என் மலர்
நடிகர் அஜித் குமார் திரைப்படங்களை தாண்டி கார் ரேஸிங் மீது காதல் கொண்டு பல சர்வதேச போட்டிகளில் அண்மைக் காலமாக கலந்துகொண்டு வருகிறார்.
ஸ்பெயின் மற்றும் அபுதாபி ஆகிய இடங்களில் நடைபெற்ற ரேஸிங் போட்டிகளில் அவர் பங்கேற்று கவனம் ஈர்த்து வருகிறார்.
இந்நிலையில் அபுதாபி ரேஸிங் களத்தில் இசையமைப்பாளர் அனிருத் அஜித்தை நேரில் சென்று சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பு தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
கடைசியாக மலேசியாவில் நடந்த விஜய்யின் ஜன நாயகன் இசை வெளியீட்டு விழாவில் அனிருத் தோன்றி இருந்த நிலையில் தற்போது அஜித்தை சந்தித்துள்ளார்.

குட் பேட் அக்லி இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் உடன் அஜித் புதிய படம் ஒன்றை நடிக்க உள்ளார். அஜித்தின் விடாமுயற்சி படத்தை போல இந்த படத்திற்கும் அனிருத் இசை அமைப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. விடாமுயற்சி படத்தின் 'சவாதீக்கா' பாடல் வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
அதே நேரம் குட் பேட் அக்லி படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார்.
- இன்றைய இந்திய சினிமாவில் குறிப்பிடத்தக்க படைப்பாக காந்தாரா சாப்டர் 1 தன்னை நிலைநிறுத்தியுள்ளது.
- திரையரங்கில் வெளியாகி 100 நாட்களைக் கடந்த “காந்தாரா சாப்டர் 1” தற்போது விருதுகளுக்கான களத்தில் நுழைந்துள்ளது.
"காந்தாரா சாப்டர் 1" திரைப்படம் திரையரங்கில் வெளியானதிலிருந்து 100 நாட்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இது அதன் சினிமா பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாகவும், கலாச்சார தாக்கத்தின் அடையாளமாகவும் திகழ்கிறது. இந்திய மக்கள் மரபுகள், ஆன்மீக நம்பிக்கைகள் மற்றும் பூர்வகுடி கதைகளில் ஆழமாக வேரூன்றிய இந்தத் திரைப்படம், ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் பெரும் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. இதன் மூலம், இன்றைய இந்திய சினிமாவில் குறிப்பிடத்தக்க படைப்பாக "காந்தாரா சாப்டர் 1 " தன்னை நிலைநிறுத்தியுள்ளது.
ரிஷப் ஷெட்டி எழுத்து இயக்கத்தில், விஜய் கிரகந்தூர் தயாரிப்பில், ஹொம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் உருவான இப்படம், அதன் ஆழமான கதையமைப்பு, காட்சித் தன்மை மற்றும் பிரம்மாண்டமான காட்சிப்படுத்தலுக்காக பரவலான அங்கீகாரத்தையும் பாராட்டையும் பெற்றுள்ளது.
வெளியீட்டின் 100 நாட்களை கொண்டாடும் இந்நேரத்தில், "காந்தாரா சாப்டர் 1" திரைப்படம் "அகாடமி அவார்ட்ஸ்" விருதுகளுக்கான பரிசீலனைப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இது, பண்பாட்டுச் செழுமையும் உண்மையான உள்ளூர் கதையாக்கமும் கொண்ட இந்திய திரைப்படங்களுக்கு, உலகளாவிய அளவில் கிடைக்கும் அங்கீகாரத்தை பிரதிபலிக்கிறது.
"காந்தாரா சாப்டர் 1" தற்போது இந்திய எல்லையைக் கடந்து, உலகளாவிய அளவில் பெரும் அங்கீகாரத்தைப் பெற்று வருகிறது.
- இப்படத்தில் எமி ஜாக்சன், சமந்தா என இரண்டு கதாநாயகிகள் நடித்திருந்தனர்.
