என் மலர்
ஆட்டோமொபைல் செய்திகள்
இந்த சேவையில் ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.3 அல்லது ரூ.4 என்ற விலையில் சார்ஜ் வழங்கப்படுகிறது.
இந்தியாவில் மின்சார வாகனங்களின் உற்பத்தி அதிகரித்து வருகிறது. பெரும் நிறுவனங்கள் மின்சார வாகனங்களை அறிமுகம் செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் ஹோப்சார்ஜ் என்ற நிறுவனம் வீட்டிற்கே வந்து மின்சார வாகனங்களை சார்ஜ் செய்யும் சேவையை அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நாங்கள் வேகமாக சார்ஜ் வழங்கும் சேவையை தொடங்கியுள்ளோம். நகரத்தின் எந்த பகுதியிலும், எந்த நாளிலும், எந்த நேரத்திலும் சார்ஜ் வழங்கப்படும். தற்போது குர்கானில் மட்டும் சோதனை முறையில் இந்த சேவை வழங்கப்படுகிறது.
இந்த சேவையில் 1 kWh சார்ஜ் ரூ.20-க்கு வழங்கப்படுகிறது. இதன்படி பார்த்தால் ஒரு கிலோமீட்டருக்கு ரூ.3 அல்லது ரூ.4-க்கு சார்ஜ் வழங்கப்படும். எங்கள் சேவையை பயன்படுத்துவதற்கு ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ்ஸில் செயலிகளும் இருக்கிறது.
சோதனைக்கு பிறகு முக்கிய நகங்களில் இந்த சேவை வழங்கப்படும்.
இவ்வாறு ஹோப்சார்ஜ் நிறுவனம் கூறியுள்ளது.
கியா நிறுவனம் வெளியிட்டு வரும் கார்கள், விற்பனையில் பெரும் சாதனை படைத்து வருகின்றன.
தென் கொரிய கார் உற்பத்தி நிறுவனமான கியா, இந்தியாவில் கடந்த 2019-ம் ஆண்டு செல்டோஸ் காருடன் தனது விற்பனையை தொடங்கியது. கியாவின் கார்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் இருந்து வருகிறது.
இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் மட்டும் 18,121 யூனிட்டுகளை விற்பனை செய்துள்ளதாக கியா இந்தியா அறிவித்துள்ளது. இது கடந்த பிப்ரவரி மாதத்தை விட 8.5 சதவீதம் அதிகமாகும்.
கடந்த மாதத்தில் கியாவின் செல்டோஸ் 6,575 யூனிட்டுகளும், சோனெட் 6,154 யூனிட்டுகளும் விற்பனையாகி உள்ளது. கார்னிவல் லக்சரி எம்.பி.வி கார் 282 யூனிட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது அறிமுகமாகியுள்ள புதிய கேரன்ஸ் கார் விற்பனையில் புதிய இலக்கை எட்டும் என்றும், அதன் விற்பனை இந்தியாவில் கியாவின் நிலையை வலுவாக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
தற்போது அனந்தபூரில் தொடங்கப்பட்டுள்ள கியா தொழிற்சாலையின் காரணமாக கார் உற்பத்தி அதிகரிக்கப்படும் என்றும், உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள செமி கண்டெக்டர் பற்றாக்குறை கார் தயாரிப்பாளர்களை பெரிதாக பாதித்து இருந்தாலும், அதனை ஈடுகட்டும் நடவடிக்கைகளில் கியா ஈடுபடும் எனவும் கூறியுள்ளது.
கியாவின் கேரன் காரில் 2 பெட்ரோல் மோட்டார், 1 டீசல் மோட்டார் என 3 இன்ஜின் தேர்வுகள் தரப்பட்டுள்ளன. மேலும் இதில் பல்வேறு டிரான்ஸ்மிஷன், சீட் லே அவுட் ஆப்ஷன் உள்ளிட்ட அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.
