என் மலர்
சினிமா செய்திகள்
- இயக்குனர் மந்திர மூர்த்தி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளியான படம் ‘அயோத்தி’.
- இப்படத்தை நடிகர் ரஜினிகாந்த் பாராட்டி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார்.
அறிமுக இயக்குனர் மந்திர மூர்த்தி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் கடந்த மார்ச் 3ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'அயோத்தி'. இந்த படத்தில் 'குக் வித் கோமாளி' புகழ், ப்ரீத்தி அஸ்ராணி, யாஷ்பால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மனிதத்தையும் மத நல்லிணக்கத்தையும் பற்றி பேசிய இப்படம் பலரின் பாராட்டுக்களை பெற்றது.

அயோத்தி
இதையடுத்து அயோத்தி படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் படக்குழுவினரை பாராட்டி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், அயோத்தி… நண்பர் சசிகுமாருக்கு ரொம்ப நாட்களுக்குப் பிறகு அருமையான கருத்துள்ள ஒரு வெற்றிப் படம். முதல் படத்திலேயே தான் ஒரு தலை சிறந்த இயக்குநர் என்று நிரூபித்திருக்கிறார் ஆர். மந்திரமூர்த்தி. தயாரிப்பாளருக்கு என்னுடைய பாராட்டுகளும், வாழ்த்துகளும்! என்று பாராட்டியுள்ளார்.

சசிகுமார் -ரஜினி
இதற்கு சசிகுமார், "நடிகர் எனக் குறிப்பிடாமல், நண்பர் என்று சொன்னதிலேயே மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன் சார். எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல், மிக எளிய படைப்பாக வந்திருக்கும் அயோத்தி படத்தை பார்த்துப் பாராட்டியது நல்ல படைப்புகளுக்கான பெரிய நம்பிக்கை கொடுக்கிறது மிக்க நன்றி சார்" என்று நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
நடிகர் எனக் குறிப்பிடாமல், நண்பர் என்று சொன்னதிலேயே மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன் சார். எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல், மிக எளிய படைப்பாக வந்திருக்கும் #அயோத்தி படத்தை பார்த்துப் பாராட்டியது நல்ல படைப்புகளுக்கான பெரிய நம்பிக்கை கொடுக்கிறது மிக்க நன்றி சார் ?
— M.Sasikumar (@SasikumarDir) April 11, 2023
#SuperStar #PettaMalik https://t.co/GKSlupIKLQ
- வெற்றிமாறன் இயக்கத்தில் 'விடுதலை' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.
- இப்படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, சேத்தன், கவுதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி கடந்த மார்ச் 31-ந்தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'விடுதலை-1'. இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

விடுதலை மேக்கிங் வீடியோ
எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படத்திற்கு ரஜினி உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

விடுதலை மேக்கிங் வீடியோ
இந்நிலையில், 'விடுதலை' படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்த வீடியோவை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
- இயக்குனர் மந்திர மூர்த்தி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளியான படம் ‘அயோத்தி’.
- இப்படத்தை நடிகர் ரஜினிகாந்த் பாராட்டி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அறிமுக இயக்குனர் மந்திர மூர்த்தி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் கடந்த மார்ச் 3ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'அயோத்தி'. இந்த படத்தில் 'குக் வித் கோமாளி' புகழ், ப்ரீத்தி அஸ்ராணி, யாஷ்பால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மனிதத்தையும் மத நல்லிணக்கத்தையும் பற்றி பேசிய இப்படம் பலரின் பாராட்டுக்களை பெற்றது.

