என் மலர்
ஆட்டோமொபைல் செய்திகள்
இந்தியாவில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் அதிகம் விற்பனையான ஸ்கூட்டர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஜனவரி மாதம் விற்கப்பட்ட டாப் 10 ஸ்கூட்டர்களின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. இதில் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் முதலிடத்தை பிடித்துள்ளது.
சில ஆண்டுகளாகவே ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர்களுக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு இருக்கிறது. இந்நிலையில் கடந்த மாதம் 1,43,234 யூனிட்கள் விற்கப்பட்டு ஹோண்டா ஆக்டிவா முதலிடத்தை பிடித்துள்ளது.
கடந்த மாதம் விற்பனை செய்யப்பட்ட மொத்த ஸ்கூட்டர்களில் 44.61 சதவீதம் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரே ஆகும்.

2-வது இடத்தை டிவிஎஸ் ஜூபிட்டர் ஸ்கூட்டர் பிடித்துள்ளது. 43,476 யூனிட் டிவிஎஸ் ஜூபிட்டர் ஸ்கூட்டர் கடந்த மாதம் விற்பனை ஆகியுள்ளது. இதை தொடர்ந்து 3-வது இடத்தில் சுஸுகியின் ஆக்ஸஸ் மாடல் 42,148 யூனிட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
4-வது இடத்தில் ஹோண்டா டியோ 27,837 யூனிட்கள் விற்கப்பட்டுள்ளது. 5-வது இடத்தில் டிவிஎஸ் எண்டார்க் 21,120 யூனிட்களும், 6-வது ஹீரோ பிளஷர் 13,195 யூனிட்களும் விற்கப்பட்டுள்ளன. இதை தொடர்ந்து 7-வது இடத்தில் 9,504 யூனிட்கள் விற்பனையில் சுஸுகி பர்க்மேனும், 8-வது இடத்தில் 7,030 யூனிட்கள் விற்பனையில் யமஹா ரே இசட்.ஆர் ஸ்கூட்டர்களும் உள்ளன.
9வது மற்றும் 10-வது இடங்களில் சுஸுகி அவெனிஸ் 6,314 யூனிட்களும், யமஹா ஃபேஸினோ 6,221 யூனிட்களும் விற்கப்பட்டுள்ளன.
இந்த காரை வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு அனைத்து வித சேவைகளும் தொடர்ந்து வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரெனால்ட் நிறுவனத்தின் டஸ்டர் கார் இந்தியாவில் நல்ல வரவேற்பை பெற்றது. சந்தையில் 10 ஆண்டுகளை நிறைவு செய்ய இருந்த இந்த காரின் உற்பத்தியை ரெனால்ட் நிறுவனம் நிரந்தரமாக நிறுத்தியுள்ளது.
டாஸ்டர் காரின் மாடல் டிசைன் மற்றும் ஃபீச்சர்ஸ் ஆகியவை பழையதாகிவிட்டதே இதற்கு காரணம் என கூறப்படுகிறது. இருப்பினும் அந்நிறுவனம் டஸ்டர் காரின் 3-வது ஜெனரேஷனை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.
டஸ்டர் காரின் செகண்ட் ஜெனெரேஷன் உலகளவில் விற்பனையில் இருந்தாலும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படாமல் இருந்தது.
இந்நிலையில் தற்போது நேரடியாக 3-வது ஜெனரேஷன் டஸ்டர் கார் அறிமுகம் ஆகவுள்ளது.
முதல் ஜெனரேஷன் டஸ்டர் காரின் விற்பனை நிறுத்தப்பட்டாலும் ஏற்கனவே இந்த காரை வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு அனைத்து வித சேவைகளும் தொடர்ந்து வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டீலர் ஸ்டாக்கில் முதல் ஜெனரேஷன் கார்கள் விற்பனையில் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த பைக் பெரிதும் விற்கப்படாததே இந்த விலை குறைப்புக்கு காரணம் என கூறப்படுகிறது.
ஹோண்டா நிறுவனம் சிபி500எக்ஸ் பைக்கை இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் அறிமுகம் செய்தது. அட்வென்ஜர் டூரர் ரக பைக்கான இதற்கு தற்போது விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது.
சிபி500எக்ஸ் பைக் அறிமுகமானபோது இதன் எக்ஸ் ஷோரூம் விலை ரூ.6.87 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது இந்த பைக்கின் விலை 1.07 லட்சம் ரூபாய் குறைக்கப்பட்டு ரூ.5.80 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது.

