இணையத்தை கலக்கும் தோனி தயாரிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

'தோனி எண்டர்டெயின்மெண்ட்' தயாரிக்கும் 'எல்.ஜி.எம்' படத்தில் ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
தோனி
தோனி
Published on

இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரான மகேந்திரா சிங் தோனியும், அவரது மனைவி சாக்ஷி சிங் தோனியும் இணைந்து 'தோனி எண்டர்டெயின்மெண்ட்' என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தமிழில் லெட்ஸ் கெட் மேரிட் (Lets Get Married-LGM) என்ற திரைப்படத்தை தயாரித்து வருகின்றனர்.

எல்.ஜி.எம்
எல்.ஜி.எம்

எல்.ஜி.எம்

காதல் கதையம்சம் கொண்ட படமாக உருவாகி வரும் இப்படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்குகிறார். இதில் ஹரிஷ் கல்யாண், லவ் டுடே படத்தின் மூலம் மிகவும் பிரபலமடைந்த இவானா, நதியா மற்றும் நகைச்சுவை நடிகர் யோகி பாபு நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

எல்.ஜி.எம் ஃபர்ஸ்ட் லுக்
எல்.ஜி.எம் ஃபர்ஸ்ட் லுக்

எல்.ஜி.எம் ஃபர்ஸ்ட் லுக்

இந்த நிலையில் 'எல்.ஜி.எம்' திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது. அந்த போஸ்டரில் நடிகர் ஹரிஷ் கல்யாண் கையில் மோதிரத்துடன் நிற்கிறார். அவருக்கு அருகில் நதியாவும் இவானாவும் அவரை முறைத்து கொண்டு நிற்கிறார்கள். இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com