என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • ’பொன்னியின் செல்வன் -2’ திரைப்படம் வருகிற 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
    • இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.

    மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் வெளியான படம் பொன்னியின் செல்வன்-1. இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று சில விருதுகளையும் குவித்தது. இப்படத்தின் இரண்டாம் பாகம் வருகிற 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    பொன்னியின் செல்வன் -2

    இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. மேலும், இப்படத்தின் புரொமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுப்பட்டு வருகிறது. இந்நிலையில், தென்னிந்திய சினிமாவில் முதல்முறையாக 4DX தொழில்நுட்பத்தில் வெளியாகவுள்ள முதல் திரைப்படம் 'பொன்னியின் செல்வன் -2' என்று படக்குழு போஸ்டர் ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளது.


    பொன்னியின் செல்வன் -2 போஸ்டர்

    இதற்கு முன்பு 'பொன்னியின் செல்வன்' முதல் பாகம் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.


    • சூர்யா நடிக்கும் 42-வது படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார்.
    • இப்படத்தின் டைட்டில் வருகிற 16-ஆம் தேதி காலை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

    'சிறுத்தை', 'வீரம்', 'விஸ்வாசம்', 'அண்ணாத்த' உள்ளிட்ட பல படங்களை இயக்கிய சிவா இயக்கும் படத்தில் சூர்யா தற்போது நடித்து வருகிறார். சூர்யா 42 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர்.


    சூர்யா -42

    இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பத்தானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ள இப்படம் 3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


    சூர்யா -42 போஸ்டர்

    இதையடுத்து இப்படத்தின் டைட்டில் மற்றும் ரிலீஸ் தேதி வருகிற 16-ஆம் தேதி காலை 9.05 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில், இதனை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.


    • நானி நடிப்பில் கடந்த 30-ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘தசரா’.
    • இப்படம் ரசிகர்களின் ஆதரவை பெற்று வசூலை குவித்து வருகிறது.

    தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான நானி நடிப்பில் கடந்த 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'தசரா'. இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கியிருந்த இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் பிரகாஷ் ராஜ், சமுத்திரக்கனி, சாய் குமார், பூர்ணா மற்றும் ஜரீனா வஹாப் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    தசரா போஸ்டர்

    பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இந்த திரைப்படம் தொடர்ந்து வசூலில் சாதனை படைத்து வருகிறது. அதன்படி, 'தசரா' திரைப்படம் வெளிநாடு பாக்ஸ் ஆபிசில் இரண்டு மில்லியன்களையும் இந்தியாவில் ரூ.110 கோடியையும் வசூல் செய்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் உற்சாகமடைந்த ரசிகர்கள் போஸ்டரை வைரலாக்கி வருகின்றனர்.


    • இயக்குனர் ராஜமவுலி அடுத்ததாக மகேஷ் பாபு நடிக்கும் எஸ்எஸ்எம்பி29 படத்தை இயக்கவுள்ளார்.
    • இந்த படம் குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குனர் ராஜமவுலி. இவர் இயக்கத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்று படத்தின் பாடலுக்காக ஆஸ்கர் விருதையும் வென்றது. இதைத்தொடர்ந்து ராஜமவுலி அடுத்ததாக நடிகர் மகேஷ் பாபு நடிக்கும் எஸ்எஸ்எம்பி29 படத்தை இயக்கவுள்ளார்.


    மகேஷ் பாபு - ராஜமவுலி

    மகேஷ் பாபு - ராஜமவுலி

    மகேஷ் பாபு தற்போது எஸ்.எஸ்.எம்.பி. 28 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததும் ராஜமவுலி படத்தின் படப்பிடிப்பு துவங்கப்படவுள்ளது. மேலும் இந்த படம் ஆக்ஷன், அட்வென்ச்சர் ஜானரில் இருக்கும் என்றும் இந்த படத்தின் கதை உலகம் முழுவதும் வெவ்வேறு இடங்களில் நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது என்றும் ராஜமவுலி தெரிவித்திருந்தார்.


    ராஜமவுலி - மகேஷ் பாபு

    ராஜமவுலி - மகேஷ் பாபு

    இந்நிலையில், இந்த படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் மூன்று பாகங்களாக உருவாக்க ராஜமவுலி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    • நடிகை விசாகா சிங் நடிப்பதோடு மட்டுமல்லாமல் பேஷன் டிசைனிங்கிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.
    • இவர் உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    நடிகை விசாகா சிங், சந்தானம் நடித்த கண்ணா லட்டு தின்ன ஆசையா, வாலிப ராஜா போன்ற திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடம் அறிமுகமானவர். இவர் நடிப்பதோடு மட்டுமல்லாமல் பேஷன் டிசைனிங் மற்றும் சுய முன்னேற்றம் குறித்தும், மனித வளம் மேம்பாடு குறித்தும் நிறுவனங்களில் கூட்டங்களில் கலந்து கொண்டு பேசி வருகிறார்.