இந்த புதிய நிறத்திற்கு விலை அறிவிக்கப்படாத நிலையில், ஏற்கனவே இருக்கும் விலையிலேயே கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் முன்னணி ஆட்டோமொபைல் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக பஜாஜ் உள்ளது.
பஜாஜ் வெளியிடும் பல்சர் பைக்குகளுக்கு ரசிகர்கள் அதிகம். தற்போது பஜாஜ் பல்சர் 250 பைக்கிற்கு பெருமளவில் வரவேற்பு கிடைத்து வருகிறது.
இந்நிலையில் பஜாஜ் நிறுவனம் தனது பல்சர் 250 பைக்கிற்கு புதிய நீல நிறத்தேர்வை கொண்டு வந்துள்ளது. இதற்கு முன் பல்சர் 250 பைக்கிற்கு ரேசிங் ரெட் மற்றும் டெக்னோ கிரே ஆகிய 2 நிறங்கள் மட்டுமே வழங்கப்பட்டிருந்த நிலையில் தற்போது நீலமும் சேர்க்கப்பட்டுள்ளது.
தற்போது குறிப்பிட்ட டீலர்களிடம் மட்டுமே கிடைக்கும் இந்த நீல நிறத்தேர்வு, விரைவில் இந்தியா முழுவதும் கிடைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதுள்ள புதிய நீல நிறம் மோனோ டோன் ஃபினிஷிங் மற்றும் சில இடங்களில் கிரே மற்றும் வெள்ளை ஃபேரிங்கில் ஹைலைட் செய்யப்பட்டுள்ளது. மேலும் மற்ற நிற பைக்குகளில் இருப்பது போலவே இன்ஜின் கவுலிலும் நீல நிறம் கிடைக்கும்.
இந்த புதிய நிறத் தேர்வுக்கு தனியாக விலை இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், ஏற்கனவே இருக்கும் எக்ஸ் ஷோரூம் விலையான ரூ.1,40,915-க்கு இந்த பைக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மெர்சிடிஸ், பி.எம்.டபில்யூ, லெக்சஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் டாப் கிளாஸ் கார்களை இந்த மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஆட்டோமொபைல் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சாதாரண காரில் இருந்து பிரீமியம் கார்கள் வரை விற்பனையில் சாதனை படைத்து வருகின்றன. இந்நிலையில் இந்த மாதம் இந்தியாவில் அறிமுகமாகவுள்ள கார்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
இதன்படி ஸ்கோடா நிறுவனம் ஸ்லாவியா காரை வரும் 3-ம் தேதி அறிமுகம் செய்யவுள்ளது. 1.5 லிட்டர் வெர்ஷன் காரான இதற்கு ரூ.10 லட்சத்து 69 ஆயிரம் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த காரில் 1.5 லிட்டர் டிஎஸ்ஐ மோட்டார், ஆக்டீவ் சிலிண்டர் தொழில்நுட்பம் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 148 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இதனுடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 7 ஸ்பீடு டிஎஸ்ஜி யூனிட்டும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
மெர்சிடிஸ் மேபேக் எஸ்-கிளாஸ் கார் வரும் 3ம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது. அதிக லக்சூரி அம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ள கார் இரு விதமான ட்ரிம்களில், இரு விதமான எஞ்ஜின் தேர்வுகளில் விற்பனைக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் விர்சுஸ் காரை இந்த மாதம் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரை எம்க்யூபி ஏ0 ஐஎன் பிளாட்பாரத்தில் வைத்து உள்ளூரிலேயே தயாரிக்க திட்டமிட்டுள்ளது.
