என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • இயக்குனர் பிரேம் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'கேடி - தி டெவில்'.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இயக்குனர் பிரேம் இயக்கத்தில் துருவா சர்ஜா நடித்துள்ள திரைப்படம் 'கேடி - தி டெவில்'. காளி என்ற கதாபாத்திரத்தில் துருவா நடிக்கும் இந்த படத்தை கே.வி.என். புரொடக்ஷன் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு அர்ஜுன் ஜன்யா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டைட்டில் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

    கேடி -தி டெவில்

    1970-களில் பெங்களூரில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வரும் இப்படத்தில் ரவிச்சந்திரன், சஞ்சய் தத் மற்றும் ஷில்பா ஷெட்டி குந்த்ரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு பெங்களூரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இதில், ஹீரோ துருவா சர்ஜா மற்றும் சஞ்சய் தத் இருவருக்கும் இடையிலான சண்டைக் காட்சி படமாக்கப்பட்ட போது படப்பிடிப்புகளுக்கு பயன்படுத்தப்படும் டம்மி குண்டுகள் பயன்படுத்தப்பட்டன. இதில், எதிர்பாராத விதமாக, டம்மி குண்டு சற்று வீரியத்துடன் வெடித்ததில் சஞ்சய் தத்துக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    கேடி -தி டெவில் படக்குழு

    மேலும், சிதறிய கண்ணாடி துண்டுகள் அவரின் முகம், முழங்கை ஆகிய இடங்களில் பட்டு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் அவருக்கு உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டு மும்பைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சஞ்சய் தத், விஜய்யின் 'லியோ' படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ராகவா லாரன்ஸ் நடித்திருக்கும் ருத்ரன் திரைப்படம் வருகிற 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
    • ருத்ரன் திரைப்படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

    நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் என பன்முகத்தன்மை கொண்ட ராகவா லாரன்ஸ் தற்போது நடித்திருக்கும் படம் ருத்ரன். இப்படத்தின் மூலம் பைவ் ஸ்டார் கதிரேசன் இயக்குனராக அறிமுகமாகிறார். இவர் 'பொல்லாதவன்', 'ஆடுகளம்', 'ஜிகர்தண்டா' உட்பட பல படங்களைத் தயாரித்தவர் ஆவார்.


    ருத்ரன்

    'ருத்ரன்' படத்தில் ராகவா லாரன்சுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்க, சரத்குமார் வில்லனாக நடித்துள்ளனர். பூர்ணிமா பாக்யராஜ் உட்பட பலர் நடித்துள்ளனர். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் உருவாகியுள்ள இந்த படம் வரும் 14-ம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில். தற்போது ஏப்ரல் 24 -ஆம் தேதி வரை படத்தை வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.

    'ருத்ரன்' படத்தின் இந்தி உள்ளிட்ட வடமொழிகளின் டப்பிங் உரிமையை ரெவன்சா என்ற நிறுவனம் பெற்றிருந்தது. டப்பிங் உரிமைக்காக ரூ.12.25 கோடிக்கு பட தயாரிப்பு நிறுவனத்துடன் அந்நிறுவனம் ஒப்பந்தம் செய்திருந்தது. இதற்காக முன்பணமாக ரூ.10 கோடி செலுத்தியதாக சொல்லப்படுகிறது. ரூ.10 கோடி செலுத்திய நிலையில், மேலும் ரூ.4.5 கோடி கேட்டு ஒப்பந்தத்தை தயாரிப்பு நிறுவனம் ரத்து செய்ததாக, ரெவன்சா நிறுவனத்தின் சார்பில் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ருத்ரன் திரைப்படத்தை ஏப்ரல் 24 -ஆம் தேதி வரை வெளியிட தடை விதித்து உத்தரவிட்டது.


    ருத்ரன்

    இந்நிலையில், 'ருத்ரன்' திரைப்படத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை எதிர்த்து படக்குழு சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளதாகவும் நாளை மறுதினம் (ஏப்ரல் 14) படம் வெளியாக உள்ள நிலையில், அவசர வழக்காக நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    • இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’.
    • இப்படம் வருகிற ஏப்ரல் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் வெளியான படம் பொன்னியின் செல்வன்-1. இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று சில விருதுகளையும் குவித்தது. இப்படத்தின் இரண்டாம் பாகம் வருகிற 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    பொன்னியின் செல்வன் -2

    இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இப்படம் தென்னிந்திய சினிமாவில் முதல்முறையாக 4DX தொழில்நுட்பத்தில் வெளியாகவுள்ள முதல் திரைப்படமாக 'பொன்னியின் செல்வன் -2' வெளியாகவுள்ளது.


