என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • முத்தையா இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகி வரும் படம் 'காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்'.
    • இப்படத்தின் முதல் பாடலான டவுளத்தான ரவுடி பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

    இயக்குனர் முத்தையா இயக்கத்தில் ஆர்யா நடித்து வரும் படம் 'காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்'. இதில் 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமான சித்தி இத்னானி கதாநாயகியாக நடிக்கிறார். ராமநாதபுரம் பின்னணியில் உருவாகும் இந்த திரைப்படத்திற்கு இசைமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.


    காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்

    காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்

    இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் மற்றும் டீசர் சமீபத்தில் வெளியாகி பலரின் கவனத்தை ஈர்த்தது. 'காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்' படத்தின் முதலான டவுளத்தான ரவுடி இன்று மதியம் 12.00 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அறிவித்தபடி இப்படத்தின் முதலான டவுளத்தான ரவுடி பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘தசரா’.
    • ‘தசரா’ திரைப்படம் இதுவரை ரூ.110 கோடி வசூல் செய்துள்ளது.

    தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான நானி நடிப்பில் கடந்த 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'தசரா'. இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கியிருந்த இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் பிரகாஷ் ராஜ், சமுத்திரக்கனி, சாய் குமார், பூர்ணா மற்றும் ஜரீனா வஹாப் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    சிரஞ்சீவி பதிவு

    பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இந்த திரைப்படம் உலக அளவில் ரூ.110 கோடியை வசூல் செய்து தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது. இந்நிலையில், 'தசரா' திரைப்படம் பார்த்த நடிகர் சிரஞ்சீவி படக்குழுவை பாராட்டி பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "தசரா திரைப்படம் பார்த்தேன். என்ன ஒரு அருமையான படம். இது இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலாவின் முதல் படம் என்பதை அறிந்து வியந்தேன். எங்களது 'மகாநடி' கீர்த்தி சுரேஷின் நடிப்பு சிறப்பு. சந்தோஷ் நாராயணன் இசையில் அசத்திவிட்டார். படக்குழுவினருக்கு வாழ்த்துகள்" என்று குறிப்பிட்டுள்ளார்.


    • விஜய் தற்போது ‘லியோ’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். இதில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    விஜய் - லோகேஷ் கனகராஜ்
    விஜய் - லோகேஷ் கனகராஜ்

    இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில், 'லியோ' படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்தது. காஷ்மீர் படப்பிடிப்பு குறித்து தொழில்நுட்ப பணியாளர்கள் தங்களது கருத்துகளை பகிரும் அந்த வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வைரலானது.


    ஜோஜு ஜார்ஜ்
    ஜோஜு ஜார்ஜ்

    இந்நிலையில் லியோ திரைப்படத்தில் இணைந்துள்ள நடிகர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தில் மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் படப்பிடிப்பில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. இவர் நடிக்கவிருக்கும் பகுதியின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    • இயக்குனர் ராஜ் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லோக்கல் சரக்கு’.
    • இப்படத்தின் டீசர் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    நடிகர் யோகிபாபு, நடன இயக்குனர் தினேஷ் மாஸ்டருடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் 'லோக்கல் சரக்கு'. டிஸ்கவர் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இப்படத்தை ராஜ்குமார் இயகியுள்ளார். மேலும், இப்படத்திற்கு சுவாமிநாதன் ராஜேஷ் இசையமைத்துள்ளார்.


    லோக்கல் சரக்கு

    இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகி கவனம் பெற்ற நிலையில் 'லோக்கல் சரக்கு' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இதனை நடிகர் விஜய் சேதுபதி தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். குடியால் சாதாரண மனிதரின் வாழ்க்கையில் ஏற்படும் விளைவுகளை விளக்குவது போன்று உருவாகியுள்ள இந்த டீசரை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.