லெக்சஸ் நிறுவனம் என்எக்ஸ் 350எச் ஃபேஸ்லிஃப்ட் காரை மார்ச் 9-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்கிறது. இக்காரின் விலை பற்றி விபரம் இன்னும் அறிவிக்கப்படதா நிலையில், பல்வேறு அம்சங்களுடன் இந்த கார் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எம்.ஜி நிறுவனம் 2022-ம் ஆண்டுக்கான எம்ஜி இசட்எஸ் இவி காரை இந்த மாதம் அறிமுகம் செய்யவுள்ளது. இந்த காரில் பழைய வெர்ஷனில் இருந்து மாற்றப்பட்ட முன்-பின் பம்பர்கள், ஹெட்லைட்டுகள், அலாய் வீல்கள் மற்றும் மறு வடிவமைப்பு செய்யப்பட்ட சார்ஜிங் போர்ட் உள்ளிட்டவை இடம்பெறும் என கூறப்படுகிறது.

பிஎம்டபிள்யூ நிறுவனம் எக்ஸ்4 சொகுசு காரை இந்த மாதத்தில் வெளியிடவுள்ளது. இதற்கான டீசர் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த கார் குறித்த எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.
டொயோட்டா நிறுவனம் ஹைலக்ஸ் பிக்-அப் ட்ரக் ரக வாகனத்தை அறிமுகம் செய்யவுள்ளது. இக்காருக்கு ரூ. 1 லட்சம் என்ற முன் தொகையில் புக்கிங் நடைபெற்று வருகிறது. இக்காரில் 2.8 லிட்டர் டீசல் மோட்டார் கொண்டுள்ளது.
இது 201 பிஎச்பி பவர் மற்றும் 420 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறனையும் கொண்டுள்ளது. இது தவிர டொயோட்டா நிறுவனம் கிளான்ஸா ஃபேஸ்லிஃப்ட் காரையும் அறிமுகம் செய்யவுள்ளது.
இந்த ஸ்கூட்டரை ரூ.1,947 செலுத்தி முன்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான சந்தை விரிவடைந்து வருகிறது. இதையடுத்து முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மின்சார ஸ்கூட்டர், பைக், கார் தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.
அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை மின்சார வாகனங்கள் மீதான எதிர்பார்ப்புகளை அதிகரித்து இருந்தாலும், நீண்ட தூரம் பயணம் செய்யும் வாடிக்கையாளர்கள் இன்னும் தயக்கம் காட்டியே வருகின்றனர்.
இந்நிலையில் சிம்பிள் எனர்ஜி நிறுவனம் தனது மின்சார ஸ்கூட்டர்களுடன் கூடுதல் பேட்டரி பேக்குகளை வழங்கப்போவதாக அறிவித்துள்ளது. இதன்மூலம் 300 கிலோ மீட்டர்களுக்கும் மேல் பயணம் செய்ய முடியும் என தெரிவித்துள்ளது.
பெரும்பாலான மின்சார ஸ்கூட்டர்களின் பேட்டரி நீக்கம் செய்யமுடியாத வகையில் அமைக்கப்பட்டுள்ள நிலையில் சிம்பிள் எனர்ஜியின் பேட்டரி, அவற்றை கழற்றி மாட்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
சிம்பிள் ஒன் மின்சார ஸ்கூட்டர் 8.5kW மோட்டாருடன் வருகிறது. இதனால்72 Nm டார்க்கை உற்பத்தி செய்ய முடியும். மேலும் இதில் ஃபாஸ் சார்ஜிங் ஆப்ஷன், 30 லிட்டர் பூட் ஸ்பேஸ், ஆன்போர்டு நேவிகேஷன், ரைடிங் மோட்கள், போன் செயலி, அழைப்பு மற்றும் இசையை கட்டுப்படுத்தும் அம்சங்கள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.
