என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • சிவகார்த்திகேயன் நடிப்பில் ஆர்.ரவிகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் அயலான்.
    • இப்படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

    டாக்டர், டான், பிரின்ஸ் படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் படம் அயலான். இப்படத்தை இயக்குனர் ஆர்.ரவிகுமார் இயக்கியுள்ளார். ஏ.ஆர் ரகுமான் இசையில், ரகுல் பிரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.


    அயலான்

    அயலான்

    இந்நிலையில், அயலான் படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படம் வருகிற தீபாவளி தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • சுகேஷ் சந்திரசேகர் டெல்லி மண்டோ சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
    • தற்போது ஈஸ்ட்ரை முன்னிட்டு சுகேஷ் ஜாக்குலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

    மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர், பல்வேறு வழக்குகள் தொடர்பாக டெல்லி மண்டோ சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் ஈஸ்டரை முன்னிட்டி இந்தி நடிகையும், தனது காதலியுமான ஜாக்குலின் பெர்னான்டசுக்கு உருகி உருகி வாழ்த்து கடிதம் எழுதி அனுப்பியுள்ளார்.

    அதில், ``மை பேபி, என் முயல் குட்டி... அடுத்த ஈஸ்டரை இதற்கு முன்பு கொண்டாடிய ஈஸ்டர்களில் மிகவும் சிறந்ததாக மாற்றுவேன். உங்களுக்கு மிகவும் பிடித்த விழாவில் உங்களை மிகவும் மிஸ் செய்கிறேன். இந்த வருடத்தில் இது உங்களுக்கு மிகவும் பிடித்தமான திருவிழா. இதில் உங்களுடன் இல்லாமல் உங்களை மிகவும் மிஸ் செய்கிறேன். நீங்கள் ஈஸ்டருக்கு முட்டையை உடைப்பதை பார்க்காமல் மிஸ் செய்கிறேன்.

    என் பேபி நீ எவ்வளவு அழகாக இருக்கிறாய் என்று உனக்கு ஏதாவது யோசனை இருக்கிறதா. இந்தப் பூமியில் உன்னைப்போல் யாரும் அழகாக இல்லை. மை பேபி, என் முயல் குட்டி உன்னைக் காதலிக்கிறேன். நான் உன்னைப் பற்றி நினைக்காத நேரமே கிடையாது. உன்னுடைய மிகவும் அழகான இதயத்தில் என்ன இருக்கிறது என்று எனக்குத் தெரியும்.

    அது உனக்கும் அப்படித்தான் என்று எனக்குத் தெரியும்" என்று சுகேஷ் குறிப்பிட்டிருக்கிறார். இந்தக் கடிதத்தை சுகேஷின் வழக்கறிஞர் ஆனந்த் மாலிக் வெளியிட்டிருக்கிறார். இதற்கு முன்னும் தனது பிறந்தநாள் அன்று சுகேஷ் உருகி உருகி கடிதம் ஒன்றை வெளியிட்டு இருந்தார். இதுவரை வெளியிட்டிருக்கும் கடிதங்களுக்கு ஜாக்குலின் எந்தவித பதிலும் தெரிவித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • தோனி தயாரிக்கும் படத்தில் ஹரிஷ் கல்யாண், இவானா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
    • இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று இரவு 7 வெளியாகவுள்ளது.

    'தோனி எண்டர்டெயின்மெண்ட்' என்ற பெயரில் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தோனி தொடங்கியுள்ளார். இந்த நிறுவனம், அடுத்ததாக ஒரு நேரடி தமிழ் படத்தை தயாரிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. 'தோனி எண்டர்டெயின்மெண்ட்' தயாரிக்கும் இந்த படத்திற்கு 'எல்.ஜி.எம்' (Lets Get Married) என்று பெயரிடப்பட்டுள்ளது.

    அறிமுக இயக்குனர் ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் தயாராகும் 'எல்.ஜி.எம்' (லெட்ஸ் கெட் மேரீட்) திரைப்படத்தில் நடிகை நதியா, நடிகர் ஹரிஷ் கல்யாண், நாயகி இவானா, நடிகர் யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


    எல்.ஜி.எம்

    எல்.ஜி.எம்

    இந்நிலையில் 'எல்.ஜி.எம்' (Lets Get Married) படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று இரவு 7 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதனை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாண் பகிர்ந்து, விசிலப்போட ரெடியா என்று பதிவிட்டுள்ளார். இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
    • தற்போது தனுஷ் நடிக்கும் புதிய திரைப்படத்தை இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    2018-ம் ஆண்டு வெளியான 'பரியேறும் பெருமாள்' திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். அதன்பின்னர் தனுஷ் நடிப்பில் வெளியான 'கர்ணன்' திரைப்படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை பிடித்தார். இவர் இயக்கத்தில் உருவாகி வரும் 'மாமன்னன்' படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.