விஜய் நடிப்பில் வெளியான படம் 'தெறி'. அட்லி இயக்கத்தில் உருவான இப்படத்தில் எமி ஜாக்சன், சமந்தா என இரண்டு கதாநாயகிகள் நடித்திருந்தனர்.
ஜி.வி.பிரகாஷ் இசையமைத்த இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்திருந்தார். இதில் விஜய் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார்.
இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. மேலும் வசூலிலும் சாதனை படைத்தது. இப்படம் இந்தியிலும் வருண் தவான் நடிப்பில் பேபி ஜான் என்ற பெயரில் கடந்த வருடம் ரிலீஸ் ஆனது.
இந்நிலையில் விரைவில் தமிழில் தெறி படம் பொங்கலை ஒட்டி ஜனவரி 15 அன்று ரீரிலீஸ் ஆக உள்ளதாக தயாரிப்பாளர் தாணு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளார்.
ஹெச் வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜன நாயகன் படதிற்கு சென்சார் சான்றிதழ் மறுக்கப்பட்டதால் அப்படம் குறித்தபடி ஜனவரி 9, நேற்று வெளியாகாதது ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியது.
இந்நிலையில் தெறி படம் பொங்கலை ஒட்டி ரீரிலீஸ் ஆவது விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.
இதற்கிடையே சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜன நாயகனுக்கு சென்சார் சான்றிதழ் வழக்கும் வழக்கு விசாரணை ஜனவரி 21 க்கு நேற்று தள்ளி வைக்கப்பட்டது. தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்ஷன்ஸ் இன்று உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளது.
- ஜன நாயகன் படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்காத நிலையில், இந்தப் படத்துக்கு எளிதாகக் கொடுக்கப்பட்டது.
2016 ஆம் ஆண்டு வெளியான "பழைய வண்ணாரபேட்டை" படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் மோகன் ஜி.
இதைத் தொடர்ந்து 2020-ம் ஆண்டு திரௌபதி என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்தப் படம் சர்ச்சைக்கு உரிய படமாக இருந்தாலும் வெற்றிப் படமாக அமைந்தது.
கடைசியாக செல்வராகவன் நடிப்பில் வெளியான "பகாசூரன்" திரைப்படத்தை மோகன் ஜி இயக்கினார். இந்தப் படம் மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது.
இந்நிலையில் மோகன் ஜி அடுத்து இயக்கியுள்ள படம் திரௌபதி 2. இந்தப் படத்திலும் ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாக நடித்துள்ளார்.இந்தப் படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். வரலாற்று புனைவாக இந்த படம் உருவாகி உள்ளது. படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. இதற்கிடையே, ஜன நாயகன் படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்காத நிலையில், இந்தப் படத்துக்கு எளிதாகக் கொடுக்கப்பட்டது சமூக வலைதளத்தில் பேசுபொருளாகி உள்ளது.
- கடைசி நேரத்தில் தணிக்கை சான்றிதழ் கிடைத்தால் இன்று பராசக்தி படம் வெளியானது.
- 'ஜன நாயகன்' வெளியீட்டை பட தயாரிப்பு நிறுவனம் ஒத்திவைத்தது.
தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் 'ஜன நாயகன்' வெளியீட்டை பட தயாரிப்பு நிறுவனம் ஒத்திவைத்தது. கடைசி நேரத்தில் தணிக்கை சான்றிதழ் கிடைத்தால் இன்று பராசக்தி படம் வெளியானது.
பொங்கல் வெளியீடாக பராசக்தி மட்டும் வெளியான நிலையில், இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு மற்ற படங்களும் திடீரென்று பொங்கல் ரேஸில் குதித்துள்ளன.
