என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கத்தில் ஹிப்ஹாப் ஆதி நடிக்கும் திரைப்படம் ‘வீரன்’.
    • இப்படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற்று வருகிறது.

    மரகத நாணயம் படத்தை இயக்கிய ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கத்தில் ஹிப்ஹாப் ஆதி நடித்து வரும் படம் 'வீரன்'. ஃபேண்டசி காமெடி ஆக்ஷன் எண்டர்டெயினர் படமாக உருவாகி வரும் இப்படத்தில் ஆதிரா ராஜ் கதாநாயகியாகவும், வினய் ராய் வில்லனாகவும் நடித்துள்ளனர். மேலும் முனிஷ்காந்த், காளி வெங்கட், சசி செல்வராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.


    வீரன்
    வீரன்

    சத்யஜோதி பிலிம்ஸ்' தயாரித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்சன் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் ஹிப்ஹாப் ஆதி சமூக வலைத்தளத்தில் இயக்குனர் ஏ.ஆர்.கே.சரவணன் குறித்து பதிவிட்டிருப்பது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.


    ஹிப்ஹாப் ஆதியின் பதிவு
    ஹிப்ஹாப் ஆதியின் பதிவு

    அதில், அந்த கருப்பு கண்ணாடி மாட்டிட்டு கியூட்டா நிக்குறாரே, அவரு தான் எங்க இயக்குனர் ஏ.ஆர்.கே.சரவணன்! அவருக்கு ஒரு கோட்ட மாட்டி ஃப்ரேம் குள்ள நிக்க வெக்கறதுக்கு நாங்க பட்ட பாடிருக்கே .. எல்லா புகழும் காளி அண்ணனுக்கே என்று பதிவிட்டு ஒரு புகைப்படத்தையும் இணைந்துள்ளார். 

    • காளிதாஸ் ஜெயராம் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘அவள் பெயர் ரஜ்னி’.
    • இப்படம் தமிழ் மற்றும் மலையாளத்தில் உருவாகி வருகிறது.

    விக்ரம், நட்சத்திரம் நகர்கிறது படங்களின் வெற்றிக்குப் பிறகு காளிதாஸ் ஜெயராம் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'அவள் பெயர் ரஜ்னி'. இயக்குனர் வினில் ஸ்கரியா வர்கீஸ் இயக்கத்தில் தமிழ் மற்றும் மலையாளத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் நமீதா பிரமோத், ரெபா மோனிகா ஜான் மற்றும் சைஜு குருப், அஸ்வின் குமார், கருணாகரன், ஷான் ரோமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

    அவள் பெயர் ரஜ்னி

    நவரசா ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு 4 மியூசிக்ஸ் இசையமைக்கின்றனர். ஆர்.ஆர்.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார். இன்வெஸ்டிகேசன் திரில்லர் திரைப்படமாக உருவாகும் இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.


    அவள் பெயர் ரஜ்னி முதல் தோற்ற போஸ்டர்

    அதன்படி, இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் வெளியாகியுள்ளது. பிரபல மலையாள நடிகர் டோவினோ தாமஸ் வெளியிட்ட இப்படத்தின் முதல்தோற்ற போஸ்டர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், இப்படத்தின் டீசர் மற்றும் டிரைலர் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • ’விடுதலை’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகின்றது.
    • இப்படத்திற்கு திரைப்பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

    வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, சேத்தன், கவுதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி கடந்த மார்ச் 31-ந்தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'விடுதலை-1'. இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.


    விடுதலை படக்குழுவை சந்தித்த ரஜினிகாந்த்

    மேலும், இப்படத்திற்கு திரைப்பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து, விடுதலை திரைப்படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் படக்குழுவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இதனை தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ள நடிகர் சூரி பதிவு ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.


    ரஜினி பதிவு

    அதில், 'இதுவரை கிடைத்த வாழ்த்துகளுக்கு சிகரமாக வந்தது தலைவர் சூப்பர் ஸ்டாரின் வாழ்த்து. யாரை பார்த்து பிரமித்து சினிமாவிற்கு வரணும்னு நினைத்தேனோ அவர் எங்கள் படைப்பையும் உழைப்பையும் பாராட்டி பேசிய தருணம் வாழ்க்கை முழுமை அடைஞ்சதா உணர்கிறேன். இறைவனுக்கு நன்றி' என்று பதிவிட்டுள்ளார்.

    இதற்கு முன்பு நடிகர் ரஜினிகாந்த் 'விடுதலை' திரைப்படத்தை பாராட்டி பதிவை பகிர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


    • மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற திரைப்படம் ‘திருச்சிற்றம்பலம்’.
    • இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் தற்போதுவரை ரசிகர்களின் பேவரைட்டாக உள்ளது.

    இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்த திரைப்படம் 'திருச்சிற்றம்பலம்'. இந்த படத்தில் நடிகை நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராஷி கன்னா, பிரகாஷ்ராஜ், இயக்குனர் பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.