இந்த பைக்கின் எக்ஸ் ஷோரூம் விலை ரூ.1.09 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் கூடுதல் பேட்டரியுடன் இந்த ஸ்கூட்டரின் விலை ரூ.1.45 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த ஸ்கூட்டருக்கான முன்பதிவு தொடங்கிய நிலையில், ரூ.1,947 செலுத்தி இந்த முன்பதிவு செய்துகொள்ளலாம். ஜூன் மாதம் முதல் இந்த பைக்குகள் விநியோகிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பவுன்ஸ் நிறுவனம் வழங்கும் பேட்டரி சந்தா சேவை மற்ற மின்சார ஸ்கூட்டர்களை விட 40 சதவீதம் பேட்டரி மெயிண்டைனன்ஸ் செலவை குறைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பவுன்ஸ் நிறுவனம் இன்ஃபினிட்டி இ1 எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் டெஸ்ட் டிரைவ்வை இன்று முதல் தொடங்கியுள்ளது. தற்போது முதற்கட்டமாக சென்னை, பெங்களூர், ஐதராபாத், கொச்சி உள்ளிட்ட இடங்களில் இன்ஃபினிட்டி ஸ்கூட்டரின் டெஸ்ட் டிரைவ் கிடைக்கிறது.
இருசக்கர வாகனங்களை வாடகைக்கு விடும் நிறுவனமாக அறிமுகமாகிய பவுன்ஸ் நிறுவனம் தற்போது மின்சார வாகன தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. தற்போது இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான தேவை அதிகரித்திருக்கும் நிலையில் புது இன்ஃபினிட்டி இ1 ஸ்கூட்டரை பவுன்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்தது. இதை தொடர்ந்து இன்று முதல் அந்த ஸ்கூட்டருக்கான டெஸ்ட் டிரைவ் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்கூட்டர் ரூ.45,000 எக்ஸ் ஷோரும் விலையில் இருந்து தொடங்குகிறது. இந்த பவுன்ஸ் இன்ஃபினிட்டி இ1 ஸ்கூட்டரில் 2kWh பேட்டரியும், 2,2KW மோட்டாரும் இடம்பெற்றுள்ளது. ஒரு மணி நேரத்திற்கு 65 கி.மீ உட்சபட்ச வேகம் செல்லும் இந்த ஸ்கூட்டர், 85 கி.மீ வேகத்தை கொண்டுள்ளது.
பவுன்ஸ் நிறுவனம் இந்த ஸ்கூட்டருக்கு பேட்டரி சந்தா முறையையும் வழங்குகிறது. இதன்மூலம் பேட்டரி சார்ஜ் முடிந்தவுடன் பக்கத்தில் இருக்கும் பேட்டரி மையங்களுக்கு சென்று புதிய பேட்டரிக்களை மாற்றிகொள்ளலாம். இதனால் நிரந்தரமாக பேட்டரி வைத்துக்கொண்டு மெயிண்டைனன்ஸ் குறித்து வாடிக்கையாளர்கள் கவலைப்பட வேண்டியதில்லை.
இதுமட்டுமின்றி பேட்டரியின் ஆயுள் முடிந்தவுடன் அதிகம் செலவு செய்து பேட்டரியை மாற்ற வேண்டும் என அவசியமில்லை. சந்தா முறையில் புதிய பேட்டரிகளை வாங்கிகொள்ளலாம். இதன்மூலம் 40 சதவீதம் பேட்டரி மெயிண்டைனன்ஸ் செலவு குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாறிவரும் காலங்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் விருப்பங்களுக்கு ஏற்ப இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி விற்பனை குறித்து புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதன்படி இனி மாருதி சுஸூகி நிறுவனத்தின் அசல் உதிரி பாகங்கள், நாடு முழுவதும் 100-க்கும் மேற்பட்ட நகரங்களில் ஆன்லைனில் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளது.
தற்போது 2,000-க்கும் மேற்பட்ட மாருதி சுஸுகியின் அசல் உதிரிபாகங்கள் ஆன்லைனில் கிடைக்கும் என்றும், மேலும் உள்ள தயாரிப்புகளும் விரைவில் ஆன்லைனில் விற்பனைக்கு வரும் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது.
