என் மலர்
ஆட்டோமொபைல் செய்திகள்
தற்போது 80-க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் வர்த்தக பணிகளை மேற்கொண்டு வரும் அந்நிறுவனம் மேலும் சில நாடுகளிலும் கால் தடம் பதிக்க திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தை சேர்ந்த டிவிஎஸ் நிறுவனம் 80-க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் வர்த்தக பணிகளை மேற்கொண்டு வருகின்றது. ஆப்பிரிக்கா, தெற்காசிய நாடுகள், மத்திய மற்றும் லத்தீன் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் வட அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் டிவிஎஸ் நிறுவனத்தின் இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் அந்நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 2021-22 நிதியாண்டில் மட்டும் 10 லட்சம் இருசக்கர வாகனங்களை டிவிஎஸ் நிறுவனம் ஏற்றுமதி செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இதன்மூலம் நாட்டின் 2-வது அதிக இருசக்கர வாகனங்களை ஏற்றுமதி செய்த நிறுவனம் என்ற சாதனையை டிவிஎஸ் பெற்றுள்ளது. அந்நிறுவனத்தின் அப்பாச்சி பைக்குகளே அதிகளவில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
இதுதவிர வெளிநாடுகளுக்கு என உருவாக்கப்பட்டு வரும் எச்எல்எக்ஸ் எனும் மாடலும், டிவிஎஸ் ரைடர் மற்றும் டிவிஎஸ் நியோ ஆகிய பைக்குகளும் சிறப்பான எண்ணிக்கையில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

மேலும் டிவிஎஸ் நிறுவனம் இந்தியாவில் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் புகழ்பெற்ற மாடல்களான ஜி310ஆர் மற்றும் ஜி310 ஜிஎஸ் ஆகிய மாடல்களை இந்தியாவிலேயே உற்பத்தி செய்து விற்பனைக்கு வழங்கி வருகின்றது.
இதை தொடர்ந்து இந்த வாகன தயாரிப்பு நடவடிக்கையை மேலும் விரிவாக்கம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இந்த இரு நிறுவனங்களும் இணைந்து எலெக்ட்ரிக் வாகனங்களை அதிக அளவில் அறிமுகம் செய்யவுள்ளதாக கூறியுள்ளன
இதன்பின் டிவிஎஸ் நிறுவனம் புதிய தொழில்நுட்ப சலுகைகளுடன் மேலும் சில நாடுகளிலும் கால் தடம் பதிக்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
வெறும் 30 யூனிட் எண்ணிக்கையில் இந்த காரை மினி நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது.
பிரபல கார் உற்பத்தி நிறுவனமான மினி, அதன் முதல் மின்சார காரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. மினி எலெக்ட்ரிக் என்ற பெயரில் இந்த கார் விற்பனைக்கு வந்துள்ளது. மேலும் இந்த கார் மினி கூப்பர் எஸ்இ என்ற பெயரில் சர்வதேச சந்தையில் கிடைக்கிறது.
வெறும் 30 யூனிட் எண்ணிக்கையில் இந்த காரை மினி நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது. இதற்கான முன்பதிவு கடந்த 2021ம் ஆண்டு தொடக்கியபோது இரண்டு மணி நேரங்களிலேயே அனைத்து யூனிட்டுகளும் புக் செய்யப்பட்டன.
இந்த காரின் அறிமுக எக்ஸ் ஷோரும் விலை ரூ. 47,20,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இப்போது இந்த காரில் இடம்பெற்றுள்ள சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கலாம்:-
இந்த காரில் பயன்படுத்தப்பட்டுள்ள மின் மோட்டார் அதிகபட்சமாக 181 பிஎச்பி மற்றும் 270 என்எம் டார்க்கை வெளியேற்றும் தன்மையை கொண்டது. இதில் 32.6 கிலோவாட் திறன் கொண்ட லித்தியம் அயன்-பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது.இதனால் இந்த காரின் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 270 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.

