என் மலர்
கார்
- மஹிந்திரா XUV 3XO மாடலுக்கான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.
- இது மஹிந்திரா XUV 300 காரின் பேஸ்லிப்ட் வெர்ஷன் ஆகும்.
மஹிந்திரா நிறுவனம் இம்மாத இறுதியில் (ஏப்ரல் 29) தனது அதிகம் எதிர்பார்க்கப்படும் XUV 3XO அறிமுகம் செய்ய இருக்கிறது. கடந்த சில நாட்களாக இந்த காருக்கான டீசர்கள் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக, மஹிந்திரா XUV 3XO மாடலுக்கான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், தேர்வு செய்யப்பட்ட விற்பனை மையங்களில் மஹிந்திரா XUV 3XO மாடலுக்கான முன்பதிவுகள் துவங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் முன்பதிவு கட்டணம் ரூ. 21 ஆயிரம் என்றும் இவை அதிகாரப்பூர்வமாக நடைபெறவில்லை என்றும் கூறப்படுகிறது.

புதிய XUV 3XO மாடல் மஹிந்திரா நிறுவனத்தின் XUV 300 காரின் பேஸ்லிப்ட் செய்யப்பட்ட வெர்ஷன் ஆகும். இந்த மாடல் பெயர் மட்டுமின்றி டிசைன் அடிப்படையிலும் முழுமையாக மாற்றப்பட்டு இருக்கிறது. இதன் முன்புறம் மெல்லிய கிரில், இன்வெர்ட் செய்யப்பட்ட சி வடிவ எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், டூயல் பாரெல் எல்.இ.டி. ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், டுவீக் செய்யப்பட்ட பம்ப்பர் வழங்கப்படுகிறது.
இதன் பின்புறம் ரிடிசைன் செய்யப்பட்ட பம்ப்பர், எல்.இ.டி. டெயில் லைட், மஹிந்திராவின் டுவின் பீக் லோகோ மற்றும் XUV 3XO பிராண்டிங் வழங்கப்படுகிறது. இந்த காரில் முற்றிலும் புதிய டிசைன் கொண்ட அலாய் வீல்கள் வழங்கப்படுகின்றன.
மற்ற அம்சங்களை பொருத்தவரை அளவில் பெரிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், பானரோமிக் சன்ரூஃப், 360 டிகிரி சரவுண்ட் கேமரா, ஏழு ஏர்பேக், லெவல் 2 ADAS சூட் வழங்கப்படுகிறது. இத்துடன் வென்டிலேட் செய்யப்பட்ட முன்புற இருக்கைகள், பவர்டு டிரைவர் சீட், டூயல் ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், வயர்லெஸ் சார்ஜர், ஆம்பியன்ட் லைட்டிங் வழங்கப்படுகிறது.
- அசத்தல் சலுகை மற்றும் பலன்களை அறிவித்து இருக்கிறது.
- கார்ப்பரேட் சலுகை உள்ளிட்டவை வழங்கப்படவில்லை.
மஹிந்திரா நிறுவனம் ஸ்கார்பியோ N மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இரண்டு ஆண்டுகள் கழிந்துவிட்ட நிலையிலும் இந்த காருக்கான தட்டுப்பாடு இன்றும் குறையாத நிலையே தொடர்கிறது. மஹிந்திரா நிறுவனம் ஸ்கார்பியோ N மாடலின் 2023 வெர்ஷனுக்கு அசத்தல் சலுகை மற்றும் பலன்களை அறிவித்து இருக்கிறது.
