என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • சிவகார்த்திகேயன் தற்போது நடித்துள்ள திரைப்படம் ‘மாவீரன்’.
    • இப்படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

    நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது 'மண்டேலா' பட இயக்குனர் மடோன் அஸ்வினுடன் இணைந்து 'மாவீரன்' திரைப்படத்தில் நடிக்கிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி வருகிறது. இப்படத்திற்கு தெலுங்கில் 'மாவீருடு' என்று பெயர் வைத்துள்ளனர்.


    இதில் அதிதி ஷங்கர், சரிதா, இயக்குனர் மிஷ்கின் மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரல் நடிக்கின்றனர். இப்படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இதையடுத்து இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளதாக தகவல் வெளியானது.


    இந்நிலையில், 'மாவீரன்' படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படம் வருகிற ஆகஸ்ட் 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு பதிவு ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. பல நாட்களுக்கு பின் அப்டேட் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.


    • ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் ‘ஃபர்ஹானா’.
    • இப்படம் வருகிற மே 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    'மான்ஸ்டர்', 'ஒரு நாள் கூத்து' போன்ற படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'ஃபர்ஹானா'. இந்த படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும், இதில் இயக்குனர் செல்வராகவன், ஜித்தன் ரமேஷ், கிட்டி, அனுமோல், ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.


    ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். 'ஃபர்ஹானா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இதையடுத்து இப்படத்திற்கு தணிக்கைக் குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.


    இதையடுத்து இப்படத்தின் டீசர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, 'ஃபர்ஹானா' படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. கால்சென்டரில் வேலை பார்க்கும் நடுத்தர பெண்ணின் கஷ்டத்தை வெளிப்படுத்துவது போல் உருவாகியுள்ள இந்த டீசர் இணையத்தில் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.



    • இயக்குனர் என்.எஸ்.பொன்குமார் இயக்கத்தில் உருவான திரைப்படம் '1947- ஆகஸ்ட் 16'.
    • இப்படத்தில் கவுதம் கார்த்திக் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    இயக்குனர் என்.எஸ்.பொன்குமார் இயக்கத்தில் உருவான திரைப்படம் '1947- ஆகஸ்ட் 16'. இப்படத்தில் கவுதம் கார்த்திக் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக அறிமுக நாயகி ரேவதி நடித்துள்ளார். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இப்படத்தை ஓம் பிரகாஷ் பட் மற்றும் நர்சிராம் சௌத்ரி இவர்களுடன் இணைந்து ஏ.ஆர் முருகதாஸ் தயாரித்துள்ளார்.


    1947 ஆகஸ்ட் 16 வெற்றி விழா

    இப்படம் கடந்த 7-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், '1947- ஆகஸ்ட் 16' திரைப்படத்தின் வெற்றியை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இது தொடர்பான புகைப்படத்தை நடிகர் கவுதம் கார்த்திக் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.


    • இயக்குனர் குட்டிப்புலி சரவண சக்தி இயக்கத்தில் உருவான திரைப்படம் குலசாமி.
    • இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவிற்கு வர விமல் தயாரிப்பாளரிடம் பணம் கேட்டதாக தகவல் பரவியது.

    நடிகர் விமல், தான்யா ஹோப் நடிப்பில், நாயகன் மற்றும் பில்லா பாண்டி படங்களை இயக்கிய குட்டிப்புலி சரவண சக்தி இயக்கத்தில் உருவான திரைப்படம் குலசாமி. இப்படத்திற்கு விஜய்சேதுபதி வசனம் எழுதியுள்ளார். மிக் புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் தயாரித்துள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குனர் அமீர், விமல் வராததை கண்டித்து பேசினார். தொடர்ந்து விழாவிற்கு வர விமல் தயாரிப்பாளரிடம் பணம் கேட்டு கொடுக்காததால் புறக்கணித்து விட்டதாக தகவல் பரவியது.


     விமல்

    இந்த நிலையில் இந்த குற்றச்சாட்டுக்கு விமல் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது, குலசாமி படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவுக்கு வர நான் பணம் கேட்டேன் என்று சொல்வது தவறான தகவல். இயக்குனர் அமீரை தொடர்பு கொண்டு இதனை விளக்கி விட்டேன். அன்றைய தினம் 'தெய்வமச்சான்' பட நிகழ்ச்சி இருந்தது. அதற்கான தேதியை அந்த படக்குழுவினர் ஒரு மாதத்துக்கு முன்பே என்னிடம் சொல்லி விட்டனர். ஆனால், 'குலசாமி' பட விழா நிகழ்ச்சி பற்றி நான்கு நாட்களுக்கு முன்புதான் என்னிடம் சொன்னார்கள். இரண்டையும் ஒரே தேதியில் வைத்துவிட்டனர். அதனால்தான் வர முடியவில்லை என்று கூறினார்.