இந்த காரை 2.5 மணி நேரத்தில் பூஜ்ஜியத்தில் இருந்து 80 சதவீதம் சார்ஜ் செய்து கொள்ள முடியும். இதற்கு 11 கிலோ வாட் வசதிக் கொண்ட சார்ஜிங் பாயிண்ட் தேவைப்படும். 50 கிலோவாட் திறன் கொண்ட சார்ஜிங் பாயிண்டில் இந்த காரை சார்ஜ் செய்தால் வெறும் 36 நிமிடங்களிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய முடியும்.
இந்த மினி எலெக்ட்ரிக் கார் உச்சபட்ச வேகமாக மணிக்கு 150 கிமீ-ஐ எட்டும். வெறும் 7.3 நொடிகளில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை எட்டும் திறனையும் கொண்டுள்ளது.
இந்த கார் மூன்று கதவுகள் அமைப்பைக் கொண்ட மின்சார காராகும். மேலும் இந்த காரை கவர்ச்சியூட்டும் வகையில் 17 இன்ச் அலாய் வீல்கள், வட்ட வடிவ ஹெட்லேம்ப், யூனியன் ஜேக் தீமிலான எல்இடி டெயில்-லைட், வட்ட வடிவ ஓஆர்விஎம்கள் உள்ளிட்டவை பயன்படுத்தப்பட்டுள்ளன.
இந்த கார் ஒயிட் சில்வர், மிட்நைட் பிளாக், மூன் வால்க் கிரே மற்றும் பிரிட்டிஷ் ரேசிங் கிரீன் ஆகிய நிறங்களில்
பிரீமியம் மற்றும் லக்சூரி அம்சங்கள் கொண்ட இந்த எலெக்ட்ரிக் காருக்கு இந்தியாவில் நேரடி போட்டியாளர்கள் இல்லை.
இந்த புதிய பைக், யமஹாவின் ஆர்15 வி4 மாடலுக்கு கடும் போட்டியாக அமையும் என கூறப்படுகிறது.
ஹோண்டா நிறுவனம் புதிய ஹோண்டா சிபிஆர்150ஆர் பைக்கை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
150 சிசி கொண்ட இந்த பைக் யமஹா நிறுவனத்தின் ஆரம்ப நிலை ஃபேர்ட் பைக்குகளுக்கு போட்டியாக கொண்டுவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய சி.பி.ஆர்150ஆர் பைக்கின் விலை இந்தியாவில் ரூ.1.71 லட்சமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஹோண்டாவின் போட்டியாக உள்ள யமஹா ஆர்15 வி4 பைக்கிற்கு (விலை ரூ.1.73 லட்சத்தில் இருந்து தொடக்கம்) போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் காரான இது இதுவரை 2.5 லட்சம் யூனிட்டுகள் விற்பனையாகி உள்ளது.
ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இந்தியாவில் 12 ஆண்டு காலமாக விற்பனையில் உள்ள போலோ நிறுத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது ஒரு பிரீமியம் ரக ஹேட்ச்பேக் கார் வகையாகும்.
இதுவரை ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இந்தியாவில் 6 தலைமுறை போலோ கார்களை அறிமுகம் செய்துள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு 6-வது தலைமுறை போலோ கார் வெளியானது.
மஹாராஷ்டிரா மாநிலம் சக்கன் உற்பத்தி ஆலையில் உற்பத்தி செய்யப்படும் இந்த போலோ கார்கள் இதுவரை 2.5 லட்சம் யூனிட்டுகள் விற்பனையாகி உள்ளன.

விற்பனைக்கு வந்த புதிதில் இந்தியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற இந்த காரின் மதிப்பு சமீபத்திய ஆண்டுகளில் பெரிதும் சரிந்துள்ளது. மாதத்திற்கு ஆயிரத்திற்கும் குறைவான போலோ காரின் யூனிட்டுகளே விற்பனையாகி வருகின்றன.
