என் மலர்
- 'ஆண் பாவம் பொல்லாதது' படம் அண்மையில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
- ராம் லீலா படத்தின் மூலம் வர்திகா கதாநாயகியாக அறிமுகமாகிறார்
2023-ஆம் ஆண்டு அறிமுக இயக்குநரான ஹரிஹரன் ராம் இயக்கத்தில் ரியோ ராஜ் மற்றும் மாளவிகா மனோஜ் இணைந்து நடித்த ''ஜோ'' திரைப்படம் வெளியாகி மக்களிடையே விமர்சனம் ரீதியாகவும் வசூல் ரீதியாகும் நல்ல வரவேற்பை பெற்றது.
இதைத்தொடர்ந்து ''ஜோ'' பட ஜோடி அடுத்து மீண்டும் ஒன்றாக இணைந்து நடித்த 'ஆண் பாவம் பொல்லாதது' படம் அண்மையில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், நடிகர் ரியோ ராஜ் அடுத்ததாக நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று காலை விஜய் சேதுபதி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டார்.
இந்த படத்திற்கு "ராம் லீலா" என பெயரிடப்பட்டுள்ளது. இயக்குநர் ராமசந்திரன் கண்ணன் இயக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. இந்தப் படத்தின் மூலம் வர்திகா கதாநாயகியாக அறிமுகமாகிறார்
- இப்படத்தில் சரத்குமார், காளி வெங்கட் மற்றும் கல்கி ராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
- இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ, முதல் பாடல் என வெளியானது.
தமிழ் சினிமாவில் நகைச்சுவை திரைப்படம் இயக்குவதில் திறமை மிக்க இயக்குநர் பொன்ராம். 2013 ஆம் ஆண்டு இவர் இயக்கிய 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' மிகப்பெரிய வெற்றித் திரைப்படமாக அமைந்தது.
அதைத்தொடர்ந்து ரஜினி முருகன், சீமராஜா, எம்.ஜி.ஆர் மகன் மற்றும் டி.எஸ்.பி போன்ற திரைப்படங்களை இயக்கினார். இதனை தொடர்ந்து, பொன்ராம் இயக்கத்தில் மறைந்த விஜயகாந்தின் இளைய மகனான சண்முக பாண்டியன் நடிப்பில் வெளியாக உள்ள படம் 'கொம்புசீவி'. இப்படத்தில் சரத்குமார், காளி வெங்கட் மற்றும் கல்கி ராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை பால சுப்ரமணியன் ஒளிப்பதிவு மேற்கொண்டுள்ளார்.
இப்படம் 1996 வாக்கில் உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, வைகை அணை பகுதியில் நடந்த கதைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சில நாட்களுக்கு முன்பு இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ, முதல் பாடல் என வெளியானது. இருப்பினும் இப்படம் வெளியாவது குறித்த தகவல்கள் தெரிவிக்கப்படாமல் இருந்தது.
இந்த நிலையில், 'கொம்புசீவி' படம் கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியாகும் என போஸ்டர் வெளியிட்டு படக்குழு தெரிவித்துள்ளது. கிறிஸ்துமஸ் தினத்தன்று அருண் விஜயின் 'ரெட்ட தல' படமும் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

- நிகழ்வில் பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.
- வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நாகை மாவட்டம் நாகூரில் உலக பிரசித்தி பெற்ற ஆண்டவர் தர்கா உள்ளது. உலகம் முழுவதிலும் இருந்து இந்த தர்காவுக்கு மக்கள் வந்து பிரார்த்தனை செய்கிறார்கள்.
மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் இந்த தர்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி 469-வது ஆண்டாக கந்தூரி விழா கடந்த 21-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் நேற்று இரவு 7.30 மணியளவில் நாகை யாஹூசைன் பள்ளிவாசல் தெருவில் இருந்து புறப்பட்டது. முன்னதாக சிறப்பு துவா ஓதப்பட்டு புறப்பட்ட சந்தனக்கூடு, அலங்கரிக்கப்பட்ட கப்பல்கள், செட்டிபல்லக்கு, சாம்பிராணி சட்டி, பெரிய ரதம், சின்னரதம் உள்ளிட்ட அலங்கார ரதங்களுடன் நாகையின் முக்கிய வீதிகள் வழியாக சென்றது.