அதன்படி ஸ்கார்பியோ N மாடலின் டாப் எண்ட் Z8 மற்றும் Z8L டீசல் 4x4 வேரியண்ட்களுக்கு ரூ. 1 லட்சம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த சலுகை மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் கொண்ட 7 சீட்டர் வேரியண்ட்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. Z8 மற்றும் Z8L டீசல் 4x2 AT வேரியண்ட்களுக்கு (6 மற்றும் 7 சீட்டர்) ரூ. 60 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

ஸ்கார்பியோ N Z8 மற்றும் Z8L பெட்ரோல் AT வேரியண்ட்களுக்கும் (6 மற்றும் 7 சீட்டர்) ரூ. 60 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. தள்ளுபடி தவிர எக்சேன்ஜ் போனஸ் அல்லது கார்ப்பரேட் சலுகை உள்ளிட்டவை வழங்கப்படவில்லை.
இந்திய சந்தையில் மஹிந்திரா ஸ்கார்பியோ N மாடல் 203 ஹெச்.பி. பவர் வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 175 ஹெச்.பி. பவர் வெளிப்படுத்தும் 2.2 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்த என்ஜினுடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
விலையை பொருத்தவரை ஸ்கார்பியோ N மாடல் ரூ. 13 லட்சத்து 60 ஆயிரம் என துவங்கி அதிகபட்சம் ரூ. 24 லட்சத்து 54 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
- துவக்க விலை ரூ. 7 லட்சத்து 73 ஆயிரம், என்று நிர்ணயம்.
- இந்த கார் ஐந்து வேரியண்ட்களில் கிடைக்கிறது.
டொயோட்டா இந்தியா நிறுவனம் மாருதி ஃபிரான்க்ஸ் மாடலின் ரிபேட்ஜ் செய்யப்பட்ட "டெய்சர்" மாடலை இந்திய சந்தையில் நேற்று (ஏப்ரல் 3) அறிமுகம் செய்தது. E, S, S+, G, மற்றும் V என ஐந்து வேரியண்ட்களில் கிடைக்கும் டொயோட்டா டெய்சர் துவக்க விலை ரூ. 7 லட்சத்து 73 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
புதிய டொயோட்டா டெய்சர் மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. முன்பதிவு கட்டணம் ரூ. 11 ஆயிரம் ஆகும். இந்த காரின் வினியோகம் மே மாதம் துவங்கும் என்று டொயோட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

புதிய டெய்சர் மாடல்- லுசென்ட் ஆரஞ்சு, ஸ்போர்டின் ரெட், கஃபே வைட், என்டைசிங் சில்வர், கேமிங் கிரே, ஸ்போர்டின் ரெட்-மிட்நைட் பிளாக் ரூஃப், என்டைசிங் சில்வர்- மிட்நைட் பிளாக் ரூஃப் மற்றும் கஃபே வைட்-மிட்நைட் பிளாக் ரூஃப் போன்ற நிறங்களில் கிடைக்கிறது.
இந்த காரில் ஒன்பது இன்ச் அளவில் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி, வயர்லெஸ் சார்ஜர், 360 டிகிரி சரவுண்ட் கேமரா, ஹெட்-அப் டிஸ்ப்ளே, ஆட்டோ டிம்மிங் IRVM, ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், புஷ் ஸ்டார்ட்/ஸ்டாப் பட்டன், ஸ்டீரிங்கில் மவுன்ட் செய்யப்பட்ட கண்ட்ரோல்கள் வழங்கப்படுகின்றன.
பாதுகாப்பிற்கு ஆறு ஏர்பேக், ஹில் ஹோல்டு அசிஸ்ட், ஏபிஎஸ் மற்றும் இபிடி, ரியர் டிஃபாகர், ஐசோஃபிக்ஸ் மவுன்ட்கள், வெஹிகில் ஸ்டேபிலிட்டி கண்ட்ரோல் மற்றும் பார்க்கிங் கேமரா சென்சார்கள் வழங்கப்படுகின்றன.
பவர்டிரெயினை பொருத்தவரை டொயோட்டா டெய்சர் மாடலில் 1.2 லிட்டர் NA பெட்ரோல், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இத்துடன் CNG கிட் ஆப்ஷனும் தேர்வு செய்யப்பட்ட வேரியண்ட் உடன் வழங்கப்படுகிறது. இந்த என்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல், 5 ஸ்பீடு AMT, 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் யூனிட் வழங்கப்படுகிறது.
