண்டு அனைவரையும் வாழ்த்தியதோடு துபாய் விமானத்தை பிடிக்க வேண்டி இருந்ததால் விரைவில் விடை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஹன்சிகா இயக்குனர் ஆர்.கண்ணன் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார்.
- இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது.
தமிழ் திரையுலகில் அறிமுகமான குறுகிய காலத்திலேயே, விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு போன்ற பிரபலங்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர் ஹன்சிகா. 'சின்ன குஷ்பு' என்று அன்போடு அழைக்கப்பட்ட ஹன்சிகா பட வாய்ப்புகள் குறைய தொடங்கியதும், தற்காலிகமாக சினிமாவுக்கு சிறிது காலம் ஓய்வு கொடுத்தார்.

ஹன்சிகா
சிறிய இடைவெளிக்குப் பிறகு 'மஹா' என்ற படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கலவையான விமர்சனம் பெற்ற இப்படத்தில் சிம்பு கவுரவ வேடத்தில் நடித்திருந்தார். தற்போது ஆர்.கண்ணன் இயக்கும் புதிய திரைப்படத்தில் ஹன்சிகா நடிக்கிறார். இப்படத்தில் முதன் முறையாக இரட்டை வேடத்தில் ஹன்சிகா நடிக்கிறார். இதில் மெட்ரோ சிரிஷ், மயில்சாமி, தலைவாசல் விஜய், பிரிகிடா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

சாமி தரிசனம் செய்த ஹன்சிகா மற்றும் ஆர்.கண்ணன்
எமோஷனல், ஹாரரை அடிப்படையாக கொண்ட காமெடி த்ரில்லராக உருவாக இருக்கும் இப்படத்தை இயக்குனர் ஆர்.கண்ணன் தனது மசாலா பிக்ஸ் பேனரில் புரொடக்ஷன் நம்பர் 10 ஆக தயாரிக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது. இப்படத்தின் படப்பிடிப்பு இடைவிடாமல் நடத்தப்பட்டு 3 மாதங்களில் முடிவடையும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ஹன்சிகா மற்றும் இயக்குனர் ஆர்.கண்ணன் காளிகாம்பாள் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளனர். இதுதொடர்பான புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.
- அமர் கெளஷிக் இயக்கத்தில் வருண் தவான் நடிக்கும் படம் 'பெடியா' (ஓநாய்).
- இப்படத்தில் இடம்பெற்றுள்ள காடுன்னா திரில்லு தானடா பாடல் வெளியாகியுள்ளது.
அமர் கெளஷிக் இயக்கத்தில் வருண் தவான் நடிக்கும் படம் 'பெடியா' (ஓநாய்). இப்படத்தை மேடாக் பிலிம்ஸ் தயாரிப்பில் ஜியோ ஸ்டூடியோஸ் மற்றும் தினேஷ் விஜன் வழங்குகிறது. இப்பட்ம் வருகிற நவம்பர் 25-ம் தேதியன்று வெளியாகவுள்ளது.

