என் மலர்tooltip icon

    கார்

    • புதிய GX+ வேரியண்ட் அதிக அம்சங்களுடன் கிடைக்கிறது.
    • இந்த என்ஜின் 150 ஹெச்.பி. பவர், 343 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் தனது இன்னோவா காரின் புது "GX+" வேரியண்ட்-ஐ அறிமுகம் செய்தது. புதிய வேரியண்ட் விலை ரூ. 21 லட்சத்து 39 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முந்தைய GX மற்றும் VX வேரியண்ட்களுடன் ஒப்பிடும் போது புதிய GX+ வேரியண்ட் அதிக அம்சங்களுடன் கிடைக்கிறது.

    அதன்படி புதிய வேரியண்டில் ரியர் கேமரா, ஆட்டோ ஃபோல்டு மிரர், டேஷ் கேமரா, டைமண்ட் கட் அலாய் வீல்கள், பிரீமியம் இருக்கை மேற்கவர்கள் வழங்கப்பட்டு உள்ளன. இந்த வேரியண்ட் ஏழு மற்றும் எட்டு பேர் அமரக்கூடிய இருக்கை அமைப்புகளில் கிடைக்கிறது. இவற்றின் விலை முறையே ரூ. 21 லட்சத்து 39 ஆயிரம் மற்றும் ரூ. 21 லட்சத்து 44 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

     


    புதிய அம்சங்கள் தவிர இன்னோவா க்ரிஸ்டா GX+ வேரியண்டின் மெக்கானிக்கல் அம்சங்களில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில், இந்த வேரியண்டிலும் 2.4 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 150 ஹெச்.பி. பவர், 343 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

    இந்திய சந்தையில் இன்னோவா க்ரிஸ்டா மாடலின் விலை ரூ. 19 லட்சத்து 99 ஆயிரம் என துவங்கி அதிகபட்சம் ரூ. 26 லட்சத்து 30 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த காருக்கு நேரடி போட்டியை ஏற்படுத்தும் மாடல் எதுவும் இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கவில்லை. எனினும், கியா கரென்ஸ் மற்றும் மஹிந்திரா மராசோ உள்ளிட்டவை இதற்கு போட்டியாக அமைகின்றன.

    • புதிய குர்கா மாடலில் 2.6 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.
    • முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.

    போர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் 2024 குர்கா சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்தது. புதிய 2024 போர்ஸ் குர்கா மாடலின் மூன்று கதவுகள் கொண்ட மாடலின் விலை ரூ. 16 லட்சத்து 75 ஆயிரம் என்றும் ஐந்து கதவுகள் கொண்ட மாடலின் விலை ரூ. 18 லட்சம் என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்பைடயில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    2024 போர்ஸ் குர்கா மாடலுக்கான முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. முன்பதிவு கட்டணம் ரூ. 25 ஆயிரம் ஆகும். 2024 குர்கா மாடலின் வெளிப்புறம் புதிய அலாய் வீல்கள், ஹெட்லேம்ப்கள் மற்றும் கிரில் வழங்கப்பட்டு இருக்கிறது.

     


    உள்புறத்தில் புதிய இருக்கை மேற்கவர்கள், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் TPMS, முன்புறம் டூயல் ஏர்பேக், 8.0 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய குர்கா மாடலில் 2.6 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.

    இந்த என்ஜின் 132 ஹெச்.பி. பவர், 320 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இந்த காரின் மூன்று கதவுகள் மற்றும் ஐந்து கதவுகள் கொண்ட வேரியண்டில் 4 வீல் டிரைவ் வசதி ஸ்டான்டர்டு அம்சமாக வழங்கப்படுகிறது.

    இந்திய சந்தையில் புதிய போர்ஸ் குர்கா மாடல் மாருதி ஜிம்னி மற்றும் மஹிந்திரா தார் என்ட்ரி லெவல் மாடலுக்கு போட்டியாக அமைகிறது.

    • இருவித பவர்டிரெயின் ஆப்ஷன்களில் கிடைக்கும்.
    • புதிய மாருதி ஸ்விப்ட் மாடல் விலை ரூ. 6.5 லட்சத்தில் துவங்கலாம்.