- இதன் ஃபேஸ்லிஃப்ட் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது.
- ஐந்து வேரியண்ட்களை அறிமுகம் செய்து இருக்கிறது.
இந்திய சந்தையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் கார் மாடல்களில் ஒன்று டாடா நெக்சான். நெக்சான் மாடல் காம்பேக்ட் எஸ்.யு.வி. பிரிவில் தொடர்ந்து கணிசமான விற்பனையை பதிவு செய்து வருகிறது. சமீபத்தில் இதன் ஃபேஸ்லிஃப்ட் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது.
அதிகளவு மாற்றங்களுடன் புதிய தோற்றம் மற்றும் அம்சங்களை நெக்சான் ஃபேஸ்லிஃப்ட் மாடல் கொண்டிருக்கிறது. அந்த வரிசையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது நெக்சான் மாடலின் வேரியண்ட்களை மாற்றியமைத்து புதிதாக ஐந்து வேரியண்ட்களை அறிமுகம் செய்து இருக்கிறது.

டாடா நெக்சான் புதிய வேரியண்ட்களின் விலை ரூ. 10 லட்சம் என்று துவங்குகிறது. நெக்சான் பெட்ரோல் மற்றும் டீசல் வேரியண்ட்களில் AMT வெர்ஷன்கள் புதிதாக இணைக்கப்பட்டுள்ளன. முன்னதாக டாடா நிறுவனம் நெக்சான் டார்க் எடிஷன் மாடல்களை அறிமுகம் செய்தது. இவற்றின் விலை ரூ. 11 லட்சத்து 45 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டது.
பெட்ரோல் வெர்ஷன்களில் நெக்சான் ஸ்மார்ட் பிளஸ், பியூர், பியூர் எஸ் வேரியண்ட்களில் ஆட்டோமேட்டெட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. டீசல் வெர்ஷனில் பியூர் மற்றும் பியூர் எஸ் வேரியண்ட்களில் ஆட்டோமேடிக் ஆப்ஷன் வழங்கப்படுகிறது.
தேர்வு செய்யப்பட்ட வேரியண்ட்களில் ஏ.எம்.டி. கியர்பாக்ஸ் வழங்குவது தவிர டாடா நெக்சான் மாடல்களில் வெறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. இந்த மாடல் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என இருவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல், 6 ஸ்பீடு மேனுவல் ணற்றும் 6 ஸ்பீடு AMT மற்றும் 7 ஸ்பீடு DCA டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
- டாப் எண்ட் வேரியண்டில் மட்டுமே கிடைக்கும்.
- காரில் வேறு எந்த மாற்றமும் இல்லை.
ஸ்கோடா நிறுவனம் தனது கோடியக் எஸ்.யு.வி.-இன் வேரியன்ட்களை மாற்றியுள்ளது. முன்னதாக மூன்று வேரியண்ட்களில் விற்பனை செய்யப்பட்டு வந்த கோடியக் தற்போது டாப் எண்ட் வேரியண்டில் மட்டுமே கிடைக்கும். மேலும், இதன் அம்சங்களும் மாற்றப்பட்டுள்ளன.
ஸ்கோடா கோடியக் L&K வேரியண்ட் ரூ. 41 லட்சத்து 99 ஆயிரம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இதன் விலை தற்போது ரூ. 2 லட்சம் குறைக்கப்பட்டு ரூ. 39 லட்சத்து 99 ஆயிரம் என மாற்றப்பட்டு இருக்கிறது. விலை, வேரியண்ட் மாற்றப்பட்டது தவிர காரில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

கோடியக் மாடலில் 190 ஹெச்.பி. பவர், 320 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் 2.0 லிட்டர், நான்கு சிலிண்டர்கள் கொண்ட டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜினுடன் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் மற்றும் 4-வீல் டிரைவ் போன்ற வசதிகள் வழங்கப்படுகின்றன.