சிபி500எக்ஸ் பைக்கில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் அனைவரையும் கவர்ந்தாலும், பெரிதாக விற்பனை இல்லை. இதன் விலை அதிகமாக இருப்பதே அதற்கு காரணம் என கூறப்பட்ட நிலையில் தற்போது விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த விலை குறைப்பு தற்காலிகமானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹோண்டா சிபி500எக்ஸ் பைக்கில், 471.03 சிசி, நான்கு-ஸ்ட்ரோக், பேரலல்-ட்வின் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜினுடன் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 8,500 ஆர்பிஎம்மில் 47 ஹெச்பி பவரையும், 6,500 ஆர்பிஎம்மில் 43.2 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இதன் எரிபொருள் டேங்க் கொள்ளளவு 17.7 லிட்டர்களாக உள்ளது.
இந்த கார் ப்ரீமியம், ப்ரெஸ்டீஜ், ப்ரெஸ்டீஜ் ப்ளஸ், லக்சூரி, லக்சூரி ப்ளஸ் ஆகிய 5 ட்ரிம்களில் விற்பனைக்கு வந்துள்ளது.
தென் கொரிய கார் உற்பத்தி நிறுவனமான கியாவின் புதுவித எம்பிவி காரான கேரன்ஸ் இன்று விற்பனைக்கு வந்துள்ளது. இந்த காரில் பல வகையான சிறப்பு வசதிகள் இடம்பெற்றுள்ளன. இக்காருக்கான முன்பதிவு முன்பே தொடங்கப்பட்ட நிலையில் இதுவரை 19,089 பேர் இந்த காரை புக் செய்துள்ளனர். இந்த காரின் விலை வெளியாவதற்கு முன்னரே பலரும் புக்கிங் செய்தது குறிப்பிடத்தக்கது.
கியாவின் கேரன்ஸ் கார் ப்ரீமியம், ப்ரெஸ்டீஜ், ப்ரெஸ்டீஜ் ப்ளஸ், லக்சூரி, லக்சூரி ப்ளஸ் ஆகிய 5 ட்ரிம்களில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த அனைத்து வகைகளில் 6/7 இருக்கைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் இந்த கார் இம்பீரியல் ப்ளூ, மோஸ் பிரவுன் மற்றும் இன்டென்ஸ் சிவப்பு நிறத்துடனான ஸ்பார்க்கிளிங் சில்வர், அரோரா பிளாக் பியர்ல், கிராவிட்டி கிரே, கிளாசியர் ஒயிட் பியர்ல் மற்றும் கிளியர் ஆகிய வண்ணங்களில் கிடைக்கிறது.
கியா கேரன்ஸ் காரின் முகப்பு பகுதி, பின் பகுதியை அலங்கரிக்கும் விதமாக எல்இடி லைட்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 16 இன்ச் மெஷின் கட் அலாய் வீல்கள், பாடி கிளாடிங் மற்றும் குரோம் பூச்சு கொண்ட ஆக்ஸசரிஸ்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் 64 நிறங்கள் கொண்ட ஆம்பியண்ட் லைட்டுகள், ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே இணைப்பு வசதிக் கொண்ட 10.25 இன்ச் அளவுள்ள தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 8 ஸ்பீக்கர்கள் கொண்ட போஸ் சவுண்ட் சிஸ்டம், ஓடிஏ மேப் உள்ளிட்ட அம்சங்களும் இதில் வழங்கப்பட்டுள்ளன.

