search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முதுமலைக்கு வந்த ஆவணப்பட இயக்குனர்.. ஆஸ்கர் விருதுடன் போஸ் கொடுத்த  யானைகள்
    X

    ஆஸ்கர் விருதுடன் ‘போஸ்’ கொடுக்கும் யானைகள் மற்றும் பாகன் தம்பதி. அருகில் இயக்குனர் கார்த்திகி கோன்சால்வ்ஸ் உள்ளார்.

    முதுமலைக்கு வந்த ஆவணப்பட இயக்குனர்.. ஆஸ்கர் விருதுடன் போஸ் கொடுத்த யானைகள்

    • நீலகிரி மாவட்டம் முதுமலையில் அமைந்துள்ள தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் என்ற ஆவணப்படம் எடுக்கப்பட்டது.
    • இந்த ஆவணப்படம் தாயை பிரிந்த குட்டி யானைகள் மற்றும் அவற்றை பராமரித்து வரும் பாகன் தம்பதிகளுக்கு இடையேயான உறவை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்தது.

    நீலகிரி மாவட்டம் முதுமலையில் அமைந்துள்ள தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் என்ற ஆவணப்படம் எடுக்கப்பட்டது. தாயை பிரிந்த குட்டி யானைகள் மற்றும் அவற்றை பராமரித்து வரும் பாகன் தம்பதிகளுக்கு இடையேயான உறவை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்த இந்த ஆவணப்படம் சினிமாவின் உயரிய விருதான ஆஸ்கர் விருதை பெற்றது.

    இதையடுத்து பல்வேறு தரப்பினரும் இந்த படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் படத்தில் இடம் பெற்ற பாகன் தம்பதிக்கு பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். சில தினங்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திரமோடி தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமுக்கு வந்து, பாகன் தம்பதியினரை நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்தார். அத்துடன் அந்த ஆவணப்படத்தில் இடம் பெற்ற குட்டி யானை களையும் பார்வையிட்டு கரும்பு வழங்கினார்.

    பிரதமர் வருகைக்கு பிறகு முதுமலைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது. அங்கு வரும் சுற்றுலா பயணிகள் ஆவணப்படத்தில் இடம் பெற்ற ரகு, பொம்மி யானைகளை பார்வையிட்டு யானைகளுடன் புகைப்ப டம் எடுக்கின்றனர். மேலும் பாகன் தம்பதியான பொம்மன், பெள்ளியையும் நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்து, அவர்களுடன் செல்பி புகைப்படம் எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.

    இந்த நிலையில் தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு ஆவணப்படத்தின் இயக்குனரான கார்த்திகி கோன்சால்வ்ஸ் வந்தார். அவர் முகாமில் ரகு, பொம்மி யானைகளுடனும், பாகன் தம்பதியான பொம்மன், பெள்ளியுடனும் இணைந்து புகைப்படம் எடுத்து கொண்டார். அந்த புகைப்படத்தில் குட்டி யானைகளுக்கு நடுவே கார்த்திகி கோன்சால்வ்ஸ், பாகன் தம்பதி நிற்கின்றனர். மேலும் குட்டி யானைகள் தங்களின் துதிக்கையால் ஆஸ்கர் விருதினை தூக்கி பிடித்து புகைப்படத்துக்கு போஸ் கொடுத்தபடி நிற்கின்றன.

    இந்த காட்சி அங்கு வந்திருந்த சுற்றுலா பயணி களை வெகுவாக கவர்ந்தது. தற்போது இந்த காட்சிகள், சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.


    Next Story
    ×