    மாருதி சுசுகி நிறுவனத்தின் முற்றிலும் புதிய ஸ்விப்ட் கார் முன்பதிவு துவங்கியுள்ளது. புதிய ஸ்விப்ட் காருக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 11 ஆயிரம் ஆகும். இந்திய சந்தையில் புதிய மாருதி ஸ்விப்ட் மாடல் மே 9 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது.

    இந்தியாவில் மிகவும் பிரபலமான ஸ்விப்ட் காரின் நான்காவது தலைமுறை மாடல் இது ஆகும். புதிய ஸ்விப்ட் மாடல் பெட்ரோல் மற்றும் சி.என்.ஜி. என இருவித பவர்டிரெயின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என்று தெரிகிறது.

    கடந்த ஆண்டு ஜப்பானில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய ஸ்விப்ட் மாடல் முற்றிலும் புதிய எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், வீல்கள், எல்.இ.டி. டெயில் லேம்ப்கள், டோர் ஹேண்டில்களை கொண்டிருக்கிறது. காரின் உள்புறம் ஃபுளோட்டிங் டிஸ்ப்ளே, அளவில் பெரிய MID மற்றும் கிளைமேட் கண்ட்ரோல் இன்டர்ஃபேஸ் உள்ளது.

     


    புதிய மாருதி ஸ்விப்ட் மாடல் LXi, VXi மற்றும் Zxi வேரியண்ட்களில் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. சர்வதேச சந்தையில் புதிய ஸ்விப்ட் மாடல் 1.2 லிட்டர் பெட்ரோல், மைல்டு ஹைப்ரிட் தொழில்நுட்பம் கொண்டிருக்கும் என்று தேரிகிறது. இந்திய சந்தையில் இந்த மாடல் K12C 1.2 லிட்டர் நான்கு சிலிண்டர்கள் கொண்ட பெட்ரோல் என்ஜினுடன் கிடைக்கலாம்.

    விலையை பொருத்தவரை புதிய மாருதி ஸ்விப்ட் மாடல் ரூ. 6.5 லட்சத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 10 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம். இந்திய சந்தையில் புதிய ஸ்விப்ட் மாடல் ரெனால்ட் க்விட், மாருதி வேகன் ஆர், மாருதி செலரியோ, டாடா பன்ச் மற்றும் ஹூண்டாய் எக்ஸ்டர் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும்.

    • புதிய ருமியன் வேரியண்டில் 1.5 லிட்டர் K சீரிஸ் பெட்ரோல் என்ஜின் உள்ளது.
    • இந்த கார் லிட்டருக்கு 20.51 கிலோமீட்டர்கள் மைலேஜ் வழங்குகிறது.

    டொயோட்டா நிறுவனம் இந்திய சந்தையில் தனது ருமியன் காரின் புது வேரியண்டை அறிமுகம் செய்தது. ருமியன் G AT என அழைக்கப்படும் புது வேரியண்ட் விலை ரூ. 13 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என்று துவங்குகிறது. இந்த காரின் வினியோகம் மே 5 ஆம் தேதி முதல் துவங்குகிறது. புதிய டொயோட்டா ருமியன் G AT வேரியண்டுக்கான முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது. முன்பதிவு கட்டணம் ரூ. 11 ஆயிரம் ஆகும்.

    புது வேரியண்ட் அறிமுகம் செய்த கையோடு ருமியன் சி.என்.ஜி. வேரியண்டுக்கான முன்பதிவுகளை டொயோட்டா நிறுவனம் மீண்டும் துவங்கியது. ருமியன் சி.என்.ஜி. ஆப்ஷன் S வேரியண்டில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 11 லட்சத்து 39 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் முதல் துவங்குகிறது.

     


    புதிய ருமியன் G AT வேரியண்டில் 1.5 லிட்டர், நான்கு சிலிண்டர்கள் கொண்ட K சீரிஸ் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இத்துடன் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 102 ஹெச்.பி. பவர், 137 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இந்த கார் லிட்டருக்கு 20.51 கிலோமீட்டர்கள் வரையிலான மைலேஜ் வழங்குகிறது.

