உதயநிதியிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன் - நடிகை நிதி அகர்வால்

மகிழ் திருமேனி தற்போது இயக்கியுள்ள படம் ‘கலகத் தலைவன்’.இந்த திரைப்படம் 18-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
நிதி அகர்வால்
நிதி அகர்வால்
Published on

தடம், மீகாமன் போன்ற படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்திருக்கும் படம் 'கலகத் தலைவன்'. இப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்திருக்கிறார். மேலும், பிக்பாஸ் ஆரவ், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் வருகிற நவம்பர் 18-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

நிதி அகர்வால்

இப்படத்தில் நடித்த நிதி அகர்வால் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது, "உதயநிதி சாரிடம் இருந்து நான் நிறைய கற்றுக் கொண்டேன். அவருக்கு பல பிரச்சினைகள் இருக்கும் பொறுப்பு இருக்கும் ஆனால் அதை அவர் படப்பிடிப்பு தளத்தில் ஒரு நாள் கூட காட்டியதில்லை" என்று கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com