பாதுகாப்பு அம்சங்களும் இந்த காரில் வழங்கப்பட்டுள்ளன. வலுவான ஸ்டீலை கொண்டு இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் ஆறு ஏர் பேக்குகள், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், 360 டிகிரி திறன் கொண்ட கேமராக்கள், பிளைண்ட் ஸ்பாட் மானிட்டர், டவுன்ஹில் பிரேக்கிங் கன்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், டிராக்சன் கன்ட்ரோல், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் மற்றும் முன்-பின் பார்க்கிங் சென்சார்கள், டயர் பிரஷ்ஷர் மானிட்டர் சிஸ்டம் மற்றும் ஐசோஃபிக் சைல்டு சீட்ஸ் உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த காரில் இடம்பெற்றுள்ளன.
கொரோனா சூழலை கவனத்தில் கொண்டு வைரஸ் மற்றும் பாக்டீரியக்களை அழிக்கும் திறன் கொண்ட ஏர் ப்யூரிஃபையர், ஏர் வெண்டிலேட் வசதிக் கொண்ட முன் பக்க இருக்கைகள், ஸ்போர்ட் / ஈகோ / நார்மல் என 3 வகை டிரைவிங் மோட்கள், கார் இணைப்பு வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.
காரின் பின்புறம் அமர்ந்துள்ள இருக்கையாளர்களும் செல்லும் வகையில் ஏசி அமைப்புகள், வசதியான இருக்கைகள், இருக்கையில் அட்ஜஸ்டபிள் ஹெட்ரெஸ்ட் வசதி ஆகியவையும் உள்ளன.
கியா கேரன்ஸ் 1.5 லிட்டர் பெட்ரோல், 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் மோட்டார் ஆகிய எஞ்ஜின் தேர்வுகளில் விற்பனைக்கு வந்துள்ளது.
இந்த காரின் அறிமுக எக்ஸ் ஷோரூம் விலை ரூ. 8.99 லட்சத்தில் தொடங்கி ரூ. 16.99 லட்சம் வரை உள்ளது.
புதிய பல்சர் என்250 மற்றும் பல்சர் எஃப்250 மாடல்களில் 249.07சிசி, சிங்கில் சிலிண்டர், ஏர்/ஆயில் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கின்றன.
புனேவை சேர்ந்த பஜாஜ் நிறுவனம் புதிய மோட்டார்சைக்கிள் மாடல்களை கவர்ச்சிகர விலையில் அறிமுகம் செய்து பின் சத்தமின்றி அவற்றின் விலையை உயர்த்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளது. இந்நிலையில் தற்போது பஜாஜ் நிறுவனம் பல்சர் என்250, எஃப்250 பல்சர் மற்றும் டாமினர் 250, 400 பைக்குகளின் விலைகளை உயர்த்தியுள்ளது.
இதன்படி பல்சர் எஃப்250 சீரிஸ் விலை ரூ. 915 உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் பல்சர் என்250 விலையும் ரூ. 1180 உயர்த்துள்ளது.
இதையடுத்து புதிய பல்சர் எஃப்250-ன் எக்ஸ் ஷோரூம் விலை ரூ. 1,40,915-ஆக உயர்ந்துள்ளது. பல்சர் என்250-ன் எக்ஸ் ஷோரூம் விலை ரூ. 1,39,117-ஆக உயர்ந்துள்ளது.

இதேபோன்று பஜாஜ் டாமினர் 250-ன் எக்ஸ் ஷோரூம் விலை ரூ.5000 உயர்த்தப்பட்டு ரூ.1.64 லட்சமாக உள்ளது. அதேபோன்று பஜாஜ் டாமினர் 400-ன் எக்ஸ் ஷோரூம் விலை ரூ.4,500 உயர்த்தப்பட்டு ரூ.2.17 லட்சமாக இருக்கிறது.
புதிய பல்சர் என்250 மற்றும் பல்சர் எஃப்250 மாடல்களில் 249.07சிசி, சிங்கில் சிலிண்டர், ஏர்/ஆயில் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கின்றன. மேலும் இந்த என்ஜின் 24 பி.ஹெச்.பி. திறன், 21.5 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இத்துடன் வழங்கப்பட்டுள்ளது.
டிரையம்ப் நிறுவனத்தின் புதிய மோட்டார்சைக்கிள் மாடலின் விலை இந்தியாவில் மாற்றப்பட்டு இருக்கிறது.
டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது டிரைடெண்ட் 660 மோட்டார்சைக்கிள் விலையை திடீரென உயர்த்தியது. விலை உயர்வின் படி டிரையம்ப் டிரைடெண்ட் 660 மாடலின் புதிய விலை ரூ. 7.45 லட்சம் என மாறி இருக்கிறது. இது முந்தைய விலையை விட ரூ. 50 ஆயிரம் அதிகம் ஆகும்.
இந்திய சந்தையில் விலை உயர்வு ஏற்கனவே அமலுக்கு வந்து விட்டது. முன்னதாக டிரையம்ப் டிரைடெண்ட் 660 மோட்டார்சைக்கிள் ரூ. 6.95 லட்சம் எனும் அறிமுக விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. புதிய டிரைடெண்ட் 660 மாடல் டிரையம்ப் நிறுவனத்தின் குறைந்த விலை மோட்டார்சைக்கிள் என்ற பெருமையுடன் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.