    அம்சங்களை பொருத்தவரை டொயோட்டா ருமியன் G AT வேரியண்டில் 7 இன்ச் அளவில் டச் ஸ்கிரீன் வசதி கொண்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆப்பிள் கார் பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, டொயோட்டா ஐ கனெக்ட் தொழில்நுட்பம், டூயல் ஏர்பேக், ஏ.பி.எஸ். மற்றும் இ.பி.டி., இ.எஸ்.பி., ஹில் ஹோல்டு கண்ட்ரோல், ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், எல்.இ.டி. டெயில் லைட்கள், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், பேடில் ஷிஃப்டர்கள், என்ஜின் ஸ்டார்ட் - ஸ்டாப் பட்டன் வழங்கப்படுகிறது.

    • ஸ்போர்ட் லைன் பிரிவில் இடம்பெற்றுள்ளன.
    • கசினோ பிளாக் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன.

    வோக்ஸ்வேகன் நிறுவனம் டைகுன் GT லைன் மற்றும் டைகுன் GT பிளஸ் ஸ்போர்ட் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இவற்றின் விலை முறையே ரூ. 14 லட்சத்து 08 ஆயிரம் மற்றும் ரூ. 18 லட்சத்து 53 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    புது வேரியண்ட்கள் கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்ட எஸ்.யு.வி.யின் பிளாக் ஸ்போர்ட் தீம் கொண்ட ஸ்பெஷல் வெர்ஷன் ஆகும். இவை புதிதாக உருவாக்கப்பட்டு இருக்கும் ஸ்போர்ட் லைன் பிரிவில் இடம்பெற்றுள்ளன.

     


    GT பிளஸ் மாடலில் கார்பன் ஸ்டீல் கிரே நிற ரூஃப், முன்புற கிரில், ஃபெண்டர் மற்றும் டெயில்கேட் பகுதிகளில் ரெட் நிறத்தில் "GT" பிராண்டிங் வழங்கப்பட்டு இருக்கிறது. GT லைன் வேரியண்டில் "GT" பிராண்டிங் பிளாக் நிறத்தில் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இரண்டு வேரியண்ட்களிலும் 17 இன்ச் கசினோ பிளாக் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. GT பிளஸ் வேரியண்டில் முன்புறம் ரெட் நிற கேலிப்பர்கள் வழங்கப்படுகின்றன. உள்புறம் பிளாக் நிற இருக்கை மேற்கவர்கள் வழங்கப்படுகின்றன.

    GT பிளஸ் மாடலில் சிவப்பு நிற ஸ்டிட்ச் (தையல்) செய்யப்பட்டுள்ளது. GT லைன் மாடலில் கிரே நிற ஸ்டிட்ச் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் GT பிளஸ் மாடலில் ரெட் நிற GT லோகோ, அலுமினியம் பெடல்கள், அறிமுக சலுகையாக நான்கு ஆண்டுகளுக்கு சர்வீஸ் வேல்யூ பேக்கேஜ் வழங்கப்படுகிறது.

    வோக்ஸ்வேகன் டைகுன் ஸ்போர்ட் GT லைன் மாடலில் 1.0 லிட்டர் TSI என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 114 ஹெச்.பி.பவர், 178 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.

    புதிய டைகுன் GT பிளஸ் மாடலில் சற்றே சக்திவாய்ந்த 1.5 லிட்டர் TSI பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 148 ஹெச்.பி. பவர், 250 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இரு என்ஜின்களுடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. 

    • கியா கரென்ஸ் மாடல் மீண்டும் டெஸ்டிங்கில் ஈடுபடுத்தப்பட்டது.
    • பொலிரோ நியோ, ஹோண்டா அமேஸ் மாடல்களும் பங்கேற்றன.

    கியா நிறுவனத்தின் கரென்ஸ் எம்.பி.வி. மாடல் சமீபத்தில் குளோபல் என்கேப் (GNCAP) டெஸ்டிங்கில் பங்கேற்றது. இதற்கான முடிவுகள் தற்போது வெளியாகி இருக்கிறது. இந்த டெஸ்டிங்கில் கரென்ஸ் மட்டுமின்றி மஹிந்திரா பொலிரோ நியோ மற்றும் ஹோண்டா அமேஸ் போன்ற மாடல்களும் பங்கேற்றன.