    விசாகா சிங்

    இந்த நிலையில் விசாகா சிங் உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதளத்தில், "கால மாற்றத்தால் அடிக்கடி நடக்கும் வினோதமான சம்பவங்கள் விபத்து மற்றும் உடல்நல பிரச்சனைகளுக்கு பிறகு, மகிழ்ச்சியான ஆரோக்கியமான கோடையை நோக்கி திரும்புகிறது.


    மருத்துவமனையில் விசாகா சிங்

    ஏப்ரல் எப்போதுமே எனக்கு உண்மையான புத்தாண்டாகவே இருந்திருக்கிறது. கோடை நாட்கள் நோக்கி முழு ஆர்வத்துடன் முன்னேறி வருகிறேன்" என தெரிவித்துள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். மேலும், விசாகா சிங் பூரண நலம்பெற இணையத்தில் பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.


    • தனுஷ் நடிக்கும் புதிய திரைப்படத்தை இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
    • இந்த கூட்டணியின் படப்பிடிப்பு குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    2018-ம் ஆண்டு வெளியான 'பரியேறும் பெருமாள்' திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். அதன்பின்னர் தனுஷ் நடிப்பில் வெளியான 'கர்ணன்' திரைப்படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை பிடித்தார். இவர் இயக்கத்தில் உருவாகி வரும் 'மாமன்னன்' படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.


    தனுஷ் - மாரி செல்வராஜ்

    தனுஷ் - மாரி செல்வராஜ்

    மாரி செல்வராஜ் தற்போது தனுஷ் நடிக்கும் புதிய திரைப்படத்தை இயக்கவுள்ளார். இந்த திரைப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ் உடன் இணைந்து தனுசின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.


    தனுஷ் - மாரி செல்வராஜ்

    தனுஷ் - மாரி செல்வராஜ்

    இந்நிலையில் தனுஷ்-மாரி செல்வராஜ் கூட்டணி படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் இணையத்தை ஆக்கிரமித்துள்ளது. அதன்படி இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் நடைபெறும் எனவும் இப்படம் தனுஷின் முந்தைய படங்களை விட அதிக பட்ஜெட்டில் உருவாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனிடையில் மாரி செல்வராஜ்-துருவ் விக்ரம் கூட்டணியின் படத்தை முடித்த பிறகு தனுஷ் படத்தை மாரி தொடங்குவார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

    தனுஷ் தற்போது இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் 'கேப்டன் மில்லர்' படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

    • விஜய் ஆண்டனி ‘பிச்சைக்காரன் -2’ திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
    • 'பிச்சைக்காரன் -2' திரைப்படம் வருகிற ஏப்ரல் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த படம் 'பிச்சைக்காரன்'. கடந்த 2016-ம் ஆண்டு வெளியான இப்படம் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றதோடு, விஜய் ஆண்டனியின் திரையுலக பயணத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.


    பிச்சைக்காரன் -2

    இதைத்தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இதில் விஜய் ஆண்டனி நடிப்பதோடு மட்டுமல்லாமல் இயக்கியும் வருகிறார். சமீபத்தில் இப்படத்தின் முதல் 4 நிமிடம், ஆரம்ப காட்சி ஸ்னீக் பீக் டிரைலர் மற்றும் முதல் பாடல் வெளியாகி வைரலானது.


    பிச்சைக்காரன் 2 போஸ்டர்

    இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'பிச்சைக்காரன் -2' படத்தின் அடுத்த பாடலான 'கோவில் சிலையை' பாடல் நாளை மாலை 4 மணிக்கு வெளியாகும் என விஜய் ஆண்டனி சமூக வலைதளத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளார்.


    • முத்தையா இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகி வரும் படம் 'காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்'.
    • இப்படத்தின் முதல் பாடல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    இயக்குனர் முத்தையா இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் திரைப்படம் 'காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்'. இதில் 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமான சித்தி இத்னானி கதாநாயகியாக நடிக்கிறார். ராமநாதபுரம் பின்னணியில் உருவாகும் இந்த திரைப்படத்திற்கு இசைமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.


    காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்

    காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்

    இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் மற்றும் டீசர் சமீபத்தில் வெளியாகி பலரின் கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில் 'காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்' படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தின் முதல் பாடலான டவுளத்தான ரவுடி பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    • பாலிவுட்டில் பிரபல நடிகராக வலம் வருபவர் சல்மான்கான்.
    • சமீபகாலமாக இவருக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் வருகிறது.

    பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கானின் தனிப்பட்ட உதவியாளரான பிரசாந்த் குஞ்சல்கருக்கு சமீபத்தில் மிரட்டல் இ-மெயில் ஒன்று வந்தது. ரவுடிகளான லாரன்ஸ் பிஷ்னோய் மற்றும் அவரது கூட்டாளி கோல்டி பிரார் ஆகியோர் நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்து இ-மெயில் அனுப்பி இருந்தனர். இதுதொடர்பாக பிரசாந்த் குஞ்சல்கர் பந்த்ரா போலீசில் புகார் செய்ததையடுத்து போலீசார் ரவுடியான பிஷ்னோய் மற்றும் அவரது கூட்டாளி கோல்டி பிரார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர். 

