ரொம்ப நாட்களுக்குப் பிறகு அருமையான கருத்துள்ள படம்.. சசிகுமாரின் அயோத்தி படத்தை பாராட்டிய ரஜினி

இயக்குனர் மந்திர மூர்த்தி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளியான படம் ‘அயோத்தி’.இப்படத்தை நடிகர் ரஜினிகாந்த் பாராட்டி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
சசிகுமார் - ரஜினி 
சசிகுமார் - ரஜினி 
Published on

அறிமுக இயக்குனர் மந்திர மூர்த்தி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் கடந்த மார்ச் 3ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'அயோத்தி'. இந்த படத்தில் 'குக் வித் கோமாளி' புகழ், ப்ரீத்தி அஸ்ராணி, யாஷ்பால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மனிதத்தையும் மத நல்லிணக்கத்தையும் பற்றி பேசிய இப்படம் பலரின் பாராட்டுக்களை பெற்றது.

அயோத்தி 
அயோத்தி 

அயோத்தி 

இந்நிலையில் அயோத்தி படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் படக்குழுவினரை பாராட்டி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், அயோத்தி… நண்பர் சசிகுமாருக்கு ரொம்ப நாட்களுக்குப் பிறகு அருமையான கருத்துள்ள ஒரு வெற்றிப் படம். முதல் படத்திலேயே தான் ஒரு தலை சிறந்த இயக்குநர் என்று நிரூபித்திருக்கிறார் ஆர். மந்திரமூர்த்தி. தயாரிப்பாளருக்கு என்னுடைய பாராட்டுகளும், வாழ்த்துகளும்! என்று பாராட்டியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com