காடுன்னா திரில்லு தானடா
இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'காடுன்னா திரில்லு தான டா...' வெளியாகியுள்ளது. இப்பாடல் பற்றி இசையமைப்பாளர்கள் சச்சின்-ஜிகர் பேசியதாவது, "பழங்குடி இசையை அதன் உண்மைத்தன்மை மாறாமல் இந்தப் பாடலின் வழியாக இக்கால ரசிகர்களுக்கு கொண்டு வருவதே எங்கள் நோக்கமாகும். பாடகர்கள் விஷால் தட்லானி மற்றும் சுக்வீந்தர் சிங் தங்களின் உணர்வுப்பூர்வமான குரல் மூலம் இப்பாடலுக்கு உயிரூட்டி உள்ளனர். 'பெடியா' திரைப்படத்திலிருந்து சமீபத்தில் வெளியான 'தும்கேஸ்வரி...' பாடல் ரசிகர்களை கவர்ந்துள்ள நிலையில், இந்த புத்தம் புது பாடலும் அவர்களை பரவசமூட்டும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்," என்றார்.
இந்த பாடலை தமிழில் அமிதாப் பட்டாச்சார்யா மற்றும் எஸ் சுனந்தன் எழுத, பென்னி தயாள் தமிழில் பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.
- விஜய் இயக்கத்தில் தமிழ், தெலுங்கில் வெளியான தியா படத்தில் சாய்பல்லவியுடன் இணைந்து நடித்தவர் நாகசவுரியா.
- இவருக்கு தற்போது திருமணம் முடிவாகி உள்ளதாக அறிவித்துள்ளனர்.
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் தமிழ், தெலுங்கில் வெளியான தியா படத்தில் சாய்பல்லவியுடன் இணைந்து நடித்தவர் நாகசவுரியா, தெலுங்கில் அதிக படங்களில் நடித்து முன்னணி இளம் நடிகராக உயர்ந்துள்ளார். இதுவரை நாகசவுரியா நடிப்பில் ௨௫ படங்கள் வந்துள்ளன. சமீபத்தில் நாகசவுரியாவுக்கும், சாய்பல்லவிக்கும் ஏற்கனவே மோதல் ஏற்பட்டு பரபரப்பானது. சாய்பல்லவி படப்பிடிப்புக்கு குறிப்பிட்ட நேரத்துக்கு வராமல் தாமதமாகவே வருவார் என்றும், அவருக்கு நடிப்பில் ஈடுபாடு இல்லாமல் எல்லோரையும் கஷ்டப்படுத்தினார் என்றும் நாகசவுரியா குற்றம் சாட்டினார்.

நாகசவுரியா
இதனை மறுத்த சாய்பல்லவி, ''படப்பிடிப்பில் நான் மற்றவர்களுக்கு கஷ்டம் கொடுத்ததாக நாகசவுரியா சொன்னது வியப்பாக உள்ளது. இதுபோல் யாரும் என்மீது குற்றம் சொன்னது இல்லை" என்று பதிலடி கொடுத்து இருந்தார். இந்த மோதல் பரபரப்பானது.

நாகசவுரியா
இந்நிலையில் நாகசவுரியாவுக்கு தற்போது திருமணம் முடிவாகி உள்ளது. பெங்களூருவை சேர்ந்த அனிஷா ஷெட்டி என்பவரை மணக்கிறார். இவர்கள் திருமணம் வருகிற 19-ந் தேதி பெங்களூருவில் நடக்க இருப்பதாக அறிவித்து உள்ளனர். இவர்களுக்கு ரசிகர்கள் திரையுலகினர் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
- தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான ஹன்சிகாவின் திருமணம் டிசம்பர் 4-ந் தேதி நடைபெறவுள்ளது.
- திருமணத்தை ஒளிபரப்பும் உரிமையை பெரிய தொகைக்கு ஓ.டி.டி.க்கு ஹன்சிகா விற்றுவிட்டதாக இணைய தளங்களில் தகவல் பரவி வருகிறது.
தமிழில் விஜய், சூர்யா, கார்த்தி, தனுஷ், விஷால், ஜெயம் ரவி, உதயநிதி ஸ்டாலின், சிம்பு, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலருடன் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்த ஹன்சிகா, தெலுங்கு படங்களிலும் நடித்து இருக்கிறார். ஹன்சிகாவுக்கு தற்போது திருமணம் முடிவாகி உள்ளது.

தனது நீண்ட கால நண்பரும், தொழில் பங்குதாரருமான மும்பையை சேர்ந்த சோஹேல் கதுரியா என்பவரை மணக்கிறார். இவர்கள் திருமணம் அடுத்த மாதம் (டிசம்பர்) 4-ந் தேதி ஜெய்ப்பூரில் உள்ள 450 ஆண்டுகள் பழமையான அரண்மனையில் நடக்க உள்ளது. திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொள்கிறார்கள். ஹன்சிகாவின் திருமணத்தை ஒளிபரப்பும் உரிமையை பெற பிரபல ஓ.டி.டி. தளம் விலை பேசி வந்தது.