அயோத்தி
இந்நிலையில் அயோத்தி படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் படக்குழுவினரை பாராட்டி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், அயோத்தி… நண்பர் சசிகுமாருக்கு ரொம்ப நாட்களுக்குப் பிறகு அருமையான கருத்துள்ள ஒரு வெற்றிப் படம். முதல் படத்திலேயே தான் ஒரு தலை சிறந்த இயக்குநர் என்று நிரூபித்திருக்கிறார் ஆர். மந்திரமூர்த்தி. தயாரிப்பாளருக்கு என்னுடைய பாராட்டுகளும், வாழ்த்துகளும்! என்று பாராட்டியுள்ளார்.
அயோத்தி…
— Rajinikanth (@rajinikanth) April 11, 2023
நண்பர் சசிகுமாருக்கு ரொம்ப நாட்களுக்குப் பிறகு அருமையான கருத்துள்ள ஒரு வெற்றிப் படம்.
முதல் படத்திலேயே தான் ஒரு தலை சிறந்த இயக்குநர் என்று நிரூபித்திருக்கிறார் ஆர். மந்திரமூர்த்தி.
தயாரிப்பாளருக்கு என்னுடைய பாராட்டுகளும், வாழ்த்துகளும்!#Ayothi
- தரணி ராசேந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'யாத்திசை'.
- இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.
தரணி ராசேந்திரன் இயக்கத்தில் வீனஸ் இன்ஃபோடைன்மென்ட் கே.ஜெ.கணேஷ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'யாத்திசை'. இதில் சக்தி மித்ரன், செயோன், ராஜலட்சுமி, குரு சோமசுந்தரம், சந்திரகுமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏழாம் நூற்றாண்டில் பாண்டிய மன்னனுக்கெதிராக போராடிய ஒரு சிறு தொல்குடியை பற்றிய கதையாக 'யாத்திசை' உருவாகியுள்ளது. இப்படம் ஏப்ரல் 21ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. 'யாத்திசை' படத்தின் தமிழ்நாடு திரையரங்க வெளியீட்டு உரிமையை சக்திவேலனின் சக்தி ஃபிலிம் பேக்டரியும், வெளிநாட்டு வெளியீட்டு உரிமையை ஐங்கரன் இன்டர்நேஷனலும் பெற்றுள்ளனர்.

யாத்திசை படக்குழு
இந்நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில் திரையுலகினர், படக்குழுவினர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இதில் இயக்குனர் தரணி ராசேந்திரன் பேசியதாவது, தயாரிப்பாளரிடம் கதை சொன்ன போது உன்னிடம் உள்ள தவிப்பு பிடித்துள்ளது. உன் டீம் பற்றி சொல் என்றார். இந்தப்படத்தின் உயிர் என்னுடைய டீம் தான். எடிட்டர் மகேந்திரன், இசையமைப்பாளர் சக்ரவர்த்தி இருவரும் இல்லையென்றால் நான் இல்லை. எங்களை நம்பி ஒவ்வொருவராக உள்ளே வந்தார்கள். ஒரு ஷெட்யூல் முடித்து காட்ட சொன்னார்கள், அதன் பிறகே இந்தப்படம் உருவாவது உறுதியானது.

யாத்திசை படக்குழு
1300 வருடங்களுக்கு முந்தைய கதை என்பதால், அந்த காலகட்டம் அந்த மொழி வழக்கு அதையெல்லாம் உயிரோடு கொண்டு வருவது அத்தனை சவாலாக இருந்தது. அக்காலத்திய மொழியை எடுத்தால் இப்போது யாருக்கும் புரியாது என எல்லோரும் பயமுறுத்தினாலும் இதில் ஒரு கலை இருக்கிறது. சினிமா என்பது கலை, மக்கள் கொண்டாடுவார்கள் என்று தயாரிப்பாளர் தான் உறுதியாக நின்றார். அவருக்கு நன்றி.

இப்படத்திற்கு முழு உயிர் தந்தது என் குழு தான். 25 உதவியாளர்கள் இப்படத்தில் வேலை செய்துள்ளார்கள். இந்தப் படத்தின் உயிர் எல்லோரையும் இழுத்து உடன் இணைந்து பயணிக்கிறது. இந்தப் படம் பொன்னியின் செல்வனுக்கு போட்டியல்ல ஆனால் யாத்திசை மிகப்பெரிய தாக்கத்தை உண்டு பண்ணும். இந்திய சினிமாவில் மிகப்பெரிய படமாக இருக்கும் எனும் நம்பிக்கை உள்ளது. அனைவருக்கும் நன்றி. இவ்வாறு அவர் கூறினார்.
- நடிகர் சல்மான் கான் தற்போது கிஸி கி பாய், கிஸி கி ஜான் படத்தில் நடித்துள்ளார்.
- இப்படத்தின் நிகழ்ச்சியில் சல்மான் கான் மேடையிலேயே சட்டையை கழற்றினார்.
கடந்த 2014-ஆம் ஆண்டு இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் 'வீரம்'. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் தற்போது இந்தியில் 'கிஸி கி பாய், கிஸி கி ஜான்' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.
இயக்குனர் பர்ஹத் சம்ஜி இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் சல்மான்கான், வெங்கடேஷ், பூஜா ஹெக்டே ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இப்படத்திற்கு ரவி பஸ்ரூர் , ஹிமேஷ் ரேஷ்மியா , தேவி ஸ்ரீ பிரசாத் , பாயல் தேவ் , அமல் மல்லிக் ஆகிய 5 இசையமைப்பாளர்கள் பணியாற்றியுள்ளனர்.

