என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'பொன்னியின் செல்வன்'.
    • இப்படம் வருகிற 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன்-2 திரைப்படம் வருகிற 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. முதல் பாகத்தின் வரவேற்பால் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


    குந்தவை - திரிஷா
    குந்தவை - திரிஷா


    மேலும் இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இப்படம் தென்னிந்திய சினிமாவில் முதல்முறையாக 4DX தொழில்நுட்பத்தில் வெளியாகவுள்ள திரைப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இந்தப் படத்தின் புரொமோஷனுக்காக படக்குழு இந்தியா முழுவதும் சென்று வருகின்றனர். இது தொடர்பான புகைப்படங்களையும் நடிகர்கள் தங்களது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளனர்.


    குந்தவை - திரிஷா

    குந்தவை - திரிஷா


     


    இந்நிலையில் ரசிகர்களை கவரும் வகையில் 'பொன்னியின் செல்வன் -2' படக்குழு கேள்வி எழுப்பியுள்ளனர். அதன்படி பொன்னியின் செல்வனில் குந்தவையின் பிற பெயர்கள் என்ன? என்று ரசிகர்களிடம் கேள்வி எழுப்பிய வீடியோவை பகிர்ந்து உங்கள் பதிலை ஒரு செல்ஃபி வீடியோவாக கமெண்ட் பண்ணவும் என்று குறிப்பிட்டுள்ளனர். இதனால் ரசிகர்கள் தங்களின் பதிலை செல்ஃபி வீடியோவாக எடுத்து பதிவிட்டு வருகின்றனர்.


    இதில் குந்தவையாக திரிஷா நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    • 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்', 'மிஸ்டர் லோக்கல்' போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை ஷாலு ஷம்மு.
    • சமீபத்தில் ஷாலு ஷம்முவின் விலை உயர்ந்த ஐ போன் காணாமல் போனது தொடர்பாக போலீசில் புகார் அளித்திருந்தார்.

    'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்', 'மிஸ்டர் லோக்கல்' போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை ஷாலு ஷம்மு. இவர் இரண்டு மாதங்களுக்கு முன்பு ரூ.2 லட்சம் மதிப்புள்ள ஐ போன் ஒன்றை வாங்கியுள்ளார்.


    ஷாலு ஷம்மு

    ஷாலு ஷம்மு

    சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள நட்சத்திர விடுதியில் கடந்த 9-ந்தேதி இரவு ஷாலு ஷம்மு நண்பர்களுடன் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். பின்னர் நிகழ்ச்சி முடிந்து சூளைமேட்டில் உள்ள அவரது நண்பர் வீட்டில் தங்கியுள்ளார். அடுத்த நாள் எழுந்து பார்க்கும்போது செல்போன் காணாமல் போயுள்ளது. இதனை அறிந்த ஷாலு ஷம்மு நட்சத்திர விடுதிக்கு சென்று தேடி பார்த்து உள்ளார்.


    ஷாலு ஷம்மு

    ஷாலு ஷம்மு

    செல்போன் கிடைக்காத நிலையில், இதுதொடர்பாக பட்டினபாக்கம் போலீஸ் நிலையத்தில் புகாரளித்தார். மேலும், ஐபோன் காணாமல் போன விவகாரத்தில் தன்னுடன் இருந்த நண்பர்கள் மீது சந்தேகம் இருப்பதாக கூறிய நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். நட்சத்திர ஓட்டல் விருந்து நிகழ்ச்சி மற்றும் சூளைமேட்டில் தன்னுடன் தங்கி இருந்தவர்கள் உள்ளிட்டவர்களின் பெயர் பட்டியலை போலீசில் கொடுத்துள்ளார்.


    ஷாலு ஷம்மு

    ஷாலு ஷம்மு

    இந்நிலையில், ஷாலு ஷம்முவுக்கு டன்சோ மூலம் பார்சல் ஒன்று வந்து உள்ளது. அதில், காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்ட அவரது விலை உயர்ந்த ஐபோன் இருந்து உள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த நடிகை ஷாலு ஷம்மு, தான் சந்தேகப்பட்ட நபர்தான் தனது செல்போனை திருடியிருப்பதாகவும், 8 வருட நட்பு வீணாகியுள்ளதாகவும், சமூக வலைதளத்தில் அவர் வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார். ஷாலு ஷம்முவின் இந்த பதிவு, சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான சரத்பாபுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
    • இவருடைய உடல்நிலை தற்போது கவலைக்கிடமாக உள்ளதாகவும், இவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

    1973-ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகிற்கு நடிகராக அறிமுகமானவர் சரத்பாபு. இவர் 1977-ஆம் ஆண்டு இயக்குனர் கே.பாலசந்தர் இயக்கத்தில் வெளியான 'பட்டின பிரவேசம்' திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் கவனம் செலுத்தினார்.இவர் ரஜினிகாந்துடன் முத்து, அண்ணாமலை, போன்ற படங்களில் இணைந்து நடித்துள்ளார். இந்த படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. மேலும் பல முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்துள்ளார். இதுவரை 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.