    மாரி செல்வராஜ் - தனுஷ்

    மாரி செல்வராஜ் - தனுஷ்

    இந்த நிலையில் தற்போது தனுஷ் நடிக்கும் புதிய திரைப்படத்தை இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ் உடன் இணைந்து தனுசின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படம் குறித்த அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


    தனுஷ் - மாரி செல்வராஜ்

    தனுஷ் - மாரி செல்வராஜ்

    நடிகர் தனுஷ் தற்போது இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் 'கேப்டன் மில்லர்' படத்தில் நடித்து வருகிறார். வரலாற்று பாணியில் உருவாகி வரும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். சத்திய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சிம்பு நடித்த 'பத்து தல' திரைப்படம் சமீபத்தில் வெளியானது.
    • இப்படம் வெளியான முதல் நாளிலே ரூ.12.3 கோடியே வசூல் செய்தது.

    ஒபலி என்.கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு, கௌதம் மேனன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள 'பத்து தல' திரைப்படம் கடந்த 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் ஆதரவை பெற்று வருகிறது. இப்படம் வெளியான முதல் நாளில் ரூ.12 .3 கோடியை வசூல் செய்ததாக படக்குழு அறிவித்திருந்தது.


    சமீபத்தில் இப்படத்தின் வெற்றியை படக்குழுவினர் கொண்டாடினர். இதையடுத்து 'பத்து தல' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'நீ சிங்கம் தான்' பாடலின் வீடியோ இன்று மாலை 5.31 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, இப்படத்தின் பாடல் தற்போது வெளியாகியுள்ளது. விவேக்கின் வரிகளில் சித் ஸ்ரீராம் குரலில் வெளியாகியுள்ள இந்த பாடலை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.




    • புஷ்பா -தி ரூல் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
    • இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ சமீபத்தில் வெளியானது.

    இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் பாசில், ஜகதீஷ், சுனில், ராவ் ரமேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2021-ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த படம் 'புஷ்பா'. இப்படம் தெலுங்கு மொழியில் உருவாக்கப்பட்டு தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் வெளியாகி ரூ.350 கோடி வரை வசூலை ஈட்டியது.


    புஷ்பா -2 போஸ்டர்

    தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகமான 'புஷ்பா-தி ரூல்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் மற்றும் கிளிம்ப்ஸ் வீடியோ சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், 'புஷ்பா -தி ரூல்' திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ யூ டியூபில் 64 மில்லியன் பார்வையாளர்களையும் 2.48 மில்லியன் லைக்குகளையும் குவித்து ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது. இதனை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.


    • நடிகை தர்ஷா குப்தா சமீபத்தில் ஓ மை கோஸ்ட் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
    • இவர் தன் கவர்ச்சி புகைப்படங்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

    சின்னத்திரையில் வெளியான முள்ளும் மலரும், செந்தூரப் பூவே தொடர்களில் நடித்ததன் மூலம் பிரலமானவர் தர்ஷா குப்தா. அதன்பின்னர் குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்களை கவர்ந்தார். இதனை தொடர்ந்து இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் வெளியான ருத்ர தாண்டவம் படத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் நகைச்சுவை நடிகர் சதிஷ் நடிப்பில் வெளியான ஓ மை கோஸ்ட் படத்தில் நடித்திருந்தார்.


    சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் தர்ஷா குப்தா அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில் தர்ஷா குப்தா தற்போது கவர்ச்சி புகைப்படங்களை மட்டுமல்லாமல் கருத்து ஒன்றையும் பதிவிட்டுள்ளார். அதில், 'நீங்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கட்டும்! உங்கள் எதிரிகளுக்கு மிகப்பெரிய தண்டனை' என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவிற்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.


    • நடிகை குஷ்பு அடினோவைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
    • இவர் தற்போது மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிவிட்டதாக தெரிவித்துள்ளார்.

    பிரபல திரைப்பட நடிகையும், பா.ஜ.க. நிர்வாகியும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான நடிகை குஷ்பு சமீபத்தில் அடினோவைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 

    இது குறித்து அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், தனக்கு காய்ச்சல், தொண்டை வலி, சோம்பல் ஏற்பட்டுள்ளதால் நல்ல மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் ரசிகர்கள் யாரும் என்னை பற்றி கவலைப்பட வேண்டாம் என்றும் காய்ச்சல் வந்தால் யாரும் அலட்சியப்படுத்த வேண்டாம் எனவும் தெரிவித்திருந்தார்.


