என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல் செய்திகள்

    இந்தியாவில் பிரபல நிறுவனங்கள் ரூ.80,000-க்கும் கீழ் பைக்குகளை விற்பனை செய்து வருகின்றன.
    இந்தியாவில் தொடர்ந்து இருசக்கர வாகனங்களின் தேவை அதிகரித்து வருகிறது. அதேசமயம் பைக்குகளின் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. 

    இந்நிலையில் இந்தியாவில் ரூ.80,000-க்கும் கீழ் விலையில் விற்கப்படும் பிரபல நிறுவனங்களின் பைக்குகளை இப்போது காணலாம்.

    டிவிஎஸ் ஸ்டார்சிட்டி பிளஸ்: டிவிஎஸ் நிறுவனம் இதுவரை 30 லட்சம் ஸ்டார் சிட்டி பிளஸ் பைக்குகளை விற்பனை செய்துள்ளது. இந்த பைக் மிகச்சிறந்த ஃபூயல் எக்கனாமியையும், கட்டமைப்பையும் கொண்டுள்ளது. 125 சிசி சிங்கிள் சிலிண்டரை கொண்டுள்ள இந்த பைக் 7350rpm-ல் 6.03 kW-ஐயும், 4500rpm-ல் 8.7Nm-ஐயும் வழங்குகிறது. 4 ஸ்பீட் கான்ஸ்டண்ட் மெஷ் ட்ரான்ஸ்மிஷனில் இதன் இன்ஜின் வருகிறது. இதன் எக்ஸ் ஷோரும் விலை ரூ.70,205-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    ஹோண்டா எஸ்பி 125: இந்த பைக் 123.94 சிசி இன்ஜினை கொண்டுள்ளது. இது 7500rpm-ல் 8kW பவரையும், 6000 rpm-ல் 10.9N-mஐயும் வெளியிடக்கூடியது. 5 ஸ்பீட் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனில் இந்த இன்ஜின் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கின் எக்ஸ் ஷோரூம் விலை ரூ.80,587-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    டிவிஎஸ் ரைடர் 125: இந்த பைக் இந்தியாவில் 2021-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. சிறந்த அம்சங்களை கொண்டுள்ள இந்த பைக்கில் முழுதாக டிஜிட்டல் மயமாக்கப்பட்ட இன்ஸ்ட்ருமெண்ட் கன்சோல், ரைடிங் மோட் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இதுதவிர விரைவில் கனெக்டிவிட்டி ஆப்ஷனும் தரப்படவுள்ளது. இதன் எக்ஸ் ஷோரூம் விலை ரூ.77,500-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    ஹீரோ ஸ்பிளெண்டர் ஐ ஸ்மார்ட் பைக்

    ஹீரோ ஸ்பிளெண்டர் ஐஸ்மார்ட்- ஸ்பிளெண்டர் பைக் இந்தியாவில் அதிகம் விற்கப்பட்ட இருசக்கர வாகனமாக இருக்கிறது. சென்சாரை அடிப்படையாக கொண்ட ஃபூயல் இன்செக்‌ஷன் உள்ளிட்ட ஏகப்பட்ட புது அம்சங்கள் கடந்த சில ஆண்டுகளாக சேர்க்கப்பட்டுள்ளன. ஐ3எஸ் தொழில்நுட்பம், டூயல் டோன் நிறங்கள், டைமண்ட் பிரேம் உள்ளிட்டவையும் இதில் தரப்பட்டுள்ளன. இந்த பைக்கின் விலை ரூ.70,390-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    பஜாஜ் பிளாட்டினா 110ES டிஸ்க்: நிறைய அம்சங்கள் இடம்பெற்றுள்ள இந்த பைக்கின் விலை ரூ.68,384-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    ரஷிய- உக்ரைனுக்கு எதிரான போரினால் உலக அளவில் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வரும் நிலையில் மின்சார வாகனங்களின் விலையும் அதிகரிக்கப்போகிறது.
    ரஷியா - உக்ரைன் நாடுகளுக்கு இடையேயான போர் 2 வாரத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இந்த போரினால் உலகளவில் பொருளாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

    இந்த போரின் காரணமாக உலக அளவில் பங்குச்சந்தைகள் வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன. எண்ணெய் உள்ளிட்ட உணவு பொருட்களின் விலை உயர்வை எட்டியுள்ளன. இந்நிலையில் தற்போது ஆட்டோமொபைல் துறையில் மூலப் பொருட்களின் விலையும் தொடந்து உயர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ரஷிய போர் காரணமாக நிக்கலின் விலை 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. லித்தியத்தின் விலையும் இரட்டிப்பாகியுள்ளது. 
    இதனால் மின்சார கார்கள் தயாரிப்பு மூலப் பொருட்களின் விலை சரமாரியாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இதனால் மின்சார கார்களின் விலையை ஏற்ற வேண்டிய சூழலுக்கு டெஸ்லா உள்ளிட்ட பெரும் நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ரஷியா - உக்ரைன் போரினால் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உலக அளவில் உயர்ந்து வரும் நிலையில் பொதுமக்கள் மின்சார வாகனங்கலை நோக்கி செல்கின்றனர். 

