என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல் செய்திகள்

    மார்ச் 18-க்கு பிறகு முன்பதிவு செய்யப்படும் இந்த ஸ்கூட்டரின் விலை உயர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ஓலா நிறுவனம் ஓலா எஸ்1 ப்ரோ மின்சார ஸ்கூட்டரின் விலையை உயர்த்தப்போவதாக அறிவித்துள்ளது.

    இதுகுறித்து ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பாவிஷ் அகர்வால் கூறியதாவது:-

    ஓலா எஸ்1 ப்ரோ மின்சார ஸ்கூட்டரை ஏற்கனவே வாங்கியவர்களுக்கு நன்றி. ஓலா எஸ் 1 ப்ரோ ஸ்கூட்டரை ரூ.1,29,999 விலையில் வாங்குவதற்கு இன்று தான் கடைசி வாய்ப்பு. அடுத்தமுறை விற்பனைக்கு வரும் போது இந்த ஸ்கூட்டரின் விலை உயர்த்தப்பட்டிருக்கும். இன்று (மார்ச் 18) நள்ளிரவு வரை மட்டுமே பழைய விலை அமலில் இருக்கும்.

    இவ்வாறு அகர்வால் தெரிவித்துள்ளார்.

    மார்ச் 18-க்கு பிறகு முன்பதிவு செய்யப்படும் ஓலா எஸ்1 ப்ரோ ஸ்கூட்டரில்  புதிய எஸ் 1 ப்ரோ ஸ்கூட்டரில் நேவிகேஷன் கன்ட்ரோல், கம்பேனியன் ஆப், க்ரூஸ் கன்ட்ரோல், ப்ளூடூத் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெறவுள்ளன. 

    ஓலா எஸ்1 ப்ரோ ஸ்கூட்டர் 121 கி.மீ மைலேஜ், 113 கி.மீ அதிகபட்ச வேகத்தை கொடுக்கும்.  பூஜ்ஜியத்தில் இருந்து 100 கி.மீ வேகத்தை வெறும் 3 நொடிகளில் எட்ட முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    110 சிசி செக்மெண்ட் கொண்ட வாய்ஸ் அசிஸ்டென்ட் அம்சங்கள் இடம்பெறுவது இதுவே முதன்முறையாகும்.
    டிவிஎஸ் நிறுவனம் புதிய டிவிஎஸ் ஜுப்பிட்டர் ZX ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்கூட்டர் டிவிஎஸ்ஸின் SMARTXONNECT மற்றும் வாய்ஸ் அசிஸ்டென் ஆகியவற்றுடன் வருகிறது.

    மேலும் இந்த ஸ்கூட்டரில் ப்ளூடூத் கனெக்டிவிட்டி, நேவிகேஷன் அசிஸ்டெண்ட், எஸ்.எம்.எஸ்/கால் அலெர்ட் ஆகியவையும் இடம்பெற்றுள்ளது. 110 சிசி செக்மெண்ட் கொண்ட வாய்ஸ் அசிஸ்டென்ட் அம்சங்கள் இடம்பெறுவது இதுவே முதன்முறையாகும்.

    டிவிஎஸ் ஜிப்பிட்டரில் வழங்கப்பட்டுள்ள அம்சங்களை ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் செயலிகள் மூலம் கனெக்கெட் செய்ய முடியும். இதைத்தவிர ப்ளூடூத் ஹெட்போன்ஸ், ஒயர் உள்ள ஹெட்போன்ஸ், ப்ளூடூத் ஹெல்மெட் ஆகியவற்றையும் இந்த ஸ்கூட்டரில் இணைக்க முடியும்.

