விசில் போட ரெடியா.. தோனி தயாரிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகிறது

விசில் போட ரெடியா.. தோனி தயாரிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகிறது

தோனி தயாரிக்கும் படத்தில் ஹரிஷ் கல்யாண், இவானா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று இரவு 7 வெளியாகவுள்ளது.
Published on

'தோனி எண்டர்டெயின்மெண்ட்' என்ற பெயரில் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தோனி தொடங்கியுள்ளார். இந்த நிறுவனம், அடுத்ததாக ஒரு நேரடி தமிழ் படத்தை தயாரிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. 'தோனி எண்டர்டெயின்மெண்ட்' தயாரிக்கும் இந்த படத்திற்கு 'எல்.ஜி.எம்' (Lets Get Married) என்று பெயரிடப்பட்டுள்ளது.

அறிமுக இயக்குனர் ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் தயாராகும் 'எல்.ஜி.எம்' (லெட்ஸ் கெட் மேரீட்) திரைப்படத்தில் நடிகை நதியா, நடிகர் ஹரிஷ் கல்யாண், நாயகி இவானா, நடிகர் யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

எல்.ஜி.எம்
எல்.ஜி.எம்

எல்.ஜி.எம்

இந்நிலையில் 'எல்.ஜி.எம்' (Lets Get Married) படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று இரவு 7 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதனை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாண் பகிர்ந்து, விசிலப்போட ரெடியா என்று பதிவிட்டுள்ளார். இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com