    • நடிகை கங்கனா தற்போது 'எமர்ஜென்சி' திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இந்தியில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் கங்கனா ரணாவத் இயக்கி நடித்துள்ள படம் 'எமர்ஜென்சி'. இந்திரா காந்தியின் எமர்ஜென்சி காலங்களில் நடைபெற்ற நிகழ்வுகளை மட்டும் மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்தில் இந்திரா காந்தி கதாபாத்திரத்தில் நடிகை கங்கனா ரணாவத் நடித்திருக்கிறார். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு திரைக்கதை மற்றும் வசனத்தை ரித்தேஷ் ஷா எழுதியுள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் அண்மையில் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலானது.


    கங்கனா -ஜி.வி.பிரகாஷ்

    இதையடுத்து இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், 'எமர்ஜென்சி' படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசையில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தீவிரமாக ஈடுப்பட்டுள்ளார். இது குறித்து அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், "கங்கனா ரணாவத்தின்'எமர்ஜென்சி' திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசையை உருவாக்கி வருகிறேன். இந்த பிரம்மாண்டமான திரைப்படம் விரைவில் வெளிவர காத்திருக்கிறது" என்று கங்கனாவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து தெரிவித்துள்ளார்.


    • நடிகர் சந்தானம் தற்போது 'டிடி ரிட்டன்ஸ்' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    • இதில் சந்தானத்திற்கு ஜோடியாக சுரபி கதாநாயகியாக நடிக்கிறார்.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சந்தானம் இயக்குனர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் 'டிடி ரிட்டன்ஸ்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சந்தானத்திற்கு ஜோடியாக 'வேலையில்லா பட்டதாரி', 'இவன் வேற மாதிரி' போன்ற படங்களில் நடித்த சுரபி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும், ரெடின் கிங்ஸ்லி, மொட்ட ராஜேந்திரன், முனீஸ்காந்த், தங்கதுரை, தீபா, சைதை சேது, மானசி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    ஆர்.கே. என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஒஎப்ஆர்ஒ இசையமைக்கிறார். இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இதையடுத்து இப்படத்தின் முதல் பாடலான 'பிரெஞ்ச் குத்து' பாடல் இன்று காலை 11 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, இப்படத்தின் பாடல் தற்போது வெளியாகி ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.




    • சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று இரவு ஐபிஎல் கிரிக்கெட்டின் 29-வது லீக் ஆட்டம் நடைபெற்றது.
    • இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின.

    சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று இரவு ஐபிஎல் கிரிக்கெட்டின் 29-வது லீக் ஆட்டம் நடைபெற்றது. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 134 ரன்கள் எடுத்தது. 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் எடுத்து அபாரமாக வெற்றி பெற்றது.


    ஐபிஎல் போட்டியை நேரில் பார்த்த  ஆளுநர் தமிழிசை சவுந்தர ராஜன்

    இந்த போட்டியை ஆளுநர் தமிழிசை சவுந்தர ராஜன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துர்கா ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் பொன்முடி ஆகியோர் நேரில் சென்று பார்த்தனர், இவர்களுடன் அமர்ந்து நடிகர் தனுஷ் போட்டியை நேரில் கண்டுகளித்துள்ளார். மேலும், இந்த போட்டியை காண அஜித்தின் மனைவி ஷாலினி தனது மகள் மற்றும் மகனுடன் வந்திருந்தார். அதுமட்டுமல்லாமல், இயக்குனர் மோகன் ஜி, நடிகைகள் பிரியங்கா மோகன், சாக்ஷி அகர்வால், நடிகர்கள் நாகசைதன்யா, சதீஷ் ஆகியோரும் சேப்பாக்கம் மைதானத்திற்கு வந்து போட்டியை பார்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'பொன்னியின் செல்வன்'.
    • இப்படத்தின் புரொமோஷனுக்காக படக்குழு இந்தியா முழுவதும் சென்று வருகின்றனர்.

    மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன்-2 திரைப்படம் வருகிற 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. முதல் பாகத்தின் வரவேற்பால் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


    மேலும் இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இப்படம் தென்னிந்திய சினிமாவில் முதல்முறையாக 4DX தொழில்நுட்பத்தில் வெளியாகவுள்ள திரைப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இந்தப் படத்தின் புரொமோஷனுக்காக படக்குழு இந்தியா முழுவதும் சென்று வருகின்றனர். இது தொடர்பான புகைப்படங்களையும் நடிகர்கள் தங்களது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளனர்.


    இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'பொன்னியின் செல்வன் -2' படத்தின் அறிமுக காட்சிக்கு நடிகர் கமல்ஹாசன் பின்னணி குரல் கொடுத்துள்ளார். இது தொடர்பான வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.

    கடந்த ஆண்டு வெளியான 'பொன்னியின் செல்வன்' முதல் பாகத்திற்கும் கமல்ஹாசன் பின்னணி குரல் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.




    • இயக்குனர் சை.கௌதமராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'கழுவேத்தி மூர்க்கன்' .
    • இப்படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

    கடந்த 2019-ம் ஆண்டு ஜோதிகா நடிப்பில் வெளியான 'ராட்சசி' படம் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குனர் சை.கௌதமராஜ். இவர் தற்போது 'கழுவேத்தி மூர்க்கன்' என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் அருள்நிதி கதாநாயகனாக நடிக்க இவருக்கு ஜோடியாக துஷாரா விஜயன் இணைந்துள்ளார்.


    இப்படத்தில் சந்தோஷ் பிரதாப், சாயாதேவி, முனீஸ்காந்த் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். 'கழுவேத்தி மூர்க்கன்' திரைப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்தது.


    இந்நிலையில், இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. இதனை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டார். ஆக்ஷன் காட்சிகள் நிறைந்துள்ள இந்த டீசர் தற்போது ட்ரெண்டாகி வருகிறது.



    • நடிகர் சிம்பு நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘பத்து தல’.
    • இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

    ஒபலி என்.கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு, கௌதம் மேனன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள 'பத்து தல' திரைப்படம் கடந்த 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் ஆதரவை பெற்று வருகிறது. இப்படம் வெளியான முதல் நாளில் ரூ.12 .3 கோடியை வசூல் செய்ததாக படக்குழு அறிவித்திருந்தது.


    பத்து தல போஸ்டர்

    சமீபத்தில் இப்படத்தின் வெற்றியை படக்குழுவினர் கொண்டாடினர். இந்நிலையில், 'பத்து தல' படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இப்படம் வருகிற 27-ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.


    • மலையாள திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் மம்முட்டி.
    • இவர் தாயார் பாத்திமா இஸ்மாயில் நேற்று காலமானார்.

    மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான மம்முட்டி, தமிழில் அழகன், தளபதி, மக்கள் ஆட்சி, ஆனந்தம், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், பேரன்பு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

    நடிகர் மம்முட்டியின் தாயார் பாத்திமா இஸ்மாயில் (99) வயது முதிர்வு மற்றும் நோயால் பாதிக்கப்பட்டு கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததையடுத்து நேற்று காலை இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவருடைய மறைவுக்கு திரையுலகினர், பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


    மம்முட்டி -பாத்திமா இஸ்மாயில்

    இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "மம்முட்டியின் தாயார் மறைவு குறித்து கேள்விப்பட்டேன். நீங்கள் அடைந்த உயரத்தை காண உங்கள் தாய் இருந்தது உங்கள் அதிர்ஷ்டம். அவர் மிகுந்த திருப்தியுடன் கிளம்பியிருப்பார். காலம்தான் உங்களின் வலியை ஆற்றும். உங்களின் கவலையை பகிர்ந்து கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.


      

    • இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘கங்குவா’.
    • இப்படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

    இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா தற்போது நடிக்கும் திரைப்படம் 'கங்குவா'. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பத்தானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

    கங்குவா படக்குழு

    தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படம் 3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து 'கங்குவா' திரைப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டரை சமீபத்தில் படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது.

    கங்குவா

    பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு கோவா மற்றும் பிஜூ தீவுகளில் நடைபெற்று வந்ததையடுத்து தற்போது கொடைக்கானலில் நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு படக்குழு ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்து புதிய மோஷன் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது. 


    ×