இதுகுறித்து மாருதி சுஸூகி இந்தியாவின் எம்.டி மற்றும் சி.இ.ஓ கெனிச்சி அயுகாவா கூறியதாவது:-
வாடிக்கையாளர்கள் இனி தேடி அலைய தேவையில்லாமல் உண்மையான மாருதி சுஸுகி உதிரிபாகங்களை இணையதளத்தில் மூலமே ஆர்டர் செய்துகொள்ளலாம். மேலும் அவற்றை வீட்டிலேயே வைத்து நிறுவுவதற்கு வழிவகை செய்யவும் ஆன்லைனில் ஆப்ஷன் தரப்பட்டிருக்கும்.
மாறிவரும் காலங்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் விருப்பங்களுக்கு ஏற்ப இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது. இது வாடிக்கையாளர்கள் மாருதி சுஸூகிக்கான அசல் பாகங்களைப் பெறுவதை எளிதாக்கும்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்த கார் 2019 பிஎம்டபிள்யூ எக்ஸ்4 காரை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பிஎம்டபிள்யூ நிறுவனம் எக்ஸ்4 பிளாக் ஷேடோவ் எடிசன் என்ற புதிய சொகுசு கார் மாடல் ஒன்றை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.
எஸ்யூவி ரக காரான இதில் பல சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த கார் 2019 பிஎம்டபிள்யூ எக்ஸ்4 காரை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. எக்ஸ்4 காரின் டேஷ்போர்டு இந்த காரில் மறு வேலைப்பாடு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது. இத்துடன், 10.25 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், 12.3 இன்ச் அளவுள்ள டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவை இதில் இடம்பெற்றுள்ளன.

இந்த காரில் பெட்ரோல் மற்றும் டீசல் என இரு விதமான இன்ஜின் தேர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளன. 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 3.0 லிட்டர் டீசல் ஆகிய மோட்டார் தேர்வுகளும் இதில் இடம்பெற்றுள்ளது. இந்த காரின் பெட்ரோல் எஞ்ஜின் 248 பிஎச்பி பவர், 350 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. டீசல் எஞ்ஜின் 282 பிஎச்பி பவர் மற்றும் 650 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறனை கொண்டுள்ளது. இத்துடன், 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட இருக்கின்றது.
இது தவிர இந்த காரில் மூன்று ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல், இன்ஜின் ஸ்டார்ட்-ஸ்டாப் பட்டன், எலெக்ட்ரிக் பார்க்கிங் பிரேக், ட்வீக்கட் சென்டர் கன்சோல் மற்றும் புதிய கியர் லிவர் உள்ளிட்ட கொடுக்கப்பட்டுள்ளன. எலெக்ட்ரிக் பார்க்கிங் பிரேக், ஹில் டெசன்ட் கன்ட்ரோல், பிஎம்டபிள்யூ லைவ் காக்பிட் ப்ளஸ், ஹெட்ஸ்-அப் டிஸ்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே உள்ளிட்ட அம்சங்களும் இதில் வழங்கப்பட்டுள்ளன.
இந்த காரில் ஸ்போர்ட்டி லுக் கிட்னி க்ரில் முகப்பு பகுதியில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அடாப்டீவ் எல்இடி ஹெட்லைட் மேட்ரிக்ஸ், முழு எல்இடி வால் பகுதி மின் விளக்கு, புதிய ஏப்ரான் மற்றும் ரெஃப்ளக்டர்கள் உள்ளிட்டவை இந்த எடிசனில் தரப்பட்டுள்ளன.
ரூ.67.50 லட்சம் எக்ஸ் ஷோரூம் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இந்த காரின் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது. விருப்பமுள்ளவர்கள் ரூ.50,000 மட்டும் செலுத்தி காரை முன்பதிவு செய்யலாம்.
இதற்கான முன்பதிவுகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், இந்த கார் மார்ச் 9-ம் தேதி அறிமுகமாகும் என கூறப்படுகிறது.