இந்திய சந்தையில் ஸ்கோடா நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் எஸ்.யு.வி. மாடலாக கோடியக் விற்பனை செய்யப்படுகிறது. இந்த மாடல் டொயோட்டா பார்ச்சூனர், ஜீப் மெரிடியன், ஹூண்டாய் டக்சன் மற்றும் எம்.ஜி. குளோஸ்டர் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
- வாடிக்கையாளர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
- பரிசோதனையில் 34-க்கு 20.86 புள்ளிகளை பெற்றது.
சிட்ரோயன் இந்தியா நிறுவனம் தனது eC3 எலெக்ட்ரிக் ஹேச்பேக் மாடலை பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தியது. இந்த சோதனையின் முடிவு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
முன்புறம் ஓட்டுநர் மற்றும் பயணி இருக்கைகளில் ஏர்பேக், பெல்ட் லோடு லிமிட்டர் மற்றும் சீட் பெல்ட் ரிமைண்டர் போன்ற வசதிகளை கொண்டிருக்கும் சிட்ரோயன் eC3 குளோபல் NCAP கிராஷ் டெஸ்டில் ஓரு நட்சத்திர குறியீடையும் பெறாவில்லை. இது சிட்ரோயன் வாடிக்கையாளர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

சிட்ரோயன் eC3 மாடல் பெரியவர்கள் பாதுகாப்புக்கான பரிசோதனையில் 34-க்கு 20.86 புள்ளிகளை பெற்றது. சிறுவர்கள் பாதுகாப்புக்கான பரிசோதனையில் 49-க்கு 10.55 புள்ளிகளையே பெற்றது. இந்த கார் அதன் ஓட்டுநர் மற்றும் அவரின் அருகாமையில் அமரும் பயணிக்கு தலை மற்றும் கழுத்து பகுதிகளில் நல்ல பாதுகாப்பை வழங்கியதாக குளோபல் NCAP தெரிவித்தது.
எனினும், பக்காவாட்டுகளில் தலை பகுதிக்கு பாதுகாப்பு அளிப்பதை ஆப்ஷனாகவும் சிட்ரோயன் வழங்கவில்லை. காரின் ஒட்டுமொத்த உருவம் திடமாக இருந்தது என்று குளோபல் NCAP தெரிவித்துள்ளது.
இவைதவிர சிட்ரோயன் eC3 எலெக்ட்ரிக் ஹேச்பேக் காரில் ஏ.பி.எஸ். மற்றும் இ.பி.டி. போன்ற பாதுகாப்பு அம்சங்கள், ரிவர்ஸ் பார்கிங் சென்சார்கள், ரியர் டோர் மேனுவல் சைல்டு லாக், ஹை ஸ்பீடு அலர்ட் சிஸ்டம், ஸ்பீடு சென்சிடிவ் ஆட்டோ டோர் லாக் வசதியும் வழங்கப்படுகிறது.
- ஹூண்டாய் தொடர்பு கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
- வாகனங்களை ஹூண்டாய் இலவசமாக சரிசெய்து கொடுக்கும்.
ஹூண்டாய் நிறுவனம் தனது வெர்னா செடான் மாடலின் தேர்வு செய்யப்பட்ட iVT மாடல்களை ரிகால் செய்வதாக அறிவித்து இருக்கிறது. ரிகால் செய்யப்பட வேண்டிய கார்களை பயன்படுத்துவோரை ஹூண்டாய் தொடர்பு கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
காரில் உள்ள எலெக்ட்ரிக் ஆயில் பம்ப் கண்ட்ரோலரில் பிரச்சினை ஏற்பட்டதே ரிகால் செய்வதற்கான காரணம் ஆகும். பிரச்சினை சரி செய்வதற்காக அருகாமையில் உள்ள ஹூண்டாய் டீலர்ஷிப்கள் வாடிக்கையாளர்களை தொடர்பு கொள்ளும்.