இதனால் போலோ காரின் உற்பத்தி நிறுத்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம், விர்சுஸ் காரை அறிமுகம் செய்து உலக அளவில் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது. இதுவும் போலோ காரின் உற்பத்தி பணியை நிறுத்துவதற்கு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
இதேபோல விர்சுஸ் காரின் வருகை வெண்டோ காரின் உற்பத்தியையும் பாதிக்கலாம் என கருதப்படுகிறது.
இந்த வகை டயர்கள் செலவீனங்களை குறைக்கவும், பொருட்கள் வீணாவதை தடுக்கவும் பயன்படும் என கூறப்பட்டுள்ளது.
மிச்செலின் நிறுவனம் பஞ்சர் ஏற்படாத டயர் அமைப்பை உருவாக்கி வருவதாக தெரிவித்துள்ளது. அடுத்த தலைமுறை செவ்ரொலெட் போல்ட் மின்சார வாகனங்களுக்காக இந்த அமைப்பை உருவாக்கி வருகிறது.
இந்த வகை டயர்களுக்கு ’மிச்செலின் அப்டிஸ்’ என அந்நிறுவனம் பெயரிட்டுள்ளது. இந்த வகை டயர்கள் அடுத்த 3 முதல் 5 வருடங்களில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
செவ்ரோலெட் நிறுவனம் புதிய தலைமுறைக்கான செவி போல்ட் மின்சார காரை உருவாக்கி வருகிறது. இந்த மாடல் 2025-ல் வெளியாகும் என கூறப்படுகிறது. இந்த கார் முழுவதும் பஞ்சர் ஆகாத ( காற்று அடைக்கப்படாத டயரை) டயரை கொண்டிருக்கும் என கூறப்பட்டுள்ளது.

2019-ம் ஆண்டே இந்த வகை டயரை உருவாக்கி தற்போது இதன் மேம்படுத்தப்பட்ட டயரை உருவாக்குவதற்காக 50 பேட்டண்ட்களை மிச்செலின் நிறுவனம் பதிவு செய்துள்ளது.
இந்த வகை டயர்கள் செலவீனங்களை குறைக்கவும், பொருட்கள் வீணாவதை தடுக்கவும் பயன்படும் என கூறப்பட்டுள்ளது.
ஓட்டுனர் பின் சீட்டினை சாய்த்து முதுகு தலையணையாகவும் பயன்படுத்தி கொள்ளும் வகையில் இந்த ஸ்கூட்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தைவானை சேர்ந்த எஸ்.ஒய்.எம் ஆட்டோமொபைல் நிறுவனம் புதிய 125சிசி மற்றும் 150சிசி ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்கூட்டர்களுக்கு 4மைகா என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த 4மைகா ஸ்கூட்டர் பிளவுப்பட்ட சீட்டுகளை கொண்டுள்ளது. பின் சீட்டை நீக்கி கூடுதலாக பொருட்களை வைக்கும் வகையிலும், ஓட்டுனர் பின் சீட்டினை சாய்த்து முதுகு தலையணையாக பயன்படுத்தும் வகையிலும் இந்த ஸ்கூட்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்கூட்டரை ஓட்டுபவர்கள் கால் வைப்பதற்காக 410மிமீ அளவில் இட வசதி தரப்பட்டுள்ளது. இங்கேயும் பயணிகள் பொருட்களை வைத்து செல்லலாம்.
4மைகா 125 ஸ்கூட்டரில் 124.7சிசி SOHC என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகப்பட்சமாக 9.5 பிஎஸ் மற்றும் 9.5 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் தன்மை கொண்டது. 150 சிசி ஸ்கூட்டரில் 11.3 பிஎஸ் மற்றும் 12.25 என்எம் டார்க் திறனை பெறும் ஆற்றல் தரப்பட்டுள்ளது. சஸ்பென்ஷனுக்காக முன்பக்கத்தில் டெலெஸ்கோபிக் ஃபோர்க்கும், பின்பக்கத்தில் இரட்டை ஷாக் அப்சார்பர்களும் தரப்பட்டுள்ளன.