    • காசோலை பணமில்லாமல் திரும்பிய வழக்கில் இயக்குனர் லிங்குசாமிக்கு 6 மாத சிறை தண்டனை வழங்கி சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
    • சைதாப்பேட்டை நீதிமன்றம் அளித்த 6 மாத சிறை தண்டனை தீர்ப்பை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தற்போது உறுதி செய்துள்ளது.

    இயக்குனர் லிங்குசாமி கடந்த 2014-ம் ஆண்டு நடிகர் கார்த்தி, நடிகை சமந்தா ஆகியோரது நடிப்பில், 'எண்ணி ஏழு நாள்' என்ற திரைப்படத்தை தயாரிப்பதற்காக, தனது தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் பிவிபி கேப்பிட்டல்ஸ் என்ற நிதி நிறுவனத்திடம் ரூ.1 கோடியே 3 லட்சம் கடன் பெற்றிருந்தது. இந்த கடனை திருப்பிக் கொடுக்காமல் அடுத்தடுத்து அவர்கள் பல படங்களை தயாரித்ததையடுத்து, அந்த நிறுவனத்துக்கு எதிராக பிவிபி கேப்பிட்டல்ஸ் நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.


    கார்த்தி - சமந்தா - லிங்குசாமி

    கார்த்தி - சமந்தா - லிங்குசாமி

    இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், பிவிபி நிறுவனத்திடம் பெற்ற ரூ.1 கோடியே 3 லட்சம் கடனை திரும்பச் செலுத்த லிங்குசாமிக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவைத் தொடர்ந்து, லிங்குசாமி, ரூ.1 கோடியே 3 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை பிவிபி கேப்பிட்டல்ஸ் நிறுனத்திற்கு வழங்கினார். இந்த காசோலைகள் வங்கியில் போதிய பணம் இல்லாமல் திரும்பி வந்ததையடுத்து இயக்குனர் லிங்குசாமி மற்றும் அவரது சகோதரர்களுக்கு எதிராக பிவிபி நிறுவனம் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் செக் மோசடி வழக்கு தொடர்ந்தது.


    லிங்குசாமி

    லிங்குசாமி

    இந்த வழக்கை விசாரித்த சைதாப்பேட்டை நீதிமன்றம் செக் மோசடி வழக்கில், இயக்குனர் லிங்குசாமி உட்பட அவரது சகோதரர்களுக்கு 6 மாதங்கள் சிறை தண்டனையும் 10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டது. அதே சமயம் மேல் முறையீடு செய்ய அவகாசம் அளித்து உத்தரவிட்டது. அதன்பின்னர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ரூ.10 ஆயிரம் அபராத தொகையை லிங்குசாமி செலுத்தினார்.


    லிங்குசாமி

    லிங்குசாமி

    தற்போது இம்மனுவை விசாரித்த சென்னை முதன்மை அமர்வு நீதி மன்றம், மனுவை தள்ளுபடி செய்ததுடன், வட்டியுடன் சேர்த்து கடனை திருப்பி செலுத்த உத்தரவிட்டு தீர்ப்பளித்துள்ளது. மேலும் கடந்த ஆகஸ்டு மாதம், சைதாப்பேட்டை நீதிமன்றம் அளித்த 6 மாத சிறை தண்டனை தீர்ப்பை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தற்போது உறுதி செய்துள்ளது.


     


