என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • நீலகிரி மாவட்டம் முதுமலையில் அமைந்துள்ள தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் என்ற ஆவணப்படம் எடுக்கப்பட்டது.
    • இந்த ஆவணப்படம் தாயை பிரிந்த குட்டி யானைகள் மற்றும் அவற்றை பராமரித்து வரும் பாகன் தம்பதிகளுக்கு இடையேயான உறவை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்தது.

    நீலகிரி மாவட்டம் முதுமலையில் அமைந்துள்ள தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் என்ற ஆவணப்படம் எடுக்கப்பட்டது. தாயை பிரிந்த குட்டி யானைகள் மற்றும் அவற்றை பராமரித்து வரும் பாகன் தம்பதிகளுக்கு இடையேயான உறவை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்த இந்த ஆவணப்படம் சினிமாவின் உயரிய விருதான ஆஸ்கர் விருதை பெற்றது.

    இதையடுத்து பல்வேறு தரப்பினரும் இந்த படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் படத்தில் இடம் பெற்ற பாகன் தம்பதிக்கு பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். சில தினங்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திரமோடி தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமுக்கு வந்து, பாகன் தம்பதியினரை நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்தார். அத்துடன் அந்த ஆவணப்படத்தில் இடம் பெற்ற குட்டி யானை களையும் பார்வையிட்டு கரும்பு வழங்கினார்.

    பிரதமர் வருகைக்கு பிறகு முதுமலைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது. அங்கு வரும் சுற்றுலா பயணிகள் ஆவணப்படத்தில் இடம் பெற்ற ரகு, பொம்மி யானைகளை பார்வையிட்டு யானைகளுடன் புகைப்ப டம் எடுக்கின்றனர். மேலும் பாகன் தம்பதியான பொம்மன், பெள்ளியையும் நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்து, அவர்களுடன் செல்பி புகைப்படம் எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.

    இந்த நிலையில் தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு ஆவணப்படத்தின் இயக்குனரான கார்த்திகி கோன்சால்வ்ஸ் வந்தார். அவர் முகாமில் ரகு, பொம்மி யானைகளுடனும், பாகன் தம்பதியான பொம்மன், பெள்ளியுடனும் இணைந்து புகைப்படம் எடுத்து கொண்டார். அந்த புகைப்படத்தில் குட்டி யானைகளுக்கு நடுவே கார்த்திகி கோன்சால்வ்ஸ், பாகன் தம்பதி நிற்கின்றனர். மேலும் குட்டி யானைகள் தங்களின் துதிக்கையால் ஆஸ்கர் விருதினை தூக்கி பிடித்து புகைப்படத்துக்கு போஸ் கொடுத்தபடி நிற்கின்றன.

    இந்த காட்சி அங்கு வந்திருந்த சுற்றுலா பயணி களை வெகுவாக கவர்ந்தது. தற்போது இந்த காட்சிகள், சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.


    • ’பொன்னியின் செல்வன் -2’ திரைப்படம் வருகிற 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
    • இப்படத்தின் இடம்பெற்றுள்ள சிவோஹம் பாடல் இன்று மாலை வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் வெளியான படம் பொன்னியின் செல்வன்-1. இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று சில விருதுகளையும் குவித்தது. இப்படத்தின் இரண்டாம் பாகம் வருகிற 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    பொன்னியின் செல்வன்-2

    பொன்னியின் செல்வன்-2

    இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இப்படம் தென்னிந்திய சினிமாவில் முதல்முறையாக 4DX தொழில்நுட்பத்தில் வெளியாகவுள்ள முதல் திரைப்படமாக 'பொன்னியின் செல்வன் -2' வெளியாகவுள்ளது.


    பொன்னியின் செல்வன்-2

    பொன்னியின் செல்வன்-2

    இந்நிலையில் இப்படத்தின் பாடல் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி பொன்னியின் செல்வன் -2 இடம்பெற்றுள்ள சிவோஹம் பாடலின் லிரிக் வீடியோ இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. 