    சரத்பாபு

    சரத்பாபு

    சரத்பாபு சிறுநீரகம், கல்லீரல் பிரச்சனை காரணமாக கடந்த 20 ஆம் தேதி கச்சிபுளியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது அவருடைய உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல் போன்ற முக்கிய உறுப்புகளை பாதிக்கும் செப்சிஸ் நோயால் அவர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தற்போது அவருக்கு வென்டிலேட்டர் மூலம் சிகிச்சை அளித்து வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர். 

    • இயக்குனர் சை.கௌதமராஜ் இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'கழுவேத்தி மூர்க்கன்' .
    • இப்படத்தின் டீசரை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நேற்று வெளியிட்டார்.

    கடந்த 2019-ம் ஆண்டு ஜோதிகா நடிப்பில் வெளியான 'ராட்சசி' படம் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குனர் சை.கௌதமராஜ். இவர் தற்போது 'கழுவேத்தி மூர்க்கன்' என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் அருள்நிதி கதாநாயகனாக நடிக்க இவருக்கு ஜோடியாக துஷாரா விஜயன் இணைந்துள்ளார்.


    கழுவேத்தி மூர்க்கன்

    கழுவேத்தி மூர்க்கன்

    இப்படத்தில் சந்தோஷ் பிரதாப், சாயாதேவி, முனீஸ்காந்த் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். 'கழுவேத்தி மூர்க்கன்' திரைப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்தது.


    கழுவேத்தி மூர்க்கன்

    கழுவேத்தி மூர்க்கன்

    இப்படத்தின் டீசரை நேற்று இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இந்நிலையில் இந்த டீசர் வெளியான 24 மணி நேரத்தில் 2 மில்லியன் பார்வையாளர்களுக்கு மேல் கடந்து வருவதாக படக்குழு அறிவித்துள்ளது.



    • சிவகார்த்திகேயன் நடிப்பில் ஆர்.ரவிகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் அயலான்.
    • இப்படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு கொடுத்துள்ளது.

    டாக்டர், டான், பிரின்ஸ் படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் படம் அயலான். இப்படத்தை இயக்குனர் ஆர்.ரவிகுமார் இயக்கியுள்ளார். ஏ.ஆர் ரகுமான் இசையில், ரகுல் பிரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் மற்றும் கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.


    அயலான் அப்டேட்

    அயலான் அப்டேட்

    இந்நிலையில் நீண்ட இடைவேளைக்கு பிறகு அயலான் படத்தின் அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்தின் அடுத்த அறிவிப்பு நாளை காலை 11.04 மணிக்கு வெளியாகும் என அறிக்கை வெளியிட்டு படக்குழு தெரிவித்துள்ளது. அதில், இப்படத்திற்காக எந்த சமரசமும் செய்து கொள்ள படக்குழு விரும்பவில்லை.

    அயலான் படத்தில் 4500-க்கும் அதிகமான விஎஃப்எக்ஸ் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகவும் படம் முழுவதும் ஏலியன் கதாப்பாத்திரம் இடம் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அயலானுடன் வேறு உலகத்திற்கு செல்ல அனைவரும் தயாராக இருங்கள் என்று படக்குழு தெரிவித்துள்ளது. இதனால் சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

    • கடந்த ஆண்டு பெண் டப்பிங் கலைஞர் சங்கீதா என்பவரை ஆபாசமாக பேசி தாக்கியதாக, நடிகர் ராதாரவி மீது புகார் எழுந்தது.
    • இந்த புகாரில் நடிகர் ராதாரவி இயக்குனர் கதிரவன் பாலு உள்பட 8 பேர் மீது விருகம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    சென்னையை சேர்ந்த சங்கீதா என்பவர் கடந்த 2016-ம் ஆண்டு டப்பிங் யூனியனில் உறுப்பினராக சேர்ந்து சினிமா டப்பிங் ஆர்டிஸ்டாக பணிபுரிந்து வருகிறார். கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற டப்பிங் சங்கத்தின் 35ஆவது ஆண்டு பேரவை கூட்டத்தின் போது, பெண் டப்பிங் கலைஞர் சங்கீதா என்பவரை ஆபாசமாக பேசி தாக்கியதாக, நடிகர் ராதாரவி மீது புகார் எழுந்தது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் சங்கீதா விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பின்னர் நடிகர் ராதாரவி, இயக்குனர் கதிரவன் பாலு உள்பட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.