    'திருச்சிற்றம்பலம்' திரைப்படம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 18-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் ஆதரவை பெற்று வசூலை குவித்தது. இப்படத்தில் இடம்பெற்றிருந்த பாடல்கள் அனைத்தும் ரசிகர்களின் பேவரைட் லிஸ்டில் உள்ளது. அதிலும், தனுஷ் வரிகளில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பாடியிருந்த தேன்மொழி பாடல் தற்போது வரை அடிக்கடி முணுமுணுக்கும் பாடலாக அமைந்துள்ளது.


    இந்நிலையில், இந்த பாடலின் புதிய அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, தேன்மொழி பாடல் 50 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதனை படக்குழு வீடியோ ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளது. இந்த


    • வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘விடுதலை’.
    • இப்படத்திற்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

    வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, சேத்தன், கவுதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி கடந்த மார்ச் 31-ந்தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'விடுதலை-1'. இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

    விடுதலை

    மேலும், இப்படத்திற்கு திரைப்பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் 'விடுதலை' திரைப்படத்தை பாராட்டி பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், 'விடுதலை... இதுவரை தமிழ் திரையுலகம் பார்த்திராத கதைக்களம். இது ஒரு திரைக்காவியம்.


    ரஜினிகாந்த் பதிவு

    சூரியின் நடிப்பு -பிரமிப்பு. இளையராஜா -இசையில் என்றும் ராஜா. வெற்றிமாறன் - தமிழ் திரையுலகின் பெருமை. தயாரிப்பாளருக்கு என்னுடைய வாழ்த்துகள். இரண்டாவது பாகத்திற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன்." என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.


    • வெங்கட் பிரபு இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ‘கஸ்டடி’.
    • இப்படம் வருகிற மே 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் 'கஸ்டடி'. இப்படத்தில் நாக சைதன்யா கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தை ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் பேனரின் சார்பாக ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரித்துள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்திருக்கிறார்.


    கஸ்டடி

    'கஸ்டடி' திரைப்படத்தில் வில்லனாக அரவிந்த் சாமி நடிக்கிறார். இப்படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இருவரும் இணைந்து இசையமைக்கின்றனர். மேலும், இதில் சரத்குமார், வென்னேலா கிஷோர், பிரேம்ஜி, சம்பத் ராஜ், பிரியாமணி மற்றும் பிரேமி விஷ்வநாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.


    கஸ்டடி போஸ்டர்

    இந்நிலையில், இப்படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் முதல் பாடலான 'Head up High' பாடல் வருகிற 10-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. 


    • இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் நயன்தாரா புதிய படம் ஒன்றில் நடிக்கிறார்.
    • இப்படத்தில் நடிகர் ஜெய் இணைந்துள்ளதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது.

    இந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நயன்தாரா பல மொழியில் அதிக படங்களில் நடித்து நிறைய ரசிகர்களை கவர்ந்துள்ளார். முன்னணி கதாநாயகர்கள் நயன்தராவின் கால்ஷீட்டுக்காக காத்திருந்து படங்களை துவங்கும் நிலைமை உள்ளது. இவர் தற்போது 'இறைவன்' திரைப்படத்தில் ஜெயம் ரவி ஜோடியாகவும் இந்தியில் 'ஜவான்' படத்தில் ஷாருக்கானுடனும் நடித்து வருகிறார்.


    நயன்தாரா 75 போஸ்டர்

    இதைத்தொடர்ந்து நயன்தாராவின் 75-வது படத்தை இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இயக்குகிறார். தமிழ், தெலுங்கு, கன்னடா, மலையாளம் ஆகிய தென்னிந்திய மொழிகளில் தயாராகவுள்ள இப்படத்தில் நடிகர் ஜெய் இணைந்துள்ளதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, நயன்தாராவின் 75-வது படத்திற்கு தமன் இசையமைக்கவுள்ளார். இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.


    • குட்டிப்புலி சரவண சக்தி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ’குலசாமி’.
    • இந்த படத்திற்கு பின்னணி பாடகர் மஹாலிங்கம் இசையமைக்கிறார்.

    நாயகன், பில்லா பாண்டி, போன்ற படங்களை இயக்கிய குட்டிப்புலி சரவண சக்தி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'குலசாமி'. இந்த படத்தில் விமல் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக தன்யா ஹோப் நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில் போஸ் வெங்கட், குட்டிப்புலி சரவண சக்தி, முன்னாள் போலீஸ் அதிகாரி ஜாங்கிட் , வினோதினி, மகாநதி சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    குலசாமி

    நடிகர் விஜய்சேதுபதி வசனம் எழுதியுள்ள இந்த படத்தை எம்.ஐ.கே. புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடேட் தயாரித்துள்ளனர். இந்த படத்தின் மூலம் பின்னணி பாடகர் மஹாலிங்கம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இந்நிலையில், இப்படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'குலசாமி' படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதனை நடிகர் விஜய்சேதுபதி தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.

    'குலசாமி' திரைப்படம் வருகிற ஏப்ரல் 21-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.



    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சரித்திர வரலாற்று புகைப்பட கண்காட்சி இன்று தொடங்கி வருகிற 14-ந் தேதி வரை நடக்க உள்ளது.
    • இந்த கண்காட்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சம்மந்தப்பட்ட இதுவரை யாரும் பார்த்திராத பல அரிய புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.