டிரையம்ப் டிரைடெண்ட் 660 மாடலில் 660சிசி, இன்-லைன், 3 சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 81 பி.ஹெச்.பி. திறன், 64 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ், பை-டைரெக்ஷனல் குயிக் ஷிஃப்டர் விரும்புவோர் பொருத்திக் கொள்ளும் வகையில் ஆப்ஷனாக வழங்கப்படுகிறது.
இத்துடன் ரைடு-பை-வயர், ஸ்விட்ச் செய்து கொள்ளும் வசதியுடன் டராக்ஷன் கண்ட்ரோல், முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், ப்ளூடூத் கனெக்டிவிட்டி போன்ற அம்சங்கள் உள்ளன. இந்த மாடலில் ரோட் மற்றும் ரெயின் என இருவித ரைடிங் மோட்கள் உள்ளன. இந்தியாவில் டிரையம்ப் டிரைடெண்ட் 660 மாடல் நான்கு வித நிறங்களில் கிடைக்கிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நெக்சான் இ.வி. மாடல் இந்திய விற்பனையில் புதிய மைல்கல் எட்டியுள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நெக்சான் இ.வி. மாடல் இரண்டு ஆண்டுகளுக்கு முன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. அறிமுகமானது முதல் நெக்சான் இ.வி. மாடல் இந்திய விற்பனையில் விற்பனையில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
டாடா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார் விற்பனையை தொடர்ந்து அதிகப்படுத்துவதில் நெக்சான் இ.வி. தினி இடம் பிடித்துள்ளது. அந்த வகையில் இந்திய சந்தை விற்பனையில் டாடா நெக்சான் இ.வி. மாடல் இதுவரை 13,500 யூனிட்களை கடந்துள்ளது. இந்திய சந்தையின் எலெக்ட்ரிக் கார் விற்பனையில் பயணிகள் வாகனங்கள் பிரிவில் அதிகம் விற்பனையாகும் மாடலாகவும் நெக்சான் இ.வி. இருக்கிறது.

நெக்சான் இ.வி. மாடலில் 30.2 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இதனை முழுமையாக சார்ஜ் செய்தால் 312 கிலோமீட்டர் வரை செல்ல முடியும். இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 9.14 நொடிகளில் எட்டி விடும். இதில் வழங்கப்பட்டு இருக்கும் மோட்டார் 127 பி.ஹெச்.பி. திறன், 245 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் நெக்சான் இ.வி. மாடல் இந்திய விற்பனையில் 10 ஆயிரம் யூனிட்களை கடந்தது. இந்திய எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரிவில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பயணிகள் வாகன பிரிவில் 70 சதவீதத்திற்கும் அதிக பங்குகளை கொண்டிருக்கிறது.
டாடா நெக்சான் இ.வி. மாடலை டி.சி. ஃபாஸ்ட் சார்ஜர் மூலம் சார்ஜ் செய்யும் போது ஒரு மணி நேரத்தில் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்திட முடியும். எனினும், வழக்கமான சார்ஜர் பயன்படுத்தும் போது 10 சதவீதத்தில் இருந்து 90 சதவீதம் வரை சார்ஜ் ஆக 8.30 மணி நேரம் ஆகும்.
மாருதி சுசுகி நிறுவனத்தின் மேம்பட்ட பலேனோ பேஸ்லிப்ட் மாடலின் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
மாருதி சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில் மேம்பட்ட பலேனோ பேஸ்லிப்ட் மாடலை வெளியிடும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. முந்தைய தகவல்களின் படி புதிய பலேனோ பேஸ்லிப்ட் மாடல் பிப்ரவரி மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்பட்டது. எனினும், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய பலேனோ பேஸ்லிபிட் மாடல் மார்ச் மாத வாக்கில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.
இதுதவிர புதிய பலேனோ மாடலுக்கான முன்பதிவும் துவங்கி நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இது மாருதி சுசுகி அறிவிப்பின்றி விற்பனையாளர்கள் தரப்பில் மேற்கொள்ளப்பட்ட அதிகாரப்பூர்வமற்ற முன்பதிவுகள் ஆகும். சமீபத்தில் இந்த மாடலின் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகின. அதன்படி பலேனோ பேஸ்லிப்ட் மாடலின் வெளிப்புறம் மாற்றப்பட்டு இருக்கிறது.

