இவன் வாழ்க்கையில ஜெயிக்கணும்னா கல்யாணம் தான்.. சந்தானம் படத்தின் புதிய பாடல்

நடிகர் சந்தானம் தற்போது 'டிடி ரிட்டன்ஸ்' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இதில் சந்தானத்திற்கு ஜோடியாக சுரபி கதாநாயகியாக நடிக்கிறார்.
டிடி ரிட்டன்ஸ்
டிடி ரிட்டன்ஸ்
Published on

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சந்தானம் இயக்குனர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் 'டிடி ரிட்டன்ஸ்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சந்தானத்திற்கு ஜோடியாக 'வேலையில்லா பட்டதாரி', 'இவன் வேற மாதிரி' போன்ற படங்களில் நடித்த சுரபி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும், ரெடின் கிங்ஸ்லி, மொட்ட ராஜேந்திரன், முனீஸ்காந்த், தங்கதுரை, தீபா, சைதை சேது, மானசி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

ஆர்.கே. என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஒஎப்ஆர்ஒ இசையமைக்கிறார். இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இதையடுத்து இப்படத்தின் முதல் பாடலான 'பிரெஞ்ச் குத்து' பாடல் இன்று காலை 11 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, இப்படத்தின் பாடல் தற்போது வெளியாகி ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com