என் மலர்
சினிமா செய்திகள்

திருவின் குரல்
தந்தையின் உள்ளங்கை தொடும்போது சிங்கத்தின் பலம் சேரும்.. கவனம் ஈர்க்கும் 'திருவின் குரல்' பாடல்
- அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘திருவின் குரல்’.
- இப்படம் வருகிற 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இயக்குனர் ஹரிஷ் பிரபு இயக்கத்தில் அருள்நிதி நடித்துள்ள திரைப்படம் 'திருவின் குரல்'. இப்படத்தில் ஆத்மிகா கதாநாயகியாக நடிக்க பாரதிராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இதையடுத்து 'திருவின் குரல்' படத்தின் முதல் பாடலான 'அப்பா என் அப்பா' பாடலின் லிரிக் வீடியோ இன்று காலை 11 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, இந்த பாடல் தற்போது வெளியாகியுள்ளது.
அப்பா மற்றும் மகனுக்கு இடையிலான பாசத்தை விவரிக்கும் வகையில் உருவாகியுள்ள இந்த பாடலை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
Next Story