    பொன்னியின் செல்வன் -2

    இதையடுத்து இப்படத்தில் இடம் பெற்றுள்ள 'சிவோஹம்' பாடலின் லிரிக் வீடியோ இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, இப்படத்தின் பாடல் தற்போது வெளியாகியுள்ளது. தெய்வீக பாடலாக உருவாகியுள்ள இந்த பாடல் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.



    • ஐஸ்வர்யா வீட்டு வேலைக்காரப் பெண் ஈஸ்வரி மற்றும் வெங்கடேசன் இருவரிடம் இருந்தும் 100 பவுன் தங்க நகைகள் கைப்பற்றப்பட்டன.
    • ஐஸ்வர்யா அளித்த 2-வது புகாரில் தனது வீட்டில் மொத்தமாக 200 பவுன் நகை கொள்ளை போனதாக குறிப்பிட்டு இருந்தார்.

    நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவின் வீட்டில் லாக்கரில் இருந்த நகைகளை வேலைக்காரப் பெண் ஈஸ்வரி, டிரைவர் வெங்கடேசன் என்பவருடன் சேர்ந்து சிறிது சிறிதாக திருடி தனது வீட்டில் பதுக்கி வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து ஈஸ்வரி, வெங்கடேசன் இருவரிடம் இருந்தும் 100 பவுன் தங்க நகைகள் கைப்பற்றப்பட்டன.

    ஐஸ்வர்யா புகாரில் தெரிவித்து இருந்ததைவிட கூடுதலாக நகைகள் கிடைத்ததால் அதுதொடர்பான விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தினர். இதையடுத்து வேலைக்காரப் பெண்ணான ஈஸ்வரி ரஜினி, தனுஷ் வீடுகளிலும் நகைகளை திருடி இருக்கலாமோ? என்கிற சந்தேகம் ஏற்பட்டது.

    இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் ஐஸ்வர்யாவை தொடர்பு கொண்டு வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் எவ்வளவு? என்பது பற்றிய விவரங்களை முழுமையாக கணக்கு பார்த்து தெரிவிக்குமாறு கேட்டனர். இதை தொடர்ந்து ஐஸ்வர்யா, தனது வீட்டில் இருந்த நகைகள் பற்றிய விவரங்கள் அனைத்தையும் முழுமையாக ஆராய்ந்து அதன் பின்னர் 2-வதாக புதிய புகார் ஒன்றையும் அளித்திருந்தார்.

    ஐஸ்வர்யா அளித்த 2-வது புகாரில் தனது வீட்டில் மொத்தமாக 200 பவுன் நகை கொள்ளை போனதாக குறிப்பிட்டு இருந்தார். இது தொடர்பாக புதிய வழக்கை போலீசார் பதிவு செய்துள்ளனர். ஐஸ்வர்யா 2-வது அளித்த புகாருக்கு பிறகே போலீசார் ஈஸ்வரி, வெங்கடேசன் இருவரையும் காவலில் எடுத்து விசாரித்தனர். இதில் 45 முதல் 50 பவுன் நகை வரையில் ஈஸ்வரியிடம் இருந்து கைப்பற்றப்பட்டது. டிரைவர் வெங்கடேசனிடமிருந்து ரூ.45 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

    போலீஸ் காவலில் ஈஸ்வரி, வெங்கடேசன் இருவரிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. 2 நாள் காவலுக்கு பிறகு இருவரும் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், ஈஸ்வரி, வெங்கடேசனுக்கு ஜாமின் மனு கோரி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இருவருக்கும் ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

    • சரண் இயக்கத்தில் கடந்த 2002-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘ஜெமினி’.
    • இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களை கவர்ந்தது.

    இயக்குனர் சரண் இயக்கத்தில் கடந்த 2002-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'ஜெமினி'. விக்ரம் கதாநாயகனாக நடித்திருந்த இந்த படத்தில் கிரண் கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும், கலாபவன் மணி, வினு சக்ரவர்த்தி, மனோரமா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.