    இந்நிலையில் தற்போது ரஷிய போரினால் மின்சார கார்களின் விலை 35 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
    இந்த பைக் ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்கின் குறைந்த விலை வெர்ஷன் என கூறப்படுகிறது.
    ராயல் என்பீல்டின் புதிய ஸ்க்ராம் 411 பைக் வரும் மார்ச் 15ம் தேதி விற்பனைக்கு வருகிறது. இந்த பைக் ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்கின் குறைந்த விலை வெர்ஷன் என கூறப்படுகிறது.

    இந்த பைக் ப்ளாக், மெரூன்/யெல்லோ ஹலைட் மற்றும் ஒயிட், ரெட்/ப்ளூ ஹைலைட் என 2 வித வண்ண தேர்வுகளில் கிடைக்கிறது.

    இதில் 411 சிசி, சிங்கிள்- சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

    இது அதிகபட்சமாக 24.3 பி.ஹெச்.பி பவரை உருவாக்கக்கூடியது. மேலும் இந்த பைக்கின் முன்பக்கம் 19 இன்ச் வீல், பின்பக்கம் 17 இன்ச் வீல் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த பைக்கின் எக்ஸ் ஷோரூம் விலை ரூ.1.75 லட்சமாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    இந்த செயலியில் உள்ள மை கியா ரிவார்ட்ஸ் என்ற அம்சத்தில் நாம் பெறும் வெகுமதிகளை ஷாப்பிங் செய்யும்போது பயன்படுத்திகொள்ளலாம்.
    கியா நிறுவனம் ‘மை கியா’ என்ற மொபைல் செயலியை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் கியாவின் சேவைகளை இந்த செயலியின் மூலம் பெற முடியும்.

    இத்துடன் கியா வாடிக்கையாளர்களுக்கு வெகுமதி, சிறப்பு சலுகைகள், தள்ளுபடிகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுத்தவிர கியா மொபைல் செயலியில் வாகனத்தை சர்வீஸ் செய்யும் தேதியை நினைவுப்படுத்தல், டிஜிட்டல் வாலட், வாகன பராமரிப்பு குறித்த ஆலோசனைகள், டீலர்களை கண்டறியும் அம்சம் ஆகியவை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கியாவின் புது வாகனம் வெளியாகும்போது சோதனை ஓட்டம், வீடியோ ஆலோசனை ஆகியவையும் இதில் வழங்கப்படும்.

    இந்த செயலியில் உள்ள ”மை கியா ரிவார்ட்ஸ்” என்ற அம்சத்தில் நாம் பெறும் வெகுமதிகளை ஷாப்பிங் செய்யும்போது பயன்படுத்திகொள்ளலாம்.

    இந்த செயலி மூலம் இதுவரை சுமார் 10,000-க்கும் மேற்பட்ட பதிவுகள் வந்துள்ளதாக கியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
    எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனமே தானியங்கி கார் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில், அதனால் ஏற்படும் பாதிப்புகளையும் அவர் பேசியுள்ளார்.
    ஓட்டுநர்கள் இல்லாத தானியங்கி கார்களால் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கும் என டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

    டெஸ்லா நிறுவனம் தானியங்கி கார் தொழில்நுட்பத்தில் முன்னோடியாக இருந்து வருகிறது. அந்த நிறுவனம் தற்போது செமி-ஆட்டோனமஸ் டிரைவிங் மென்பொருளை மின்சார வாகன நிறுவனங்களுக்கு அளித்து வருகிறது. இது தவிர் தற்போது எஃப்.எஸ்.டி எனப்படும் முழுதாக தானியங்கி முறையில் ஓடும் கார்களையும் உருவாக்கி வருகிறது.