இந்நிலையில், கடந்த மாதமே வெளியாகும் என அறிவிக்கப்பட்டு பின்னர் ஒத்திவைக்கப்பட்ட நடிகர் கார்த்தியின் 'வா வாத்தியார்' படம் பொங்கல் வெளியீடாக ஜனவரி 14 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
இதனால் கார்த்தியின் ரசிகர்கள் இந்த பொங்கல் பண்டிகையை விமரிசையாக கொண்டாட தயாராகியுள்ளனர்.
- தணிக்கை குழு சான்றிதழ் விவகாரம் தொடர்பாக ஜனநாயகன் குறிப்பிட்ட தேதியில் ரிலீஸ் ஆகவில்லை.
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜன நாயகன் படம் நேற்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தணிக்கை குழு சான்றிதழ் வழங்க மறுத்துவிட்டதால் படம் குறிப்பிட்ட நாளில் ரிலீஸ் ஆகவில்லை.
தணிக்கை குழுவுக்கு எதிராக ஜன நாயகன் பட தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் தனி நீதிபதி, சான்றிதழ் வழங்க உத்தரவிட்டார். இதை எதிர்த்து தணிக்கை குழு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அப்போது, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, தனி நீதிபதி உத்தரவுக்கு தடைவிதித்து, வழக்கை 21-ந்தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
இதனால் 21-ந்தேதி வரை படம் ரிலீஸ் ஆகுமா? என்பது சந்தேகம்தான். படக்குழு தற்போது உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது.
இதற்கிடையே சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான பராசக்தி படம் இன்று ரிலீஸ் ஆனது. இந்த படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த நிலையில் ஜனநாயகன் விவகாரம் குறித்து சிவகார்த்திகேயனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சிவகார்த்திக்கேயன் "ஒரு ரசிகரின் கண்ணோட்டத்திற்கு அப்பாற்பட்டு, இந்தத் திரைப்படம் திரையுலகிற்கும் திரையரங்குகளுக்கும் மிகவும் முக்கியமானது. இது எப்போது வெளியானாலும், அது அனைவருக்கும் ஒரு கொண்டாட்டமாக இருக்கும்" என்றார்.
- டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பை ஜூலை மாதம் படக்குழு பூஜை விழாவுடன் தொடங்கியது.
- இப்படம் வரும் மே மாதம் கோடை விடுமுறைக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஹாரர் திரில்லர் படமாக உருவாகி 2015-ம் ஆண்டு வெளியான டிமான்ட்டி காலனி திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் 2-ம் பாகத்தை படக்குழு வெளியிட்டது. இப்படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றி திரைப்படமாக அமைந்தது. உலகளவில் இப்படம் 80 கோடி ரூபாய் வசூலித்தது குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து படக்குழு மூன்றாம் பாகத்தை இயக்க திட்டமிட்டது. படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் வேலைகள் நடந்து முடிந்த நிலையில் படப்பிடிப்பை ஜூலை மாதம் படக்குழு பூஜை விழாவுடன் தொடங்கியது. இந்த பாகத்தை பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் கோல்ட் மைன் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கிறது.
இப்படம் வரும் மே மாதம் கோடை விடுமுறைக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், டிமான்ட்டி காலனி 3 படம் ரிலீசுக்கு முன்பே ரூ.50 கோடி வசூலித்துள்ளது.
படத்தில் ஆடியோ உரிமையை Tseries South நிறுவனம் தொலைக்காட்சி மற்றும் ஓடிடி உரிமையை ஜீ தமிழ் மற்றும் ஜீ5 நிறுவனங்கள் கைப்பற்றியுள்ளது.
கடந்த 2024-ம் ஆண்டு ஜீவா நடிப்பில் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது 'ப்ளாக்' திரைப்படம். இப்படத்தை பாலசுப்பிரமணி கேஜி இயக்கியிருந்தார். ஜீவாவின் ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்க சாம்.சி எஸ் இசையமைத்திருந்தார். திரைப்படம் ஒரு டைம் லூப் கதையம்சத்தில் உருவாகி மக்களின் ஆதரவை பெற்றது.