ஜப்பானை சேர்ந்த லெக்சஸ் நிறுவனம், லெக்சஸ் என்எக்ஸ் 350எச் என்ற காரை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
இந்த கார் பெட்ரோல் மற்றும் மின்சாரம் இரண்டிலும் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக இந்த காரில் பெட்ரோல் மோட்டாருடன், மின்சார மோட்டாரும் பொருத்தப்பட்டுள்ளது. இதில் இடம்பெற்றுள்ள மோட்டாருக்கு மின்சாரத்தை வழங்குவதற்கு சிறிய பேட்டரி பேக் ஒன்றையும் வழங்கியுள்ளது.
இந்த காரி எக்ஸ்க்யூசைட், லக்சரி, எஃப் ஸ்போர்ட் உள்ளிட்ட 3 வேரியண்டுகளில் வருகிறது.

இந்த காரில் 2.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பயர்டு 4 சிலிண்டர் இன்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவற்றுடன் சேர்த்து மின்சார மோட்டாரும் இணைக்கப்பட்டுள்ளதால் இரண்டும் சேர்ந்து 235 எச்.பி ஆற்றலை தரும் என கூறப்படுகிறது.
இது தவிர இந்த காரில் டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டர், ஸ்மார்ட் போன் இணைப்பு உள்ளிட்ட தொழில்நுட்ப வசதிகளும் உள்ளது.
இந்த காரின் விலை ரூ.58.13 லட்சத்தில் இருந்து தொடங்கி ரூ.63.57 லட்சம் வரை இருக்கிறது. இதற்கான முன்பதிவுகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்த கார் மார்ச் 9-ம் தேதி அறிமுகமாகும் என கூறப்படுகிறது.
இந்த நிதியாண்டுக்குள் மின்சார இருசக்கர வாகனங்களை அறிமுகம் செய்யவுள்ளதாக ஹோண்டா நிறுவனம் அறிவித்தது.
இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை தொடர்ந்து மின்சார வாகனங்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. மத்திய அரசும் இந்த நிதியாண்டில் மின்சார வாகனங்களை ஊக்குவிக்கும் வகையில் திட்டங்களை அறிவித்தது.
இதை தொடர்ந்து வாகன தயாரிப்பு நிறுவனங்கள் இந்தியாவில் மின்சார வாகனங்களை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகின்றன. இந்நிலையில் ஹோண்டா நிறுவனம், பிரபல ஆக்டிவா ஸ்கூட்டரை மின்சார வெர்ஷனில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்த நிதியாண்டிற்குள் ஹோண்டா நிறுவனம் மின்சார வாகன தயாரிப்பில் ஈடுபடும் என்று அதன் தலைவர் அட்சுஷி ஒகடா கூறியுள்ள நிலையில், முதல்வாகனமாக ஹோண்டா ஆக்டிவா அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹோண்டாவின் மின்சார இருசக்கர வாகனத்தில் ஸ்வாப்பபிள் பேட்டரி, விரைவில் சார்ஜாகும் தொழில்நுட்பம், அதிக வேகத்தில் இயங்கு திறன் கொண்ட மின் மோட்டார் உள்ளிட்ட பன்முக சிறப்பம்சங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹோண்டாவின் மின்சார இருசக்கர வாகனங்கள் விற்பனைக்கு வந்தால், தற்போது சந்தையில் உள்ள பஜாஜ் சேடக், டிவிஎஸ் ஐ.க்யூப், ஓலா எஸ் 1 உள்ளிட்ட ஸ்கூட்டர்களுக்கு கடும் போட்டியாக அமையும் என கூறப்படுகிறது.