    • பி.வாசு இயக்கத்தில் பிரபு, குஷ்பு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் சின்னதம்பி.
    • இப்படம் வெளியாகி 32 ஆண்டுகள் ஆனதை குஷ்பு நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

    இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் கடந்த 1991ம் ஆண்டு வெளியான படம் சின்னதம்பி. இப்படத்தின் கதாநாயகனாக பிரபு, கதாநாயகியாக குஷ்பு நடித்திருந்தனர். மேலும் ராதாரவி, மனோரமா, ராஜேஷ் குமார், உதய் பிரகாஷ், கவுண்டமணி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படம் ரசிகர்களை கவர்ந்து நல்ல வரவேற்பை பெற்றது. இளையராஜா இசையமைத்திருந்த இப்படத்தின் பாடல்களும் சூப்பர் ஹிட் அடித்தது.


    சின்னதம்பி

    சின்னதம்பி

    இந்நிலையில் சின்னதம்பி திரைப்படம் வெளியாகி 32 ஆண்டுகள் ஆனதை நடிகை குஷ்பு சமூக வலைத்தளத்தின் வாயிலாக நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். அதில், தமிழ் சினிமா வரலாற்றில் சின்னதம்பி படம் மிகப்பெரிய புயலை ஏற்படுத்தி 32 ஆண்டுகள் ஆகிவிட்டதென நம்பவே முடியவில்லை!


    குஷ்பு - பி.வாசு - பிரபு 

    குஷ்பு - பி.வாசு - பிரபு 


    என் மீது பொழிந்த அன்புக்கு என்றும் கடமைப்பட்டிருப்பேன். என் இதயம் எப்போதும் பி.வாசு சார் மற்றும் பிரபு சாருக்காக துடிக்கும். இளையராஜா சாரின் ஆன்மாவைக் கிளப்பிய இசைக்கு என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். நந்தினி, எப்போதுமே அனைவரின் இதயங்களிலும் மனங்களிலும் என்றென்றும் நிறைந்திருப்பார்! மீண்டும் ஒருமுறை நன்றி என்று குஷ்பு பதிவிட்டுள்ளார்.

    • மது அருந்தி கொண்டிருக்கும் போதே கிளாசை தூக்கி எறியுங்கள்.
    • கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்துவது முடியாத காரியம்.

    சினிமாக்களை பார்த்து தான் இளைஞர்கள் புகைப்பிடிப்பதையும், மது குடிப்பதையும் கொண்டாடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு சமூக ஆர்வலர்களால் முன்வைக்கப்படுகிறது. ஆனால் சினிமாக்களில் புகை பிடிக்கும் காட்சிகள் வந்தால் புகை பிடித்தல் புற்றுநோயை உண்டாக்கும், உயிரை கொல்லும் என்ற வாசகமும், மது அருந்துவது போன்று காட்சி வந்தால் மது அருந்துதல் உடல் நலத்திற்கு தீங்கானது என்ற வாசகமும் தவறாமல் இடம்பெற்று வருகிறது.

    இந்நிலையில் நடிகர் அமிதாப்பச்சன் தனது வலைதள பக்கத்தில் மது அருந்துவது, புகை பிடிப்பது ஆகிய பழக்கங்களை கைவிடுவது குறித்து பதிவிட்டுள்ள பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதில், மது அல்லது சிகரெட் பழக்கம் அவரவர் தனிப்பட்ட விஷயம் தான்.

    ஆனாலும் அதை விட்டு விட நினைப்பவர்களுக்கு ஒரு அறிவுரை வழங்குகிறேன். அது எளிதான விஷயம். மது அருந்தி கொண்டிருக்கும் போதே கிளாசை தூக்கி எறியுங்கள். இதற்கு நடுவில் சிகரெட்டை உதட்டில் இருந்து துப்பி அதற்கு விடை கொடுங்கள். இது தான் இரண்டு பழக்கங்களையும் கைவிடுவதற்கு சிறந்த வழி.

    கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்துவது முடியாத காரியம். இது புற்றுநோயை அகற்றுவது போல் இது செயல்படும் என குறிப்பிட்டுள்ளார்.

    • முத்தையா இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகி வரும் படம் 'காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்'.
    • இப்படத்தின் முதல் பாடலான டவுளத்தான ரவுடி பாடலின் முன்னோட்டத்தை படக்குழு வெளியிட்டுள்ளது.

    இயக்குனர் முத்தையா இயக்கத்தில் ஆர்யா நடித்து வரும் படம் 'காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்'. இதில் 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமான சித்தி இத்னானி கதாநாயகியாக நடிக்கிறார். ராமநாதபுரம் பின்னணியில் உருவாகும் இந்த திரைப்படத்திற்கு இசைமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.


    காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் 

    காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் 

    இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் மற்றும் டீசர் சமீபத்தில் வெளியாகி பலரின் கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில் 'காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்' படத்தின் முதலான டவுளத்தான ரவுடி பாடலின் முன்னோட்டத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • ராகவா லாரன்ஸ் நடித்திருக்கும் ருத்ரன் திரைப்படம் வருகிற ஏப்ரல் 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
    • ருத்ரன் திரைப்படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

    நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் என பன்முகத்தன்மை கொண்ட ராகவா லாரன்ஸ் தற்போது நடித்திருக்கும் படம் ருத்ரன். இப்படத்தின் மூலம் பைவ் ஸ்டார் கதிரேசன் இயக்குனராக அறிமுகமாகிறார். இவர் 'பொல்லாதவன்', 'ஆடுகளம்', 'ஜிகர்தண்டா' உட்பட பல படங்களைத் தயாரித்தவர் ஆவார்.


    ருத்ரன் டிரைலர்

    'ருத்ரன்' படத்தில் ராகவா லாரன்சுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்க, சரத்குமார் வில்லனாக நடித்துள்ளனர். பூர்ணிமா பாக்யராஜ் உட்பட பலர் நடித்துள்ளனர். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் உருவாகி வெளியாகவிருக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் கையில் ஆயுதத்துடன் ராகவா லாரன்ஸ் ஆக்ரோஷமாக நிற்க, அவரால் தாக்கப்பட்ட பலர் கீழே விழுந்து கிடப்பது போல, லாரன்ஸ்க்கே உரித்தான ஸ்டைலில் வெளியாக அது முதல் எதிர்பார்ப்பு நிலவியது. அதற்கேற்ப சில தினங்கள் முன் இதன் டிரைலரும் வெளியாகி வரவேற்பை பெற்றது.


    ருத்ரன்

    படம் வரும் 14-ம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில். தற்போது ஏப்ரல் 24 ஆம் தேதி வரை படத்தை வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. படத்தின் இந்தி உள்ளிட்ட வடமொழிகளின் டப்பிங் உரிமையை ரெவன்சா என்ற நிறுவனம் பெற்றிருந்தது. டப்பிங் உரிமைக்காக ரூ.12.25 கோடிக்கு பட தயாரிப்பு நிறுவனத்துடன் அந்நிறுவனம் ஒப்பந்தம் செய்திருந்தது. .

    இதற்காக முன்பணமாக ரூ.10 கோடி செலுத்தியதாக சொல்லப்படுகிறது. ரூ.10 கோடி செலுத்திய நிலையில், மேலும் ரூ.4.5 கோடி கேட்டு ஒப்பந்தத்தை தயாரிப்பு நிறுவனம் ரத்து செய்ததாக, ரெவன்சா நிறுவனத்தின் சார்பில் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ருத்ரன் திரைப்படத்தை ஏப்ரல் 24 ஆம் தேதி வரை வெளியிட தடை விதித்து உத்தரவிட்டது.