ஊர்வலத்திற்கு முன்பாக பலர் பாரம்பரிய நடனம் ஆடியபடி சென்றனர். வழிநெடுகிலும் உள்ளூர், வெளியூர், பல்வேறு மாநிலங்களில் இருந்து திரளானோர் நின்று சந்தனக்கூடு ஊர்வலத்தை கண்டு களித்தனர். இன்று அதிகாலை ஆண்டவர் சமாதியில் சந்தனம் பூசுவதற்காக நாகூர் தர்கா அலங்கார வாசலை வந்தடைந்தது. இந்நிகழ்வில் பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.
இதனிடையே, உலகப் புகழ்பெற்ற நாகூர் தர்காவின் சந்தனம் பூசும் வைபவம் விழாவுக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் ஆட்டோவில் வந்தார். அதனை தொடர்ந்து நாகூர் ஆண்டவர் சமாதியில் நீண்ட நேரம் காத்திருந்து வழிபட்டார்.
இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
- இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார்.
- இப்படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமாவில் சாக்லேட் பாயாக வலம் வந்த மாதவன் தற்போது இந்தியாவின் எடிசன் என அழைக்கப்படும் ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு உருவாகும் புதிய படத்தில் ஜி.டி.நாயுடு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
'ஓஹோ எந்தன் பேபி' பட இயக்குநர் கிருஷ்ணகுமார் ராம்குமார் எழுதி இயக்கியுள்ள இந்தப் படத்தில் ஜெயராம், சத்யராஜ், பிரியாமணி, யோகி பாபு மற்றும் துஷாரா விஜயன் ஆகியோரும் நடிக்கின்றனர். இப்படம் தொடர்பான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. போஸ்டரில் அடையாளம் தெரியாத அளவுக்கு வயதான தோற்றத்துடன் ஜி.டி.நாயுடுவின் உருவத்தை பிரதிபலிக்கும் வகையில் மாதவன் காணப்பட்டார். இப்படத்தை வர்கீஸ் மூலன், விஜய் மூலன், சரிதா மாதவன் மற்றும் மாதவன் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார்.

இந்த நிலையில், 'ஜி.டி.என்' படத்தின் வெளிநாட்டு படப்பிடிப்பை தடையின்றி முடித்ததாக படக்குழு தெரிவித்துள்ளது. இப்படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை காசிமேடு பகுதியில் இருக்கும் அரசு மருத்துவமனையில் மருத்துவராக வேலை பார்த்து வருகிறார் தான்யா ரவிச்சந்திரன். இவர் போலீஸ், முன்னாள் எம்.எல்.ஏ, மருத்துவ செயலாளர் என்று யாருடைய மிரட்டலுக்கும் அடிபணியாமல் நேர்மையாக இருக்கிறார். இதனால், அப்பகுதியில் உள்ள ரவுடி டேனியல் பாலாஜி அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார்.
இந்த விவகாரத்தில் தலையிடும் சென்னை காவல்துறை ஆணையர், டேனியல் பாலாஜியை அழைத்து மிரட்டி அசிங்கப்படுத்தி விடுகிறார். இதனால் கடும் கோபம் அடையும் டேனியல் பாலாஜி, காவல்துறையின் எச்சரிக்கையையும் மீறி தன்யா ரவிச்சந்திரனை பழிவாங்க துடிக்கிறார்.
இறுதியில் டேனியல் பாலாஜி தான்யா ரவிச்சந்திரனை பழி வாங்கினாரா? இல்லையா? என்பதை மீதி கதை.