பாதிக்கப்பட்ட வாகனங்களை ஹூண்டாய் இலவசமாக சரிசெய்து கொடுக்கும். முன்னதாக கியா நிறுவனம் தனது செல்டோஸ் எஸ்.யு.வி.-யை இதே பிரச்சினையை சரி செய்வதற்காக 4 ஆயிரத்து 300 யூனிட்களை ரிகால் செய்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு மார்ச் மாத வாக்கில் ஹூண்டாய் தனது முற்றிலும் புதிய வெர்னா மாடலை அறிமுகம் செய்தது. இந்த கார் EX, S, SX மற்றும் SX(O) என நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 11 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது.
- புது வால்வோ காரின் முன்பதிவு கட்டணம் ரூ. 1 லட்சம் ஆகும்.
- மணிக்கு அதிகபட்சம் 180 கி.மீ. வேகத்தில் செல்லும்.
வால்வோ கார் இந்தியா நிறுவனம் தனது XC40 ரிசார்ஜ் சிங்கில் வேரியண்டுக்கான முன்பதிவுகளை துவங்கியது. இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய வேரியண்டின் விலை ரூ. 54 லட்சத்து 95 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய வால்வோ XC40 ரிசார்ஜ் முன்பதிவு கட்டணம் ரூ. 1 லட்சம் ஆகும். முன்பதிவு வால்வோ இந்தியா அதிகாரப்பூர்வ வலைதளத்தில் நடைபெறுகிறது.
புதிய வேரியண்ட் ஏற்கனவே விற்பனை செய்யப்படும் XC40 ரிசார்ஜ் டூயல் மோட்டார், ஆல்வீல் டிரைவ் வேரியண்டின் கீழ் நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது.

புதிய வேரியண்ட்-இல் பிக்சல் எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், ஃபாக் லேம்ப்கள், 360 டிகிரி கேமரா, ஹார்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டம் போன்ற வசதிகள் வழங்கப்படவில்லை. மாற்றாக இந்த காரில் 8 ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம், 2-ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், 12 இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே, 9 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் யூனிட் உள்ளது.
இத்துடன் பார்க் அசிஸ்ட், 19 இன்ச் அலாய் வீல்கள், பானரோமிக் சன்ரூஃப், முன்புறம் பவர்டு இருக்கைகள், வயர்லெஸ் போன் சார்ஜிங் போன்ற வசதிகள் உள்ளன. பாதுகாப்பிற்கு 7 ஏர்பேக், லேன் கீப் அசிஸ்ட், அடாப்டிவ் குரூயிஸ் கண்ட்ரோல், கிராஸ் டிராஃபிக் அலர்ட்கள், ரியர் கொலிஷன் வார்னிங் போன்ற வசதிகளை வழங்கும் ADAS சூட் உள்ளது.

இதில் உள்ள வால்வோ ஒற்றை மோட்டார் 238 ஹெச்.பி. பவர், 420 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர்கள் வேகத்தை 7.3 நொடிகளில் எட்டிவிடும் திறன் கொண்டுள்ளது. இந்த கார் மணிக்கு அதிகபட்சம் 180 கிலோமீட்டர்கள் வேகத்தில் செல்லும்.
வால்வோ XC40 ரிசார்ஜ் புதிய வேரியண்டில் 69 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 475 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என சான்று பெற்றுள்ளது.
- புதிய கார் பற்றிய தகவல்கள் அனைத்தும் ரகசியமாகவே உள்ளது.
- முக்கிய அறிவிப்பை வெளியிட எம்.ஜி. மோட்டார்ஸ் திட்டம்.
எம்.ஜி. மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் பயன்படுத்துவதற்காக புதிய பெயரை டிரேட்மார்க் செய்துள்ளது. இந்த பெயரில் தான் எம்.ஜி. நிறுவனத்தின் மூன்றாவது எலெக்ட்ரிக் கார் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது.