    ஏ.வி.எம். நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்திற்கு பரத்வாஜ் இசையமைத்திருந்தார். இப்படத்தில் இடம் பெற்றிருந்த பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் இன்று வரை முணுமுணுக்கும் பாடல்களாக அமைந்துள்ளது. அதிலும், 'ஓ போடு' பாடல் இடம்பெறாத இசை நிகழ்ச்சிகளே கிடையாது. அந்த அளவிற்கு கவனம் ஈர்த்தது.


    இந்நிலையில், ஜெமினி திரைப்படம் வெளியாகி 21 ஆண்டுகளாகியுள்ளதை நடிகர் விக்ரம் தனது சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்து மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.


    • விஜய் ஆண்டனி இயக்கத்தில் 'பிச்சைக்காரன் -2' திரைப்படம் உருவாகி வருகிறது.
    • இப்படத்தின் தொடர் அப்டேட்களால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

    சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த படம் 'பிச்சைக்காரன்'. கடந்த 2016-ம் ஆண்டு வெளியான இப்படம் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றதோடு, விஜய் ஆண்டனியின் திரையுலக பயணத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.


    பிச்சைக்காரன் -2

    இதைத்தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இதில் விஜய் ஆண்டனி நடிப்பதோடு மட்டுமல்லாமல் இயக்கியும் வருகிறார். சமீபத்தில் இப்படத்தின் முதல் 4 நிமிடம், ஆரம்ப காட்சி ஸ்னீக் பீக் டிரைலர் மற்றும் முதல் பாடல் வெளியாகி வைரலானது.


    பிச்சைக்காரன் -2 போஸ்டர்

    இதையடுத்து இப்படத்தின் அடுத்த பாடலான 'கோவில் சிலையே' பாடல் இன்று மாலை 4 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தனர். அதன்படி, இப்படத்தின் பாடல் தற்போது வெளியாகியுள்ளது. அண்ணன் -தங்கைக்கு இடையே உள்ள பாசத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த பாடல் தற்போது சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.



    • நடிகை நமீதா முன்னணி நடிகர்கள் பலருடன் நடித்துள்ளார்.
    • இவர் தற்போது அரசியலில் தீவிரமாக ஈடுப்பட்டு வருகிறார்.

    2004-ம் ஆண்டு வெளியான நடிகர் விஜயகாந்த் நடித்த எங்கள் அண்ணா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நமீதா. விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்து ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தார். இதைத்தொடர்ந்து பட வாய்ப்புகள் குறைந்து சின்னத்திரை நிகழ்ச்சிகளில் மட்டுமே தலைக்காட்டி வந்த நமீதா, கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார்.

    அதிலிருந்து வெளியில் வந்ததும் தனது காதலர் வீரேந்திர சவுத்ரி என்பவரை 2017-ம் ஆண்டு மணந்து கொண்டார். இவருக்கு அண்மையில் கிருஷ்ணா ஆதித்யா மற்றும் கியான் ராஜ் என்ற இரட்டை குழந்தைகள் பிறந்தது. நமீதா தற்போது நடிப்பிற்கு முழுக்குப்போட்டு விட்டு முழு நேரமாக அரசியலில் ஈடுபட்டு வருகிறார். பா.ஜனதா கட்சியின் கூட்டங்களில் கலந்துகொண்டு பேசி வருகிறார்.


    நமீதா

    இந்த நிலையில் அவர் இன்று சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், "பொதுவாக நாம் ஆங்கிலப்புத்தாண்டு அன்று நண்பர்களுடன் வெளியே சென்று புத்தாண்டு கொண்டாடுவதை வழக்கமாக வைத்திருக்கிறோம். நண்பர்களுடன் சேர்ந்து பெரிய அளவில் இந்தக்கொண்டாட்டத்தைச் செய்கிறோம். ஆனால் அது நம்முடைய கலாச்சாரம் கிடையாது. பண்பாடு கிடையாது.

    நம்முடைய புத்தாண்டு என்பது வரும் ஏப்ரல் 14-ந் தேதி வரும் சித்திரை முதல் தேதிதான். ஜனவரி 1-ந் தேதி நம்முடைய புத்தாண்டு கிடையாது. அதனால் வரும் 14-ந் தேதி சித்திரை முதல் தேதியில் காலையில் எழுந்து புத்தாடை அணிந்து கோவிலுக்கு சென்று புது வருடத்தை வரவேற்போம். எல்லோருக்கும் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்" என்று பேசினார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.


    • தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் சூரி.
    • இவர் நடித்த விடுதலை திரைப்படம் சமீபத்தில் வெளியானது.

    தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவரான சூரி இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் கடந்த 2009-ஆம் ஆண்டு வெளியான 'வெண்ணிலா கபடி குழு' திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றார். தொடர்ந்து காமெடி கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் வெற்றி மாறன் இயக்கத்தில் உருவான 'விடுதலை' திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வரவேற்பை பெற்றுள்ளார்.


    'விடுதலை' திரைப்படம் கடந்த 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் ஆதரவை பெற்று வருகிறது. இந்நிலையில், அன்று நான் வாய்ப்பு தேடி மயங்கி விழுந்த இடத்தில்தான் இப்போது என்னுடைய அலுவலகம் இருக்கிறது என்று நடிகர் சூரி கூறியுள்ளார். இது குறித்து சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது, நான் வாய்ப்பு தேடி அலைந்து கொண்டிருந்த சமயத்தில் ஆர்யா நடித்த 'கலாபக் காதலன்' படத்தின் ஆடிசனுக்கு சென்று இருந்தேன். நிறைய கூட்டம் இருந்தது. சாப்பிடாமல் சென்றதால் மயக்கம் போட்டு விழுந்து விட்டேன்.

    அப்போது என்னை எதிரில் உட்கார வைத்து, எந்த ஊர் என்றெல்லாம் விசாரித்தார்கள் நான் மதுரையில் இருந்து வருகிறேன். வாய்ப்பு தேடி வந்திருக்கிறேன். என்பதெல்லாம் நான் சொன்ன பிறகு என்னை அனுப்பி வைத்தார்கள். பின்னர் சுசீந்திரன் அண்ணன் அவர்களின் வெண்ணிலா கபடிக்குழு என்ற ஒரு படத்தில் நடித்து, நடிகரான இரண்டு, மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு எனக்கென தனியாக ஒரு ஆபீஸ் தேவைப்பட்டது.


    அப்போது அந்த ஆபீஸ் வாங்க போகும்போது நான் ஷூட்டிங்கில் பிசியாக இருந்தேன் என்னுடைய மேலாளரை அனுப்பினேன். ஆனால் கடைசி நேரத்தில் என்னுடைய மனைவி அந்த இடம் சரிப்பட்டு வராது என்பது போல கூறினார். அப்போது இரவு நான் படப்பிடிப்பை முடித்துவிட்டு திரும்பும் போது என்னுடைய மேலாளரோடு அந்த இடத்தை பார்க்க சென்றேன். அந்த இடத்திற்குள் செல்ல செல்ல எனக்கு ஏதோ ஒரு மலரும் நினைவுகள் வந்து கொண்டே இருந்தன.

    கடைசியில் அந்த கட்டிடத்திற்கு முன்பு நின்று இதுதான் அந்த ஆபீஸ் என்று சொன்னபோது, கலாபக் காதலன் படம் நினைவுக்கு வந்தது. என்ன விலை சொல்கிறார்கள் என கேட்டுவிட்டு உடனே வாங்குங்கள் என சொன்னேன். எல்லாம் முடிந்த பிறகு என் மனைவியிடம் இந்த உண்மையை சொன்னேன் அவள் கண்கலங்கி விட்டாள் என்று கூறினார்.

    • இந்த உலகம் வேட்டையாடுபவர்களால் நிரம்பி உள்ளது.
    • வேட்டையாடுபவர்கள் நம் அண்டை வீட்டாராக இருக்கலாம், பள்ளி ஆசிரியராக இருக்கலாம்...

    திபெத்திய புத்தமத தலைவரான தலாய் லாமா ஒரு சிறுவனுக்கு உதட்டில் முத்தம் கொடுத்த வீடியோ குறித்து சர்வதேச ராப் இசை பாடகி கார்டி பி சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள பதிவு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், இந்த உலகம் வேட்டையாடுபவர்களால் நிரம்பி உள்ளது. அவர்கள் அப்பாவிகளை வேட்டையாடுகிறார்கள்.