இந்நிலையில் பெரிய தொகைக்கு ஓ.டி.டி.யில் திருமணத்தை ஒளிபரப்பும் உரிமையை ஹன்சிகா விற்றுவிட்டதாக இணைய தளங்களில் தகவல் பரவி வருகிறது. இவர்களின் திருமணம் ஒளிபரப்பாகவுள்ளதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளது.
ஏற்கனவே நயன்தாராவும் தனது திருமண ஒளிபரப்பு உரிமையை ஓ.டி.டி.க்கு விற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- அண்மையில் காசி கோவிலுக்குச் சென்று வந்த விஷால் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்தார்.
- தற்போது தனது நண்பர்களுடன் மங்களூரு அருகே உள்ள மஞ்சுநாதர் கோவிலுக்குச் சென்று நடிகர் விஷால் சாமி தரிசனம் செய்தார்.
தமிழ் சினிமாவின் முன்னனி கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் விஷால், அண்மையில் காசி கோவிலுக்குச் சென்று வந்தார். அங்கு சென்ற போது தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்ததோடு, காசி நகரை மேம்படுத்தியதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறியிருந்தார்.

விஷால்
விஷாலின் பதவிற்கு பிரதமர் மோடி பதலளித்து ட்வீட் செய்தது பலரது கவனத்தையும் ஈர்த்தது.அதனை தொடர்ந்து அண்மையில் 11 ஏழைகளுக்கு நடிகர் விஷால் இலவச திருமணம் செய்து வைத்தார். அந்த விழாவில் செய்தியாளர்களிடம் பேசிய விஷால், விரைவில் காதல் திருமணம் செய்து கொள்வேன் என கூறியிருந்தார்.

விஷால்
இந்நிலையில் நடிகர் விஷால் கர்நாடக மாநிலம் மங்களூரு அருகே உள்ள மஞ்சுநாதர் கோவிலுக்குச் சென்றுள்ளார். தனது நண்பர்களுடன் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்த அவர், அங்குள்ள யானையிடம் ஆசீர்வாதம் பெறுவது, கோவில் குளத்தில் உள்ள மீன்களுக்கு உணவளித்தது உள்ளிட்ட வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
- பிரபல நடிகை பிபாசா பாசு, கரண் சிங் குரோவர் தம்பதி காதலித்து கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர்.
- இந்த தம்பதிக்கு பெண்குழந்தை பிறந்துள்ளதாக அறிவித்துள்ளனர்.
பிரபல இந்தி நடிகை பிபாசா பாசு. இவருக்கு 43 வயது ஆகிறது. தமிழில் விஜய்யுடன் சச்சின் படத்தில் நடித்துள்ளார். தெலுங்கு படங்களிலும் நடித்து இருக்கிறார். முன்னணி கதாநாயகர்கள் படங்களில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனமும் ஆடி இருக்கிறார்.

பிபாசா பாசு - கரண் சிங் குரோவர்
'அலோன்' திரைப்படத்தில் நடிக்குபோது பிபாசா பாசு, கரண் சிங் குரோவருக்கு இடையே காதல் மலர்ந்தது. கடந்த 2016-ம் ஆண்டு முறைப்படி இருவரும் திருமணம் செய்துகொண்டனர். திருமணத்திற்கு பின் 'டேஞ்சரஸ்' என்ற வெப் தொடரில் தம்பதிகள் இருவரும் இணைந்து நடித்தனர். இதனையடுத்து, கடந்த ஆகஸ்ட் மாதம் பிபாசா பாசு கர்ப்பமாக இருப்பதை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் அறிவித்தார். அதன்பிறகு அது தொடர்பான சில புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வந்தார்.

பிபாசா பாசு - கரண் சிங் குரோவர்
இந்த நிலையில், நடிகை பிபாசா பாசுவிற்கு இன்று பெண் குழந்தை பிறந்துள்ளது. நடிகர் கரண் சிங் குரோவர் - நடிகை பிபாசா பாசு தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ள நிலையில் தம்பதிக்கு திரைத்துறையினர், ரசிகர்கள் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.






