என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • 'தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்' ஆவணப்படம் சமீபத்தில் ஆஸ்கர் விருது வென்றது.
    • பாகன் தம்பதிகளான பொம்மன் -பெள்ளியை பிரதமர் மோடி சந்தித்தார்.

    நீலகிரி மாவட்டம் முதுமலையில் தாயைப்பிரிந்த ரகு, பொம்மி ஆகிய குட்டி யானைகள் மற்றும் அதனை பராமரிக்கும் பாகனுக்கும் இடையே உள்ள உறவை ஜனரஞ்சகமாக சித்தரிக்கும் வகையில் 'தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்' என்ற ஆவணப்படம் எடுக்கப்பட்டது. ஆஸ்கர் விருது கிடைத்த பிறகு இந்த படத்தில் நடித்த முதுமலை தெப்பக்காடு பகுதியை சேர்ந்த பாகன் பொம்மன், பெள்ளி தம்பதியினர் உலக அளவில் புகழ் பெற்று விட்டனர். அவர்களை பல்வேறு தரப்பினரும் பாராட்டினர்.


    யானைகளை பார்வையிட்ட பிரதமர் மோடி

    இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, நீலகிரி தெப்பக்காடு பாகன் தம்பதிகளான பொம்மன் -பெள்ளியை இன்று சந்தித்தார். இதைத்தொடர்ந்து ஆவண குறும்படத்தில் நடித்த யானையையும் பார்வையிட்டார்

    • இந்தி திரையுலகின் பிரபல நடிகை ரவீனா தாண்டன்.
    • இவருக்கு சமீபத்தில் பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

    இந்தி திரையுலகின் பிரபல நடிகையான ரவீனா தாண்டன். தமிழில் அர்ஜூனுடன் 'சாது', கமலுடன் 'ஆளவந்தான்' போன்ற படங்களில் நடித்துள்ளார். இதைத்தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பிரம்மாண்டமாக தயாரான கே.ஜி.எப் திரைப்படத்திலும் நடித்திருந்தார். சமீபத்தில் நடிகை ரவீனா தாண்டனுக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது. இதற்கு சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் பல கிளம்பின. பத்ம ஸ்ரீ விருது பெரும் அளவிற்கு ரவீனா என்ன செய்தார் என கமெண்டுகள் மூலம் பலர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.



    இதற்கு பதிலடி கொடுத்துள்ள ரவீனா தாண்டன் கூறியதாவது, என்னை விமர்சிப்பவர்கள் கிளாமரை மட்டுமே பார்க்கிறார்கள். அதற்கு பின்னால் இருக்கும் எனது கடுமையான உழைப்பு அவர்களுக்கு தெரியவில்லை. நான் சினிமாவில் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் மட்டுமே நடிக்கவில்லை. பல சமூக விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் படங்களில் கூட நடித்தேன். எனக்கு பத்மஸ்ரீ விருது கொடுத்ததை சிலர் விமர்சித்தாலும், எனக்கு வாழ்த்து தெரிவித்தவர்கள்தான் அதிகம் என்று கூறினார்.

    • இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் நயன்தாரா புதிய படம் ஒன்றில் நடிக்கிறார்.
    • இப்படத்திற்கு நயன்தாரா -75 என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ளது.

    இந்திய திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாரா தற்போது இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு நயன்தாரா -75 என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடா, மலையாளம் ஆகிய தென்னிந்திய மொழிகளில் தயாராகவுள்ள இப்படத்தில் நடிகர் ஜெய் கதாநாயகனாக நடிக்கிறார்.


    மேலும், சத்யராஜ், ரெடின் கிங்ஸ்லி, சுரேஷ் சக்ரவர்த்தி, கே.எஸ்.ரவிகுமார், ரேணுகா, பூர்ணிமா ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஜீ ஸ்டூடியோஸ், நாட் ஸ்டூடியோஸ், டிரைடன்ட் ஆர்ட்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.


    ரஜினியுடன் நயன்தாரா -75 படக்குழு

    இந்நிலையில், நயன்தாரா -75 படக்குழுவினர் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து ஆசிப்பெற்றுள்ளனர். இதைத்தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் பலர் கலந்து கொண்டனர்.


    • சமீபத்தில் செல்வராகவன் நடிப்பில் வெளியான பகாசூரன் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.
    • தற்போது இவர் விஷாலின் ‘மார்க் ஆண்டனி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

    தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரான செல்வராகவன், 2002ம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதன்பின்னர் காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம், என்ஜிகே, நெஞ்சம் மறப்பதில்லை, நானே வருவேன் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான நானே வருவேன் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.


    செல்வராகவன்

    செல்வராகவன்

    இதனிடையே நடிப்பிலும் கவனம் செலுத்தி வரும் செல்வராகவன் விஜய்யின் பீஸ்ட் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் சாணிக் காயிதம் படத்திலும் மோகன் ஜி இயக்கத்தில் சில தினங்களுக்கு முன்பு வெளியான பகாசூரன் திரைப்படத்திலும் கதாநாயகனாக நடித்திருந்தார். தற்போது செல்வராகவன் படம் இயக்குவதில் கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது. ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகி வரும் மார்க் ஆண்டனி படத்தில் செல்வராவன் நடிக்கிறார்.