    ராதாரவி

    ராதாரவி

    இந்நிலையில், பெண் டப்பிங் கலைஞர் சங்கீதாவை ஆபாசமாக பேசி தாக்கிய புகாரில் நடிகர் ராதாரவி இயக்குனர் கதிரவன் பாலு உள்பட 8 பேர் மீது விருகம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்திய தண்டனை சட்டம் பிரிவுகள் 294 பி ஆபாசமாக பேசுதல், 323 சிறுகாயம் ஏற்படுத்துதல், 354 பெண்களின் மானத்துக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ளுதல், 506(2) கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    • விக்ரம் சுகுமாறன் இயக்கத்தில் சாந்தனு பாக்யராஜ் நாயகனாக நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘இராவண கோட்டம்’.
    • இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

    இயக்குனர் விக்ரம் சுகுமாறன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் `இராவண கோட்டம்'. சாந்தனு நாயகனாக நடித்துள்ள இப்படத்தை கண்ணன் ரவி தயாரித்துள்ளார். இதில் சாந்தனுவுக்கு ஜோடியாக கயல் ஆனந்தி நடித்துள்ளார். முற்றிலும் வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகி வரும் இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.


    இராவண கோட்டம்

    இராவண கோட்டம்

    `இராவண கோட்டம்' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் டீசரை நடிகர் சிம்பு சமூக வலைத்தளத்தின் வாயிலாக வெளியிட்டிருந்தார்.


    இராவண கோட்டம்

    இராவண கோட்டம்

    இந்நிலையில் இராவண கோட்டம் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படம் வருகிற மே 12ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

    • வெங்கட் பிரபு இயக்கத்தில் நாகசைதன்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கஸ்டடி'.
    • இப்படத்தின் இரண்டாவது பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

    இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் 'கஸ்டடி'. இப்படத்தில் நாக சைதன்யா கதாநாயகனாக நடித்துள்ளார். ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் பேனரின் சார்பாக ஸ்ரீனிவாசா சித்தூரி இதனை தயாரித்துள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்திருக்கிறார்.


    கஸ்டடி

    கஸ்டடி

    'கஸ்டடி' திரைப்படத்தில் வில்லனாக அரவிந்த் சாமி நடித்திருக்கிறார். மேலும், இதில் சரத்குமார், வென்னேலா கிஷோர், பிரேம்ஜி, சம்பத் ராஜ், பிரியாமணி மற்றும் பிரேமி விஷ்வநாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இப்படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இருவரும் இணைந்து இசையமைக்கின்றனர். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது மற்றும் இப்படத்தின் முதல் பாடலான 'Head up High' பாடல் வெளியாகி வைரலானது.


    கஸ்டடி

    கஸ்டடி

    இந்நிலையில் கஸ்டடி படத்தின் இரண்டாம் பாடலான டைம்லெஸ் லவ் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. யுவன் சங்கர் ராஜா மற்றும் கபில் கபிலன் குரலில் மதன் கார்க்கி வரிகளில் வெளியான இந்த பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த பாடல் மூலம் முதல் முறையாக இளையராஜாவுடன் மதன் கார்க்கி இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் படம் 'ஆதிபுருஷ்' .
    • ‘ஆதிபுருஷ்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘ஜெய் ஸ்ரீராம்’ பாடலைக் கொண்ட மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

    இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் ராமாயண கதையை மையமாக வைத்து தயாராகி வரும் திரைப்படம் 'ஆதிபுருஷ்' . இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சயீப் அலிகான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர். பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தை டி சீரிஸ் மற்றும் ரெட்ரோ பைல்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர்.

    தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் ஜுன் 16-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் டீசர் கடந்த ஆண்டு அக்டோபர் 2-ந்தேதி காந்தி ஜெயந்தி அன்று உத்தரபிரதேசத்தில் உள்ள அயோத்தி சராயு நதிக்கரையில் வெளியிடப்பட்டது.