    இதுகுறித்து ட்வீட் செய்துள்ள டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் கூறியதாவது:-

    எதிர்காலத்தில் தானியங்கி வாகனங்கள் மக்கள் பயனிப்பதை எளிதாக்கும் என்பதால்,  மக்கள் கூடுதலாக வாகனங்களை வாங்க முற்படுவர். இதனால் சாலையில் செல்லும் வாகனங்களும் அதிகரிக்கும். போக்குவரத்து நெரிசலும் அதிகமாகும். இதை தவிர்க்க முடியாது. ஆனால் தானியங்கி கார்கள் போக்குவரத்து நெரிசலால் ஏற்படும் வேதனையை குறைக்கும்.

    இவ்வாறு எலான் மஸ்க் கூறியுள்ளார்.

    எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனமே தானியங்கி கார் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில், அதனால் ஏற்படும் பாதிப்புகளை அவர் பேசியுள்ளார்.
    இந்த பைக்கில் 660cc 3 சிலிண்டர் இன்ஜின் தரப்பட்டுள்ளது. இது 0,250rpm-ல் 81bhp சக்தியை உருவாக்கக்கூடியது.
    டிரிம்ப் நிறுவம் புதிய டைகர் ஸ்போர்ட் 660 பைக்கை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது.

    இந்த பைக் டைகர் வகை பைக்குகளில் ஆரம்ப நிலை மாடல்களாக வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    டைகர் ஸ்போர்ட் 660 பைக் 17 லிட்டர் கெப்பாசிட்டியுடன் வருகிறது. இது டிரைடண்ட் பைக்கை விட 3 லிட்டர் அதிகம். இந்த பைக் 3 நிறங்களில் வருகிறது.

    டிரைடண்ட் பைக்கை போலவே இதில் மெயின் ஃபிரேம், பின்பக்க ஃபிரேம் தரப்பட்டுள்ளது. இந்த பைக்கில் 660cc 3 சிலிண்டர் இன்ஜின் தரப்பட்டுள்ளது. இது 0,250rpm-ல் 81bhp சக்தியை உருவாக்கக்கூடியது. அதேபோன்று 6,250rpm-ல் 64Nm சக்தியை உருவாக்கும் தன்மையை கொண்டது.

    இந்த இன்ஜின் ஐஎக்ஸ்-ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் ஆப்ஷனல் அப்/டவுன் ப்ரீலோட் அட்ஜெஸ்டருடன் வருகிறது.

    இந்த பைக்கின் எக்ஸ் ஷோரூம் விலை ரூ.8.5 லட்சத்தில் இருந்து ரூ.9.5 லட்சம் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    இந்த பைக்கிற்கு இந்திய மதிப்பில் ரூ.1.3 லட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    யமஹா நிறுவனம் 2022-ம் ஆண்டுக்கான வினோ 50சிசி ஸ்கூட்டரின் அப்டேட்டை உலகளவில் அறிமுகம் செய்துள்ளது.

    இதில் டூயல் டோன் ப்ளூ, பெய்ஜ் நிறந்துடன் இணைந்து வருகிறது. இதில் ப்ரவுன் நிறம் சீட், கிரிப் மற்றும் ஃப்ளோர் போர்டில் இடம்பெறுகிறது.

    இதுத்தவிர பச்சை மற்றும் கருப்பு நிற இணைப்பிலும் சீட் மற்றும் க்ரிப்பில் வருகிறது.

    இந்த ஸ்கூட்டரில் 50சிசி லிக்யுடு-கூல்டு என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகப்பட்சமாக 4.5 பிஎச்பி மற்றும் 4.1 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியது. இந்த இன்ஜினை ஹோண்டா நிறுவனம் யமஹாவிற்கு வழங்குகிறது.

    யமஹா வினோ ஸ்கூட்டர்

    பிரேக்கை பொறுத்தவரை இரு சக்கரங்களிலும் ட்ரம் ப்ரேக்குகள் பொருத்தப்படுகின்றன. சஸ்பென்ஷனுக்கு டெலெஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் மோனோஷாக் இரு முனைகளிலும் வழங்கப்படுகின்றன.  இந்த பைக்கிற்கு இந்திய மதிப்பில் ரூ.1.3 லட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    தற்போது இந்தியாவில் 50சிசி இருசக்கர வாகனங்கள் விற்கப்படாததால் இந்த பைக் இந்தியாவில் அறிமுகமாகுமா என சந்தேகம் எழுந்துள்ளது.
    எரிபொருளை சிக்கனம் செய்வதற்கு நாம் பைக்கை எப்படி பராமரிக்க வேண்டும் என்பதை இப்போது பார்க்கலாம்.
    இன்று பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் பணத்தை சிக்கனம் செய்ய அதிக மைலேஜ் தரும் பைக்குகளை அனைவரும் தேடி வருகின்றனர். அதேபோல் ஒவ்வொரு பைக்கும் அதிகபட்சமான மைலேஜ் தருவதற்கு நாம் பைக்கை சரியாக பராமரிக்க வேண்டியதும் அவசியமாகிறது. இதையடுத்து அதிக மைலேஜ் பெறுவதற்கு பைக்கை எப்படி பராமரிப்பது என்பதை பார்க்கலாம்.