    • அருள்நிதி நடிப்பில் உருவாகியிருக்கும் 'திருவின் குரல்' திரைப்படம் வருகிற 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
    • இப்படத்திற்காக அருள்நிதி பிரத்யேகமாக மாலை மலருக்கு பேட்டியளித்தார்.

    இயக்குனர் ஹரிஷ் பிரபு இயக்கத்தில் அருள்நிதி நடித்துள்ள 'திருவின் குரல்' திரைப்படம் வருகிற 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தில் ஆத்மிகா கதாநாயகியாக நடிக்க பாரதிராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.


    மாலை மலருக்காக அருள்நிதி அளித்த பேட்டி

    மாலை மலருக்காக அருள்நிதி அளித்த பேட்டி

    இந்நிலையில் திருவின் குரல் படத்திற்காக நடிகர் அருள்நிதி மாலைமலர் நேயர்களுக்காக பிரத்யேகமாக பேட்டியளித்தார். அப்போது பாரதிராஜா அவர்களுக்கு உங்களின் நடிப்பு மிகவும் பிடிக்கும் என்றும் நீங்கள் அவருக்கு மிகவும் பிடித்த நபர் என்று தெரிவித்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

    மாலை மலருக்காக அருள்நிதி அளித்த பேட்டி
    மாலை மலருக்காக அருள்நிதி அளித்த பேட்டி


    அதற்கு அருள்நிதி அளித்த பதில், பாரதிராஜா சார் என்கிட்ட சொன்னது, நீ நல்ல நடிகரையும் மீறி நல்ல மனிதர் அப்படினு சொன்னாரு. உங்ககிட்ட இருந்து இந்த மாதிரி வார்த்தை வருவது பெரிய விஷயம் சார். இந்த மாதிரி பெயர் கிடைக்கிறது ரொம்ப கஷ்டம். எனக்கு பெருமையா இருக்கு அதேசமயம் அதை தக்க வச்சிக்கனும்னு நான் நினைக்கிறேன். கூடுதல் பொறுப்பு வந்திருக்கு அதை காப்பாத்துவேன் சார் அப்படினு அவரிடம் கூறினேன் என்றார். 



    • தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சரத்குமார்.
    • இவர் பொதுமக்களுக்கு இலவசமாக 6 ஆயிரம் புத்தகங்களை வழங்கி வருகிறார்.

    தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான சரத்குமார் தனது இல்லத்தில் வைத்திருந்த 6 ஆயிரம் புத்தகங்களை பொது மக்களுக்கு அன்பளிப்பாக கொடுக்க முடிவு செய்துள்ளார். தினமும் வீட்டின் முன்னால் புத்தங்களை மேஜையில் காட்சிக்கு வைத்துள்ளார். அவற்றை பொதுமக்கள் பார்த்து தங்களுக்கு தேவையான புத்தகங்களை எடுத்துச் செல்கிறார்கள்.


    சரத்குமார்

    சரத்குமார்

    இதுகுறித்து சரத்குமார் கூறும்போது, "நான் படித்த, எனக்கு அன்பளிப்பாக வந்த மற்றும் என் தந்தையார் எனக்காக விட்டு சென்ற சுமார் 6 ஆயிரம் புத்தகங்களை தினமும் எடுத்து படிப்பது நடைமுறையில் சாத்தியமில்லை. இந்த புத்தகங்களை பொக்கிஷமாக வைத்திருப்பதை விட, அதை பிறருடன் பகிர்ந்து கொள்வதுதான் அதிகமான மகிழ்ச்சி தரும் என்று எண்ணினேன்.