    கடந்த 2022 ஆம் ஆண்டு இதே போன்ற டெஸ்டிங்கில் பங்கேற்ற போது கியா கரென்ஸ் மாடல் மூன்று நட்சத்திர குறியீடுகளை பெற்றது. தற்போது மேம்பட்ட விதிமுறைகளின் கீழ் கியா கரென்ஸ் மாடல் மீண்டும் டெஸ்டிங்கில் ஈடுபடுத்தப்பட்டது.

     


    இரண்டு முறை டெஸ்டிங் செய்யப்பட்ட கியா கரென்ஸ் மாடல் முதல் முறை ஒரு நட்சத்திர குறியீட்டை கூட பெறவில்லை. இந்த காரில் பயணிப்போருக்கு கழுத்து பகுதியில் அதிக காயங்கள் ஏற்படலாம் என்று தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக சிறு மாற்றங்கள் செய்யப்பட்டு மீண்டும் கரென்ஸ் மாடல் டெஸ்டிங் செய்யப்பட்டது. அப்போது இந்த கார் பாதுகாப்பிற்காக மூன்று நட்சத்திர குறியீடுகளை பெற்றது.

    இறுதி முடிவுகளின் படி கியா கரென்ஸ் மாடல் பெரியவர்கள் பாதுகாப்பில் 34-க்கு 22.07 புள்ளிகளையும், சிறியவர்கள் பாதுகாப்பிற்கு 49-க்கு 41 புள்ளிகளையும் பெற்றது. இந்த காரில் ஆறு ஏர்பேக், ஏ.பி.எஸ். மற்றும் இ.பி.டி., சீட் பெல்ட் பிரீ-டென்ஷனர்கள், லோட் லிமிட்டர்கள், சீட் பெல்ட் ரிமைன்டர் சிஸ்டம், இ.எஸ்.சி. மற்றும் ISOFIX உள்ளிட்டவை ஸ்டான்டர்டு அம்சங்களாக வழங்கப்படுகின்றன.

    • இந்த கார் நான்கு வேரியண்ட்களில் கிடைக்கும் என்று தெரிகிறது.
    • 2024 ஸ்விப்ட் மாடல் ஆறு நிறங்களில் கிடைக்கும் என தெரிகிறது.

    மாருதி சுசுகி நிறுவனம் நான்காம் தலைமுறை மாருதி ஸ்விப்ட் மாடல் காரை மே மாத வாக்கில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த காரின் விவரங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் முன்பாகவே 2024 ஸ்விப்ட் மாடலுக்கான முன்பதிவை சில விற்பனையாளர்கள் துவங்கிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

    முற்றிலும் புதிய ஸ்விப்ட் மாடலை பயனர்கள் ரூ. 11 ஆயிரம் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த கார் பற்றிய விவரங்கள் ரகசியமாகவே உள்ளது. எனினும், இந்த கார் LXi, VXi, ZXi மற்றும் ZXi+ போன்ற வேரியண்ட்களில் கிடைக்கும் என்று தெரிகிறது. புதிய ஸ்விப்ட் மாடல்- புளூ, ரெட், வைட், சில்வர், பிளாக் மற்றும் ஆரஞ்சு போன்ற நிறங்களில் கிடைக்கலாம்.

    2024 மாருதி ஸ்விப்ட் மாடலின் முன்புறம், பின்புறம் புதிய பம்ப்பர்கள், புதிய டிசைன், எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், L வடிவ எல்.இ.டி. டி.ஆர்.எல்.-கள், எல்.இ.டி. டெயில் லைட்கள், புதிய அலாய் வீல்கள், பின்புற வைப்பர் மற்றும் வாஷர், ஷார்க் ஃபின் ஆன்டெனா வழங்கப்படுகிறது.

    சர்வதேச சந்தையில் இந்த கார் 1.2 லிட்டர் Z12E பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனில் கிடைக்கிறது. இந்திய சந்தையில் இந்த கார் முற்றிலும் புதிய என்ஜின் கொண்டிருக்குமா அல்லது பழைய 1.2 லிட்டர் K12C என்ஜினுடன் அறிமுகம் செய்யப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. 

    • முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.
    • புது வேரியண்ட் ஏழு நிறங்களில் கிடைக்கிறது.

    டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் இந்திய சந்தையில் இன்னோவா ஹைகிராஸ் மாடலின் புது வேரியண்டை அறிமுகம் செய்தது. இன்னோவா ஹைகிராஸ் GX(O) என்று அழைக்கப்படும் புது வேரியண்ட் விலை ரூ. 20 லட்சத்து 99 ஆயிரம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த வேரியண்ட்-க்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.

    அம்சங்களை பொருத்தவரை புது வேரியண்டில் எல்.இ.டி. ஃபாக் லைட்கள், முன்புறம் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள், ரியர் டிஃபாகர், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே, 360 டிகிரி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் செஸ்ட்நட் இன்டீரியர், மென்மையான பொருட்களால் ஆன டேஷ்போர்டு, டோர் பேனல்கள் மற்றும் பின்புற சன்ஷேடுகள் வழங்கப்பட்டுள்ளன.

     


    புதிய டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் GX(O) மாடல்: பிளாகிஷ் அகெ கிளாஸ் ஃபிளேக், பிளாட்டினம் வைட் பியல், ஆட்டிட்யூட் பிளாக் மைக்கா, ஸ்பார்க்லிங் பிளாக் பியல் க்ரிஸ்டல் ஷைன், சில்வர் மெட்டாலிக், சூப்பர் வைட் மற்றும் அவான்ட் கார்ட் பிரான்ஸ் மெட்டாலிக் என ஏழுவிதமான நிறங்களில் கிடைக்கிறது.

    2024 இன்னோவா ஹைகிராஸ் மாடலின் GX(O) வேரியண்டில் 2.0 லிட்டர், நான்கு சிலிண்டர்கள் கொண்ட NA பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் CVT டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 172 ஹெச்.பி. பவர், 188 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது.

    • புதிய தலைமுறை ஸ்விப்ட் மாடலிலும் வழங்கப்படும்.
    • ஆண்ட்ராய்டு ஆட்டோ போன்ற வசதிகள் உள்ளன.

    மாருதி சுசுகி நிறுவனம் முற்றிலும் புதிய ஸ்விப்ட் மாடல் காரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. வரும் மாதங்களில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் புதிய ஸ்விப்ட் மாடல் YED எனும் குறியீட்டு பெயரில் உருவாக்கப்பட்டு வருகிறது. புதிய மாடலில் அதன் முந்தைய வெர்ஷனில் வழங்கப்பட்டதை விட அதிக அம்சங்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    புதிய தலைமுறை ஸ்விப்ட் மாடல் கார் ஏற்கனவே ஜப்பான் மற்றும் ஐரோப்பிய சந்தைகளில் அறிமுகம் செய்யப்பட்டு விட்டது. இதன் மூலம் இந்திய சந்தையில் இந்த கார் என்னென்ன அம்சங்களை கொண்டிருக்கும் என்பது பற்றிய தகவல்கள் வெளியாகி வருகின்றன.

     


    அதன்படி இந்திய சந்தையில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட பலேனோ, பிரான்க்ஸ் மற்றும் பிரெஸ்ஸா மாடல்களை போன்ற இன்டீரியர் புதிய தலைமுறை ஸ்விப்ட் மாடலிலும் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

    சர்வதேச சந்தையில் புதிய தலைமுறை ஸ்விப்ட் மாடலில் எல்.இ.டி. ஹெட்லைட்கள், டெயில் லைட்கள், எல்.இ.டி. டி.ஆர்.எல்.-கள், 16 இன்ச் அலாய் வீல்கள், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், எலெக்ட்ரிக் அட்ஜஸ்ட் மற்றும் மடிக்கும் வசதி கொண்ட விங் மிரர்கள், ஆட்டோ ஹெட்லேம்ப்கள், 9 இன்ச் டச் ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ போன்ற வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

    பாதுகாப்பிற்கு ஆறு ஏர்பேக், டயர் பிரெஷர் மாணிட்டர், ஏ.பி.எஸ். மற்றும் இ.பி.டி., பிரேக் அசிஸ்ட், எலெக்ட்ரிக் ஸ்டேபிலிட்டி, ஹில் ஹோல்டு கண்ட்ரோல், ADAS போன்ற அம்சங்கள், லேன் கீப்பிங் அசிஸ்ட், பிளைண்ட் ஸ்பாட் மாணிட்டர், அடாப்டிவ் குரூயிஸ் கண்ட்ரோல், லேன் டிபாச்சர் வார்னிங் போன்ற அம்சங்கள் உள்ளன.