இதனை தொடர்ந்து, ஜீவாவின் 45 ஆவது படமாக 'தலைவர் தம்பி தலைமையில்' உருவாகி உள்ளது. 'Falimy' படத்தை இயக்கி புகழ்பெற்ற இயக்குனர் நிதிஷ் சகாதேவ் இப்படத்தை இயக்கி உள்ளார். ராவண கோட்டம் படத்தை தயாரித்த கண்ணன் ரவி இப்படத்தை தயாரித்துள்ளார்.
தம்பி ராமையா, இளவரசு, பிராதனா நாதன், ஜென்சன் திவாகர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இப்படத்திற்கு விஷ்ணு விஜய் இசையமைத்துள்ளார். ஏற்கனவே இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
அரசியல் கலந்த நகைச்சுவை படமாக உருவாகி உள்ள 'தலைவர் தம்பி தலைமையில்' படம் வருகிற 30-ந்தேதி உலகமெங்கும் வெளியாக உள்ளதாக படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்த நிலையில், வருகிற 15-ந்தேதி பொங்கலன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
விஜயின் ஜனா நாயகன் படம் தணிக்கை சான்றிதழ் பிரச்சினையாக நேற்று வெளியாகவில்லை. இது தொடர்பான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் வருகிற 21-ந்தேதி வரை ஒத்திவைத்துள்ளது. இந்த நிலையில்தான் ஜீவா படம் முன்னதாகவே ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- பராசக்தி படம் நம் கூட்டணி எதிர்கொள்ளப்போகும் தேர்தலின் மாபெரும் முரசொலியாகப் போகிறது
- பராசக்தி படம் வெற்றி பெற்றாக வேண்டும் என்பது என் ஆசை மட்டுமல்ல
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'பராசக்தி' படம் உலகம் முழுவதும் இன்று வெளியானது. இதனால் திரையரங்குகள் முன்பு ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், பராசக்தி படத்தை பாராட்டி நடிகரும் மாநிலங்களவை எம்.பியுமான கமல்ஹாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், "அன்புள்ள இளவல் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு, பராசக்தி படத்தைப் பார்க்கத் தொடங்கும் முன் நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை இந்தப் படம் நம் கூட்டணி எதிர்கொள்ளப்போகும் தேர்தலின் மாபெரும் முரசொலியாகப் போகிறது என்று ஆம், இந்தப் படம் வெற்றி பெற்றாக வேண்டும் என்பது என் ஆசை மட்டுமல்ல, என் உண்மையான வாழ்த்தும் கூட இந்தப் படம் திமுக வரலாற்றுக்கு இட்ட வெற்றித் திலகம்
பின்குறிப்பு:
பின்னால் வந்தாலும் முந்திச் சொல்ல வேண்டியது உணர்ச்சி முந்திக்கொண்டதால் பின்தங்கிய குறிப்பு இது. முதல் பாராட்டு இந்த பயோஃபிக்ஷன் கதையையும், இதன் இயக்குனர் திருமதி சுதா கொங்கராவையும், இக்கதையைத் தேர்ந்து இதற்காக உழைத்து வெற்றியும் காணப்போகும் தம்பி சிவகார்த்திகேயனையும் சேரும்.
இந்தச் சினிமாச் சரித்திரத்தில் இணைந்துவிட்ட ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட அனைத்து நடிகர்களுக்கும். ஒளிப்பதிவாளர் ரவி கே. சந்திரன், இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ், எடிட்டர் சதீஷ் சூரியா உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் மற்றும் இந்தப் படத்துக்காக உழைத்த அனைவருக்கும் என் உளமார்ந்த பாராட்டுகள்" என்று தெரிவித்துள்ளார்.
- இங்கே யார் ஆண்டாலும் அண்ணாதுரைதான் தான் இந்த நாட்டை ஆள்கிறான் என்று பொருள்
- யுபிஎஸ்சி தேர்வுகள் ரத்து செய்யப்படுவது, ரெயில்வே நேர்காணலுக்கு மொழி வல்லமை தேவை ஆகியவற்றைக் காட்டும் இடங்களில் புனைவு என்று குறிப்பிடப்பட வேண்டும்.