தனது போட்டியாளர்கள் அனைவரையும் விட பலேனோ காரே அதிக மைலேஜை வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாருதி சுசுகி நிறுவனம் கடந்த பிப்ரவரி 22-ம் தேதி பலேனோ காரை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வந்தது. இந்த காரின் மைலேஜ் விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
இதுகுறித்து வெளியான தகவலின்படி, புதிய 2022 ஆட்டோமேட்டிக் பலினோ கார் ஒரு லிட்டருக்கு 22.35 கி.மீ முதல் 22.94 கி.மீ வரை மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல பலேனோவின் மேனுவல் வேரியண்ட், 22.35 கிமீ மைலேஜை வழங்கும் என கூறப்பட்டுள்ளது.
மேலும் புதிய பலேனோ காரில் 90 பிஎச்பி பவரை வெளியேற்றக் கூடிய 1.2 லிட்டர் ட்யூவல் ஜெட் கே12என் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்ஜின் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கும்.
இத்துடன், இதன் எஞ்ஜினில் 12 வோல்ட் மைல்டு ஹைபிரிட் தொழில்நுட்பத்திற்கு பதிலாக எஞ்ஜின் ஐடில் ஸ்டார்ட்/ஸ்டாப் வசதிக் கொடுக்கப்பட்டுள்ளது. இது எரிபொருள் சிக்கனத்தை வழங்க உதவும் என கூறப்படுகிறது.
2020-ம் ஆண்டு பலேனோவிற்கு போட்டியாக ஹூண்டாய் ஐ20, டாடா அல்ட்ராஸ், ஃபோக்ஸ்வேகன் போலோ மற்றும் ஹோண்டா ஜாஸ் ஆகிய பிரீமியம் தர கார்கள் விற்பனையில் இருக்கின்றன. இவை அனைத்தையும் விட பலேனோ அதிக மைலேஜை வழங்குகிறது.
இந்த ஸ்கூட்டரை முழுமையாக சார்ஜ் செய்தால் 116 கிமீ வரை பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் மக்கள் மின்சார வாகனத்தை நோக்கி தங்களது கவனத்தை திருப்பியுள்ளனர். இது தவிர இந்த ஆண்டு வெளியிடப்பட்ட மத்திய பட்ஜெட்டிலும் மின் வாகனங்களுக்கு பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் அதர் நிறுவனம் தனது அதர் 450 பிளஸ் மற்றும் அதர் 450 எக்ஸ் மின் ஸ்கூட்டர்களை எளிய முறையில் வாங்கும் வகையில் இ.எம்.ஐ திட்டத்தை அறிவித்துள்ளது. இதன்படி அதர் நிறுவனத்தின் 450 எக்ஸ் மற்றும் 450 எக்ஸ் மின் ஸ்கூட்டர்களை ரூ.10 ஆயிரம் முன்பணம் செலுத்தி வாங்கிக்கொள்ளலாம். பிறகு இ.எம்.ஐ கட்டணமாக மாதம் ரூ.4,360-ஐ 36 மாதங்களுக்கு செலுத்தினால் போதும்.
இந்த ஸ்கூட்டர்களின் விலை ரூ.1.31 லட்சம் ஆகும்.
இந்த ஸ்கூட்டரில் முன் மற்றும் பின் சக்கரங்களில் டிஸ்க் பிரேக் சிஸ்டம் தரப்பட்டுள்ளது. அதர் 450 எக்ஸ் ஸ்கூட்டர் 6000W மோட்டார் உடன் 2.9kWh லித்தியம்-அயன் பேட்டரி மூலம் இயங்குகிறது. இதனால் பேட்டரி வெறும் 35 நிமிடங்களில் பூஜ்ஜியத்தில் இருந்து 80 சதவீதம் வரை சார்ஜ் ஆகி விடும்.
இந்த ஸ்கூட்டரை முழுமையாக ஒருமுறை சார்ஜ் செய்தால் 116 கிமீ வரை பயணிக்கலாம். அதிகபட்சம் 80 கி.மீ வேகத்தில் பயணிக்கலாம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.