பிரேக் அமைப்பில் முன்பக்கத்தில் டிஸ்க்கும், பின்பக்கத்தில் ட்ரம்மும் வழங்கப்பட்டுள்ளன. கூடுதல் பாதுகாப்பிற்காக சிங்கிள்-சேனல் ஏபிஎஸ் -ம் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர்களில் 10-இன்ச் சக்கரங்களும், 100/90 என்ற அளவுகளில் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த ஸ்கூட்டரின் எடை கிட்டத்தட்ட 125 கிலோ ஆகும்.
தொழிற்நுட்ப அம்சங்களை பொறுத்தவரை இந்த ஸ்கூட்டரில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், யுஎஸ்பி சார்ஜிங் துளைகள் மற்றும் ஹசார்ட் விளக்குகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.
இந்த ஸ்கூட்டர் உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்து வருகிறது. இருப்பினும் இது இந்தியாவில் எப்போது அறிமுகமாகும் என்ற தகவல் எதுவும் தரப்படவில்லை.
இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்படவுள்ள சில முக்கிய பைக்குகளையும், அதில் இடம்பெற்றுள்ள அம்சங்களையும் இப்போது காணலாம்.
இந்தியாவில் கொரோனா பெருந்தொற்றுக்கு பின் மீண்டும் ஆட்டோமொபைல் விற்பனை வேகம் எடுத்துள்ளது. இதையடுத்து இந்த ஆண்டு புதிய பைக்குகள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படவுள்ளன. அவற்றில் முக்கியமான சிலவற்றை இப்போது பார்க்கலாம்.
ராயல் என்ஃபீல்டு ஸ்கிராம் 411: ராயல் என்ஃபீல்டின் ஸ்கிராம் 411 பைக் இந்த ஆண்டு அறிமுகாகவுள்ளது. ஹிமாலயன் வகை பைக்கான இது வாங்கக்கூடிய விலையில் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிற ராயல் என்ஃபீல்டு வகை பைக்குகளுடைய இன்ஜின் மற்றும் பிளார்ட்பார்மை இது கொண்டிருந்தாலும் லோவர்ட் சஸ்பென்ஷன் கிட் மற்றும் சிறிய முன்பக்க சக்கரங்கள் தரப்பட்டுள்ளன.
மார்ச் 2-வது வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் இந்த பைக்கின் எக்ஸ் ஷோரூம் விலை ரூ.1.70 லட்சம் முதல் ரூ.1.90 லட்சம்-ஆக இருக்கும் என கூறப்படுகிறது.
2022 கே.டி.எம் 390 அட்வென்சர்: இந்த ஆண்டு பஜாஜ் நிறுவனம் நிறைய வாகனங்களை அறிமுகம் செய்யவுள்ளது. இதில் முக்கியமான ஒன்று கே.டி.எம் 390 அட்வெஞ்சர். இந்த புதிய ஏடிவி வகை பைக் வெளிப்புற ஸ்டைலிங்குடன் வரும் என கூறப்படுகிறது. புதிய டூயல்- டோன் ட்ரிம்மை இந்த பைக் கொண்டுள்ளதாகவும், எப்போதுவேண்டுமானாலும் இந்த பைக் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

ராயல் என்பீல்ஃடு ஹண்டர் 350: ஸ்கிராம் 411-ஐ தொடர்ந்து ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 வகை பைக்கை அறிமுகம் செய்கிறது. இந்த பைக் மீட்டோர் 350 வகையை சார்ந்தது என்றாலும் அதிகம் ஆஃப் ரோட் செல்லக்கூடியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய ஜெனரேஷன் கே.டி.எம் ஆர்.சி390: ஆர்.சி 200 ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் கே.டி.எம்-ன் புதிய ஜெனரேஷன் ஆர்.சி 390 வெளியாகவுள்ளது. இதில் முழுதும் டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்டல் பேனல் இடம் பெற்றிருக்கும் என கூறப்படுகிறது. இந்த பைக் தற்போது உள்ள மாடலை விட சற்று விலை கூடியதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்கள் இணையதளத்தில் தங்களுக்கு பிடித்த விதத்தில் புதிய பலேனோ காரினை வடிவமைத்து கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
மாருதி சுஸுகி நிறுவனம் மேம்படுத்தப்பட்ட பலேனோ ஃபேஸ்லிஃப்ட் காரினை வரும் பிப்.23-ம் தேதி அறிமுகம் செய்யவுள்ளது. இந்நிலையில் இந்த காரின் தோற்றம் குறித்த வீடியோக்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.
