என் மலர்
பைக்

ஹோண்டா சிடி100
கிளாசிக் பைக் ஒன்றின் தோற்றத்தில் ஹோண்டா அறிமுகம் செய்துள்ள புதிய பைக்- இந்த பைக் நினைவு இருக்கிறதா?
90-களில் பிரபலமாக இருந்த ஹோண்டா நிறுவன பைக் ஒன்றின் புதிய வெர்ஷன் போலவே இந்த பைக் வெளியிடப்பட்டுள்ளது.
ஹோண்டா நிறுவனம் புதிய ஹோண்டா CG125 பைக்கை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த பைக் 90-களில் இந்தியாவில் விற்பனையான ஹோண்டா CT 100 டிசைனை கொண்டுள்ளது.
ரெட்ரோ டிசனையில் வெளியாகியுள்ள இந்த பைக்கில் ஸ்கொயர் ஹெட்லேம்ப், டெயில் லேம்ப், இண்டிகேட்டர்கள் ஆகியவை கிளாசிக் மாடலின் அடிப்படையில் தரப்பட்டுள்ளன. மேலும் இந்த பைக் 90-களில் இருப்பது போல டிஜிட்டல் இல்லாமல் முழுதும் அனலாக் இன்ஸ்ட்ருமெட் கிளஸ்டரையே கொண்டுள்ளது.

இந்த பைக் 125சிசி, ஏர் கூல்டு இன்ஜினை கொண்டுள்ளது. இது 9.9bhp அதிகபட்ச பவர் மற்றும் 9.5Nm பீக் டார்க்கை உருவாக்கக்கூடியது. இந்த இன்ஜின் லிட்டருக்கு 55.5 கிலோமீட்டர் ஃபூயல் எகானமியை கொண்டுள்ளது.
இந்த பைக்கின் விலை இந்திய மதிப்பில் ரூ.90,000-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தற்போது சீனாவில் மட்டும் வெளியாகியுள்ள இந்த பைக் விரைவில் உலகம் முழுவதும் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story