நடிகர்கள்
கதையின் நாயகியாக நடித்திருக்கும் தான்யா ரவிச்சந்திரன், எந்த மிரட்டலுக்கும் அஞ்சாமல் துணிச்சலான பெண் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருக்கிறார். ரவுடி கதாபாத்திரத்தில் டேனியல் பாலாஜி, மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இயக்குநர் கே.பாக்யராஜ் அழுத்தமான கதாபாத்திரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தினாலும், இரண்டாம் பாதிக்கு மேல் அவரது கதாபாத்திரம் பலம் இழந்து விடுகிறது.
முன்னாள் எம்.எல்.ஏ-வாக நடித்திருக்கும் அருள்தாஸ், காவல்துறை ஆணையராக நடித்திருக்கும் தமிழ், சமூக ஆர்வலராக நடித்திருக்கும் ஜாக் அருணாச்சலம், நாயகியின் தங்கையாக நடித்திருக்கும் ஸ்வேதா டோரத்தி, சகோதரராக நடித்திருக்கும் ரங்கா, தோழியாக நடித்திருக்கும் நயனா ஆகியோர் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள்.
இயக்கம்
அரசு மருத்துவமனை பெண் மருத்துவர் மற்றும் ரவுடி இடையிலான மோதலை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் ஜெ.பி. நீயா நானா என்று போட்டி போட்டு நடிக்க வைத்திருக்கிறார். திரைக்கதையில் கொஞ்சம் கவனம் செலுத்தி லாஜிக் மிரல்களை தவிர்த்து இருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம்.
ஒளிப்பதிவு
ஒளிப்பதிவாளர் ராமலிங்கம், தனது பணியை சிறப்பாக செய்து இருக்கிறார்.
இசை
பாடல்கள் இல்லை என்றாலும் தனது பின்னணி இசை மூலம் காட்சிகளில் இருக்கும் பதற்றத்தை பார்வையாளர்களிடம் கடத்தியிருக்கும் இசையமைப்பாளர் ஜிப்ரான்.
ரேட்டிங்- 2.5/5
நாயகன் ஹரிஷ் ஓரி குடும்ப சூழ்நிலை காரணமாக மலை கிராமத்திற்கு செல்கிறார். அங்கிருக்கும் அவரது உறவினர் வீட்டில் தங்கிக் கொண்டு சுமை தூக்கும் வேலையை செய்து வருகிறார்.
இந்நிலையில், அந்த மலை கிராம மக்களை ஏமாற்றி, நிலத்தை அபகரித்து, மக்களை அங்கிருந்து வெளியேற்றி வருகிறார் ஊர் தலைவர். இதை அறிந்த ஹரிஷ் ஓரி மற்றும் அவரது மனைவி அபிராமி போஸ் இருவரும் ஊர் தலைவர் திட்டத்தை முறியடிக்க முயற்சி செய்கிறார்கள்.
இறுதியில் ஹரிஷ் ஓரி, அபிராமி போஸ் இருவரது முயற்சி என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
கதையின் நாயகனாக நடித்திருக்கும் ஹரிஷ் ஓரி, கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருக்கிறார். ஹரிஷ் ஓரியின் மனைவியாக நடித்திருக்கும் அபிராமி போஸ், கிராமத்து பெண்ணாக நடித்து கவர்ந்து இருக்கிறார். மலை கிராம மக்கள் பலர் மற்ற கதாபாத்திரங்களில் நடித்து திரைக்கதை ஓட்டத்திற்கு உதவி இருக்கிறார்கள்.
இயக்கம்
அடிப்படை தேவைகள் இல்லாத மலை கிராம மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் சரண்ராஜ் செந்தில்குமார். மலை கிராம மக்களின் வலிகளை சொல்லும் படங்கள் பல வடிவங்களில் பல வந்திருந்தாலும், அவற்றில் இருந்து முற்றிலும் மாறுபட்டு இருக்கும் வகையில், மூலிகை ரசம் உள்ளிட்ட புதிய விசயங்களை சேர்த்து, படத்தை சுவாரஸ்யமாக நகர்த்தி இருக்கிறார்.