இதன்படி இந்த 2022 மாருதி பலேனோ கார் சிக்மா, டெல்டா, ஸெடா மற்றும் ஆல்ஃபா என்கிற நான்கு விதமான வேரியண்ட்களில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இந்த காரின் டேஸ்போர்ட் நீலம், சில்வர் மற்றும் அடர் நீலம் என மூன்று விதமான நிறங்களில் வருகிறது. வாடிக்கையாளர்கள் நீலம் மற்றும் கருப்பு கலவையில் இருக்கை மற்றும் கதவு ட்ரிம்களை அலங்கரித்து கொள்ளலாம்.
கதவுகளில் பவர் கண்ணாடிகள், தட்டையான-தாழ்வான ஸ்டேரிங் சக்கரம், ரிமோட் மைய லாக்கிங் மற்றும் டிஜிட்டல் ஓட்டுனர் திரை உடன் செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் உள்ளிட்டவையும் இந்த காரில் வழங்கப்படவுள்ளது.
பயணிகள் பாதுகாப்பாக பயணம் செய்வதற்கு இரட்டை காற்று பைகள் தரப்பட்டுள்ளன. இதுதவிர பின்பக்கம் பார்க்கிங் சென்சார்கள், ஏபிஎஸ் மற்றும் அதிவேக எச்சரிக்கை கருவிகளும் வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த கார் ஆரம்ப நிலையில் வரக்கூடிய வேரியண்ட் என்பதால் சக்கரங்களில் வண்ணங்கள் இல்லாமல் இரும்பு நிறம் தான் தரப்பட்டிருக்கும்.
இந்த 2022 பலேனோ காரில் 1.2 லிட்டர் கே12என் ட்யுல்ஜெட் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட உள்ளது. இது அதிகப்பட்சமாக 89 பிஎச்பி மற்றும் 113 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் தன்மையை கொண்டிருக்கும்.
பலேனோ சிக்மா வேரியண்ட்டில் டிரான்ஸ்மிஷனுக்கு 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மட்டுமே தரப்படும் மேலும் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வு எதுவும் கொடுக்கப்பட வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.
இந்த புதிய பலேனோ காரின் விலையை மாருதி அறிவிக்கப்படவில்லை.
இந்த காரினை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் மாருதி நெக்ஸா இணையதள பக்கத்தில் புக் செய்து கொள்ளலாம். இணையதளத்தில் தங்களுக்கு பிடித்த விதத்தில் புதிய பலேனோ ஃபேஸ்லிஃப்ட் காரினை வடிவமைத்து கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த புதிய பைக் ஹார்லி டேவிட்ஸனின் லைவ் ஒயர் பிராண்டின் கீழ் உற்பத்தி செய்யப்படவுள்ளது.