    செல்வராகவன்

    செல்வராகவன்

    அவ்வப்போது சமூக வலைத்தளத்தில் மனதில் தோன்றும் விஷயங்களை பதிவிட்டு வரும் செல்வராகவன், தற்போது கடவுள் குறித்து பதிவிட்டிருப்பது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதில், உலகம் பிறந்த நாள் முதல் கடவுள் யாரையும் கரை சேர்க்க தவறியதே இல்லை. எல்லாம் உங்களின் நம்பிக்கையை பொறுத்தது. எந்த சூழ்நிலையையும் எதிர்கொண்டு மீள்வோம் என முழு மனதாய் நம்புவோம். அதில் என்ன குறைந்து விடப் போகிறோம்? என்று பதிவிட்டுள்ளார். இவரின் இந்த பதிவை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

    • வெங்கட் பிரபு இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ‘கஸ்டடி’.
    • இப்படம் வருகிற மே 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் 'கஸ்டடி'. இப்படத்தில் நாக சைதன்யா கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தை ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் பேனரின் சார்பாக ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரித்துள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்திருக்கிறார்.


    கஸ்டடி

    கஸ்டடி

    'கஸ்டடி' திரைப்படத்தில் வில்லனாக அரவிந்த் சாமி நடிக்கிறார். இப்படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இருவரும் இணைந்து இசையமைக்கின்றனர். மேலும், இதில் சரத்குமார், வென்னேலா கிஷோர், பிரேம்ஜி, சம்பத் ராஜ், பிரியாமணி மற்றும் பிரேமி விஷ்வநாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.


    கஸ்டடி

    கஸ்டடி

    இப்படத்தின் முதல் பாடலான 'Head up High' பாடல் வருகிற 10-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் கஸ்டடி படத்தின் புரோமோவை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளது. பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியிருக்கும் இப்படத்தின் புரோமோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • பொன்னியின் செல்வன் -2 திரைப்படம் வருகிற 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
    • இப்படத்தின் அடுத்த பாடலான 'வீரா ராஜ வீர' பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

    மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் வெளியான படம் பொன்னியின் செல்வன்-1. இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று சில விருதுகளையும் குவித்தது. இப்படத்தின் இரண்டாம் பாகம் வருகிற 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    வீரா ராஜ வீர பாடல்

    வீரா ராஜ வீர பாடல்

    இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்நிலையில் 'பொன்னியின் செல்வன் -2' படத்தின் அடுத்த பாடலான 'வீரா ராஜ வீர' பாடலின் லிரிக் வீடியோவை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்த பாடல் தற்போது இணையத்தில் பலரின் லைக்குகளை குவித்து வருகிறது.



    • கனா கண்டேன், பாரிஜாதம், மொழி, சத்தம் போடாதே, கண்ணாமூச்சி ஏனடா, வெள்ளித்திரை உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் பிருத்விராஜ்.
    • இவர் தற்போது ஆடு ஜீவிதம் என்ற மலையாள படத்தில் நடித்து முடித்துள்ளார்.

    தமிழில் கனா கண்டேன், பாரிஜாதம், மொழி, சத்தம் போடாதே, கண்ணாமூச்சி ஏனடா, வெள்ளித்திரை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பிருத்விராஜ் மலையாளத்தில் முன்னணி கதாநாயகனாக வலம் வருகிறார். இவர் தற்போது ஆடு ஜீவிதம் என்ற மலையாள படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் பிளஸ்சி இயக்கி உள்ளார். பென்ஞ்மினின் புகழ்பெற்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் கதாநாயகியாக அமலாபால் நடித்துள்ளார்.


    ஆடு ஜீவிதம்

    ஆடு ஜீவிதம்

    இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். சவுதி அரோபியாவுக்கு வேலைக்கு சென்று அங்கு ஓட்டகம் மேய்க்கும் ஒரு பட்டதாரி இளைஞன் பற்றிய கதையே இந்த படம். பிருதிவிராஜ் ஒட்டகம் மேய்ப்பவராக நடித்து இருக்கிறார். இதன் படப்பிடிப்பு ஐந்து வருடங்களுக்கு முன்பே தொடங்கி பல்வேறு காரணங்களால் தடைபட்டு சமீபத்தில் முழு படப்பிடிப்பையும் முடித்துள்ளனர். படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஜோர்டான் மற்றும் சஹாரா மற்றும் அல்ஜீரியாவில் படமாக்கப்பட்டது. தற்போது டப்பிங், இசை, கிராபிக்ஸ் உள்ளிட்ட தொழில்நுட்ப பணிகள் நடக்கின்றன.