மேலும் புதிய மாடலில் அகலமான முன்புற கிரில், ரி-டிசைன் செய்யப்பட்ட ஹெட்லேம்ப் யூனிட்கள், புதிய அலாய் வீல்கள், ஸ்ப்லிட் எல்.இ.டி. டெயில் லேம்ப் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. கடந்த வாரம் மாருதி சுசுகி நிறுவனம் புதிய பலேனோ மாடலுக்கான உற்பத்தி பணிகளை துவங்கியது.
உபகரணங்களை பொருத்தவரை பெரிய தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, குரூயிஸ் கணட்ரோல், என்ஜின் ஸ்டார்ட் / ஸ்டாப் பட்டன், ஸ்டீரிங் வீல் மற்றும் பல்வேறு இதர அம்சங்கள் வழங்கப்படுகிறது. இந்த மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் மைல்டு ஹைப்ரிட் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படலாம்.
டெஸ்லா நிர்வாக இயக்குனர் எலான் மஸ்க் இந்த வருடம் எலக்ட்ரிக் கார் வெளியிடப்படாது என கூறியதால், நிறுவனத்தின் மதிப்பு வெகுவாக குறைந்துள்ளது.
டெஸ்லா எலக்ட்ரிக் கார் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக விளங்கி வருகிறது. அந்த நிறுவனத்தின் பங்குகள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுகிறது. அந்த நிறுவனத்தின் சி.இ.ஓ. எலான் மஸ்க், டெஸ்லா இந்த வருடம் எலக்ட்ரிக் கார்களை வெளியிடாது. ஆட்களுக்குப் பதிலாக வேலைக்கு ரோபோக்களை ஈடுபடுத்துவதில் கவனம் செலுத்துகிறோம் என்றார்.

எலான் மஸ்க் இவ்வாறு கூறி மறுநாளே நியூயார்க் பங்குச்சந்தையில் டெஸ்லாவின் மதிப்பு 12 சதவீதம் குறைந்தது. இதனால் அந்த நிறுவனத்தின் மதிப்பு 100 பில்லியன் டாலர் அளவிற்கு சரிந்துள்ளது.
இதையும் படியுங்கள்... சிறார்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி - ஆஸ்திரேலிய அரசு அங்கீகாரம்
இந்திய சந்தையின் பிரமீயம் ஸ்கூட்டர் பிரிவில் யமஹா தனது ஏரோக்ஸ் 155 மூலம் களமிறங்கி இருக்கிறது.
யமஹா நிறுவனத்தின் 155சிசி மேக்சி ஸ்கூட்டர் ஏரோக்ஸ் 155 மாடல் சில மாதங்களுக்கு முன் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது. புதிய ஏரோக்ஸ் மூலம் யமஹா இந்திய சந்தையின் பிரீமியம் ஸ்போர்ட்ஸ் ஸ்கூட்டர்கள் பிரிவில் களமிறங்கி இருக்கிறது.
இந்தியாவில் புதிய யமஹா ஏரோக்ஸ் விலை ரூ. 1,31,739, எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. யமஹா ஏரோக்ஸ் மாடல் மெட்டாலிக் பிளாக், ரேசிங் புளூ மற்றும் கிரே வெர்மிலியன் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. புதிய ஏரோக்ஸ் மாடலை சில நாட்கள் பயன்படுத்தினோம். அதன்படி புதிய ஏரோக்ஸ் நம் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்கிறதா, பயன்படுத்த எப்படி இருக்கிறது என்ற விவரங்களை விரிவாக பார்ப்போம்.