    ஸ்கூட்டரின் அம்சங்கள் ஸ்பீட்டோமீட்டரில் காட்டப்படும் என்றும், ஆடியோ ஃபீட்பேக் ஹெட்போன் வழியாக வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த ஸ்கூட்டரில் உள்ள 110 சிசி இன்ஜின் 7,500 rpm-ல் 5.8 kW அதிகபட்ச பவரை தரக்கூடியது. இதுத்தவிர 5,500 rpm-ல் 8.8 Nm டார்க்கை உருவாக்ககூடியது. இதன் இன்ஜின் intelliGo தொழில்நுட்பம் மற்றும் ஐ-டச் ஸ்டார்ட் தொழில்நுட்பத்துடன் வருகிறது. இந்த ஸ்கூட்டரில் எல்.இ.டி ஹெட்.லேம்ப், 2 லிட்டர் குளோவ்பாக்ஸ் மொபைல் சார்ஜர், 21 லிட்டர் ஸ்டோரேஜ் மற்றும் பிரண்ட் டிஸ்க் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

    இந்த ஸ்கூட்டரின் எக்ஸ் ஷோரூம் விலை ரூ.80,973-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    இந்த கார் ரஷிய டாங்கிகளை முந்தி சென்று வேகமாக தாக்கும் வல்லமை கொண்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ரஷியா- உக்ரைன் நாடுகளுக்கு இடையேயான போர் தொடர்ந்து 3 வாரங்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. ரஷியாவின் படையை தாக்குவதற்கு உக்கிரேனியர்கள் கிடைக்கும் பொருட்களை கொண்டு ஆயுதம் தயாரிக்கின்றனர்.

    இந்நிலையில் பி.எம்.டபில்யூ நிறுவனத்தின் லக்சரி காரான பி.எம்.டபில்யூ 6 சீரிஸ் கார்கள், மெஷின்கன்கள் வைக்கும் வகையில் உக்ரைனியர்களால் மாற்றப்பட்டு போரில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    அந்த காரில் உள்ள இன்ஜின் வி8 வகையாக இருக்கலாம் என கருத்தப்படுகிறது. மெஷின்கன் பின்புறத்தில் பொருத்தப்பட்டிருந்தாலும் ரஷிய டாங்கிகளை வேகமாக முந்தி சென்று தாக்கும் வல்லமை கொண்டதாக இந்த கார் இருக்கும் என கருத்தப்படுகிறது.

    இதுபோன்ற மாற்றப்பட்ட கார்களை போலீஸாருக்கு பொதுமக்கள் வழங்கி வருவதாக கூறப்படுகிறது.


    டாடா ஆல்ட்ரோஸ் ஆட்டோமேட்டிக் கார் XT,XZ,XZ+ என்ற மூன்று ட்ரிம்களில் வெளிவரவுள்ளது.
    டாடா நிறுவனம் புதிய டாடா ஆல்ட்ரோஸ் ஆட்டோமேட்டிக் காரை வரும் மார்ச் 21-ம் தேதி அறிமுகம் செய்யவுள்ளது. இந்த கார் பிரீமியம் ஆல்ட்ரோஜ் காரின் ஆட்டோமேட்டிக் வேரியண்ட் ஆகும்.

    இது XT,XZ,XZ+ என்ற மூன்று ட்ரிம்களில் வெளிவரவுள்ளது.

    இந்த காரில் முந்தைய காரில் உள்ள அனைத்து அம்சங்களும் இடம்பெற்றுள்ளன. இதைத்தவிர ஹார்மன் ஸ்டீரியோ சிஸ்டம், புஷ் ஸ்டார்ட்/ஸ்டாப் பட்டன், 16 இன்ச் அலாய் வீல்கள், 7 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடைமெண்ட் சிஸ்டம், ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி, ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா உள்ளிட்ட பல அம்சங்கள் இடம்பெறவுள்ளன.

    இந்த கார் 1.2 பெட்ரோல் பவர்ட்ரெயின் இன்ஜினை கொண்டுள்ளது. இது 85bhp/113Nm-ஐ உருவாக்ககூடியது. மேலும் இந்த கார் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் மோட்டார் ஆகியவற்றிலும் வருகிறது. 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல்  இன்ஜின் 108bhp/140Nm, 1.5 டீசல் மோட்டார் 289bhp/200Nm டார்க்கை உருவாக்கக்கூடியது.

