நீண்ட இடைவேளைக்கு பிறகு அயலான் அப்டேட் கொடுத்த படக்குழு.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

சிவகார்த்திகேயன் நடிப்பில் ஆர்.ரவிகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் அயலான்.இப்படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு கொடுத்துள்ளது.
நீண்ட இடைவேளைக்கு பிறகு அயலான் அப்டேட் கொடுத்த படக்குழு.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்
Published on

டாக்டர், டான், பிரின்ஸ் படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் படம் அயலான். இப்படத்தை இயக்குனர் ஆர்.ரவிகுமார் இயக்கியுள்ளார். ஏ.ஆர் ரகுமான் இசையில், ரகுல் பிரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் மற்றும் கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

அயலான் அப்டேட்
அயலான் அப்டேட்

அயலான் அப்டேட்

இந்நிலையில் நீண்ட இடைவேளைக்கு பிறகு அயலான் படத்தின் அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்தின் அடுத்த அறிவிப்பு நாளை காலை 11.04 மணிக்கு வெளியாகும் என அறிக்கை வெளியிட்டு படக்குழு தெரிவித்துள்ளது. அதில், இப்படத்திற்காக எந்த சமரசமும் செய்து கொள்ள படக்குழு விரும்பவில்லை.

அயலான் படத்தில் 4500-க்கும் அதிகமான விஎஃப்எக்ஸ் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகவும் படம் முழுவதும் ஏலியன் கதாப்பாத்திரம் இடம் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அயலானுடன் வேறு உலகத்திற்கு செல்ல அனைவரும் தயாராக இருங்கள் என்று படக்குழு தெரிவித்துள்ளது. இதனால் சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com