யமஹா ஏரோக்ஸ் 155 அம்சங்கள்
பவர் டிரெயின் - 155சிசி, லிக்விட் கூல்டு, 4 ஸ்டிரோக், SOHC, 4 வால்வு
திறன் - 8,000 ஆர்.பி.எம்.-இல் 15.6 பி.எஸ்.
இழுவிசை - 6500 ஆர்.பி.எம்-இல் 13.9 நியூட்டன் மீட்டர்
டிரான்ஸ்மிஷன் - வி பெல்ட் ஆட்டோமேடிக்
டையர்கள் முன்புறம் / பின்புறம் - 110/80-14M/C 53P டியூப்லெஸ் / 140/70-14M/C 62P டியூப்லெஸ்
சஸ்பென்ஷன் முன்புறம் / பின்புறம் - டெலிஸ்கோபிக் ஃபோர்க் / யூனிட் ஸ்விங்
பிரேக் முன்புறம் / பின்புறம் - டிஸ்க் பிரேக் 230 எம்.எம். மற்றும் ஏ.பி.எஸ். / டிரம் 130 எம்.எம்.
வீல்பேஸ் - 1350 மில்லிமீட்டர்
கிரவுண்ட் க்ளியரன்ஸ் - 145 மில்லிமீட்டர்
சீட் உயரம் - 790 மில்லிமீட்டர்
எடை - 126 கிலோ
பியூவல் டேன்க் கொள்ளளவு - 5.5 லிட்டர்

டிசைன்
ஸ்கூட்டர்கள் பிரிவில் 155 சிசி, லிக்விட் கூல்டு என்ஜின் கொண்டு அறிமுகமானதோடு, அசத்தலான டிசைன் மூலம் புதிய ஏரோக்ஸ் அசர வைக்கிறது. இதன் ஒட்டுமொத்த வடிவமைப்பு மற்றும் தோற்றம் தனித்துவம் மிக்கதாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. மிக நேர்த்தியான பாடி-வொர்க், அதற்கு ஏற்ற எல்.இ.டி. ஹெட்லைட்களுடன் ஏரோக்ஸ் முன்புறம் ஸ்போர்ட் தோற்றத்துடன் காட்சியளிக்கிறது. இத்துடன் 14 இன்ச் வீல்கள், அசத்தலான எக்சாஸ்ட் சிஸ்டம், பின்புறம் டுவின் ஷாக் அப்சார்பர்கள் உள்ளன.
இவைதவிர, ஸ்விட்ச்கியர், பாடி-வொர்க் போன்றவை அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் ஃபியூவல் கேப், பில்லியன் ஃபூட்பெக், ஃபுளோர்-மேட் உள்ளிட்டவை வித்தியாசமாக இருந்தாலும் சமயங்களில் சற்றே இடையூறை ஏற்படுத்துகிறது. தோற்றத்தில் அதிக பிரம்மாண்டமாக காட்சியளிக்கும் ஏரோக்ஸ், 24.5 லிட்டர் அண்டர் சீட் ஸ்டோரேஜ் பெற்று இருக்கிறது. எனினும், இத்தகைய திறன் கொண்ட ஸ்கூட்டரில் 5.5 லிட்டர் ஃபியூவல் டேன்க் அளவில் சிறியதே.

அம்சங்கள்
ஏரோக்ஸ் மாடல் இந்திய சந்தையின் பிரீமியம் பிரிவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் ஹெட்லைட் மற்றும் டெயில் லேம்ப்கள் எல்.இ.டி. யூனிட்களாக வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் எல்.இ.டி. ஃபிளாஷர்கள் தனியே அக்சஸரி வடிவில் ரூ. 1,490 விலையில் விற்பனை செய்யப்படுகிகிறது. புதிய ஏரோக்ஸ் மாடலிலும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டு இருக்கிறது. இது பயன்பாட்டு தகவல்களுடன் வி.வி.ஏ. இண்டிகேட்டர் மற்றும் டக்கோமீட்டர் போன்ற விவரங்களையும் காண்பிக்கிறது.
இந்த அம்சங்களுடன் ப்ளூடூத் கனெக்டிவிட்டியும் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் அழைப்புகள் மற்றும் எஸ்.எம்.எஸ். அலெர்ட்கள், பார்க் லொகேஷன் உள்ளிட்டவை விவரங்களை இயக்க முடியும். இதில் உள்ள ஃபியூவல் டேன்க் ஸ்கூட்டரில் இருந்து இறங்காமலேயே பட்டன் மூலம் திறக்கும் வசதி கொண்டிருக்கிறது. இதன் அண்டர் சீட் ஸ்டேரேஜை இயக்கவும் பட்டன் வழங்கப்பட்டு இருக்கிறது. ஏரோக்ஸ் மாடலில் டி.சி. சார்ஜிங் போர்ட், சிங்கில் சேனல் ஏ.பி.எஸ். மற்றும் சைடு ஸ்டாண்டு கட்-ஆஃப் வசதி உள்ளது.