    கோவை வ.உ.சி மைதானத்தில் ஒருங்கிணைந்த கோவை மாவட்ட தி.மு.க. சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70 ஆண்டு கால சரித்திர வரலாற்று புகைப்பட கண்காட்சி இன்று தொடங்கி வருகிற 14-ந் தேதி வரை நடக்க உள்ளது.


    சத்யராஜ் எழுதிய கருத்து

    இந்த கண்காட்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சம்மந்தப்பட்ட இதுவரை யாரும் பார்த்திராத பல அரிய புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் அவர் 70 ஆண்டு கால பொது வாழ்க்கையில் சந்தித்த சவால்கள், மக்கள் நலனுக்காக அவர் மேற்கொண்ட போராட்டங்கள், எதிர்கொண்ட துயரங்கள் ஆகியவற்றை இன்றைய இளம் தலைமுறை தெரிந்து கொள்ளும் வகையில் பல்வேறு அரிய புகைப்படங்களும் இந்த கண்காட்சியில் இடம் பிடித்துள்ளன.

    இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வாழ்க்கை பயண புகைப்பட கண்காட்சியை நடிகர் சத்யராஜ் இன்று தொடங்கி வைத்து அங்குள்ள வருகைப் பதிவில் தனது கருத்தையும் பதிவு செய்தார்.

    • பொன்னியின் செல்வன் -2 திரைப்படம் வருகிற 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
    • இப்படத்தின் முதல் பாடல் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

    மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் வெளியான படம் பொன்னியின் செல்வன்-1. இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று சில விருதுகளையும் குவித்தது. இப்படத்தின் இரண்டாம் பாகம் வருகிற 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    பொன்னியின் செல்வன் -2

    இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்நிலையில் இப்படத்தின் அடுத்த பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'பொன்னியின் செல்வன் -2' படத்தின் அடுத்த பாடலான 'வீரா ராஜ வீர' பாடலின் லிரிக் வீடியோ நாளை வெளியாகவுள்ளதாக கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்றை பகிர்ந்து படக்குழு தெரிவித்துள்ளது.


    • விமல் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தெய்வ மச்சான்’.
    • இப்படம் வருகிற 21-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இயக்குனர் மார்ட்டின் நிர்மல்குமார் இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் 'தெய்வ மச்சான்'. இதில் விமல் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக புதுமுக நடிகை நேகா நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில் பாண்டியராஜன், 'ஆடுகளம்' நரேன், பாலசரவணன், வேல.ராமமூர்த்தி, முருகானந்தம், வத்சன் வீரமணி, தங்கதுரை, பிக் பாஸ் அனிதா சம்பத், தீபா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    கேமில் ஜே. அலெக்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்திற்கு காட்வின் இசையமைத்துள்ளார். இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. காமெடி ஜானரில் உருவாகியுள்ள இந்த டிரைலரை நடிகர் விஜய் சேதுபதி தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.



    'தெய்வ மச்சான்' திரைப்படம் வருகிற ஏப்ரல் 21-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.




    • உலகில் மிகவும் செல்வாக்கு மிக்க நபர்களின் பட்டியலில் நடிகர் ஷாருக்கான் முதலிடத்தில் உள்ளார்.
    • கருத்துக் கணிப்பில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த குறிப்பிடத்தக்க பெயர்களும் இடம்பெற்றன.

    புதுடெல்லி:

    அமெரிக்காவில் இருந்து வெளியாகும் டைம் இதழ் 2023-ம் ஆண்டின் செல்வாக்குமிக்க டாப் 100 நபர்களுக்கான பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் முதலிடம் பிடித்துள்ளார்.

    டைம்ஸ் இதழ் ஆண்டுதோறும் செல்வாக்கு மிக்க நபர்களின் பட்டியலை தங்களது வாசகர்களிடம் வாக்கெடுப்பு நடத்தி அதன் முடிவுகளை வெளியிடும். அந்த வகையில் 2023-ம் ஆண்டுக்கான வாக்கெடுப்பில் உலகளவில் புகழ்பெற்ற கால்பந்து வீரரான லியோனல் மெஸ்சியை விட அதிக வாக்குகள் பெற்று ஷாருக்கான் முதலிடம் பிடித்தார்.

    கருத்துக் கணிப்பில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த குறிப்பிடத்தக்க பெயர்களும் இடம்பெற்றன. இந்த பட்டியலில் தடகள வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி, இளவரசர் ஹாரி மற்றும் மேகன் மார்க்லே, மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் மற்றும் பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா போன்ற நபர்களும் இடம்பெற்றுள்ளனர்.

    மொத்தம் பதிவான 12 கோடிக்கும் அதிகமான வாக்குகளில் ஷாருக்கான் 4 சதவீத வாக்குகளைப் பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பதான் படத்தின் அபார வெற்றிக்குப் பிறகு, ஷாருக்கான் வாசகர் வாக்கெடுப்பில் வெற்றியாளராக தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×