    அதிகம் அறியாதவர்கள் நம் குழந்தைகள். வேட்டையாடுபவர்கள் நம் அண்டை வீட்டாராக இருக்கலாம், பள்ளி ஆசிரியராக இருக்கலாம்... பணம், அதிகாரம் மற்றும் தேவாலயங்களில் இருப்பவர்களாக கூட இருக்கலாம். உங்கள் குழந்தைகளுடன் தொடர்ந்து பேசுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

    அவரது இந்த பதிவு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரவேற்பையும் பெற்றுள்ளது.

    • ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கத்தில் ஹிப்ஹாப் ஆதி நடித்திருக்கும் திரைப்படம் ‘வீரன்’.
    • இப்படம் குறித்து ஹிப்ஹாப் ஆதி தற்போது பதிவிட்டிருப்பது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

    மரகத நாணயம் படத்தை இயக்கிய ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கத்தில் ஹிப்ஹாப் ஆதி நடித்து வரும் படம் 'வீரன்'. ஃபேண்டசி காமெடி ஆக்ஷன் எண்டர்டெயினர் படமாக உருவாகி வரும் இப்படத்தில் ஆதிரா ராஜ் கதாநாயகியாகவும், வினய் ராய் வில்லனாகவும் நடித்துள்ளனர். மேலும் முனிஷ்காந்த், காளி வெங்கட், சசி செல்வராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.


    வீரன்

    வீரன்

    சத்யஜோதி பிலிம்ஸ்' தயாரித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்சன் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் ஹிப்ஹாப் ஆதி சமூக வலைத்தளத்தில் வீரன் படத்தின் புகைபடத்துடன் பதிவிட்டிருப்பது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.


    வீரன்

    வீரன்

    அதில், டீக்கடை நாராயணன் மற்றும் பெருசுடன் இந்த கவ்பாய் கலக்கபோகிறான். இவங்க ரெண்டு பேருடைய கூட்டணி கலவரமா இருக்கும் என்று பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் முனிஷ்காந்த் மற்றும் காளி வெங்கட்டுடன் ஹிப்ஹாப் ஆதி நடனமாடுவது போன்று இடம்பெற்றுள்ளது. இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

    • ராகவா லாரன்ஸ் தற்போது 'ருத்ரன்' திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • இப்படத்தின் புதிய பாடல் வெளியாகி கவனம் பெற்று வருகிறது.

    ராகவா லாரன்ஸ் தற்போது நடித்திருக்கும் படம் ருத்ரன். இப்படத்தின் மூலம் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் இயக்குனராக அறிமுகமாகிறார். இதில் சரத்குமார், பிரியா பவானி சங்கர், பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார்.

    ருத்ரன்

    இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், 'ருத்ரன்' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த 'ஜொர்தால' பாடலின் லிரிக் வீடியோவை நடிகர் ராகவா லாரன்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த பாடலால் வைப் ஆன ரசிகர்கள் வீடியோவை இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர். மேலும், இந்த பாடல் ஒரே நாளில் 5.8 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.




    • 'தோனி எண்டர்டெயின்மெண்ட்' தயாரிக்கும் 'எல்.ஜி.எம்' படத்தில் ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
    • இப்படத்தின் போஸ்டரை கையில் வைத்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரான மகேந்திரா சிங் தோனியும், அவரது மனைவி சாக்ஷி சிங் தோனியும் இணைந்து 'தோனி எண்டர்டெயின்மெண்ட்' என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தமிழில் லெட்ஸ் கெட் மேரிட் (Lets Get Married-LGM) என்ற திரைப்படத்தை தயாரித்து வருகின்றனர்.


    காதல் கதையம்சம் கொண்ட படமாக உருவாகி வரும் இப்படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்குகிறார். இதில் ஹரிஷ் கல்யாண், லவ் டுடே படத்தின் மூலம் மிகவும் பிரபலமடைந்த இவானா, நதியா மற்றும் நகைச்சுவை நடிகர் யோகி பாபு நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


    எல்.ஜி.எம்

    எல்.ஜி.எம்

    நேற்று முன்தினம் 'எல்.ஜி.எம்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி அனைவரையும் கவர்ந்தது. இந்நிலையில் தோனி 'எல்.ஜி.எம்' படத்தின் போஸ்டரை கையில் வைத்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் பலரும் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

    ×