செயல்திறன்
புதிய யமஹா ஏரோக்ஸ் மாடலில் 4 வால்வுகள் கொண்ட 155சிசி மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் வி.வி.ஏ. தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இதே என்ஜின் யமஹாவின் ஆர்15 மாடலிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. எனினும், இதன் செயல்திறன் பிரீமியம் ஸ்கூட்டருக்கு ஏற்ற வகையில் ரி-டியூன் செய்யப்பட்டுள்ளது.
அந்த வகையில் ஏரோக்ஸ் கொண்டிருக்கும் என்ஜின் நகர பயன்பாடுகளுக்கு ஏற்ற உடனடி பிக்க்ப், நெடுஞ்சாலைகளுக்கு ஏற்ற சீரான வேகத்தை சிரமம் இன்றி வழங்குகிறது. இந்த மாடல் மணிக்கு 90 முதல் 100 கிலோமீட்டர் வேகங்களிலும் அதிர்வுகள் இன்றி சீராக செல்கிறது. இது மணிக்கு அதிகபட்சம் 115 கிலோமீட்டர் வேகத்தில் சீறிப்பாய்கிறது.
இந்த ஸ்கூட்டர் லிட்டருக்கு 50 கிலோமீட்டர் மைலேஜ் வழங்குகிறது. எனினும் அதிவேக பயன்பாடுகளின் போது, இந்த அளவு வேறுபடுகிறது. இத்துடன் போக்குவரத்து நெரிசல்களில் நிற்கும் போது எரிபொருள் சேமிக்கும் நோக்கில் என்ஜின் தானாக ஆஃப் ஆகிவிடுகிறது. மீண்டும் என்ஜினை செயல்பாட்டுக்கு கொண்டு வர நெரிசல் பதற்றம் இன்றி திராட்டிலை திருகினாலே போதும்.

ரைடு மற்றும் ஹேண்ட்லிங்
இந்தியாவில் விற்பனை செய்யப்படும் மற்ற ஸ்கூட்டர்களை விட ஏரோக்ஸ் மாடலின் ஹேண்ட்லிங் சிறப்பாகவே இருக்கிறது. நெரிசல்களில் உடனடி கட் செய்வது ஏரோக்ஸ் சற்று கனமாகவே உணர்கிறது. எனினும், இந்த ஸ்கூட்டரின் ஸ்டேபிலிட்டி மற்றும் கம்போஷர் அலாதியாக இருக்கிறது. எந்த வேகத்தில், எந்த கோணத்தில் பயணித்தாலும், அதிர்வுகள் அற்ற நிலையான உறுதித்தன்மையை ஏரோக்ஸ் உணரச் செய்கிறது. கார்னெரிங்களில் ஏரோக்ஸ் ஸ்கூட்டரையும் கடந்து மோட்டார்சைக்கிள் போன்ற அனுபவத்தை வழங்குகிறது.
மற்ற பெட்ரோல் ஸ்கூட்டர்களில் மோனோ ஷாக் வழங்கப்பட்டு இருக்கும் நிலையில், ஏரோக்ஸ் மாடலில் டுவின் ஷாக் அப்சார்பர்கள் உள்ளன. மேலும் இவை சரியான இடத்தில் பொருத்தப்பட்டுள்ளன. முன்புற ஃபோர்க் சவுகரிய அனுபவத்தை வழங்குகிறது. இதே ஸ்கூட்டரில் மேலும் சவுகரிய அனுபவத்தை பெற யமஹா கியாஸ்-சார்ஜ் செய்யப்பட்ட ஷாக் அப்சார்பர்கள் வழங்கப்படுகின்றன.
புதிய யமஹா ஏரோக்ஸ் மாடல் நகர போக்குவரத்து அசத்தலான சவுகரியத்தை வழங்குகிறது. இத்துடன் சி.வி.டி. வழங்கப்பட்டுளள்ளது. ஸ்கூட்டர் போன்ற பயன்பாடுகளிலும், இது மோட்டார்சைக்கிள் போன்ற அனுபவத்தை வழங்குகிறது.
கோமகி எலெக்ட்ரிக் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் ரேன்ஜர் எலெக்ட்ரிக் பைக் அறிமுகம் செய்தது.
கோமகி எலெக்ட்ரிக் நிறுவனம் இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் குரூயிசர் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது. கோமகி எலெக்ட்ரிக் குரூயிசர் மாடல் ரேன்ஜர் என அழைக்கப்படுகிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 1.68 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
புதிய கோமகி ரேன்ஜர் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மாடல் ஜனவரி 26 ஆம் தேதி முதல் கோமகி எலெக்ட்ரிக் விற்பனை மையங்களில் கிடைக்கும். புதிய கோமகி ரேன்ஜர் மாடல்- கார்னெட் ரெட், டீப் புளூ மற்றும் ஜெட் பிளாக் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது.