இந்நிலையில் கிஸி கி பாய், கிஸி கி ஜான் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா மும்பையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர், திரைப்பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டனர். இந்த நிகழ்வில் நடிகர் சல்மான் கான் சட்டையை கழற்றி அவருடைய சிக்ஸ் பேக் காட்டி ரசிகர்களை கவர்ந்தார். படத்தில் சல்மான் கான் காட்டும் சிக்ஸ் பேக் எல்லாம் வெறும் கிராபிக்ஸ் காட்சிகள் என விமர்சனம் வந்த நிலையில், சட்டையை கழற்றி "இதை பார்த்தால் விஎஃப்எக்ஸ்ல் வந்தது போல தெரிகிறதா?" என கேள்வி எழுப்பினார்.
- 'தோனி எண்டர்டெயின்மெண்ட்' தயாரிக்கும் 'எல்.ஜி.எம்' படத்தில் ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
- இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரான மகேந்திரா சிங் தோனியும், அவரது மனைவி சாக்ஷி சிங் தோனியும் இணைந்து 'தோனி எண்டர்டெயின்மெண்ட்' என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தமிழில் லெட்ஸ் கெட் மேரிட் (Lets Get Married-LGM) என்ற திரைப்படத்தை தயாரித்து வருகின்றனர்.

எல்.ஜி.எம்
காதல் கதையம்சம் கொண்ட படமாக உருவாகி வரும் இப்படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்குகிறார். இதில் ஹரிஷ் கல்யாண், லவ் டுடே படத்தின் மூலம் மிகவும் பிரபலமடைந்த இவானா, நதியா மற்றும் நகைச்சுவை நடிகர் யோகி பாபு நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

எல்.ஜி.எம் ஃபர்ஸ்ட் லுக்
இந்த நிலையில் 'எல்.ஜி.எம்' திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது. அந்த போஸ்டரில் நடிகர் ஹரிஷ் கல்யாண் கையில் மோதிரத்துடன் நிற்கிறார். அவருக்கு அருகில் நதியாவும் இவானாவும் அவரை முறைத்து கொண்டு நிற்கிறார்கள். இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
- சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற இணையத் தொடர் அயலி.
- இந்த இணையத் தொடர் குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியுள்ளார்.
இயக்குனர் முத்துக்குமார் இயக்கத்தில் உருவான வெப்தொடர் 'அயலி'. எட்டு எபிசோடுகள் அடங்கிய இந்த தொடரில் அபி நட்சத்திரா, அனுமோல், அருவி மதன், லிங்கா மற்றும் சிங்கம்புலி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். கடந்த ஜனவரி 26 அன்று ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகி திரையுலகினர், சினிமா விமர்சகர்கள், ரசிகர்கள் என பலரின் பாராட்டுக்களை அயலி இணையத் தொடர் பெற்றது.

இந்நிலையில், பெண் கல்வியின் அவசியத்தை உணர்த்தும் வகையில் ஜீ5 தளத்தில் வெளியாகி பாரட்டுக்களை குவித்த அயலி இணையத் தொடர், கொளத்தூர் எவர்வின் வித்யாஸ்ரம் (Everwin Vidhyashram, Kolathur) பள்ளி மாணவிகளுக்காக சிறப்பு திரையிடல் செய்யப்பட்டது. இந்த திரையிடலில் 8 ஆம் வகுப்பு மற்றும் 9 ஆம் வகுப்பை சார்ந்த 35 மாணவிகள் பங்கேற்றனர்.