    லிங்குசாமி வெளியிட்ட அறிக்கை

    லிங்குசாமி வெளியிட்ட அறிக்கை

    இந்நிலையில் இதுகுறித்த தன்னிலை விளக்கத்தை அறிக்கையின் வாயிலாக இயக்குனர் லிங்குசாமி தரப்பு வெளியிட்டுள்ளது. அதில், இன்று பல ஊடகங்களில் பரபரப்பாக வரும் என்னைப் பற்றிய ஒரு செய்திக்கு தன்னிலை விளக்கம் அளிக்க வேண்டியது என் கடமை. இந்த வழக்கு பிவிபி கேப்பிட்டல் லிமிடெட் மற்றும் எங்களது தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் பிலிம் மீடியா பிரைவேட் லிமிடெட் இடையிலானது. அவர்கள் தொடுத்த வழக்கின் மேல்முறையீட்டில் நேற்று மாண்புமிகு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நாங்கள் மாண்புமிகு நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புக்கு மேல்முறையீடு செய்து சட்டரீதியாக சந்திக்க உள்ளோம் என்று இயக்குனர் லிங்குசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    • வெங்கட் பிரபு இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ‘கஸ்டடி’.
    • இப்படம் வருகிற மே 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் 'கஸ்டடி'. இப்படத்தில் நாக சைதன்யா கதாநாயகனாக நடித்துள்ளார். ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் பேனரின் சார்பாக ஸ்ரீனிவாசா சித்தூரி இதனை தயாரித்துள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்திருக்கிறார்.

    'கஸ்டடி' திரைப்படத்தில் வில்லனாக அரவிந்த் சாமி நடிக்கிறார். இப்படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இருவரும் இணைந்து இசையமைக்கின்றனர். மேலும், இதில் சரத்குமார், வென்னேலா கிஷோர், பிரேம்ஜி, சம்பத் ராஜ், பிரியாமணி மற்றும் பிரேமி விஷ்வநாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.


    கஸ்டடி

    கஸ்டடி

    இப்படத்தின் முதல் பாடலான 'Head up High' பாடல் கடந்த 10-ஆம் தேதி வெளியானது. இந்நிலையில் கஸ்டடி படத்தின் முதல் பாடலான 'Head up High'லிரிக்கல் பாடல் வெளியாகி 4 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. இதனை ரசிகர்கள் வைரலக்கி வருகின்றனர்.


    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அம்பேத்கர் பிறந்தாளில் அவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும் என்றும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    • மேலும் நலத்திட்ட உதவிகள் வழங்கவும் அவர்கள் முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

    நாளை (ஏப்ரல் 14ம் தேதி) அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள அம்பேத்கர் சிலை மற்றும் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும் என்று விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகளுக்கு மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவுறுத்தியுள்ளார்.



    மாவட்ட செயலாளர்களுக்கு புஸ்ஸி ஆனந்த் இந்த செய்தியை குறுஞ்செய்தி மூலம் அவர் தெரிவித்துள்ளதாகவும், தொலைபேசியின் வாயிலாக தொடர்புகொண்டு ஆலோசனையும் வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கவும் அவர்கள் முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.


    கோப்பு படம்
    கோப்பு படம்

    வருகிற 15ம் தேதி முதல் மே மாதம் வரை மாவட்டம் வாரியாக விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெறவுள்ளது என்றும் இதன் மூலம் மாநில செயலாளர் புஸ்ஸி ஆனந்த் முதற்கட்டமாக தமிழ்நாடு முழுவதும் நேரடி பயணம் மேற்கொள்கிறார் என்றும் பேசப்படுகிறது. இது விஜய்யின் அரசியல் நகர்வாக இருக்கலாம் என்ற பேச்சும் அடிபடுகிறது.

    ஏற்கனவே, விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட 51 பேர் வெற்றி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 16-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.
    • இந்த ஐபிஎல் போட்டியை பல்வேறு பிரபலங்கள் நேரில் பார்த்து ரசித்தனர்.

    16-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டி சென்னை அணியின் கேப்டனாக டோனிக்கு 200வது போட்டி என்பதால் ரசிகர்களின் கொண்டாட்டங்கள் அதிகமாக இருந்தது.

    இந்த போட்டியை நேரில் பார்ப்பதற்காக பிரபலங்கள் பலர் மைதானத்திற்கு நேரில் வந்திருந்தனர். குறிப்பாக, நடிகரும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் சி.எஸ்.கே அணியின் ஜெர்சி அணிந்தவாறு, மைதானத்திற்கு வந்திருந்தார்.