    புத்தகம் வழங்கும் சரத்குமார்

    புத்தகம் வழங்கும் சரத்குமார்

    என்னிடம் உள்ள இந்த புத்தகங்களை நூலகத்தில் கொடுத்து விடலாம் என்று சொன்னார்கள், சிலர் விற்று விடலாம் என்று கூறினார்கள். இந்த புத்தகங்களில் இருந்து நான் கற்றுக்கொண்ட விஷயங்களை பிறரும் படித்து பயன்பெற வேண்டும் என்கிற அடிப்படையில் இலவசமாகவே வீட்டின் வெளியில் இந்த புத்தங்களை வைத்திருக்கிறேன். தற்போது தொழில்நுட்ப வளர்ச்சியால் புத்தக வாசிப்பு குறைந்துள்ளது. புத்தக வாசிப்பை மேலும் முன்னெடுத்து செல்லவும் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளேன்'' என்றார். இவரின் இந்த முயற்சியை பலரும் பாராட்டி வருகின்றனர்.

    • உர்பி ஜாவேத் வித்தியாசமான கவர்ச்சி ஆடைகள் அணிந்து தன்னை தனித்துவமாக காட்டி வருகிறார்.
    • இவர் அணியும் கவர்ச்சி உடைகளுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வந்தாலும் அவற்றை பொருட்படுத்தாமல் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

    இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மிகவும் பிரபலமடைந்தவர் நடிகை உர்பி ஜாவேத். உர்பி ஜாவேத் வித்தியாசமான கவர்ச்சி ஆடைகள் அணிந்து தன்னை தனித்துவமாக காட்டி வருகிறார். குறிப்பாக கயிறுகள், கம்பிகள், கற்கள், உடைந்த கண்ணாடிகள், நூல் போன்றவற்றை ஆடைபோல் மாற்றி உடலை மறைத்து எடுத்து வெளியிட்ட புகைப்படங்கள் பெரிய அளவில் வைரல் ஆகின.


    உர்பி ஜாவேத் அணியும் கவர்ச்சி உடைகளுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வந்தாலும் அவற்றை பொருட்படுத்தாமல் தொடர்ந்து இது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தன் தந்தையை தன்னை ஆபாச நடிகை என்று அழைத்ததாக உர்பி ஜாவேத் வருத்தத்துடன் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது, எனக்கு 15 வயது இருக்கும் போது என்னுடைய புகைப்படத்தை யாரோ ஆபாச வலைதளத்தில் வெளியிட்டு விட்டனர். அதன்பிறகு என்னை ஆபாச நடிகை என்று கூறி என் தந்தை சித்திரவதை செய்தார். அதன் பிறகு தற்கொலை செய்யலாம் என முடிவெடுத்தேன். அந்த தருணத்தில் என் வாழ்க்கைக்கு இரண்டாவது வாய்ப்பு கொடுக்க முடிவு செய்தேன்.


    இதனால், 17 வயதில் வீட்டை விட்டு வெளியேறி டெல்லிக்கு வந்துவிட்டேன். கொஞ்சக் காலம் கால்சென்டரில் பணிபுரிந்தேன். பிறகு சீரியல்களில் நடிக்க வாய்ப்பு தேடி அலைந்தேன். அதன் பின் சில சீரியல்களில் நடித்தேன். அந்தச் சமயத்தில் எனக்கு பிக் பாஸ் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அதிலிருந்து ஒரே வாரத்தில் எலிமினேட் செய்யப்பட்டேன். இருந்தாலும், தற்போது எனக்குக் கிடைத்திருக்கும் இந்தப் புகழுக்குக் காரணம் அந்த ஒரு வார பிக் பாஸ் வாய்ப்புதான்" என்று கூறினார்.

    • கதிரேசன்-மீனாட்சி தம்பதியர் நடிகர் தனுஷ் தங்களுடைய மகன் என்று வழக்கு தொடர்ந்திருந்தனர்.
    • இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக கதிரேசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த கதிரேசன்-மீனாட்சி தம்பதியர், நடிகர் தனுஷ் தங்களுடைய மகன் என்றும், தங்களுக்கு வயதாகிவிட்டதால் பராமரிப்பு தொகை வழங்க அவருக்கு உத்தரவிட வேண்டும் என்றும் மேலூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். ஆனால் அவர்கள் கூறும் தகவல் உண்மையானது இல்லை, எனவே இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று நடிகர் தனுஷ், மதுரை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

    இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக கதிரேசன் (70) மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கதிரேசன் உடல்நிலை மோசமாக உள்ளதாகவும், வழக்கின் விசாரணைக்காக அவரது மரபணுவை (டி.என்.ஏ) சேகரித்து பாதுகாக்க வேண்டும் எனக் கூறி அவரது மனைவி மீனாட்சி மற்றும் வழக்கறிஞர் டைட்டஸ் ஆகியோர் மருத்துவமனை டீன் ரத்தினவேலிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.