    இந்த டாடா ஆல்ட்ரோஸ் கார் மேன்வல் கார்களை விட அதிக விலையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் அப்டேட்டில் இந்த புதிய அம்சங்கள் இடம்பெறும் என கூறப்பட்டுள்ளது.
    ஓலா நிறுவனம் தனது எஸ்1 மற்றும் எஸ்2 ப்ரோ மாடல் மின்சார ஸ்கூட்டர்களை கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் வெளியிட்டது.

    இதில் ஓலா எஸ்1 ப்ரோ ஸ்கூட்டருக்கு தற்போது புதிய அம்சங்கள் வழங்கப்படவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    இந்த ஸ்கூட்டர்களில் நேவிகேஷன் கன்ட்ரோல், கம்பேனியன் ஆப், க்ரூஸ் கன்ட்ரோல், ப்ளூடூத் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெறவுள்ளன.

    ஓலா மின்சார ஸ்கூட்டர் வாடிக்கையளர்கள் நிறுவனத்தை தொடர்புகொண்டு புதிய மூவ்ஓஎஸ் 2.0 இயங்குதளத்தை புதுப்பிப்பதன் மூலம் இந்த அம்சங்களை பெற முடியும். வரும் ஏப்ரல் முதல் அனைவருக்கும் இந்த புதிய அம்சங்கள் கொண்ட ஓஎஸ் வழங்கப்படவுள்ளது.

    ஓலா எஸ்1 ப்ரோ ஸ்கூட்டர் 121 கி.மீ மைலேஜ், 113 கி.மீ அதிகபட்ச வேகத்தை கொடுக்கும்.  பூஜ்ஜியத்தில் இருந்து 100 கி.மீ வேகத்தை வெறும் 3 நொடிகளில் எட்ட முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஓலா மின்சார ஸ்கூட்டர்களின் விலை ரூ.1.10 லட்சத்தில் இருந்து தொடங்குகின்றது.
    இந்த ஸ்கூட்டர் ஓலா எஸ்1, சிம்பிள் ஒன், பஜாஜ் சேடாக், டிவிஎஸ் ஐகியூப் ஆகியவற்றுக்கு போட்டியாக வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ஒகினாவா நிறுவனம் புதிய மின்சார ஸ்கூட்டரினை இந்தியாவில் வரும் மார்ச் 24-ம் தேதி அறிமுகம் செய்யவுள்ளது. இந்த ஸ்கூட்டருக்கு ஓகி90 என பெயரிடப்பட்டுள்ளது.

    இந்த ஸ்கூட்டரில் எக்ஸ்டென்டட் சீட்டுகள், அலாய் வீல், சில்வர் ஃபினிஷ் செய்யப்பட்ட பின்பக்க கிராப் ரெயில், டூயல் ஸ்பிரிங் சஸ்பென்சன் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.

    இந்த ஸ்கூட்டரில் பிற ஸ்கூட்டர்களை போல மவுண்ட் செய்யப்பட்ட ஹப் யூனிட்டில் மோட்டார் வைக்கப்படாமல் நடுவில் வைக்கப்பட்டுள்ளது. கழற்றக்கூடிய லித்தியம் அயன் பேட்டரி இந்த ஸ்கூட்டரில் வழங்கப்பட்டுள்ளது. மேலும் வேகமாக சார்ஜ் ஆகும் வகையில் இந்த ஸ்கூட்டர் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் 80 கி.மீ வரை டாப் ஸ்பீட்டை கொண்டுள்ளது. இந்த ஸ்கூட்டரை ஒருமுறை முழுதாக சார்ஜ் செய்தால் 150 கி.மீ முதல் 180 கி.மீ வரை செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த ஸ்கூட்டரில் ஜியோஒ-ஃபென்சிங், நேவிகேஷன், டயக்னாஸ்டிக்ஸ் உள்ளிட்ட கனெக்டிவிட்டி அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.