    • வோக்ஸ்வேகன் டைகுன் மாடல் ஐந்து பிரத்யேக நிறங்களில் கிடைக்கிறது.
    • இந்த கார் மொத்தத்தில் 21 வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    வோக்ஸ்வேகன் நிறுவனம் தனது டைகுன் மிட்சைஸ் எஸ்.யு.வி. மாடலின் தேர்வு செய்யப்பட்ட வேரியண்ட்களுக்கு விலை குறைப்பை அறிவித்து இருக்கிறது.

    புதிய விலை குறைப்பை தொடர்ந்து இந்திய சந்தையில் வோக்ஸ்வேகன் டைகுன் மாடலின் விலை ரூ. 11 லட்சத்தில் துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 18 லட்சத்து 90 ஆயிரம் என மாறி இருக்கிறது. இந்த கார் மொத்தத்தில் 21 வேரியண்ட்களில் கிடைக்கிறது.

     


    வோக்ஸ்வேகன் டைகுன் புதிய விலை விவரங்கள்:

    1.0 TSI கம்ஃபர்ட்லைன் மேனுவல் டிரான்ஸ்மிஷன் ரூ. 70 ஆயிரம் குறைந்து ரூ. 11 லட்சம் என மாறியுள்ளது

    1.5 TSI GT பிளஸ் DSG க்ரோம் ரூ. 75 ஆயிரம் குறைந்து ரூ. 18 லட்சத்து 69 ஆயிரம் என மாறியுள்ளது

    1.5 TSI GT பிளஸ் DSG க்ரோம் (கூடுதல் அம்சங்களுடன்) ரூ. 1 லட்சத்து 05 ஆயிரம் குறைந்து ரூ. 18 லட்சத்து 69 ஆயிரம் என மாறியது

    1.5 GT எட்ஜ் பிளஸ் DSG டீப் பிளாக் பியல் ரூ. 74 ஆயிரம் குறைந்து ரூ. 18 லட்சத்து 90 ஆயிரம் என மாறியுள்ளது

    1.5 GT எட்ஜ் பிளஸ் DSG கார்பன் ஸ்டீல் கிரே மேட் ரூ. 80 ஆயிரம் குறைந்து ரூ. 18 லட்சத்து 90 ஆயிரம் என மாறியுள்ளது

    1.5 GT எட்ஜ் பிளஸ் DSG (புதிய அம்சங்கள்) டீப் பிளாக் பியல் ரூ. 1 லட்சத்து 04 ஆயிரம் குறைந்து ரூ. 18 லட்சத்து 90 ஆயிரம் என மாறியது

    1.5 GT எட்ஜ் பிளஸ் DSG (புதிய அம்சங்கள்) கார்பன் ஸ்டீல் கிரே மேட் ரூ. 1.1 லட்சம் குறைந்து ரூ. 18 லட்சத்து 90 ஆயிரம் என மாறியுள்ளது

    இந்தியாவில் வோக்ஸ்வேகன் டைகுன் மாடல் ஐந்து பிரத்யேக நிறங்களில் கிடைக்கிறது. டைகுன் மாடல் டொயோட்டா ஹைரைடர், ஹோண்டா எலிவேட், ஹூண்டாய் கிரெட்டா, மாருதி கிராண்ட் விட்டாரா போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

    • இந்திய சந்தையில் கடந்த ஜனவரி மாதம் அறிமுகம் செய்யப்பட்டது.
    • டாடா பன்ச் EV மாடல் 315 கி.மீ. ரேன்ஜ் வழங்கும் என சான்று பெற்றுள்ளது.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பன்ச் எலெக்ட்ரிக் மாடலுக்கு முதல் முறையாக சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அந்த வகையில், டாடா பன்ச் EV வாங்குவோருக்கு ரூ. 50 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகிறது.