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா முரளி, ஶ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் 'பராசக்தி'.
டான் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். இது இவரின் 100வது படம். சிவகார்த்திகேயனின் 25வது படம்.
இப்படம் இன்று தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளத்தில் உலகமெங்கும் வெளியானது. இப்படம் 1960களில் இந்தி திணிப்புக்கு எதிராக தமிழ்நாட்டில் வெடித்த போராட்டத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் டிரெய்லர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
'டெல்லி தான் இந்தியாவா.. நாங்க இந்தி திணிப்புக்கு தான் எதிரானவங்க, இந்திக்கோ இந்திக்காரங்களுக்கோ இல்ல.. என் செந்தமிழை காக்க பெரும் சேனை ஒன்று உண்டு' உள்ளிட்ட வசனங்கள், பேரறிஞர் அண்ணா ஒரு கதாபாத்திரமாக தோன்றியது கூடுதல் சிறப்பாக அமைந்தது.
இந்த படதிற்கு ரிலீசுக்கு ஒரு நாள் முன்பு அதாவது நேற்று தான் யு/ஏ 16+ தணிக்கைச் சான்றிதழை சென்சார் போர்டு வழங்கியது.
படத்தில் 'தீ பரவட்டும்' என்ற டேக் லைன் பயன்படுத்தப்பட்டிருக்கும் காட்சிகளில் 'நீதி பரவட்டும்' என மாற்ற பரிந்துரைத்திருக்கிறது தணிக்கை வாரியம்.
சென்சார் வாரிய பரிந்துரைகளின்படி மொத்தம் 25 வெட்டுகள், மியூட்கள் செய்த பின்னரே இந்த சான்றிதழ் வழங்கப்பட்டது. படத்தில் அண்ணாவின் 'தீ பரவட்டும்' உட்பட பல்வேறு வசனங்களுக்கு சென்சார் வெட்டு போட்டுள்ளது.
"தீ பரவட்டும்" என்ற வார்த்தையை "நீதி பரவட்டும்" என்று மாற்றுமாறு வாரியம் பரிந்துரைத்துள்ளது. படத்தின் அவ்வாசகம் பேசப்படும் அல்லது திரையில் தோன்றும் அனைத்து இடங்களில் இந்த மாற்றத்தைச் செய்ய வேண்டுமென்று கூறப்பட்டுள்ளது.
இதோடு 'இங்கே யார் ஆண்டாலும் அண்ணாதுரைதான் இந்த நாட்டை ஆள்கிறான் என்று பொருள்' என்ற வசனம் நீக்கப்பட்டுள்ளது.
படத்தின் ஒரு காட்சியில் இடம்பெற்றிருக்கும் 'இந்தி என் கனவை அழித்தது' என்ற வாசகத்திற்குப் பதிலாக 'என் ஒரே கனவை இந்தி திணிப்பு எரித்தது' என மாற்ற சென்சார் வாரியம் கூறியுள்ளது. அதன்படி மாற்றப்பட்டது.
அதோடு, 'இந்தி கத்துக்கிட்டு' என்ற வாசகத்தை மியூட் செய்ய வேண்டுமெனவும், "இந்தி அரக்கி" என்ற வாசகத்தை, அது எங்கெல்லாம் வருகிறதோ அங்கெல்லாம் "அரக்கி" என்பதை வேறு விதமாக மாற்ற வேண்டும் எனவும் தெரிவித்தனர்.
"இந்தி அரக்கி" என்ற வாசகங்களைக் கொண்ட உருவபொம்மை எரிக்கப்படும் காட்சிகள் நீக்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டது.
டிரெய்லரில் ரவி மோகன் கூறும் 'Anti national' என்ற வார்த்தை தணிக்கை வாரியத்தின் பரிந்துரையைத் தொடர்ந்து படத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
மேலும், திரைப்படத்தில் தீக்குளிப்பது தொடர்பான காட்சிகள் 50% அளவுக்குக் குறைக்கப்பட்டுள்ளது.