    ஆடு ஜீவிதம்

    ஆடு ஜீவிதம்

    இந்நிலையில் ஆடு ஜீவிதம் படத்தின் டிரைலர் யூடியூபில் திடீர் என லீக் ஆனது. இதை தொடர்ந்து ஆடு ஜீவிதம் பட டிரெய்லரை படக்குழுழுவினர் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளனர். அதில் பிருதிவிராஜின் வித்தியாசமான தோற்றம் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வந்த இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.



    • அருண் விஜய் தற்போது நடித்துள்ள திரைப்படம் 'அச்சம் என்பது இல்லையே - மிஷன் சாப்டர் 1'.
    • இப்படத்தில் கதாநாயகியாக எமி ஜாக்சன் நடித்திருக்கிறார்.

    இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் தற்போது அருண் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'அச்சம் என்பது இல்லையே - மிஷன் சாப்டர் 1'. இப்படத்தின் கதாநாயகியாக எமி ஜாக்சன் நடிக்க ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. எம். ராஜசேகர் மற்றும் எஸ்.சுவாதி தயாரித்துள்ள இப்படத்தை தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகளில் லைகா நிறுவனம் வெளியிடவுள்ளது.

    டப்பிங் பணியில் அருண் விஜய்

     இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'அச்சம் என்பது இல்லையே - மிஷன் சாப்டர் 1' படத்தின் டப்பிங் பணியை நடிகர் அருண் விஜய் தொடங்கியுள்ளார். இதனை அவர் தனது சமூக வலைதளத்தில் புகைப்படங்களை பகிர்ந்து தெரிவித்துள்ளார்.


    • தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி ஷெட்டி
    • இவர் பல மொழி படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

    தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி ஷெட்டி 'உப்பென்னா' படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். இதைத்தொடர்ந்து 'ஷியாம் சிங்கா ராய்', 'தி வாரியர்' போன்ற படங்களின் மூலம் கவனம் ஈர்த்தார். தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் 'கஸ்டடி' திரைப்படத்தில் நாகசைதன்யாவிற்கு ஜோடியாக நடித்துள்ளார். இதைத்தொடர்ந்து மலையாள திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.


    கீர்த்தி ஷெட்டி

    இந்நிலையில், நடிகை கீர்த்தி ஷெட்டி, ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, ஜெயம் ரவியின் 32- வது படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தை அறிமுக இயக்குனர் புவனேஷ் அர்ஜுனன் இயக்குகிறார். ரூ.100 கோடியில் உருவாகும் இப்படத்தில் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி இணைந்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


    • இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘புஷ்பா -தி ரூல்’.
    • இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் நேற்று வெளியானது.

    இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் பாசில், ஜகதீஷ், சுனில், ராவ் ரமேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2021-ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த படம் 'புஷ்பா'. இப்படம் தெலுங்கு மொழியில் உருவாக்கப்பட்டு தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் வெளியாகி ரூ.350 கோடி வரை வசூலை ஈட்டியது.


    புஷ்பா -தி ரூல்

    தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகமான 'புஷ்பா-தி ரூல்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் மற்றும் டீசர் நேற்று வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், 'புஷ்பா -தி ரூல்' திரைப்படத்தின் டீசர் வெளியான ஒரே நாளில் 54 மில்லியன் பார்வையாளர்களையும் 2 மில்லியன் லைக்குகளையும் குவித்துள்ளது. இதனை படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது.


    • வெற்றிமாறன் இயக்கத்தில் ’விடுதலை’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.
    • இப்படத்திற்கு திரைப்பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

    வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, சேத்தன், கவுதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி கடந்த மார்ச் 31-ந்தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'விடுதலை-1'. இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

    விடுதலை

     இப்படத்திற்கு ரஜினி உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், 'விடுதலை' திரைப்படம் பார்த்த இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் படக்குழுவை பாராட்டி கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, படம் மிகவும் நன்றாக இருந்தது. நான் 'பொல்லாதவன்' திரைப்படத்தில் இருந்தே வெற்றிமாறனோட மிகப்பெரிய ரசிகன். எப்போதும் போல் கலக்கலாக படத்தை எடுத்துள்ளார். படத்தில் அனைவரும் நன்றாக நடித்துள்ளனர். படம் சூப்பர் ஹிட் என்று தெரியும் இருந்தாலும் மேலும் வெற்றி பெற வாழ்த்துகிறேன். என்று கூறினார்.

    • அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘திருவின் குரல்’.
    • இப்படம் வருகிற 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இயக்குனர் ஹரிஷ் பிரபு இயக்கத்தில் அருள்நிதி நடித்துள்ள திரைப்படம் 'திருவின் குரல்'. இப்படத்தில் ஆத்மிகா கதாநாயகியாக நடிக்க பாரதிராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.


    இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இதையடுத்து 'திருவின் குரல்' படத்தின் முதல் பாடலான 'அப்பா என் அப்பா' பாடலின் லிரிக் வீடியோ இன்று காலை 11 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, இந்த பாடல் தற்போது வெளியாகியுள்ளது.


    அப்பா மற்றும் மகனுக்கு இடையிலான பாசத்தை விவரிக்கும் வகையில் உருவாகியுள்ள இந்த பாடலை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.




    ×