    1) உங்கள் பைக்கை சரியான இடைவெளியில் சர்வீஸ் விடுவது அவசியம். இது இன்ஜின் ஆரோக்கியத்தை அதிகரிப்பதோடு, பைக்கின் வாழ்நாளையும் நீட்டிக்கிறது. இதனால் நமது பைக்கின் மைலேஜும் அதிகரிக்கிறது. அதேபோல இன்ஜின் ஆயிலையும் சரியான நேரத்தில் மாற்றுவதை உறுதி செய்ய வேண்டும்.

    2) நாம் சரியாக சர்வீஸ் செய்தும் மைலேஜ் அதிகரிக்கவில்லை என்றால் பைக்கின் கார்புரேட்டர் செட்டிங்கை பரிசோதிக்க வேண்டும். கார்புரேட்டரை ரீடியூன் செய்வது இன்ஜின் செயல்திறனை அதிகரிக்கும். அதனால் மைலேஜும் அதிகரிக்கும்.

    3) ஒவ்வொரு பைக்கிற்கும் டயர் பிரஷர் வேறுபடும். டயர் பிரஷரை அவ்வபோது சோதனை செய்வது இன்ஜினை சரியாக பராமரித்து, பெட்ரோலை அதிகம் வீணாகாமல் தடுக்கும்.

    4) கலப்படம் இல்லாத நல்ல எரிபொருளை பயன்படுத்த வேண்டும். லெட் கலந்த பெட்ரோலை பயன்படுத்தாமல், லெட் இல்லாத தரமான பெட்ரோலை பயன்படுத்துவது இன்ஜின் செயல்திறனை அதிகரிக்கும்.

    5) பைக்கை சரியான முறையில் ஓட்ட வேண்டும். குண்டு, குழிகளில் ஏற்றி செல்வது. திடீரென்று பிரேக் பிடிப்பது நமது பைக்கின் இன்ஜின் நலனை பாதிக்கும். இதனால் போக போக பைக் மைலேஜ் குறையத் தொடங்கிவிடும்.

    பைக் மைலேஜ்

    6) பைக்கை அதிவேகமாக ஓட்டாமல் எகானாமியில் ஓட்டுவது நல்லது. சராசரியாக மணிக்கு 40 கி.மீ வேகத்திற்கு ஓட்டுவது பைக் மைலேஜ்ஜை அதிகரிக்கும்.

    7) டிராஃபிக்கில் நிற்கும்போது பைக்கை அணைத்து விடுவது நல்லது. இது இன்ஜின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதுடன், எரிபொருள் சிக்கனத்தையும் ஏற்படுத்தும்.

    8) வெயிலில் பைக்கை நிறுத்துவதை தவிர்க்கவும். இதனால் எரிபொருள் ஆவியாவதால் மைலேஜ் குறைய வாய்ப்புள்ளது. எப்போதும் பைக்கை நிழலில் நிறுத்துவது நல்லது.

    9) அவ்வபோது நமது பைக்கை நீரில் கழுவி சுத்தம் செய்து வைப்பது நல்லது. அதேபோன்று பைக் செயினையும் காய விடாமல் சரியாக பராமரிக்க வேண்டும். இதனால் தூசு, மண் போன்றவை செயினில் புகுந்து ஆற்றலை குறைக்காது.

    10) கூடுதலான அம்சங்களை பைக்கில் சேர்ப்பதும் மைலேஜ்ஜை குறைக்கலாம். ஒரு பைக்கில் கொடுக்கப்படும் பாகங்கள் அனைத்தும் ஒத்திசைவாக இன்ஜினுடன் இணைந்து செயல்படுவதற்கு உதவும். நாம் பைக்கின் பாகங்களை மாற்றிகொண்டிருப்பதும் கூட எரிபொருள் பயன்பாட்டில் மாற்றத்தை தரலாம்.
    இந்த புதிய நிறுவனம் இந்த ஆண்டே தொடங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
    ஜப்பானை சேர்ந்த இரண்டு பெரிய நிறுவனங்களான சோனியும், ஹோண்டாவும் இணைந்து புதிய மின்சார வாகனம் உற்பத்தி செய்யும் நிறுவனத்தை தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளன. இதன்மூலம் நவீன தொழில்நுட்பத்துடனான மின்வாகனங்களை தயாரிக்கப்போவதாகவும் தெரிவித்துள்ளன.

