இயக்குனர் ஒவ்வொரு காட்சியையும் ரசிச்சு ரசிச்சு எடுப்பார் - உதயநிதி

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கலகத் தலைவன்.இந்த திரைப்படம் வருகிற நவம்பர் 18-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்
Published on

தடம், மீகாமன் போன்ற படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்திருக்கும் படம் 'கலகத் தலைவன்'. இப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்திருக்கிறார். மேலும், பிக்பாஸ் ஆரவ், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் வருகிற நவம்பர் 18-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின்

இப்படத்தில் நடித்த உதயநிதி மற்றும் நிதி அகர்வால் இருவரும் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது, மகிழ் சார் ஒரே காட்சியை மூன்று நாட்கள் எடுப்பார். ரொம்ப பொறுமையா எடுப்பாரு, எடுக்குற எல்லாம் காட்சிகளையும் ரசிச்சு ரசிச்சு எடுப்பார். அதனால் தான் படத்திற்கு இந்த அளவிற்கு நேரம் எடுத்துக்குது. எங்களுக்கு இயக்குனர் நடிச்சு காட்டினார். இந்த படத்துல நிதி அகர்வால் மைத்திலி என்ற மருத்துவர் கதாப்பாத்திரம் நடிச்சிருக்காங்க. ரொம்ப முக்கியமான கதாப்பாத்திரம் அது. இந்த படத்துடைய காட்சி ஒன்று எடுத்துக் கொண்டிருக்கும் பொழுது தேர்தல் தேதி அறிவிச்சாங்க அப்போதான் அருண்ராஜா காமராஜ் நெஞ்சுக்கு நீதி படத்தின் கதையை சொல்லியிருந்தார். ரெண்டு பேரு கிட்டயும் 40 நாட்கள் வரமாட்டேன் தேர்தல் பிரச்சாரத்துக்கு போறேன்னு டாடா சொல்லிட்டு கிளம்பிட்டேன் என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com