என் மலர்
சினிமா செய்திகள்

விசாகா சிங்
சந்தானம் பட நடிகை மருத்துவமனையில் அனுமதி
- நடிகை விசாகா சிங் நடிப்பதோடு மட்டுமல்லாமல் பேஷன் டிசைனிங்கிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.
- இவர் உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நடிகை விசாகா சிங், சந்தானம் நடித்த கண்ணா லட்டு தின்ன ஆசையா, வாலிப ராஜா போன்ற திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடம் அறிமுகமானவர். இவர் நடிப்பதோடு மட்டுமல்லாமல் பேஷன் டிசைனிங் மற்றும் சுய முன்னேற்றம் குறித்தும், மனித வளம் மேம்பாடு குறித்தும் நிறுவனங்களில் கூட்டங்களில் கலந்து கொண்டு பேசி வருகிறார்.
விசாகா சிங்
இந்த நிலையில் விசாகா சிங் உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதளத்தில், "கால மாற்றத்தால் அடிக்கடி நடக்கும் வினோதமான சம்பவங்கள் விபத்து மற்றும் உடல்நல பிரச்சனைகளுக்கு பிறகு, மகிழ்ச்சியான ஆரோக்கியமான கோடையை நோக்கி திரும்புகிறது.
மருத்துவமனையில் விசாகா சிங்
ஏப்ரல் எப்போதுமே எனக்கு உண்மையான புத்தாண்டாகவே இருந்திருக்கிறது. கோடை நாட்கள் நோக்கி முழு ஆர்வத்துடன் முன்னேறி வருகிறேன்" என தெரிவித்துள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். மேலும், விசாகா சிங் பூரண நலம்பெற இணையத்தில் பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.






