என் மலர்
சினிமா செய்திகள்

தலாய் லாமா வீடியோ குறித்து பிரபல ராப் பாடகியின் பதிவால் சர்ச்சை
- இந்த உலகம் வேட்டையாடுபவர்களால் நிரம்பி உள்ளது.
- வேட்டையாடுபவர்கள் நம் அண்டை வீட்டாராக இருக்கலாம், பள்ளி ஆசிரியராக இருக்கலாம்...
திபெத்திய புத்தமத தலைவரான தலாய் லாமா ஒரு சிறுவனுக்கு உதட்டில் முத்தம் கொடுத்த வீடியோ குறித்து சர்வதேச ராப் இசை பாடகி கார்டி பி சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள பதிவு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், இந்த உலகம் வேட்டையாடுபவர்களால் நிரம்பி உள்ளது. அவர்கள் அப்பாவிகளை வேட்டையாடுகிறார்கள்.
அதிகம் அறியாதவர்கள் நம் குழந்தைகள். வேட்டையாடுபவர்கள் நம் அண்டை வீட்டாராக இருக்கலாம், பள்ளி ஆசிரியராக இருக்கலாம்... பணம், அதிகாரம் மற்றும் தேவாலயங்களில் இருப்பவர்களாக கூட இருக்கலாம். உங்கள் குழந்தைகளுடன் தொடர்ந்து பேசுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
அவரது இந்த பதிவு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரவேற்பையும் பெற்றுள்ளது.
Next Story