இசை
இசையமைப்பாளர் பரத் ஆசிகவன், பின்னணி இசை மூலம் ரசிக்க வைத்து இருக்கிறார்.
ஒளிப்பதிவு
ஒளிப்பதிவாளர் ராம் தேவ், சிறப்பான பங்களிப்பை கொடுத்து இருக்கிறார்.
ரேட்டிங்- 3/5
- ரிஷப் செட்டியும் பார்வையாளர்கள் இருக்கையில் இருந்து அதை பார்த்துக்கொண்டிருந்தார்.
- தெய்வத்தை பெண் ஆவி என ரன்வீர் குறிப்பிட்டதும் கண்டனத்துக்கு உள்ளாகி வருகிறது.
பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் சர்ச்சையில் சிக்கியுள்ளார். அண்மையில் கோவாவில் சர்வதேச இந்திய திரைப்பட விழா (IFFI) நடைபெற்று முடிந்தது.
விழாவின் நிறைவு நாளில் மேடையில் ரன்வீர் சிங் செய்த செயலின் வீடியோ இணையத்தில் கண்டனத்தை குவித்து வருகிறது.
அண்மையில் ரிஷப் ஷெட்டியின் காந்தாரா 2 படம் வெளியாகி பெரும் வசூல் சாதனை படைத்தது. இந்த படத்திலும், 2022 இல் வெளியான முதல் பாகத்திலும் ரிஷப் செட்டி, சாமியாடிகள் எழுப்பும் 'ஓ' என்ற ஒளியை ஆக்ரோஷமான முகபாவத்துடன் எழுப்பும் காட்சிகள் சிலிர்க்க வைக்கும் வகையில் இருக்கும்.
இதை மேடையில் முயன்ற ரன்வீர் சிங், கிண்டலடிக்கும் வகையில் முகபாவத்துடன் அதை செய்தார். அப்போது ரிஷப் செட்டியும் பார்வையாளர்கள் இருக்கையில் இருந்து அதை பார்த்துக்கொண்டிருந்தார். இந்த நிகழ்வில் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற ரஜினிகாந்தும் அதை பார்த்துக்கொண்டிருந்தார்.
இதற்கு முன்னதாக "நான் காந்தாரா சாப்டர்1 ஐ திரையரங்குகளில் பார்த்தேன், ரிஷப் நன்றாக நடித்திருந்தார், குறிப்பாக பெண் ஆவி (சாமுண்டி தெய்வம்) உங்கள் உடலில் நுழையும் போது அந்த ஷாட் அற்புதமாக இருந்தது" என்றும் ரன்வீர் சிங் மேடையில் பேசியிருந்தார்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் சூழலில் கன்னடர்களின் தெய்வங்களை அவர் கிண்டலிப்பதாகவும், அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பலர் கருத்து பதிவிட்டு வருகின்றனர். மேலும் தெய்வத்தை பெண் ஆவி என ரன்வீர் குறிப்பிட்டதும் கண்டனத்துக்கு உள்ளாகி வருகிறது.
ரன்வீர் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் அவர் நடிப்பில் வெளியாக உள்ள 'துரந்தர்' படத்தின் வெளியீட்டைத் தடுப்போம் என்றும் எச்சரித்து வருகின்றனர். ரன்வீர் சிங் நடித்த 'துரந்தர்' படம் டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
- சீதா ராமம் படத்தின் மூலம் மிருணாள் தாகூர் புகழ்பெற்றார்.
- ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஷ்ரேயாஸ் காயமடைந்தார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுசும், பாலிவுட் நடிகை மிருணாள் தாகூரும் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது.
அஜய் தேவ்கானுடன், மிருணாள் தாகூர் நடித்துள்ள 'சன் ஆப் சர்தார்-2' பட விழாவில் தனுஷ் கலந்துகொண்டதும், மிருணாள் தாகூருடன் கைகோர்த்துக்கொண்டு சுற்றியதும் இதற்கு தூபம் போடுவதுபோல அமைந்தது.
