என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்து போஸ்டர் வெளியிட்ட கங்குவா.. வைரலாகும் வீடியோ
    X

    கங்குவா

    ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்து போஸ்டர் வெளியிட்ட 'கங்குவா'.. வைரலாகும் வீடியோ

    • இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘கங்குவா’.
    • இப்படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

    இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா தற்போது நடிக்கும் திரைப்படம் 'கங்குவா'. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பத்தானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

    கங்குவா படக்குழு

    தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படம் 3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து 'கங்குவா' திரைப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டரை சமீபத்தில் படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது.

    கங்குவா

    பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு கோவா மற்றும் பிஜூ தீவுகளில் நடைபெற்று வந்ததையடுத்து தற்போது கொடைக்கானலில் நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு படக்குழு ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்து புதிய மோஷன் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.


    Next Story
    ×