பெண் டப்பிங் கலைஞரை ஆபாசமாக பேசிய புகாரில் நடிகர் ராதாரவி மீது வழக்குப் பதிவு

கடந்த ஆண்டு பெண் டப்பிங் கலைஞர் சங்கீதா என்பவரை ஆபாசமாக பேசி தாக்கியதாக, நடிகர் ராதாரவி மீது புகார் எழுந்தது.இந்த புகாரில் நடிகர் ராதாரவி இயக்குனர் கதிரவன் பாலு உள்பட 8 பேர் மீது விருகம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ராதாரவி
ராதாரவி
Published on

சென்னையை சேர்ந்த சங்கீதா என்பவர் கடந்த 2016-ம் ஆண்டு டப்பிங் யூனியனில் உறுப்பினராக சேர்ந்து சினிமா டப்பிங் ஆர்டிஸ்டாக பணிபுரிந்து வருகிறார். கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற டப்பிங் சங்கத்தின் 35ஆவது ஆண்டு பேரவை கூட்டத்தின் போது, பெண் டப்பிங் கலைஞர் சங்கீதா என்பவரை ஆபாசமாக பேசி தாக்கியதாக, நடிகர் ராதாரவி மீது புகார் எழுந்தது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் சங்கீதா விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பின்னர் நடிகர் ராதாரவி, இயக்குனர் கதிரவன் பாலு உள்பட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

ராதாரவி
ராதாரவி

ராதாரவி

இந்நிலையில், பெண் டப்பிங் கலைஞர் சங்கீதாவை ஆபாசமாக பேசி தாக்கிய புகாரில் நடிகர் ராதாரவி இயக்குனர் கதிரவன் பாலு உள்பட 8 பேர் மீது விருகம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்திய தண்டனை சட்டம் பிரிவுகள் 294 பி ஆபாசமாக பேசுதல், 323 சிறுகாயம் ஏற்படுத்துதல், 354 பெண்களின் மானத்துக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ளுதல், 506(2) கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com