    மருத்துவமனையில் குஷ்பு

    இந்நிலையில், நடிகை குஷ்பு சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார். இது குறித்து அவர் தனது இணையப் பக்கத்தில், "மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிவிட்டேன். சிறிது நாட்களுக்கு பயணங்களை தவிர்க்க வேண்டும். என் உடல்நலம் குறித்த உங்கள் அன்பிற்கு நன்றி" என்று பதிவிட்டுள்ளார்.



    • இயக்குனர் அருண் கார்த்திக் தயாரித்து இயக்கியுள்ள திரைப்படம் ‘ரிப்பப்பரி’.
    • இப்படத்தில் மகேந்திரன் கதாநாயகனாக நடிக்கிறார்.

    இயக்குனர் அருண் கார்த்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'ரிப்பப்பரி'.மாஸ்டர் மகேந்திரன் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் ஆரத்தி பொடி, காவ்யா அறிவுமணி, ஶ்ரீனி, நோபிள் ஜேம்ஸ், மாரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    AK THE TALESMAN நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு திவாரகா தியாகராஜன் இசையமைக்க தளபதி ரத்தினம் ஒளிப்பதிவு செய்துள்ளார். முகேன் வேல் எடிட்டிங் பணிகளை செய்துள்ளார். ஏப்ரல் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.


    இதில், மாஸ்டர் மகேந்திரன் பேசியதாவது, இந்த விழாவிற்கு வந்த பின்பு தான் நிறைய திறமை உள்ளவர்கள் இந்த படத்தில் வேலை பார்த்துள்ளார்கள் எனத் தெரிந்துகொண்டேன். அவர்களின் மற்ற திறமைகள் இங்கே பார்த்தபோது, வியப்பாக இருந்தது. இந்தப்படத்தில் ஒவ்வொருவரையும் தனித்தனியாகச் சொல்லவேண்டும். தொழில்நுட்ப குழுவில், அத்தனை பேரும் கடினமாக உழைத்துள்ளார்கள்.

    சகோதரர் நரேன் அவர்களுக்கு நன்றி. ஆர்த்தி கேரளாவில் ஒரு வுமன் ஐகான். மிக நன்றாக நடித்திருக்கிறார். அவருக்குக் கேரளாவில் மிகப்பெரிய வரவேற்பு இருக்கிறது. மாரி, ஶ்ரீனி இருவரும் அட்டகாசமாக நடித்துள்ளனர்.  இயக்குனர் அருண் கார்த்தி மிகச்சிறந்த நண்பர். படத்தை  வித்தியாசமான ரசனையில் அழகாக உருவாக்கியிருக்கிறார். ஏப்ரல் 14 ல் படம் வருகிறது உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி. என்று கூறினார்.


    இயக்குனர் அருண் கார்த்திக் பேசியதாவது, முதன் முதலில் சொந்தமாகப் படம் இயக்குகிறோம் அதுவும் தயாரித்து இயக்குகிறோம் என்ற போது பயம் அதிகமாக இருந்தது. ஆனால் சொந்தமாகத் தயாரித்து இயக்க நமக்குத் தைரியம் வர ஒரு நல்ல கதை வேண்டும் அந்த வகையில் இந்தப்படத்தின் கதை இந்த முயற்சியை எடுக்க உந்துதலாக இருந்தது. என்ன தான் கதை இருந்தாலும் சொந்தமாகத் தயாரித்தாலும் உடனிருப்பவர்கள் அந்தக்கதையை நம்புபவர்களாக நல்ல மனிதர்களாக இருக்க வேண்டும். அந்த வகையில் இப்படத்தில் வேலை பார்த்த அனைவரும் தமிழ் சினிமாவில் பெரிய இடத்திற்குச் செல்லும் திறமை கொண்டவர்கள்.

    அவர்களால் தான் இந்தப்படம் சாத்தியமானது. திவாரகா தியாகராஜன் இசை, தளபதி ரத்தினம் ஒளிப்பதிவு, முகேன் வேல் எடிட்டிங் இந்தப்படத்தை வேறு உயரத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. மாஸ்டர் மகேந்திரன் இந்தப்படம் மூலம் சகோதரராக கிடைத்துள்ளார். எனது வேலையைப் பாதி அவரே செய்து விடுவார், அவருக்குள் சினிமா ஊறியிருக்கிறது. அவருக்கான காலம் விரைவில் வரும். அவரைத்தாண்டி ஆரத்தி பொடி, காவ்யா அறிவுமணி, ஶ்ரீனி, நோபிள் ஜேம்ஸ், மாரி என எல்லோருமே சிறப்பாகச் செய்துள்ளார்கள். இது உங்களை மகிழ்விக்கும் ஒரு அழகான காமெடி படம் என்று கூறினார்.