    ஆதிபுருஷ்

    ஆதிபுருஷ்

    ஆனால், ஆதிபுருஷ் டீசரின் கிராபிக்ஸ் காட்சிகள் மிகவும் மோசமான தரத்தில் இருப்பதாக கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. அதே போல் டீசரில் ராவணன் கதாபாத்திரம் சித்திரிக்கப்பட்ட விதமும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தொடர்ந்து படக்குழு சார்பில் ராமநவமி அன்று படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்ட நிலையில், போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.


    ஆதிபுருஷ்
    ஆதிபுருஷ்


    'ஆதிபுருஷ்' டீசரில் 'ஜெய் ஸ்ரீராம்' என்ற பாடலின் சிறு பகுதி இடம்பெற்றிருந்தது. இந்நிலையில் 'ஆதிபுருஷ்' படத்தில் இருந்து 'ஜெய் ஸ்ரீராம்' என்ற பாடலைக் கொண்ட மோஷன் போஸ்டரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இந்த பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

    • அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் 'கேப்டன் மில்லர்'.
    • இப்படத்தில் ஆர்ஆர்ஆர் பட நடிகர் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் தற்போது 'கேப்டன் மில்லர்' படத்தில் நடித்து வருகிறார். வரலாற்று பாணியில் உருவாகி வரும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். சத்திய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார்.


    கேப்டன் மில்லர் படக்குழு

    கேப்டன் மில்லர் படக்குழு

    மேலும் நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன் மற்றும் சுமேஷ் மூர், சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தியர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் இடையிலான போரை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டு வருவம் இந்த படத்தில் ஏராளமான துப்பாக்கி குண்டுகள் மற்றும் குண்டுவெடிப்புகளுடன் படக்குழு பெரிய அளவில் காட்சியை பதிவு செய்து வருகிறது.


    கேப்டன் மில்லர் - எட்வர்ட் சொனின்ப்ளிக்

    கேப்டன் மில்லர் - எட்வர்ட் சொனின்ப்ளிக்

    இந்நிலையில் 'கேப்டன் மில்லர்' படத்தில் ஆர்ஆர்ஆர் பட நடிகர் இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்தில் அமெரிக்க நடிகர் எட்வர்ட் சொனின்ப்ளிக் இணைந்துள்ளதாக போஸ்டர் வெளியிட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    • விஷால் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தை தொடர்ந்து விஷால் நடிக்கவிருக்கும் 34வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    லத்தி படத்தை தொடர்ந்து விஷால் தற்போது திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் போன்ற படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் 'மார்க் ஆண்டனி' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் நாயகியாக ரித்து வர்மா நடித்து வருகிறார். மேலும் எஸ்.ஜே.சூர்யா மற்றும் செல்வராகவன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். ஜி.வி பிரகாஷ் இசையமைத்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் நடைபெற்று வருகிறது.


    விஷால் 34

    விஷால் 34


    இந்நிலையில் விஷாலின் 34வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி விஷாலின் 34 படத்தை சாமி, அருள், ஆறு, சிங்கம் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் ஹரி இயக்கவுள்ளார். ஜீ ஸ்டுடியோஸ் சவுத் மற்றும் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாக போஸ்டர் வெளியிட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


    விஷால் 34

    விஷால் 34


    இதற்கு முன்பு விஷாலின் தாமிரபரணி, பூஜை படங்களை ஹரி இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சிவகார்த்திகேயன் தற்போது நடித்துள்ள திரைப்படம் ‘மாவீரன்’.
    • இப்படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

    நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது 'மண்டேலா' பட இயக்குனர் மடோன் அஸ்வினுடன் இணைந்து 'மாவீரன்' திரைப்படத்தில் நடிக்கிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி வருகிறது. இப்படத்திற்கு தெலுங்கில் 'மாவீருடு' என்று பெயர் வைத்துள்ளனர்.


    இதில் அதிதி ஷங்கர், சரிதா, இயக்குனர் மிஷ்கின் மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரல் நடிக்கின்றனர். இப்படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இதையடுத்து இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளதாக தகவல் வெளியானது.


    இந்நிலையில், 'மாவீரன்' படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படம் வருகிற ஆகஸ்ட் 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு பதிவு ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. பல நாட்களுக்கு பின் அப்டேட் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.


    ×