இதுகுறித்து பேசிய மிருணாள் தாகூர், "நடிகர் தனுஷ் எனக்கு நல்ல நண்பர் மட்டுமே. எங்கள் இருவரை பற்றியும் வதந்திகள் பரவி வருவதை அறிகிறோம். இதுபோன்ற வதந்திகளை பார்க்கும்போது, எனக்கு சிரிப்புதான் வந்தது" என்று விளக்கம் கொடுத்து இந்த சர்ச்சைக்கு முடிவுரை எழுதினார்.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் ஷ்ரேயாஸ் அய்யரும் நடிகை மிருணாள் தாகூரும் ரகசியமாக காதலித்து வருவதாக இணையத்தில் தகவல் கசித்துள்ளது.
ஷ்ரேயாஸ் மற்றும் மிருணாள் தாகூர் ஆகியோர் தங்களின் கேரியரின் உச்சத்தில் இருப்பதால் இந்த காதலை பொதுவெளியில் அறிவிக்க தயக்கம் காட்டுவதாகவும் தங்ஙளின் நண்பர்களின் பார்ட்டி மற்றும் விழாக்களில் மட்டும் சந்தித்து காதலை வளர்த்து வருவதாகவும் கூறப்படுகிறது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் காயமடைந்த ஷ்ரேயாஸ் தற்போது குணமடைந்து ஓய்வில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பிக்பாஸ் நிகழ்ச்சி 50 நாட்களை கடந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
- பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொருத்தர் வெளியேறுவார்கள்
பிக்பாஸ் நிகழ்ச்சி 50 நாட்களை கடந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நாட்கள் நெருங்க நெருங்க யார் வின்னராகப் போகிறார் என்ற பதற்றமும் அதிகரித்து வருகிறது. பிக்பாஸ் போட்டியாளர் கானா வினோத் தான் தற்போது அனைவருக்கும் ஃபேவரைட் லிஸ்டில் உள்ளார். இவர் தான் வின்னராவார் என்ற கருத்துகளும் மேலோங்கி வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சி என்ன தான் 50 நாட்களை கடந்தாலும் இன்னும் இந்த நிகழ்ச்சியில் விறுவிறுப்பு இல்லை என்று தான் கூறப்படுகிறது. அதாவது, தேவையில்லாத சண்டைகள் ஆடியன்ஸை உற்சாகப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் யாருக்கும் இல்லை என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.மேலும், பார்வதி செய்யும் வேலைகள் இன்னும் கடுப்பேற்றுவதாக தெரிவித்துள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் தம்பதியராக கலந்து கொண்ட பிரஜினும் சாண்ட்ராவும் நாங்கள் தனித்தனி கண்டஸ்டண்ட் என்று சொல்லிக் கொண்டு ஒரே போட்டியை தான் விளையாடி வருகின்றனர். அதேபோன்று சாண்ட்ரா ஆரம்பத்தில் அமைதியாக இருந்த நிலையில் தற்போது தன் வில்லத்தனத்தை எல்லாம் காண்பித்து வருகிறார். வீட்டினுள் சண்டையை மூட்டி விடுவது. பார்வதியுடன் சேர்ந்து எல்லோரையும் தரக்குறைவாக பேசுவது என பல வேலைகளை செய்து வருகிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொருத்தர் வெளியேறுவார்கள். அப்படி, கடந்த சில வாரங்களாக பிரவீன் காந்தி, நந்தினி, அரோரா சி.ஜே., ஆதிரை, துஷார், பிரவீன் காந்தி, திவாகர், கெமி ஆகியோர் வெளியேறினார்கள்.