    ஜாயிண்ட் வெஞ்சர் அடிப்படையில் தொடங்கப்படும் இந்த நிறுவனத்தில் வாகன உற்பத்தியோடு, அதிக திறன் வாய்ந்த மின்வாகன பேட்டரிக்களையும் விற்பனை செய்யப்போவதாக கூறப்படுகிறது.

    இந்த புதிய நிறுவனத்தை இந்த ஆண்டே தொடங்குவதற்கு இரு நிறுவனங்களும் திட்டமிட்டு வருகின்றன.

    ஹோண்டா- சோனி

    இந்த புதிய நிறுவனத்தில் ஹோண்டா நிறுவனம் வாகன பாகங்கள் தயாரிப்பு, விற்பனைக்கு பிறகான சேவை உள்ளிட்டவைகளை பார்த்துகொள்ளும். சோனி நிறுவனம், இமேஜிங், சென்சார், தொலைத்தொடர்பு, நெட்வொர்க், கேளிக்கை ஆகியவற்றில் தனது தொழிநுட்பத்தை வழங்கும்.

    இந்த ஆண்டே நிறுவனம் தொடங்கப்பட்டாலும் புதிய நிறுவனத்தின் முதல் ஈ.வி மாடல் வாகனம் 2025-ம் ஆண்டில் தான் விற்பனைக்கு வரும் என கூறப்படுகிறது. இந்த புதிய நிறுவனத்தில் திட்டமிடுதல், டிசைன், விற்பனை ஆகியவை நடைபெறும் என்றும், உற்பத்தி ஹோண்டாவின் உற்பத்தி நிலையங்களில் தான் செய்யப்படும் என கூறப்படுகிறது.

    பெட்ரோலில் இயங்கும் இருசக்கர வாகனங்களின் விற்பனை குறைந்த நிலையில், மின்சாரத்தில் இயங்கும் இருசக்கர வாகன விற்பனை அதிகரித்துள்ளது.
    இந்தியாவில் கடந்த பிப்ரவரி மாதத்தில் இருசக்கர வாகனங்களின் விற்பனை சரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள சிப் பற்றாக்குறை, கிராமப்புறங்களில் தேவை குறைவு, அதிக விலை ஆகிய காரணங்களால் இந்த விற்பனை குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

    அதேசமயம் இந்தியாவில் மின்சார இருசக்கர வாகனங்களின் விற்பனை அதிகரித்துள்ளது. அதர் எனர்ஜி என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் அந்த நிறுவனம் ஒவ்வொரு வருடமும் 140 சதவீதம் வளர்ச்சியை கண்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.

    இந்தியாவில் ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின் பைக்கை பொறுத்தவரை கடந்த வருடத்தை விட 20 சதவீதம் விற்பனை குறைந்துள்ளது. ஹீரோ மோட்டார் கார்ப், 32 சதவீத விற்பனை வீழ்ச்சியையும், ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா, 31 சதவீதம் விற்பனை வீழ்ச்சியையும் சந்தித்துள்ளன.

    டிவிஎஸ் நிறுவனத்தின் விற்பனை கடந்த ஆண்டு பிப்ரவரியை விட இந்த வருட பிப்ரவரியில் 5 சதவீதம் குறைந்துள்ளது. சுசூகி 3.3 சதவீதம் விற்பனை சரிவை சந்தித்துள்ளது.

    அதே சமயம் அதார் எனர்ஜி நிறுவனம் மின்சார வாகன விற்பனையில் 140 சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளது.
    ரொக்கத் தள்ளுபடி, எக்ஸ்சேஞ்ச் சலுகை, ஹோண்டா வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு தள்ளுபடி என ரூ.35,000 வரை விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது.
    ஹோண்டா நிறுவனம் தனது கார்களுக்கு சிறப்பு தள்ளுபடியை அறிவித்துள்ளது. 