ஹார்லி டேவிட்ஸன் நிறுவனம் தனது லைவ் ஒயர் பிராண்டின் கீழ் புதிய மின்சார பைக் ஒன்றை அறிமுகம் செய்யவுள்ளது. இந்த புதிய பைக்கிற்கு எஸ்2 டெல் மார் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புதிய பைக் இந்த ஆண்டு ஏப்ரல் - ஜூன் மாதத்திற்குள் அறிமுகம் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய எலக்ட்ரிக் பைக் மிடில் வெய்ட் பிரிவில் அடங்கும். இந்த மின்சார பைக் ஆரோ ஆர்கிடெக்ட்சர் என்ற அமைப்புடன் வருகிறது. இந்த அமைப்பில் பேட்டரி, இன்வெர்டர், சார்ஜர், ஸ்பீட் கண்ட்ரோலர் மற்றும் மோட்டார் ஆகியவை இணைக்கப்பட்டிருக்கும்.
இந்த ஆரோ ஆர்கிடெக்ட்சர் அமைப்பின் மூலம் அமைக்கப்பட்டுள்ள பேட்டரியில் 21,700 விதவிதமான சிலிண்டர் செல்கள் இடம்பெற்றிருக்கும். இதேபோன்ற அமைப்பை தான் டெஸ்லா, சாம்சங் உள்ளிட்ட நிறுவனங்களும் பயன்படுத்தி வருகின்றன.
இந்த பைக் குறைந்த விலையில் அனைவராலும் வாங்கும் வகையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் மொத்தம் 20 நகரங்களில் பஜாஜ் சேடாக் விற்பனையில் உள்ளது.
பஜாஜ் நிறுவனத்தின் சேடாக் இ-ஸ்கூட்டர் தற்போது புது டெல்லி, மும்பை கோவா ஆகிய மூன்று புதிய நகரங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பஜாஜ் நிறுவனம் கடந்த ஆண்டு 8 முக்கிய நகரங்களில் சேடாக் இ.வி இ ஸ்கூட்டருக்கான முன்பதிவுகளை தொடங்கியது. இதன்பின் இந்த ஆண்டின் முதல் 2 மாதங்களிலேயே புதிதாக 12 நகரங்களில் சேடாக்கிற்கான முன்பதிவுகள் தொடங்கப்பட்டுள்ளன. இதன்மூலம் தற்போது இந்தியாவில் மொத்தம் 20 நகரங்களில் சேடாக் இ.வியின் விற்பனையில் உள்ளது.
தற்போது பஜாஜ் சேடாக் இ-ஸ்கூட்டர் பதிவு செய்தவர்களுக்கு 4 முதல் 8 வாரத்திற்குள் ஸ்கூட்டர்கள் கிடைக்கும். வாடிக்கையாளர்கள் ஷோரூமில் அல்லது www.chetak.com என்ற இணையதளத்திலும் இந்த இ ஸ்கூட்டரை முன்பதிவு செய்யலாம்.

மேலும் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் புனேவில் புதிய மின்சார வாகன ஆலையை திறப்பதாக அறிவித்தது. இந்த உற்பத்தி ஆலையில் ரூ.300 கோடி முதலீடு செய்யவும் அந்நிறுவனம் முடிவு செய்தது.
இந்நிலையில் ஆட்டோமோட்டிவ் பிராண்ட் மின்சார வாகனங்களை தயாரிப்பதற்காக இந்த புதிய ஆலை உற்பத்தியை தொடங்கியது. இந்த ஆலையின் மூலம் ஆண்டுக்கு 5,00,000 மின்சார வாகனங்களை உற்பத்தி செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகிந்திரா நிறுவனம் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் இந்த புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
மகிந்திரா நிறுவனம் தனது Mahindra XUV700 மற்றும் புதிய Thar SUV மாடல் கார்களுக்கு சந்தா சேவையை அறிமுகம் செய்துள்ளது.
இதற்காக குயிக்லிஸ் என்ற நிறுவனத்துடன் இணைந்து மகிந்திரா செயல்படுகிறது. இதன்படி, மகிந்திராவின் காரை வாங்க முடியாதவர்கள் குறிப்பிட்ட காலத்திற்கு வாடகைக்கு எடுக்கலாம்.