    சல்மான்கான்

    இந்நிலையில், நடிகர் சல்மான்கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல் வந்துள்ளது. அதாவது, நேற்று மும்பை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு பாலிவுட் நடிகர் சல்மான்கானை கொன்று விடுவதாக மிரட்டல் அழைப்பு ஒன்று வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுப்பட்டு வந்தனர். இந்த விசாரணையில் மிரட்டல் விடுத்த நபர் 16 வயது சிறுவன் என்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து சிறுவனை கைது செய்த போலீசார் சட்ட நடவடிக்கைகளுக்காக அவர் மும்பையில் உள்ள ஆசாத் மைதான் காவல்துறையிடம் ஒப்படைக்கப்படுவார் என்று தெரிவித்துள்ளனர்.

    • மந்திர மூர்த்தி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளியான ‘அயோத்தி’ படத்தை ரஜினி பாராட்டியிருந்தார்.
    • ரஜினியின் பாராட்டிற்கு நன்றி தெரிவித்து இயகுனர் மந்திர மூர்த்தி பதிவிட்டுள்ளார்.

    அறிமுக இயக்குனர் மந்திர மூர்த்தி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் கடந்த மார்ச் 3ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'அயோத்தி'. இந்த படத்தில் 'குக் வித் கோமாளி' புகழ், ப்ரீத்தி அஸ்ராணி, யாஷ்பால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மனிதத்தையும் மத நல்லிணக்கத்தையும் பற்றி பேசிய இப்படம் பலரின் பாராட்டுக்களை பெற்றது.


    அயோத்தி
    அயோத்தி

    அயோத்தி படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் படக்குழுவினரை பாராட்டி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், அயோத்தி… நண்பர் சசிகுமாருக்கு ரொம்ப நாட்களுக்குப் பிறகு அருமையான கருத்துள்ள ஒரு வெற்றிப் படம். முதல் படத்திலேயே தான் ஒரு தலை சிறந்த இயக்குநர் என்று நிரூபித்திருக்கிறார் ஆர். மந்திரமூர்த்தி. தயாரிப்பாளருக்கு என்னுடைய பாராட்டுகளும், வாழ்த்துகளும்! என்று பாராட்டியிருந்தார்.


    அயோத்தி
    அயோத்தி

    இந்நிலையில் ரஜினியின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்து இயக்குனர் மந்திர மூர்த்தி பதிவிட்டுள்ளார். அவர் தெரிவித்திருப்பது, உலகில் உள்ள அத்தனை விருதுகளும் ஒரு நொடியில் கிடைத்த மகிழ்ச்சியையும் ,உத்வேகத்தையும் தருகிறது தங்களின் பாராட்டுகள். நன்றி சார் என்று குறிப்பிட்டுள்ளார்.

    • இயக்குனர் மந்திர மூர்த்தி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளியான படம் ‘அயோத்தி’.
    • இப்படத்தை நடிகர் ரஜினிகாந்த் பாராட்டி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார்.

    அறிமுக இயக்குனர் மந்திர மூர்த்தி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் கடந்த மார்ச் 3ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'அயோத்தி'. இந்த படத்தில் 'குக் வித் கோமாளி' புகழ், ப்ரீத்தி அஸ்ராணி, யாஷ்பால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மனிதத்தையும் மத நல்லிணக்கத்தையும் பற்றி பேசிய இப்படம் பலரின் பாராட்டுக்களை பெற்றது.

    அயோத்தி

    இதையடுத்து அயோத்தி படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் படக்குழுவினரை பாராட்டி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், அயோத்தி… நண்பர் சசிகுமாருக்கு ரொம்ப நாட்களுக்குப் பிறகு அருமையான கருத்துள்ள ஒரு வெற்றிப் படம். முதல் படத்திலேயே தான் ஒரு தலை சிறந்த இயக்குநர் என்று நிரூபித்திருக்கிறார் ஆர். மந்திரமூர்த்தி. தயாரிப்பாளருக்கு என்னுடைய பாராட்டுகளும், வாழ்த்துகளும்! என்று பாராட்டியுள்ளார்.

    சசிகுமார் -ரஜினி

    இதற்கு சசிகுமார், "நடிகர் எனக் குறிப்பிடாமல், நண்பர் என்று சொன்னதிலேயே மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன் சார். எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல், மிக எளிய படைப்பாக வந்திருக்கும் அயோத்தி படத்தை பார்த்துப் பாராட்டியது நல்ல படைப்புகளுக்கான பெரிய நம்பிக்கை கொடுக்கிறது மிக்க நன்றி சார்" என்று நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.


    • வெற்றிமாறன் இயக்கத்தில் 'விடுதலை' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.
    • இப்படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

    வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, சேத்தன், கவுதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி கடந்த மார்ச் 31-ந்தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'விடுதலை-1'. இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

     

    விடுதலை மேக்கிங் வீடியோ

    விடுதலை மேக்கிங் வீடியோ


    எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படத்திற்கு ரஜினி உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.


    விடுதலை மேக்கிங் வீடியோ

    விடுதலை மேக்கிங் வீடியோ

    இந்நிலையில், 'விடுதலை' படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்த வீடியோவை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

    ×