    இதேபோல், முதல்வரின் குடும்பத்தினர், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் நடிகைகள் திரிஷா, பிந்துமாதவி, மேகா ஆகாஷ், இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நடிகர்கள் ஜெயராம், சதீஷ் உள்ளிட்ட பலரும் போட்டியை நேரில் பார்த்தனர்.

    • தமிழ்ப் படம், விக்ரம் வேதா, இறுதி சுற்று, மண்டேலா உள்ளிட்ட படங்களை தயாரித்த YNOT ஸ்டுடியோஸ் சஷிகாந்த் தற்போது இயக்குனராக அறிமுகமாகியுள்ளார்.
    • இப்படத்தில் நயன்தாரா, மாதவன், சித்தார்த் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

    தமிழ்ப் படம், விக்ரம் வேதா, இறுதி சுற்று, மண்டேலா உள்ளிட்ட படங்களை தயாரித்த YNOT ஸ்டுடியோஸ் சஷிகாந்த் தற்போது இயக்குனராக அறிமுகமாகும் முதல் படத்தில் நயன்தாரா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் மாதவன், சித்தார்த் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.


    டெஸ்ட்

    டெஸ்ட்

    'டெஸ்ட்' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது. நயன்தாரா, மாதவன், சித்தார்த் மூவரும் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பாப்பு அதிகரித்துள்ளது. இந்த மோஷன் போஸ்டரை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

    • நடிகர் நவாசுதீன் சித்திக், தனது சகோதரர் ஷாமாசுதீன் சித்திக் மீது கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
    • பிரச்சினைக்கு சுமூக தீர்வு காண வருகிற மே மாதம் 3-ந் தேதி சகோதரர்கள் இருவரும் கோர்ட்டில் நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

    மும்பை:

    இந்தி திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நவாசுதீன் சித்திக். தமிழில் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' படத்தில் வில்லனாக தோன்றி கலக்கி இருப்பார்.

    விஜய் சேதுபதியின் தந்தையாக தோன்றி திரையில் மிரட்டிய நவாசுதீனை ரசிகர்கள் கொண்டாடிய நிலையில் அவரது சகோதரர் ஷாமாசுதீன் சித்திக், அவரை சகட்டு மேனிக்கு திட்டி சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டார். நவாசுதீனின் குடும்ப வாழ்க்கை, அவரது செயல்பாடுகள் குறித்து அவரது சகோதரர் ஷாமாசுதீன் வெளியிட்ட கருத்துக்கள், நவாசுதீனின் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

    இதனால் மனம் உடைந்த நவாசுதீன், அந்த கருத்துக்களை சமூக வலைதளத்தில் இருந்து அகற்றுமாறு சகோதரரிடம் கூறினார். இதில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. தொடர்ந்து இருவரும் தங்களின் கருத்துக்களை பொது வெளியில் பகிர்ந்தனர். இது பிரச்சினையை மேலும் சிக்கலாக்கியது.

    இதையடுத்து நடிகர் நவாசுதீன் சித்திக், தனது சகோதரர் ஷாமாசுதீன் சித்திக் மீது கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். அதில் சமூக வலைதளங்களில் ஷாமாசுதீன் சித்திக் பதிவிட்ட அவதூறு கருத்துக்களால் தனக்கு பெரும் மன உளைச்சல் ஏற்பட்டதாகவும், இதற்கு இழப்பீடாக ரூ.100 கோடி நஷ்டஈடு தரவேண்டும் எனவும் கூறியிருந்தார்.