இந்நிலையில், இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து கனி வெளியேறுவார் என்று கூறப்பட்டது. அனால் கடைசி நேரத்தில் இந்த வாரம் எவிக்ஷன் இல்லை என்று அறிவிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
மேலும், கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியேற்றப்பட்ட ஆதிரை பிக்பாஸ் வீட்டிற்கு ரீ என்ட்ரி கொடுக்கவுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. FJ - வியானா காதல் ட்ராக்கில் ஆதிரையின் என்ட்ரி குழப்பத்தை ஏற்படுத்தி பிக்பாஸ் நிகழ்ச்சியை கலகலப்பாக்கும் என்று கூறப்படுகிறது.
- சர்வதேச திரைப்பட விழா, கோவாவில் 20-ந்தேதி தொடங்கியது
- இதில் பல்வேறு மொழிகளில் வெளியான திரைப்படங்கள் திரையிடப்பட்டன.
கோவாவில் ஒவ்வொரு ஆண்டும் இந்திய சர்வதேச திரைப்பட விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான திரைப்பட விழா, கோவாவில் 20-ந்தேதி தொடங்கியது. இதில் பல்வேறு மொழிகளில் வெளியான திரைப்படங்கள் திரையிடப்பட்டன.
இந்த விழாவின் இறுதி நாளில், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் சினிமாவில் 50 ஆண்டுகளைக் கடந்துள்ளதைச் சிறப்பிக்கும் வகையில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார்.
இந்நிலையில், வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற ரஜினியை கவிஞர் வைரமுத்து வாழ்த்தி தந்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், "வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றிருக்கும் ரஜினி அவர்களை வாழ்த்துகிறோம். அவரது தாழாத கீர்த்திக்கும் வீழாத வெற்றிக்கும் சில காரணங்கள் உண்டு. அவரது வாழ்வின் முன்னுரிமை உழைப்புக்கு; பிறகுதான் மற்றவற்றுக்கு கலை உலகம் தந்த புகழை வேறு சந்தைகளுக்கு அவர் மடைமாற்றம் செய்வதில்லை
ரசிகனுக்கும் தனக்குமுள்ள நெருக்கம் தூரம் இரண்டுக்கும் எல்லை கட்டத் தெரியும். உணவு உடற்பயிற்சி இரண்டினாலும் தொப்பையற்ற தோற்றத்தைத் தொடர்ந்து காப்பாற்றுகிறார். தான் பின்தங்கிவிடாமல் மாறும் தலைமுறையோடு மாறாமல் பயணிக்கிறார்.
சமூகம் அவரைச் சர்ச்சைக்கு இழுத்தாலும் சர்ச்சைகளை அவர் திட்டமிட்டு உண்டாக்குவதில்லை. கர்வம் என்பது தனியறையில் இருந்தாலும் பணிவு என்பதைப் பொதுவெளியில் காட்டுகிறார். 'இமயமலை ஆகாமல் எனதுஉயிர் போகாது எல்லையைத் தொடும்வரை எனது கட்டை வேகாது' என்ற வரிகளை வாழ்ந்துகாட்டத் துடிக்கிறார். தான் நன்றாக இருக்கவேண்டும்; அதுபோல் எல்லாரும் என்று நினைக்கிறார். வாழ்க பல்லாண்டு!" என்று பதிவிட்டுள்ளார்.
- ஓர் ஓவியராக வாழ்வைத் தொடங்கியவர் என் அப்பா.
- எள்ளளவும் நெறிபிறழாத அவர் வாழ்க்கைக்கும் திறமைக்கும் வாய்த்த அங்கீகாரமாகவே இதைப் பார்க்கிறோம்.
தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் நடிகர் சிவகுமார், ஓவியர் குருசாமி சந்திரசேகரன் ஆகியோருக்கு வாழ்நாள் சாதனைக்கான மதிப்புறு முனைவர் பட்டங்களை நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதற்கு சிவகுமாரின் 2-வது மகன் கார்த்தி, முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ள நிலையில் அவரின் மூத்த மகனும் நடிகருமான சூர்யாவும் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து அவரது கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
ஓர் ஓவியராக வாழ்வைத் தொடங்கியவர் என் அப்பா. ஒரு புள்ளியில் தொடங்கும் கோடு எவ்வளவு நுட்பமாக ஓவியமாக மாறுகிறதோ...அதைப் போலவே தன் வாழ்வையும் நெறியும் நேர்த்தியுமாய் வகுத்துக் கொண்டவர். ஒரு கிராமத்திலிருந்து கிளம்பி வந்து, கலையுலகின் கவனம் திருப்பி, எல்லோருக்குமான முன்னுதாரணமாக மாறிய அவருக்கு மதிப்புறு முனைவர் பட்டம் என்பது மிகப் பொருத்தமானது. எள்ளளவும் நெறிபிறழாத அவர் வாழ்க்கைக்கும் திறமைக்கும் வாய்த்த அங்கீகாரமாகவே இதைப் பார்க்கிறோம்.
சிறுவனாக இருந்த காலம்தொட்டு இன்று வரை அப்பாவின் ஆச்சர்ய உயரங்களைக் கண்டு வியக்கும் நான், அவரது உறுதி, உழைப்பு மற்றும் ஒழுக்கம் ஆகியவற்றையே எனக்கான பாடமாகக் கொள்கிறேன். அவரது சாதனைகளைவிட அவரது வாழ்வியல் விழுமியங்களே (Life Values) என் வாழ்க்கையையும் எண்ணங்களையும் செதுக்கி இருக்கின்றன. 'சிவகுமார் அவர்களின் மகன்' என்பதே என்றைக்கும் எனக்கான அடையாளம்; என் வாழ்நாளுக்கான அங்கீகாரம்.
எங்கள் தந்தையின் 60 ஆண்டுகாலப் பயணம் தமிழ்ச் சமூகத்திற்குப் பயன்பட்டிருப்பதன் அங்கீகாரமாகவே இந்த முனைவர் பட்டத்தைக் கருதுகிறோம். இந்தத் தருணத்தில் மதிப்பிற்குரிய ஓவியர் திரு சந்துரு (எ) குருசாமி சந்திரசேகரன் அவர்களுக்கும் கிடைத்திருக்கும் இந்த அங்கீகாரம் எங்களுக்குக் கூடுதல் மகிழ்வைத் தருகிறது.
இருவருக்கும் மகத்தான கௌரவத்தை வழங்கிய தமிழ்நாடு இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக் கழகத்திற்கும், இச்சிறப்பை முன்னின்று வழங்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் எங்கள் குடும்பத்தின் சார்பிலும், எல்லோர் சார்பிலும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என சூர்யா கூறினார்.
- விபின் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் கீதா கைலாசம், சரண் சக்தி, பரணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
- அங்கம்மாள் திரைப்படம் டிசம்பர் 5-ம் தேதி ரிலீஸ் ஆகிறது.
எழுத்தாளர் பெருமாள் முருகனின் சிறுகதையை தழுவி உருவாகி வரும் அங்கம்மாள். எழுத்தாளர் பெருமாள் முருகனின் சிறுகதையை தழுவி உருவாகி வரும் அங்கம்மாள். இப்படத்தை ஸ்டோர் பெஞ்ச் நிறுவனம், என்ஜாய் பிலிம்ஸ் மற்றும் பிரோ மூவி ஸ்டேஷன் ஆகியவை இணைந்து தயாரித்துள்ளது.
விபின் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் கீதா கைலாசம், சரண் சக்தி, பரணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் சரண், பரணி, முல்லையரசி மற்றும் தென்றல் ரகுநாதன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இதற்கு ஒளிப்பதிவாளராக அஞ்சோய் சாமுவேல், இசையமைப்பாளராக முகமது மக்பூல் மன்சூர் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். இப்படம் டிசம்பர் 5-ம் தேதி ரிலீஸ் ஆகிறது.
இது ஒரு கிராமத்தில் ஜாக்கெட் அணியாத தாயின் வழக்கத்தை ஏற்றுக்கொள்ள முடியாத கதைக்களத்தை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் டிரெய்லரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.