    இந்த ஸ்கூட்டர் ஓலா எஸ்1, சிம்பிள் ஒன், பஜாஜ் சேடாக், டிவிஎஸ் ஐகியூப் ஆகியவற்றுக்கு போட்டியாக வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை ரூ.1 லட்சம் முதல் ரூ1.20 லட்சம் வரை இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
    இந்த காருடன் ஆக்டேவியா, ஃபோக்ஸ்வேகன் டைகுன், ரெனால்ட் கைகர் உள்ளிட்ட பல கார்கள் போட்டியிட்டன.
    இந்தியன் கார் ஆஃப் தி இயர் 2022  விருதை மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார் வென்றுள்ளது. 

    இந்த காருடன் எம்ஜி அஸ்டர், ஸ்கோடா ஆக்டேவியா, ஸ்கோடா குஷாக், ஃபோக்ஸ்வேகன் டைகுன், ரெனால்ட் கைகர், டாடா பன்ச், ஃபோர்ஸ் கூர்கா, மாருதி சுஸுகி செலிரியோ, சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் ஆகியவை போட்டியிட்டன. 

    இவற்றில் ஃபோக்ஸ்வேகன் டைகுன் 2-வது இடத்தையும், டாடா பன்ச் கார் 3-வது இடத்தையும் பிடித்துள்ளது.

    மஹிந்திரா எக்ஸ்யூவி700 மற்றும் ஃபோக்ஸ்வேகன் டைகுன் ஆகிய கார்கள் மிட் சைஸ் எஸ்யூவி ரகத்தையும், டாடா பன்ச் மைக்ரோ எஸ்யூவி ரகத்தையும் சேர்ந்தது.

    மகிந்திரா எக்ஸ்யூவி 700 காரின் ஆரம்ப நிலை வேரியண்டின் விலை ரூ.12.95 லட்சமாகும், இதன் டாப் வேரியண்டின் விலை ரூ.23,79 லட்சமாகும். ஃபோக்ஸ்வேகன் டைகும் காரின் விலை ரூ.11 லட்சத்தில் இருந்து ஆரம்பித்து ரூ.18 லட்சம் வரை உள்ளது. டாடா பன்ச் காரின் விலை ரூ.5.65 விலையில் தொடங்கி ரூ.9.49 லட்சம் வரை உள்ளது.
    இந்த பைக்கில் ஏர் கூல்டு ட்வின் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.
    டுகாட்டி நிறுவனம் புதிய டுகாட்டி ஸ்கிராம்பிளர் ட்ரிபியூட் 1100 PRO பைக்கை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

    இந்த பைக்கில் 1079 சிசி எல்-ட்வின் டெஸ்மோட்ரோமிக் டிஸ்ட்ரிபியூஷன் மற்றும் ஏர் கூலிங் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 7,500 ஆர்பிஎம்மில் 86 ஹெச்.பி அதிகபட்ச பவரை கொடுக்கவள்ளது. மேலும் 4,750 ஆர்பிஎம்மில் 9.2kgm டார்க்கை உற்பத்தி செய்யக்கூடியது. இதன் டிரான்ஸ்மிஷன் 6 ஸ்பீடு யூனிட்டாக உள்ளது.

    இந்த பைக்கின் முன்பக்கமுள்ள லைட்டிங் கிளாஸ் லென்ஸ் மற்றும் பிளாக் ஃபிரேமில் வழங்கப்பட்டுள்ளது. பின்பக்க லைட்டிங் எல்.இ.டி டிஃப்யூஷன் டெக்னாலஜியுடன் தரப்பட்டுள்ளது.

    இத்துடன் இந்த பைக்கில் டூயல் எலிமெண்ட் எல்.சி.டி இன்ஸ்ட்ரூமெண்டேஷன், போஸ் கார்நெரிங் ஏபிஸ், டிராக்‌ஷன் கண்ட்ரோல், 3 வகை ரைடிங் மோட்கள், போன் சார்ஜ் செய்வதற்கு மொபைல் போன் சாக்கெட் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.