புதிய எலெக்ட்ரிக் கார் மாடல் எக்செல்லார் என்ற பெயரில் விற்பனை செய்யப்பட உள்ளது. சர்வதேச சந்தையில் எம்.ஜி. நிறுவனம் எந்த மாடலுக்கும் எக்செல்லார் பெயரை பயன்படுத்துவதில்லை. அந்த வகையில், இந்த வாகனம் பற்றிய தகவல்கள் அனைத்தும் ரகசியமாகவே உள்ளது.

இந்த எலெக்ட்ரிக் கார் கொமெட் மற்றும் ZS EV மாடல்களுக்கு மத்தியில் நிலை நிறுத்தப்படும் என்று தெரிகிறது. புதிய எலெக்ட்ரிக் கார் டாடா நெக்சான் EV மாடலுக்கு போட்டியாக அமையும். மார்ச் 20-ம் தேதி மிக முக்கிய அறிவிப்பை வெளியிட எம்.ஜி. மோட்டார்ஸ் திட்டமிட்டு வருகிறது.
அந்த வகையில், புதிய எக்செல்லார் எலெக்ட்ரிக் கார் பற்றிய விவரங்கள் வெளியிடப்படும் என்று தெரிகிறது. புதிய எலெக்ட்ரிக் கார் மட்டுமின்றி எம்.ஜி.மோட்டார்ஸ் நிறுவனம் தனது குளோஸ்டர் ஃபேஸ்லிஃப்ட் மாடலை டெஸ்டிங் செய்து வருகிறது. வரும் மாதங்களில் இந்த மாடல் அறிமுகம் செய்யப்படலாம்.
- இந்த சலுகைகள் இம்மமாத இறுதிவரை வழங்கப்படும்.
- சலுகைகள் கார் மாடல், வேரியண்டிற்கு ஏற்ப வேறுபடும்.
வோக்ஸ்வேகன் நிறுவனம் தனது கார் மாடல்களுக்கு மார்ச் மாத சலுகைகளை அறிவித்து இருக்கிறது. அதன்படி வோக்ஸ்வேகன் டுகன், விர்டுஸ் போன்ற எஸ்.யு.வி. மாடல்களுக்கு அசத்தல் சலுகைகள் மற்றும் தள்ளுபடி வழங்கப்படுகின்றன. இவை ரொக்க தள்ளுபடி, கார்ப்பரேட் தள்ளுபடி மற்றும் எக்சேன்ஜ் போனஸ் வடிவில் வழங்கப்படுகின்றன.
இந்த சலுகை மற்றும் பலன்கள் மார்ச் மாத இறுதி வரை வழங்கப்படுகின்றன. இதில் வோக்ஸ்வேகன் விர்டுஸ் மாடலுக்கு அதிகபட்சம் ரூ. 75 ஆயிரம் வரையிலான பலன்கள் கிடைக்கும். இதில் ரூ. 30 ஆயிரம் ரொக்க தள்ளுபடி, ரூ. 30 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ் மற்றும் ரூ. 15 ஆயிரம் வரை கார்ப்பரேட் தள்ளுபடி அடங்கும்.

வோக்ஸ்வேகன் டைகுன் மாடலுக்கு ரூ. 1 லட்சத்து 30 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகின்றன. இதில் ரூ. 60 ஆயிரம் ரொக்க தள்ளுபடி, ரூ. 40 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ் மற்றும் ரூ. 30 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி அடங்கும்.
இந்த சலுகைகள் ஸ்டாக் இருப்பு, வேரியண்ட், பகுதி விற்பனை மையம், காரின் நிறம், பவர்டிரெயின் மற்றும் இதர நிலைகளுக்கு ஏற்ப வேறுபடும்.
- ஆடியின் எதிர்கால இ டிரான் மாடல்கள் உருவாக்கப்பட இருக்கின்றன.
- இந்த எஸ்.யு.வி. இருவித ஆப்ஷன்களில் கிடைக்கும்.