யுபிஎஸ்சி தேர்வுகள் ரத்து செய்யப்படுவது, ரெயில்வே நேர்காணலுக்கு மொழி வல்லமை தேவை ஆகியவற்றைக் காட்டும் இடங்களில் புனைவு என்று குறிப்பிடப்பட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இவை அனைத்தையும் நீக்கி படத்தின் நீளம் 2 மணி நேரம் 43 நிமிடங்களாக அமைந்துள்ளது.
- தயாரிப்பாளர் தாணு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளார்.
விஜய் நடிப்பில் வெளியான படம் 'தெறி'. அட்லி இயக்கத்தில் உருவான இப்படத்தில் எமி ஜாக்சன், சமந்தா என இரண்டு கதாநாயகிகள் நடித்திருந்தனர்.
ஜி.வி.பிரகாஷ் இசையமைத்த இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்திருந்தார். இதில் விஜய் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார்.
இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. மேலும் வசூலிலும் சாதனை படைத்தது. இப்படம் இந்தியிலும் வருண் தவான் நடிப்பில் பேபி ஜான் என்ற பெயரில் கடந்த வருடம் ரிலீஸ் ஆனது.
இந்நிலையில் விரைவில் தமிழில் தெறி படம் ரீரிலீஸ் ஆக உள்ளதாக தயாரிப்பாளர் தாணு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளார்.
ஹெச் வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜன நாயகன் படதிற்கு சென்சார் சான்றிதழ் மறுக்கப்பட்டதால் அப்படம் குறித்தபடி ஜனவரி 9, நேற்று வெளியாகாதது ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியது.
இந்நிலையில் தெறி ரீரிலீஸ் செய்தி ஆறுதலாக அமைந்துள்ளது. தெறி படம் பொங்கலை ஒட்டி ரீரிலீஸ் ஆனால் நன்றாக இருக்கும் என விஜய் ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
இதற்கிடையே சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜன நாயகனுக்கு சென்சார் சான்றிதழ் வழக்கும் வழக்கு விசாரணை ஜனவரி 21 க்கு நேற்று தள்ளி வைக்கப்பட்டது. தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்ஷன்ஸ் இன்று உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளது.
- பராசக்தி' படம் உலகம் முழுவதும் இன்று வெளியானது
- சென்னை காசி தியேட்டரில் ரவி மோகன், கெனிஷா பராசக்தி படம் பார்த்தனர்.
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் 'பராசக்தி'. இந்த படத்திற்கு தணிக்கை சான்று வழங்க தாமதம் ஆனதால் திட்டமிட்டபடி இப்படம் வெளியாகுமா? என்ற கேள்வி எழுந்த நிலையில், தற்போது உலகம் முழுவதும் 'பராசக்தி' வெளியாகி உள்ளது. இதனால் திரையரங்குகள் முன்பு ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே நடிகர் ரவி மோகன், கெனிஷா ஆகியோர் சென்னை காசி தியேட்டரில் பராசக்தி பார்த்தனர். படம் பார்த்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கேனிஷா, "ரவிக்காக மட்டும் தான் பராசக்தி ஓடும். என் கண்ணுக்கு வேற யாரும் தெரியல. அவருக்காகவே இந்த படம் பண்ண மாதிரி இருக்கு. ஹீரோவா பண்ணா என்ன வில்லனா பண்ணா என்ன.. அவர் தான் நம்பர் 1 இந்த படத்துல.. Second Half-ல அவர தாண்டி படமே இல்ல. அவர் எப்பவுமே Evergreen.. Ever Best" என்று தெரிவித்தார்.
மேலும், பேசிய கெனிஷா, "ஜனநாயகன் ரிலீஸ் அன்று தான் உண்மையான பொங்கல்" என்று தெரிவித்தார்.