    கடந்த ஜனவரி மாதம் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், பன்ச் EV மாடலுக்கு முதல் முறையாக சலுகைகள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. தற்போதைய தகவல்களின் படி டாடா பன்ச் EV டாப் எண்ட் மாடலுக்கு மட்டுமே ரூ. 50 ஆயிரம் சலுகை மற்றும் பலன்கள் வழங்கப்படுகிறது.

     


    விற்பனையாகும் வேரியண்ட்களுக்கு ஏற்ப ஒவ்வொரு விற்பனை மையம் சார்பில் ரூ. 20 ஆயிரம் வரை தள்ளுபடி மற்றும் ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான காப்பீட்டு பலன்கள் வழங்கப்படுகின்றன.

    டாடா பன்ச் EV லாங் ரேன்ஜ் மாடலில் 35 கிலோவாட் ஹவர் பேட்டரி உள்ளது. இதனை முழுமையாக சார்ஜ் செய்தால் 421 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என சான்று பெற்றிருக்கிறது.

    டாடா பன்ச் EV ஸ்டான்டர்டு மாடலில் 25 கிலோவாட் ஹவர் பேட்டரி உள்ளது. இதனை முழுமையாக சார்ஜ் செய்தால் 315 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என சான்று பெற்றிருக்கிறது.

    • மஹிந்திரா XUV 3XO மாடலுக்கான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.
    • இது மஹிந்திரா XUV 300 காரின் பேஸ்லிப்ட் வெர்ஷன் ஆகும்.

    மஹிந்திரா நிறுவனம் இம்மாத இறுதியில் (ஏப்ரல் 29) தனது அதிகம் எதிர்பார்க்கப்படும் XUV 3XO அறிமுகம் செய்ய இருக்கிறது. கடந்த சில நாட்களாக இந்த காருக்கான டீசர்கள் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக, மஹிந்திரா XUV 3XO மாடலுக்கான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

    இந்த நிலையில், தேர்வு செய்யப்பட்ட விற்பனை மையங்களில் மஹிந்திரா XUV 3XO மாடலுக்கான முன்பதிவுகள் துவங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் முன்பதிவு கட்டணம் ரூ. 21 ஆயிரம் என்றும் இவை அதிகாரப்பூர்வமாக நடைபெறவில்லை என்றும் கூறப்படுகிறது.

     


    புதிய XUV 3XO மாடல் மஹிந்திரா நிறுவனத்தின் XUV 300 காரின் பேஸ்லிப்ட் செய்யப்பட்ட வெர்ஷன் ஆகும். இந்த மாடல் பெயர் மட்டுமின்றி டிசைன் அடிப்படையிலும் முழுமையாக மாற்றப்பட்டு இருக்கிறது. இதன் முன்புறம் மெல்லிய கிரில், இன்வெர்ட் செய்யப்பட்ட சி வடிவ எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், டூயல் பாரெல் எல்.இ.டி. ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், டுவீக் செய்யப்பட்ட பம்ப்பர் வழங்கப்படுகிறது.

    இதன் பின்புறம் ரிடிசைன் செய்யப்பட்ட பம்ப்பர், எல்.இ.டி. டெயில் லைட், மஹிந்திராவின் டுவின் பீக் லோகோ மற்றும் XUV 3XO பிராண்டிங் வழங்கப்படுகிறது. இந்த காரில் முற்றிலும் புதிய டிசைன் கொண்ட அலாய் வீல்கள் வழங்கப்படுகின்றன.

    மற்ற அம்சங்களை பொருத்தவரை அளவில் பெரிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், பானரோமிக் சன்ரூஃப், 360 டிகிரி சரவுண்ட் கேமரா, ஏழு ஏர்பேக், லெவல் 2 ADAS சூட் வழங்கப்படுகிறது. இத்துடன் வென்டிலேட் செய்யப்பட்ட முன்புற இருக்கைகள், பவர்டு டிரைவர் சீட், டூயல் ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், வயர்லெஸ் சார்ஜர், ஆம்பியன்ட் லைட்டிங் வழங்கப்படுகிறது. 

    ×