ஆடி நிறுவனம் தனது முற்றிலும் புதிய கியூ6 இ டிரான் மாடல் மார்ச் 18-ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. ஆடியின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட எஸ்.யு.வி. மாடல் முற்றிலும் புதிய PPE (பிரீமியம் பிளாட்ஃபார்ம் எலெக்ட்ரிக்) பிளாட்ஃபார்மில் உருவாகி இருக்கிறது. இதே பிளாட்ஃபார்மில் ஆடியின் எதிர்கால இ டிரான் மாடல்கள் உருவாக்கப்பட இருக்கின்றன.
புதிய காரின் புகைப்படங்களை ஆடி நிறுவனம் வெளியிட்டு உள்ளது. இந்த மாடல் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஆடி கியூ4 மற்றும் கியூ8 இ டிரான் எலெக்ட்ரிக் எஸ்.யு.வி.-க்களை போன்ற டிசைன் கொண்டிருக்கும் என்று தெரியவந்துள்ளது. அதன்படி பல்கேரியன் பியர்டு கிரில் மூடப்பட்டு மெல்லிய லைட் கிளஸ்டர்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

போர்ஷே மக்கன் மாடலை போன்றே புதிய கியூ6 மாடலிலும் ஸ்ப்லிட் ஹெட்லைட் டிசைன், எல்.இ.டி. டி.ஆர்.எல்.-கள் வழங்கப்படுகின்றன. புதிய கியூ6 இ டிரான் உள்புறத்தில் இரட்டை டிஜிட்டல் ஸ்கிரீன்கள்- ஒன்று இன்ஃபோடெயின்மென்ட் மற்றொன்று இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டராக வழங்கப்படுகின்றன.
புதிய ஆடி கியூ6 இ டிரான் மாடலில் 800 வோல்ட் எலெக்ட்ரிக் ஆர்கிடெக்ச்சர் வழங்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதன் பவர்டிரெயின் பற்றிய விவரங்கள் மர்மமாகவே உள்ளன. இந்த எஸ்.யு.வி. மாடல் 2-வீல் மற்றும் ஆல்-வீல் டிரைவ் என இருவித ஆப்ஷன்களில் கிடைக்கும் என்று தெரிகிறது.
- கிரெட்டா N லைன் மாடல் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
- இந்த கார் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் கொண்டிருக்கிறது.
ஹூண்டாய் இந்தியா நிறுவனம் தனது அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கிரெட்டா N லைன் மாடலை அறிமுகம் செய்தது. புதிய கிரெட்டா N லைன் எஸ்.யு.வி. மாடலின் விலை ரூ. 16 லட்சத்து 82 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த கார் N8 மற்றும் N10 என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
புதிய கிரெட்டா N லைன் எஸ்.யு.வி.-இல் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 158 ஹெச்.பி. பவர், 253 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 7 ஸ்பீடு DCT கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு உள்ளது.

இந்த கார் லிட்டருக்கு எவ்வளவு மைலேஜ் வழங்கும் என்ற விவரங்கள் வெளியாகி உள்ளது. அதன்படி புதிய கிரெட்டா N லைன் எஸ்.யு.வி. மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் வெர்ஷன்கள் லிட்டருக்கு முறையே 18 மற்றும் 18.2 கிலோமீட்டர்கள் வரை மைலேஜ் வழங்கும் என்று ARAI சான்று பெற்று இருக்கின்றன.
கிரெட்டா ஸ்டான்டர்டு வெர்ஷனில் உள்ள டர்போ பெட்ரோல் என்ஜின் DCT கியர்பாக்ஸ் வெர்ஷன் லிட்டருக்கு 18.4 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் என்று கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஹூண்டாய் i20 N லைன் மற்றும் வென்யூ N லைன் மாடல்கள் வரிசையில் கிரெட்டா N லைன் மூன்றாவது N சீரிஸ் மாடலாக இணைந்துள்ளது.