    இதன்படி, ஹோண்டா சிட்டி 5-வது ஜெனரேஷன் காருக்கு ரூ.10,000 வரை ரொக்கத் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் எக்ஸ்சேஞ்ச் சலுகையில் ரூ.5000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேலும் பழைய ஹோண்டா வாடிக்கையாளர்களுக்கு ரூ.5,000 வரை லாயல்டி போனஸ், ஹோண்டா கார் எக்ஸ்சேஞ்சிற்கு ரூ.7000 வரை போனஸ் என மொத்தம் ரூ.35,596 வரை தள்ளுபடி விலை அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல ஹோண்டா சிட்டி 4-வது ஜெனரேஷன் காருக்கு பழைய ஹோண்டா வாடிக்கையாளர்களுக்கு ரூ.5,000 வரை லாயல்டி போனஸும், ரூ.7,000 வரையிலான ஹோண்டா கார் எக்ஸ்சேஞ்ச் சலுகையையும், ரூ.8,000 வரை கார்ப்பரேட் தள்ளுபடி என மொத்தம் ரூ.20,000 வரை தள்ளுபடி விலை வழங்கப்படுகிறது.

    ஹோண்டா ஜாஸ் காருக்கு ரூ.10,000 வரை ரொக்க தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர, எக்ஸ்சேஞ்ச் போனஸாக ரூ.5,000 தள்ளுபடி, பழைய ஹோண்டா வாடிக்கையாளர்களுக்கு ரூ.5,000 வரை லாயல்டி போனஸ், ஹோண்டா கார் எக்ஸ்சேஞ்சில் ரூ.7,000,  கார்ப்பரேட் தள்ளுபடி ரூ.4,000 என தள்ளுபடியாக மொத்தம் ரூ.33,158 வரை வழங்கப்படுகிறது. 

    ஹோண்டா சிட்டி கார்

    ஹோண்டா நிறுவனம் அதன் எஸ்யுவி ஹோண்டா WR-V காருக்கு மொத்தம் ரூ. 26,000 வரை தள்ளுபடிகளை வழங்கியுள்ளது. இதில் எக்ஸ்சேஞ்ச் சலுகையாக ரூ.10,000 வரை, பழைய வாடிக்கையாளர்களுக்கு ரூ.5,000 வரை, ஹோண்டா கார்களை எக்ஸ்சேஞ்ச் செய்தால் ரூ.7,000 வரை, கார்ப்பரேட் தள்ளுபடி ரூ.4,000 வரை வழங்கப்படுகிறது.

    ஹோண்டா அமேஸ் காருக்கு மொத்தமாக ரூ.15,000 வரை தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இதில் பழைய வாடிக்கையாளர்களுக்கு ரூ.5,000 வரை லாயல்டி போனஸ், ரூ.6,000 வரை ஹோண்டா கார் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் மற்றும் கார்ப்பரேட் தள்ளுபடியாக ரூ.4,000 ஆகியவை வழங்கப்படுகிறது.

    இந்த தள்ளுபடி மார்ச் 31, 2022 வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    கடந்த ஆண்டு மாதம் 5000 யூனிட்டுகள் விற்பனை செய்த ஒரு பைக்கின் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது.
    யமஹா நிறுவனம் தனது புதிய எம்டி15 பைக்கை அடுத்த மாதத்தில் அறிமுகம் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அந்நிறுவனம் தற்போது உள்ள எம்.டி15 பைக்கின் விற்பனையை படிப்படியாக நிறுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

    கடந்த ஆண்டு நாடு முழுவதும் மாதத்திற்கு 5,000 எம்டி15 பைக்குகள் சராசரியாக விற்பனை செய்யப்பட்டன. ஆனால் கடந்த மாதம் ஜனவரியில் வெறும் 17 எம்டி15 பைக்குகள் மட்டுமே இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதனால் புதிய எம்டி15 பைக்கை கொண்டு வரும் வகையில் தயாரிக்கும் பணிகளை யமஹா தொடங்கியுள்ளது. 

    இந்த புதிய பைக்கின் காஸ்மெட்டிக் அப்டேட்களாக புதிய கிராஃபிக்ஸ் மற்றும் பெயிண்ட் தேர்வுகள் தரப்படலாம் என கூறப்படுகிறது. மேலும் இந்த புதிய பைக்கில் யு.எஸ்.டி ஃபோர்க்ஸ், டூயல் சேனல் ஏபிஎஸ், ப்ளூடூத்  காம்பேக்டிபில் கன்சோல் உள்ளிட்ட பலதரப்பட்ட அம்சங்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இந்த பைக்கின் விலை தற்போதைய மாடலில் இருந்து அதிகமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
    ×