ஜீ5 நிறுவனம் முன்னெடுத்த இவ்விழாவினில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஸ்ரீமதி. காகர்லா உஷா ஐஏஎஸ் அரசின் முதன்மைச் செயலாளர், பள்ளிக் கல்வித் துறை, தமிழ்நாடு திரு கே.நந்தகுமார் ஐஏஎஸ்., கமிஷனர் பள்ளிக் கல்வித் துறை, தமிழ்நாடு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வு குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது, அயலி நாம் அனைவரும் பெருமைப்படக்கூடிய படைப்பு முதலில் இந்த இணையத்தொடருக்காக ஜீ5 நிறுவனத்திற்கு நன்றி கூறிக்கொள்கிறேன். இது ஒரு பொழுது போக்கு தொடர் அல்ல, நாம் பெண்ணடிமைத்தனத்தில் எந்த இடத்திலிருந்து இப்போதைய நிலைக்கு வந்துள்ளோம் என்பதற்கு சான்றாக இந்த தொடர் உருவாகியுள்ளது.

கல்வி என்பது ஆண் பெண் என பார்க்காமல் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் அதற்கு இந்த அரசாங்கம் பாடுபட்டு வருகிறது. கல்லூரி செல்லும் மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உதவுத்திட்டம் முதலாக பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாம் பெரியார் அண்ணா கலைஞர் காலங்களில் பெண்ணுரிமைக்காக போராடி இந்த இடத்திற்கு வந்துள்ளோம். இதனை மிக அழகாக இந்த தொடர் சித்தரித்துள்ளது இதனை உருவாக்கிய குழுவிற்கும் நடித்த நடிகர் நடிகையர் அனைவருக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
- ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் படம் லால் சலாம்.
- இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளது.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது 'லால் சலாம்' என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார். இப்படம் 2023-ஆம் ஆண்டு வெளியாகவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், 'லால் சலாம்' படத்தின் படப்பிடிப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவுயடைந்ததாக படக்குழு வீடியோ வெளியிட்டு தெரிவித்துள்ளது. அதில் படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
#LalSalaam ? everyone! 34 Days of extensive shoot & we wrapped our schedule yesterday! Now it's time to prep for the next ??
— Lyca Productions (@LycaProductions) April 10, 2023
? @ash_rajinikanth
? @arrahman
? @rajinikanth @TheVishnuVishal & @vikranth_offl
? @DOP_VishnuR
⚒️ @RamuThangraj
✂️?️ @BPravinBaaskar
? @NjSatz
?️… pic.twitter.com/lDGKVb46R5
- அருண் விஜய் தற்போது நடித்துள்ள திரைப்படம் 'அச்சம் என்பது இல்லையே - மிஷன் சாப்டர் 1'.
- இப்படத்தில் கதாநாயகியாக எமி ஜாக்சன் நடித்திருக்கிறார்.
இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் தற்போது அருண் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'அச்சம் என்பது இல்லையே - மிஷன் சாப்டர் 1'. இப்படத்தின் கதாநாயகியாக எமி ஜாக்சன் நடிக்க ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. எம். ராஜசேகர் மற்றும் எஸ்.சுவாதி தயாரித்துள்ள இப்படத்தை தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகளில் லைகா நிறுவனம் வெளியிடவுள்ளது.

இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், 'அச்சம் என்பது இல்லையே - மிஷன் சாப்டர் 1' படத்தின் டப்பிங் பணியை நடிகர் அருண் விஜய் நிறைவு செய்துள்ளதாக சமூக வலைத்தளத்தில் வீடியோ வெளியிட்டு தெரிவித்துள்ளார். ஆக்ரோஷமாக சண்டை காட்சிகளுக்கு டப்பிங் செய்யும் அருண் விஜய்யின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Reliving every frame!! #Mission (chapter-1) wrapped.
— ArunVijay (@arunvijayno1) April 10, 2023
Excited!! Can't wait!!??https://t.co/uX1bJKQmdf#DirVijay @iamamyjackson
@lyca_productions @DoneChannel1 pic.twitter.com/jv6aLxFrfF
- நீண்ட இடைவேளைக்கு பிறகு ஜிகர்தண்டா 2 படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கி வருகிறார்.
- இப்படத்திதில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் 2014-ம் ஆண்டு மதுரையை களமாக கொண்டு உருவாகிய படம் ஜிகர்தண்டா. சித்தார்த் கதாநாயகனாக நடித்த இந்த படத்தில் லட்சுமி மேனன் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் பாபி சிம்ஹா நடித்திருந்தார். இந்த படத்துக்காக 2014-ம் ஆண்டின் தேசிய விருதை பாபி சிம்ஹா பெற்றார்.