    இந்த வழக்கு மும்பை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர் நவாசுதீன் சித்திக் சார்பில் ஆஜரான வக்கீல், இந்த வழக்கில் நவாசுதீன் சித்திக் அவரது முன்னாள் மனைவியுடனான பிரச்சினைகளை சுமூகமாக பேசி தீர்க்க முயற்சி நடந்து வருகிறது. எனவே முன்னாள் மனைவி மீது அவதூறு வழக்கு எதுவும் பதிய விரும்பவில்லை, என்றார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, முதலில் சகோதரர்கள் இருவரும் சமூக வலைதளங்களில் மாறிமாறி கருத்து பதிவிடுவதை நிறுத்தி கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டார்.

    மேலும் பிரச்சினைக்கு சுமூக தீர்வு காண வருகிற மே மாதம் 3-ந் தேதி சகோதரர்கள் இருவரும் கோர்ட்டில் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். பிரபல நடிகர் நவாசுதீனும் அவரது சகோதரரும் சமூக வலைதளங்களில் பதிவிட்ட அவதூறு கருத்துக்கள் மும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • யோகிபாபு தற்போது யானை முகத்தான் படத்தில் நடித்து முடித்துள்ளார்.
    • இப்படத்தின் ரிலீஸ் காரணம் இல்லாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

    தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக உயர்ந்த யோகிபாபு கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். தற்போது யானை முகத்தான் என்ற படத்தில் நாயகனாக நடித்து இருக்கிறார். ரஜிஷா மிதிலா இயக்கத்தில் உருவாகி உள்ள யானை முகத்தான் படத்தில் ரமேஷ் திலக், கருணாகரன், ஊர்வசி ஆகியோரும் நடித்துள்ளனர்.

    இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. யானை முகத்தான் படம் தமிழ் புத்தாண்டையொட்டி நாளை (14-ந்தேதி) தமிழகம் முழுவதும் திரைக்கு வரும் என்று ஏற்கனவே அறிவித்து இருந்தனர். அதற்காக படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளிலும் படக்குழுவினர் ஈடுபட்டு வந்தனர்.


    யானை முகத்தான்

    யானை முகத்தான்

    இந்நிலையில் யானை முகத்தான் படம் திட்டமிட்டபடி நாளை வெளியாகாது என்றும் அதை தள்ளி வைத்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ''எந்த காரணமும் இல்லாமல் நாங்கள் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை ஒரு வாரம் தள்ளி வைத்து இருக்கிறோம்'' என்று படக்குழுவினர் அறிவித்து உள்ளனர். மேலும் இப்படம் வருகிற ஏப்ரல் ௨௧ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    • இயக்குனர் பிரேம் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'கேடி - தி டெவில்'.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இயக்குனர் பிரேம் இயக்கத்தில் துருவா சர்ஜா நடித்துள்ள திரைப்படம் 'கேடி - தி டெவில்'. காளி என்ற கதாபாத்திரத்தில் துருவா நடிக்கும் இந்த படத்தை கே.வி.என். புரொடக்ஷன் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு அர்ஜுன் ஜன்யா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டைட்டில் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

    கேடி -தி டெவில்

    1970-களில் பெங்களூரில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வரும் இப்படத்தில் ரவிச்சந்திரன், சஞ்சய் தத் மற்றும் ஷில்பா ஷெட்டி குந்த்ரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு பெங்களூரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இதில், ஹீரோ துருவா சர்ஜா மற்றும் சஞ்சய் தத் இருவருக்கும் இடையிலான சண்டைக் காட்சி படமாக்கப்பட்ட போது படப்பிடிப்புகளுக்கு பயன்படுத்தப்படும் டம்மி குண்டுகள் பயன்படுத்தப்பட்டன. இதில், எதிர்பாராத விதமாக, டம்மி குண்டு சற்று வீரியத்துடன் வெடித்ததில் சஞ்சய் தத்துக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    கேடி -தி டெவில் படக்குழு

    மேலும், சிதறிய கண்ணாடி துண்டுகள் அவரின் முகம், முழங்கை ஆகிய இடங்களில் பட்டு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் அவருக்கு உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டு மும்பைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சஞ்சய் தத், விஜய்யின் 'லியோ' படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×