அம்சங்களை பொருத்தவரை கோமகி ரேன்ஜர் மாடல் குரூயிசர் டிசைனில் குரோம் எக்ஸ்டீரியர், பெரிய வீல்களை கொண்டிருக்கிறது. இதில் வட்ட வடிவம் கொண்ட எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், ரெட்ரோ தீம் கொண்ட இண்டிகேட்டர்கள் உள்ளன. இதில் சிங்கில் பாட் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், குரோம் டிரீட் செய்யப்பட்ட டிஸ்ப்ளே, அகலமான ஹேண்டில்பார்கள் வழங்கப்பட்டுள்ளன.
கோமகி ரேன்ஜர் எலெக்ட்ரிக் குரூயிசர் மோட்டார்சைக்கிளில் 4000 வாட் மோட்டார் மற்றும் 4 கிலோவாட் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் விற்பனை செய்யப்படும் எலெக்ட்ரிக் வாகனங்களில் இத்தகைய பேட்டரி இதுவரை எந்த மாடலிலும் வழங்கப்படவில்லை.
இந்த மோட்டார்சைக்கிள் முழு சார்ஜ் செய்தால் 180 முதல் 220 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது. இந்த மாடலில் ப்ளூடூத் சவுண்ட் சிஸ்டம், சைடு ஸ்டாண்டு சென்சார், குரூயிஸ் கண்ட்ரோல் வசதி, ஆண்டி-தெஃப்ட் லாக் சிஸ்டம், டூயல் ஸ்டோரேஜ் பாக்ஸ் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.
ஸ்கோடா மற்றும் வோக்ஸ்வேகன் நிறுவனங்கள் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கும் கார் மாடல்கள் விவரங்களை பார்ப்போம்.
ஸ்கோடா ஆட்டோ வோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனம் அடுத்த சில ஆண்டுகளில் பல்வேறு புதிய மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இரு நிறுவனங்களின் மிகப்பெரும் வெளியீடுகளாக ஸ்கோடா ஸ்லேவியா மற்றும் வோக்ஸ்வேகன் விர்டுஸ் மாடல்கள் இருக்கின்றன.
இவற்றில் ஸ்லேவியா மாடல் ஸ்கோடாவின் பிரபல ரேபிட் மாடலுக்கு மாற்றாக அறிமுகம் செய்யப்படுகிறது. இதேபோன்று விர்டுஸ் மாடல் வோக்ஸ்வேகன் வென்டோ மாடலுக்கு மாற்றாக அறிமுகமாகிறது. இரு மாடல்களும் இந்திய சந்தையில் ஹோண்டா சிட்டி, ஹூண்டாய் வெர்னா மற்றும் மாருதி சுசுகி சியாஸ் மாடல்களுக்கு போட்டியாக அமைகின்றன.

இந்திய சந்தையில் ஸ்கோடா ஸ்லேவியா மாடல் இந்த ஆண்டு மார்ச் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதன் உற்பத்தி பணிகள் சக்கன் ஆலையில் ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. புதிய ஸ்லேவியா மாடல்- ஆக்டிவ், ஆம்பிஷன் மற்றும் டைல் போன்ற வேரியண்ட்களில் கிடைக்கும் என தெரிகிறது. இதில் 1 லிட்டர் மற்றும் 1.5 லிட்டர் டி.எஸ்.ஐ. பெட்ரோல் என்ஜின்கள் வழங்கப்படுகின்றன.
புதிய வோக்ஸ்வேகன் விர்டுஸ் மாடல் மார்ச் மாத துவக்கத்தில் சர்வேதச சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதன் இந்திய வெளியீடு மே மாத வாக்கில் நடைபெற இருக்கிறது. இதில் 1 லிட்டர் மற்றும் 1.5 லிட்டர் டி.எஸ்.ஐ. என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது.