ஜிகர்தண்டா 2
8 வருடங்களுக்கு பிறகு ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகம் தொடங்கியுள்ளது. எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி பலரயும் கவர்ந்தது.

ஜிகர்தண்டா 2
இந்நிலையில் ஜிகர்தண்டா படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தின் சண்டை காட்சி ஒன்று கொடைக்கானலில் திலீப் சுப்பராயன் தலைமையில் 80 சண்டை கலைஞர்களுடன் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த சண்டைக்காட்சியில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் பங்குபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
- சிவகார்த்திகேயன் நடிப்பில் ஆர்.ரவிகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் அயலான்.
- இப்படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
டாக்டர், டான், பிரின்ஸ் படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் படம் அயலான். இப்படத்தை இயக்குனர் ஆர்.ரவிகுமார் இயக்கியுள்ளார். ஏ.ஆர் ரகுமான் இசையில், ரகுல் பிரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

அயலான்
இந்நிலையில், அயலான் படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படம் வருகிற தீபாவளி தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- சுகேஷ் சந்திரசேகர் டெல்லி மண்டோ சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
- தற்போது ஈஸ்ட்ரை முன்னிட்டு சுகேஷ் ஜாக்குலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர், பல்வேறு வழக்குகள் தொடர்பாக டெல்லி மண்டோ சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் ஈஸ்டரை முன்னிட்டி இந்தி நடிகையும், தனது காதலியுமான ஜாக்குலின் பெர்னான்டசுக்கு உருகி உருகி வாழ்த்து கடிதம் எழுதி அனுப்பியுள்ளார்.
அதில், ``மை பேபி, என் முயல் குட்டி... அடுத்த ஈஸ்டரை இதற்கு முன்பு கொண்டாடிய ஈஸ்டர்களில் மிகவும் சிறந்ததாக மாற்றுவேன். உங்களுக்கு மிகவும் பிடித்த விழாவில் உங்களை மிகவும் மிஸ் செய்கிறேன். இந்த வருடத்தில் இது உங்களுக்கு மிகவும் பிடித்தமான திருவிழா. இதில் உங்களுடன் இல்லாமல் உங்களை மிகவும் மிஸ் செய்கிறேன். நீங்கள் ஈஸ்டருக்கு முட்டையை உடைப்பதை பார்க்காமல் மிஸ் செய்கிறேன்.
என் பேபி நீ எவ்வளவு அழகாக இருக்கிறாய் என்று உனக்கு ஏதாவது யோசனை இருக்கிறதா. இந்தப் பூமியில் உன்னைப்போல் யாரும் அழகாக இல்லை. மை பேபி, என் முயல் குட்டி உன்னைக் காதலிக்கிறேன். நான் உன்னைப் பற்றி நினைக்காத நேரமே கிடையாது. உன்னுடைய மிகவும் அழகான இதயத்தில் என்ன இருக்கிறது என்று எனக்குத் தெரியும்.
அது உனக்கும் அப்படித்தான் என்று எனக்குத் தெரியும்" என்று சுகேஷ் குறிப்பிட்டிருக்கிறார். இந்தக் கடிதத்தை சுகேஷின் வழக்கறிஞர் ஆனந்த் மாலிக் வெளியிட்டிருக்கிறார். இதற்கு முன்னும் தனது பிறந்தநாள் அன்று சுகேஷ் உருகி உருகி கடிதம் ஒன்றை வெளியிட்டு இருந்தார். இதுவரை வெளியிட்டிருக்கும் கடிதங்களுக்கு ஜாக்குலின் எந்தவித பதிலும் தெரிவித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.