    இந்த பைக்கின் விலை இந்திய மதிப்பில் ரூ.12,89,000-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    இந்த வாகனம் அதிக மின்சாரத்தை உருவாக்கக்கூடிய தன்மையுடன், 1.5 லிட்டர் கே15பி பெட்ரோல் இன்ஜின் ஹைபிரிட்டில் வரும் என கூறப்படுகிறது.
    உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலையை ஈடு செய்வதற்கு மாற்று எரிபொருளை பயன்படுத்தும் வகையில் வாகனங்களை உருவாக்க மாருதி சுசூகி திட்டமிட்டு வருகிறது. இதையடுத்து 2024-25 ஆண்டுகளில் புதிய மின்சார எஸ்.யூ.வி ரக வாகனங்களை அந்நிறுவனம் இந்திய சந்தையில் வெளியிட திட்டமிட்டுள்ளது.

    தற்போது முதற்கட்டமாக வலிமையான ஹைபிரிட் இன்ஜின் கொண்ட எஸ்.யூ.வி கோப் ரக காரை அந்த நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த வாகனத்திற்கு YTB என குறியீட்டு பெயர் வைக்கப்பட்டுள்ளது. YTB மூலம் எரிபொருளை நிறைய சேமிக்கலாம் என தெரிவித்துள்ளது.  இந்த YTB கியா சோனட் மற்றும் ஹுண்டாய் வென்யூ ஆகிய வாகனங்களுக்கு போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த வாகனம் அதிக மின்சாரத்தை உருவாக்கக்கூடிய தன்மையுடன், 1.5 லிட்டர் கே15பி பெட்ரோல் இன்ஜின் ஹைபிரிட்டில் வரும் என கூறப்படுகிறது.

    இதைத்தவிர மாருதி சுசூகி நிறுவனம் 6 புதிய எஸ்.யூ.வி ரக கார்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யவுள்ளது. இந்த 6 மாடல்களில் 2 எஸ்.யூ.வி மாடல்களை சுசூகி, டொயோட்டா நிறுவனங்கள் இணைந்து உருவாக்கவுள்ளன. மேலும் மாருதி சுசூகி புதிய பிரெசா 4 மீட்டர் எஸ்.யூ.வி வாகனத்தை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. சுசூகி டொயோட்டோவின் மிட் அளவுள்ள எஸ்.யூ.வி இந்த ஆண்டு இறுதிக்குள் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    இந்த பைக்குகளின் எக்ஸ் ஷோரும் விலை முறையே ரூ.1.70 லட்சம், ரூ.1.74 லட்சமாகவுள்ளது.
    ஹோண்டா நிறுவனம் இந்தியாவில் விற்பனையில் உள்ள H'ness CB350 மற்றும் CB350 RS பைக்குகளுக்கு புதிய நிறங்களை அறிவித்துள்ளது.

    சிபி350, புதிய மேட் கிரே ஷேடுடன் மோனோ டோன் ஃபினிஷ் நிறத்தில் வரவுள்ளது. சிபி350 சிங்கிள் டோன் குளாசி ப்ளூ பெயிண்ட் நிறத்தில் வர இருக்கிறது. இந்த ஆப்ஷனில் பைக்கின் பிரண்ட் ஃபெண்டர் மற்றும் இன்ஜின் கவர்களில் பிளாக் ஃபினிஷ் வழங்கப்படவுள்ளது.

    இதைத்தவிர ஹார்ட்வேர் உள்ளிட்ட அம்சங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

    இந்த மோட்டார் பைக்குகளில் 349 சிசி சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்டு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளன. இது 5,500rpm-ல் 20.8bhp பவரையும், 3000rpm-ல் 30Nm பீக் டார்க்கையும் தரவள்ளது. இதன் டிரான்ஸ்மிஷன் 5 ஸ்போட் யூனிட்டிலேயே இருக்கிறது.

    ஹோண்டா H'ness CB350 பைக்கின் டி.எல்.எக்ஸ் வேரியண்டின் விலை ரூ.1.70 லட்சமாகவும், டி.எல்.எக்ஸ் ப்ரோ வேரியண்டின் விலை ரூ.1.74 லட்சமாகவும் உள்ளது. CB350 RS மோனோடோனின் விலை ரூ.1.74 லட்சமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்புக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் வெளிநாட்டு வாகன தொழிற்சாலைகள் தங்களது உற்பத்தியை நிறுத்தியுள்ளன.
    உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷியா 2 வாரத்திற்கும் மேலாக போர் செய்து வருகிறது. ரஷியாவின் படையெடுப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ள உலக நாடுகள் பலவும் அதன் மீது பொருளாதார தடையை விதித்துள்ளன.