    • அஜித் நடித்த ‘வீரம்’ திரைப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.
    • இதில் நடிகர் சல்மான்கான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

    கடந்த 2014-ஆம் ஆண்டு இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் 'வீரம்'. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் தற்போது இந்தியில் 'கிஸி கி பாய், கிஸி கி ஜான்' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.


    என்டம்மா பாடல் -கிஸி கி பாய், கிஸி கி ஜான்

    இயக்குனர் பர்ஹத் சம்ஜி இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் சல்மான்கான், வெங்கடேஷ், பூஜா ஹெக்டே ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இப்படத்திலிருந்து சமீபத்தில் 'என்டம்மா'என்ற பாடல் வெளியானது. இதில், வேட்டி கட்டிக்கொண்டு சல்மான்கான் ஆடும் நடன அசைவுகளை நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.


    இந்நிலையில், இந்த பாடலில் தென்னிந்திய கலாசார உடை இழிவுப்படுத்தப்படுவதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், "தென்னிந்திய கலாசாரத்தை இழிவுப்படுத்தும் வகையில் இந்த பாடல் உள்ளது. அது லுங்கி அல்ல, அது வேட்டி . நமது கலாசார உடையானது அருவருப்பான முறையில் காட்டப்படுகிறது" என்று பதிவிட்டுள்ளார். மேலும் அவர் அந்தப் பாடலையும் பகிர்ந்துள்ளார்.

    • விக்ரம் தற்போது பா.இரஞ்சித் இயக்கத்தில் ’தங்கலான்’ படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு 80 சதவீதம் முடிவடைந்துள்ளதாக பா.இரஞ்சித் தெரிவித்திருந்தார்.

    இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் படம் 'தங்கலான்'. இந்தப் படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்க ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். இப்படம் கர்நாடக மாநிலத்தில் உள்ள கே.ஜி.எஃப். குறித்த கதை என்று இயக்குனர் பா.இரஞ்சித் தெரிவித்திருந்தார். இதனால் இந்த படம் மீது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


    தங்கலான்

    இப்படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் நடிக்கின்றனர். 'தங்கலான்' படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து படப்பிடிப்பு 80 சதவீதம் முடிவடைந்ததாகவும் 25 நாட்களுக்கான படப்பிடிப்பு மட்டுமே நிலுவையில் உள்ளதாகவும் சமீபத்தில் பா.இரஞ்சித் தெரிவித்திருந்தார்.


    தங்கலான் போஸ்டர்

    இந்நிலையில், இப்படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'தங்கலான்' படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வருகிற 17-ஆம் தேதி விக்ரம் பிறந்த நாள் அன்று வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்து போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.


    • 'தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்' ஆவணப்படம் சமீபத்தில் ஆஸ்கர் விருது வென்றது.
    • பாகன் தம்பதிகளான பொம்மன் -பெள்ளியை பிரதமர் மோடி சந்தித்தார்.

    நீலகிரி மாவட்டம் முதுமலையில் தாயைப்பிரிந்த ரகு, பொம்மி ஆகிய குட்டி யானைகள் மற்றும் அதனை பராமரிக்கும் பாகனுக்கும் இடையே உள்ள உறவை ஜனரஞ்சகமாக சித்தரிக்கும் வகையில் 'தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்' என்ற ஆவணப்படம் எடுக்கப்பட்டது. ஆஸ்கர் விருது கிடைத்த பிறகு இந்த படத்தில் நடித்த முதுமலை தெப்பக்காடு பகுதியை சேர்ந்த பாகன் பொம்மன், பெள்ளி தம்பதியினர் உலக அளவில் புகழ் பெற்று விட்டனர். அவர்களை பல்வேறு தரப்பினரும் பாராட்டினர்.


    யானைகளை பார்வையிட்ட பிரதமர் மோடி

    இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, நீலகிரி தெப்பக்காடு பாகன் தம்பதிகளான பொம்மன் -பெள்ளியை இன்று சந்தித்தார். இதைத்தொடர்ந்து ஆவண குறும்படத்தில் நடித்த யானையையும் பார்வையிட்டார்

    ×