    கதிரேசன் -மீனாட்சி

    இதைத்தொடர்ந்து வழக்கறிஞர் டைட்டஸ் கூறியதாவது, நடிகர் தனுஷின் அப்பா கதிரேசனின் உடல்நிலை மோசமாக உள்ளது. இது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. கதிரேசன் உயிருக்கு ஆபத்து ஏற்பட கூடும் என்பதால், அவரது டி.என்.ஏ. வை எடுத்து பராமரிக்க வேண்டும் என மனு அளித்து உள்ளோம். ஏற்கனவே வழக்கு விசாரணையின் போது நடிகர் தனுஷ் அவரது அங்க அடையாளத்தை லேசர் மூலம் அழித்திருந்தார்.

    பள்ளிக்கூட சான்றிதழ், பிறப்பு சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை தவறாக தாக்கல் செய்துள்ளார். எனவே, தனுஷின் பெற்றோர் கதிரேசன் - மீனாட்சி ஆகியோர் தான் என்பதை ஆவணங்கள் உறுதி செய்கின்றது. எங்கள் மீது 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு வழக்குப் பதிவு செய்வோம் என்று சொன்ன தனுஷ் இதுவரை வழக்குப் பதிவு செய்யவில்லை. தனுஷ் உண்மையை மறைக்க பார்க்கிறார். இது ஒரு கதிரேசனின் பிரச்சனை அல்ல. இப்படி எத்தனையோ பெற்றோர் பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு உள்ளனர்" என கூறினார்.

    • இயக்குனர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்டவர் ராகவா லாரன்ஸ்.
    • இவர் தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

    ராகவா லாரன்ஸ் தற்போது நடித்திருக்கும் படம் ருத்ரன். இப்படத்தின் மூலம் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் இயக்குனராக அறிமுகமாகிறார். இதில் சரத்குமார், பிரியா பவானி சங்கர், பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார்.


    ருத்ரன் இசை வெளியீட்டு விழா

    இப்படம் வருகிற 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், 'ருத்ரன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் ராகவா லாரன்ஸ் 150 குழந்தைகளை தத்தெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "150 குழந்தைகளை தத்தெடுத்து அவர்களுக்கு கல்வியை புதிய முயற்சியாக வழங்குவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். உங்கள் அனைவரின் ஆசியும் எனக்கு வேண்டும்" என்று புகைப்படத்தை பகிர்ந்து பதிவிட்டுள்ளார்.

    இந்த பதிவிற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.


    • ’பொன்னியின் செல்வன் -2’ திரைப்படம் வருகிற 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
    • இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.

    மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் வெளியான படம் பொன்னியின் செல்வன்-1. இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று சில விருதுகளையும் குவித்தது. இப்படத்தின் இரண்டாம் பாகம் வருகிற 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    பொன்னியின் செல்வன் -2

    இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. மேலும், இப்படத்தின் புரொமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுப்பட்டு வருகிறது. இந்நிலையில், தென்னிந்திய சினிமாவில் முதல்முறையாக 4DX தொழில்நுட்பத்தில் வெளியாகவுள்ள முதல் திரைப்படம் 'பொன்னியின் செல்வன் -2' என்று படக்குழு போஸ்டர் ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளது.


    பொன்னியின் செல்வன் -2 போஸ்டர்

    இதற்கு முன்பு 'பொன்னியின் செல்வன்' முதல் பாகம் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.


    ×