    இதன் ஒரு பகுதியாக ரஷியாவில் இயங்கி வரும் வெளிநாடுகளை சேர்ந்த  டொயோட்டா, ஃபோக்ஸ்வாகன், ஜாகுவார், லேண்ட் ரோவர், மெர்செடிஸ் பென்ஸ், ஃபோர்ட், பி.எம்.டபில்யூ ஆகிய ஆட்டோமொபைல் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது வாகன உற்பத்தியையும், ஏற்றுமதியையும் நிறுத்தி வைத்துள்ளன. 

    இதையடுத்து வெளிநாட்டு அந்நிறுவனங்கள் தங்களது வாகன தயாரிப்பை மீண்டும் தொடங்காவிட்டால், அவர்களது அனைத்து தொழிற்சாலைகளும் தேசியமயமாக்கப்படும் என ரஷியா பகிரங்கமாக மிரட்டியுள்ளது.

    ரஷிய ஆட்டோமொபைல் தொழிற்சாலைகள்

    இதையடுத்து ஹுண்டாய் நிறுவனம், போரின் காரணமாக விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதால் உற்பத்தியை நிறுத்தி இருப்பதாகவும், விரைவில் மீண்டும் உற்பத்தி தொடங்கப்படும் என தெரிவித்துள்ளது.

    ரெனால்ட், அவ்டோவாஸ் போன்ற நிறுவனங்களும் உற்பத்தியை தொடங்கப்போவதாக தெரிவித்துள்ளன.

    ஐரோப்பா மற்றும் மேற்குலக நாடுகளில் விற்பனை செய்யப்படும் பெரும்பாலான வாகனங்கள் ரஷியா மற்றும் உக்ரைனிலேயே உற்பத்தி செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்நிலையில் ரஷியாவின் இந்த மிரட்டல் உலக நாடுகளை அச்சம்கொள்ள செய்துள்ளது.
    90-களில் பிரபலமாக இருந்த ஹோண்டா நிறுவன பைக் ஒன்றின் புதிய வெர்ஷன் போலவே இந்த பைக் வெளியிடப்பட்டுள்ளது.
    ஹோண்டா நிறுவனம் புதிய ஹோண்டா CG125 பைக்கை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த பைக் 90-களில் இந்தியாவில் விற்பனையான ஹோண்டா CT 100 டிசைனை கொண்டுள்ளது. 

    ரெட்ரோ டிசனையில் வெளியாகியுள்ள இந்த பைக்கில் ஸ்கொயர் ஹெட்லேம்ப், டெயில் லேம்ப், இண்டிகேட்டர்கள் ஆகியவை கிளாசிக் மாடலின் அடிப்படையில் தரப்பட்டுள்ளன. மேலும் இந்த பைக் 90-களில் இருப்பது போல டிஜிட்டல் இல்லாமல் முழுதும் அனலாக் இன்ஸ்ட்ருமெட் கிளஸ்டரையே கொண்டுள்ளது.

    ஹோண்டா சிஜி 125

    இந்த பைக் 125சிசி, ஏர் கூல்டு இன்ஜினை கொண்டுள்ளது. இது 9.9bhp அதிகபட்ச பவர் மற்றும் 9.5Nm பீக் டார்க்கை உருவாக்கக்கூடியது. இந்த இன்ஜின் லிட்டருக்கு 55.5 கிலோமீட்டர் ஃபூயல் எகானமியை கொண்டுள்ளது.

    இந்த பைக்கின் விலை இந்திய மதிப்பில் ரூ.90,000-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    தற்போது சீனாவில் மட்டும் வெளியாகியுள்ள இந்த பைக் விரைவில் உலகம் முழுவதும் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ×