என் மலர்

  பைக்

  ஓலா எஸ்1 ப்ரோ
  X
  ஓலா எஸ்1 ப்ரோ

  இன்றே கடைசி வாய்ப்பு.. இரவு முதல் விலை உயரப்போகும் பிரபல ஸ்கூட்டர்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மார்ச் 18-க்கு பிறகு முன்பதிவு செய்யப்படும் இந்த ஸ்கூட்டரின் விலை உயர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  ஓலா நிறுவனம் ஓலா எஸ்1 ப்ரோ மின்சார ஸ்கூட்டரின் விலையை உயர்த்தப்போவதாக அறிவித்துள்ளது.

  இதுகுறித்து ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பாவிஷ் அகர்வால் கூறியதாவது:-

  ஓலா எஸ்1 ப்ரோ மின்சார ஸ்கூட்டரை ஏற்கனவே வாங்கியவர்களுக்கு நன்றி. ஓலா எஸ் 1 ப்ரோ ஸ்கூட்டரை ரூ.1,29,999 விலையில் வாங்குவதற்கு இன்று தான் கடைசி வாய்ப்பு. அடுத்தமுறை விற்பனைக்கு வரும் போது இந்த ஸ்கூட்டரின் விலை உயர்த்தப்பட்டிருக்கும். இன்று (மார்ச் 18) நள்ளிரவு வரை மட்டுமே பழைய விலை அமலில் இருக்கும்.

  இவ்வாறு அகர்வால் தெரிவித்துள்ளார்.

  மார்ச் 18-க்கு பிறகு முன்பதிவு செய்யப்படும் ஓலா எஸ்1 ப்ரோ ஸ்கூட்டரில்  புதிய எஸ் 1 ப்ரோ ஸ்கூட்டரில் நேவிகேஷன் கன்ட்ரோல், கம்பேனியன் ஆப், க்ரூஸ் கன்ட்ரோல், ப்ளூடூத் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெறவுள்ளன. 

  ஓலா எஸ்1 ப்ரோ ஸ்கூட்டர் 121 கி.மீ மைலேஜ், 113 கி.மீ அதிகபட்ச வேகத்தை கொடுக்கும்.  பூஜ்ஜியத்தில் இருந்து 100 கி.மீ வேகத்தை வெறும் 3 நொடிகளில் எட்ட முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  Next Story
  ×