வாடகை காலம் முடிந்த பிறகு, வாடிக்கையாளர்கள் காரை திரும்ப அளிக்கலாம். இல்லையென்றால் அதே கார் அல்லது தாங்கள் விரும்பும் வேறு புதிய காரை மீண்டும் வாடகைக்கு எடுக்கலாம். இந்த திட்டத்தில் ஒரு காரை 24 முதல் 60 மாதங்கள் வரை வாடகைக்கு எடுக்க முடியும். அல்லது ஆண்டுக்கு 10,000 கிமீ வரை வாடகை என்ற திட்டங்களையும் தேர்வு செய்யலாம்.

இதற்கு வாடகை மாதம் ரூ.21,000 என்ற விலையில் இருந்து தொடங்குகிறது. இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்கள் பெட்ரோலைத் தவிர வேறு எதற்கும் செலவழிக்க வேண்டியதில்லை. காப்பீடு, பராமரிப்பு மற்றும் சாலையோர உதவி அனைத்தையும் நிறுவனமே ஏற்கும்.
இந்த சந்தா வசதி தற்போது மும்பை, புனே, டெல்லி, நொய்டா, குருகிராம், பெங்களூர், ஹைதராபாத் மற்றும் சென்னை உள்ளிட்ட இந்தியாவின் முக்கிய நகரங்களில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
காரை வாடகைக்கு எடுக்க விரும்புபவர்கள் மஹிந்திரா ஆட்டோ போர்ட்டல் அல்லது டீலர்ஷிப்புக்கு சென்று முன்பதிவு செய்ய வேண்டும்.
இந்த எக்ஸ்3 கார் பெட்ரோல் ட்ரிமில்லும் விற்பனையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான பி.எம்.டபில்யூ எஸ்.யூ.வி வகை எக்ஸ்3 டீசல் காரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த கார் சென்னையில் அமைந்துள்ள பி.எம்.டபில்யூ தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டது.
இந்த புதிய பி.எம்.டபில்யூ எக்ஸ்3 டீசல் கார், சக்தி வாய்ந்த டீசல் இன்ஜினுடன் ட்வின் பவர் டர்போ டெக்னாலஜி கொண்டுள்ளது. 2 லிட்டர் 4 சிலிண்டர் கொண்ட இந்த இன்ஜின் 140 kw/ 190 hp-ஐ தயாரிக்கும் வல்லமை கொண்டது. மேலும் 1,750 – 2,500 rpm-ல் 400 Nm அதிகபட்ச டார்க்கை உருவாக்கக்கூடியது.
இதன் மூலம் இந்த கார் வெறும் 7.9 நொடிகளில் 0-100 மணிக்கு கி.மீ வேகத்தை எட்டும் வல்லமை கொண்டது. மேலும் மணிக்கு 213 கி.மீ அதிகபட்ச வேகத்தில் செல்லக்கூடியது.
இந்த கார் மினரல் ஒயிட், பைதானிக் ப்ளூ, ப்ரூக்ளின் க்ரே, சோபிஸ்டோ க்ரே, பிளாக் சேப்பையர், கார்பன் ப்ளாக் ஆகிய வண்ணங்களில் வருகிறது.

இந்த காருடன் ‘பி.எம்.டபில்யூ சர்வீஸ் இங்கிளூசிவ்’ மற்றும் ‘பி.எம்.டபில்யூ சர்வீஸ் இங்கிளூசிவ் பிளஸ்’என்ற கம்பெனி சேவையையும் வழங்கப்படுகிறது. இந்த சேவையில் கன்டிஷன் பேஸ்டு சர்வீஸ்கள் மற்றும் மெயின்டனன்ஸ்கள் 3 வருடங்களுக்கு/ 40,000 கி.மீ வரையில் இருந்து 10 வருடங்களுக்கு/ 2 லட்சம் கி.மீ வரை வழங்கப்படுகிறது.
இந்த காரின் எக்ஸ் ஷோரூம் விலை ரூ.65.50 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த எக்ஸ்3 கார் பெட்ரோல் ட்ரிமில்லும் விற்பனையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.






