தொடர்ந்து கொலை மிரட்டலை சந்திக்கும் சல்மான்கான்.. அதிரடி காட்டிய போலீஸ்

பாலிவுட்டில் பிரபல நடிகராக வலம் வருபவர் சல்மான்கான்.சமீபகாலமாக இவருக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் வருகிறது.
சல்மான்கான்
சல்மான்கான்
Published on

பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கானின் தனிப்பட்ட உதவியாளரான பிரசாந்த் குஞ்சல்கருக்கு சமீபத்தில் மிரட்டல் இ-மெயில் ஒன்று வந்தது. ரவுடிகளான லாரன்ஸ் பிஷ்னோய் மற்றும் அவரது கூட்டாளி கோல்டி பிரார் ஆகியோர் நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்து இ-மெயில் அனுப்பி இருந்தனர். இதுதொடர்பாக பிரசாந்த் குஞ்சல்கர் பந்த்ரா போலீசில் புகார் செய்ததையடுத்து போலீசார் ரவுடியான பிஷ்னோய் மற்றும் அவரது கூட்டாளி கோல்டி பிரார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர். 

சல்மான்கான்

இந்நிலையில், நடிகர் சல்மான்கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல் வந்துள்ளது. அதாவது, நேற்று மும்பை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு பாலிவுட் நடிகர் சல்மான்கானை கொன்று விடுவதாக மிரட்டல் அழைப்பு ஒன்று வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுப்பட்டு வந்தனர். இந்த விசாரணையில் மிரட்டல் விடுத்த நபர் 16 வயது சிறுவன் என்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து சிறுவனை கைது செய்த போலீசார் சட்ட நடவடிக்கைகளுக்காக அவர் மும்பையில் உள்ள ஆசாத் மைதான் காவல்துறையிடம் ஒப்படைக்கப்படுவார் என்று தெரிவித்துள்ளனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com